1. கண்ணோட்டம்
மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்து அதை அணுக விரும்பும் பட்டய கணக்காளர்களுக்கு (CAகள்) இந்த உள்நுழைவுக்கு முந்தைய சேவை கிடைக்கிறது.பதிவு செய்தல் சேவையானது வரி தொடர்பான அனைத்து செயல்பாடுகளை அணுகவும் கண்காணிக்கவும் பயனருக்கு உதவுகிறது.
2. இந்தச் சேவையை பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- CA உறுப்பினர் எண்
- CA ஆகப் பதிவு செய்வதற்கான சேர்ப்பு தேதி
- மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள நிரந்தர கணக்கு எண் (PAN)
- குறிப்பிட்ட நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN உடன்) பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC)
3. படிப்-படியான வழிகாட்டி
படி 1: மின்னணு தாக்கல் முகப்பில் முதன்மை பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: மற்றவை என்பதைக் கிளிக் செய்து, பட்டய கணக்காளர் என்ற வகைப்பிரிவை தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: நிரந்தர கணக்கு எண் (PAN), பெயர், பிறந்த தேதி (DOB), உறுப்பினர் எண் மற்றும் சேர்ப்பு தேதி போன்ற அனைத்து கட்டாய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.
குறிப்பு:
- உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN), மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றால், பிழை செய்தி தோன்றும் . உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு CA வாக பதிவு செய்ய முடியும்.
- இந்த கட்டத்தில், குறிப்பிட்டுள்ள நிரந்தர கணக்கு எண் (PAN )உடன் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) இணைக்கப்பட்டுள்ளதா என்று கணினி அமைப்பு சோதிக்கும். இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) பதிவு செய்யப்படவில்லை அல்லது நிரந்தர கணக்கு எணணுடன் (PAN உடன்) இணைக்கப்பட்டுள்ள இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) காலாவதியாகிவிட்டது என்றால், பிழை செய்தி தோன்றும். தொடர்வதற்கு உங்கள் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழை (DSCஐ) நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN உடன்) பதிவு செய்யவும்/புதுப்பிக்கவும்.
படி 4: ICAI தரவுத்தளத்துடனான வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்பு விவரங்கள் பக்கம் தோன்றும். முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் முகவரி போன்ற அனைத்து கட்டாய விவரங்களையும் உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: படி 4 இல் உள்ளிட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு (IDக்கு) இரண்டு தனித்தனி ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொற்கள் (OTPகள்) அனுப்பப்படுகின்றன. உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் (ID யில்) பெறப்பட்ட தனித்தனி 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களை (OTP க்களை) உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- ஒரு முறைக் கடவு எண் (OTP) 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTPஐ) உள்ளிட உங்களுக்கு 3முயற்சிகள் உள்ளன.
- ஒரு முறைக் கடவு எண் (OTP) காலாவதி கவுன்டவுன் டைமர் ஒரு முறைக் கடவு எண் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குக் கூறுகிறது.
- ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTPஐ) மீண்டும் அனுப்புக என்பதைக் கிளிக் செய்தவுடன், ஒரு புதிய ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 6: உள்ளிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதைச் சோதிக்கவும். தேவைப்பட்டால், திரையில் உள்ள விவரங்களைத் திருத்தி, உறுதிசெய்க என்பதை கிளிக் செய்யவும்.

படி 7: கடவுச்சொல்லை அமை என்ற பக்கத்தில், உங்களுக்கு விருபமான கடவுச்சொல்லை, கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு உரை பெட்டிகளிலும் உள்ளிட்டு, உங்களின் தனிப்பயனாக்ப்பட்ட செய்தியை அமைத்து, பதிவுசெய் என்பதை கிளிக் செய்யவும்
குறிப்பு:
- புதுப்பிக்க அல்லது பின்னே செல்க என்பதை க்ளிக் செய்ய வேண்டாம்.
- உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தபட்சம் 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
- இது பேரெழுத்து சிற்றெழுத்து இரண்டை யும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்.
- இதில் ஒரு சிறப்பு எழுத்துரு (எ.கா. @#$%) இருக்க வேண்டும்.
படி 8: உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவை தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் முதன்மை மின்னஞ்சல் முகவரி (ID)க்கு உங்களின் உள்நுழைவு விவரங்கள் அனுப்பப்படும்.

குறிப்பு: மின்னணு தாக்கல் முகப்பில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் அணுக உள்நுழைந்து, உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்.