1. மேலோட்ட பார்வை
உங்கள் மதிப்பீட்டு அலுவலரை (AO) தெரிந்து கொள்ளுங்கள் சேவையானது செல்லுபடியாகும் PAN ஐ கொண்ட வரி செலுத்துவோருக்கு [மின்னணு-தாக்கலில் பதிவு செய்தவர்கள் அல்லது செய்யாதவர்கள்] கிடைக்கும். இந்த சேவையானது ஒரு குறிப்பிட்ட PAN இன் அதிகார வரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அலுவலரின் (AO) விவரங்களை காண உங்களை அனுமதிக்கிறது. இந்தச் சேவையைப் பெற நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பு பக்கத்தில் உள்நுழையத் தேவையில்லை.
2. இந்த சேவையை பெறுவதற்கான முன்தேவைகள்
- செல்லுபடியாகும் PAN
- செல்லுபடியாகும் அலைபேசி எண்
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பு பக்கத்திற்குச் சென்று உங்கள் வரி மதிப்பீட்டு அலுவலரை (AO) தெரிந்து கொள்ளுங்கள் என்பதை கிளிக் செய்யுங்கள்.
படி 2: உங்கள் வருமானத்தை நிர்ணயிக்கும் அதிகாரவரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அலுவலரை அறியுங்கள் பக்கத்தில், உங்கள் PAN மற்றும் பயன்பாட்டில் உள்ள அலைபேசி எண்ணை உள்ளிட்டுத் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் படி 2 இல் உள்ளிட்ட அலைபேசி எண்ணிற்கு ஒரு 6 இலக்க OTP பெறுவீர்கள். சரிபார்ப்பு பக்கத்தில், OTP உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
வெற்றிகரமான OTP சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் வருமானத்தை நிர்ணயிக்கும் அதிகாரவரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அலுவலரின் விவரங்களை [பிரதேசக் குறியீடு, மதிப்பீட்டு அலுவலரின் வகை, வரம்புக் குறியீடு, மதிப்பீட்டு அலுவலர் எண், அதிகார வரம்பு, மதிப்பீட்டு அலுவலரின் முகவரி மற்றும் மின்னஞ்சல் ID] உங்கள் PAN இன் நிலையுடன் பார்ப்பீர்கள்.