1. எனது வங்கிக் கணக்கு(களை) நான் ஏன் சரிபார்க்க வேண்டும்?

வருமானவரி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு, சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கை மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

மேலும், மின்னணு சரிபார்ப்பு நோக்கத்திற்காக EVC (மின்னணு சரிபார்ப்புக் குறியீடு) ஐ செயல்படுத்துவதற்கும் தனிநபர் வரி செலுத்துபவர் ஒரு சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கை பயன்படுத்தலாம். வருமானவரி அறிக்கை மற்றும் பிற படிவங்கள், மின்னணு நடவடிக்கைகள், பணத்தைத் திரும்பப் பெறுதல் மறு வெளியீடு, கடவுச்சொல்லை மீட்டமைத்தல் மற்றும் மின்னணு தாக்கல் கணக்கில் பாதுகாப்பான உள்நுழைவு ஆகியவற்றிற்கும் மின்னணு சரிபார்ப்பை பயன்படுத்தலாம்.

2. ஒரு தனிநபர் அல்லாத வரி செலுத்துவோர் மின்னணு-சரிபார்ப்புக்கு EVC ஐ பயன்படுத்த முடியுமா?

EVC ஐ இயக்குதல் அல்லது முடக்குதல் தனி நபர் வரி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற வகை வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமானவரி அறிக்கை மற்றும் படிவங்களை மின்னணு சரிபார்ப்புக்காக EVCஐ உருவாக்க தங்கள் சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கைப் பயன்படுத்த முடியாது.

3. திருப்பிச் செலுத்திய தொகைக்கு நான் பல வங்கிக் கணக்குகளை சரிபார்த்து பரிந்துரைக்க முடியுமா?

ஆம், நீங்கள் பல வங்கி கணக்குகளை சரிபார்க்கலாம், மேலும் வருமானவரி பணம் திரும்பப் பெறுதலுகு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பரிந்துரைக்கலாம்.

4. வருமானவரி தொகையைத் திருப்பிச் செலுத்தும் ஒரு வங்கிக் கணக்கை நான் பரிந்துரைக்க முடியுமா, மேலும் ஒரு EVC-செயல்படுத்த தனி வங்கிக் கணக்கை பரிந்துரைக்க முடியுமா?

ஆம், ஆனால் இரண்டு வங்கிக் கணக்குகளும் சரிபார்க்கப்பட்ட நிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

5. பல வங்கிக் கணக்குகளுக்கு மின்னணு சரிப்பார்ப்பு குறியீட்டை (EVC-ஐ) இயக்க முடியுமா?

இல்லை. எந்த நேரத்திலும் ஒரே ஒரு வங்கிக் கணக்கிற்கு மட்டுமே EVC ஐ இயக்க முடியும். நீங்கள் மற்றொரு முன் சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கு EVC ஐ செயல்படுத்த முயற்சித்தால், ஏற்கனவே உள்ள கணக்கிற்கான EVC ஐ முடக்க உங்கள் உறுதிப்படுத்தலைக் கேட்கும் ஒரு செய்தி காட்டப்படும். அதன்படி, வங்கிக் கணக்குகளில் ஏதேனும் ஒன்றுக்கு EVC செயல்படுத்தப்படும்.

குறிப்பு: மின்னணு தாக்கல் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டுமே EVC ஐ செயல்படுத்த முடியும். மின்னணு-தாக்கலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/e-filing-integratedbanks பக்கத்தில் காணலாம்.

6. வெற்றிகரமான சரிபார்ப்பிற்கான முன்தேவைகள் என்ன?

வெற்றிகரமான சரிபார்ப்புக்கு, நீங்கள் மின்னணு தாக்கல் மூலம் பதிவுசெய்யப்பட்ட செல்லுபடியாகும் PAN, மற்றும் PAN உடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள வங்கி கணக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

7. சரிபார்ப்பு வெற்றிகரமாக நடைபெற்றதா என்பதை நான் எப்படி அறிவது? அது தோல்வியுற்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு சரிபார்ப்பு கோரிக்கையின் நிலை அனுப்பப்படும். சரிபார்ப்பு தோல்வியடைத்தால், விவரங்கள் தோல்வியடைந்த வங்கிக் கணக்குகளின் கீழ் காட்டப்படும். வங்கி முன் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், தோல்வியடைந்த வங்கி கணக்குகளை மீண்டும் சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்கலாம்: தோல்வியுற்ற வங்கி கணக்குகள் பிரிவில் வங்கிக்கான மறு சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்து, 'சரிபார்ப்பு செயல்பாட்டில் உள்ளது' என்ற நிலையைக் கொண்ட கணக்கை கிளிக் செய்யவும்.

8. எனது கடன் / PPF கணக்கை முன்-சரிபார்க்க முடியுமா?

இல்லை. தொகையைத் திருப்பிச் செலுத்த, பின்வரும் கணக்குகளை மட்டுமே நீங்கள் முன்கூட்டியே சரிபார்க்க முடியும்:

  • சேமிப்பு வங்கிக் கணக்குகள்,
  • நடப்புக் கணக்குகள்,
  • பணக் கடன் கணக்குகள்,
  • மிகைப் பற்று கணக்கு
  • NRO கணக்கு.

வேறு எந்த கணக்கு வகையையும் முன்கூட்டியே சரிபார்க்க முயற்சித்தால், வங்கி சரிபார்ப்பு தோல்வியடையும், மேலும் கணினி "தவறான கணக்கு" என்ற பிழையைக் காண்பிக்கும்.

9. நான் வங்கியுடன் பதிவுசெய்யப்பட்ட என்னுடைய அலைபேசி எண் / மின்னஞ்சல் ID ஐ மாற்றினால், அதை நான் ஏற்கனவே முன்-சரிபார்த்திருந்தால் என்னவாகும்?

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் சேர்க்கப்பட்ட வங்கி கணக்குகள் பிரிவில் உங்கள் பொருந்தாத தொடர்பு விவரங்களுக்கு (மொபைல் எண் / மின்னஞ்சல் ID) அடுத்து எச்சரிக்கை சின்னத்தை பார்ப்பீர்கள். அந்த வங்கி கணக்கிற்கு EVCஐ செயல்படுத்த விரும்பினால், வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் விவரங்களுடன் பொருந்துமாறு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது உங்கள் மின்னணு-தாக்கலில் பதிவுசெய்யப்பட்ட முதன்மை மொபைல்/மின்னஞ்சலைப் போலவே வங்கியிலும் மொபைல்/மின்னஞ்சலைப் புதுப்பிக்க வேண்டும். விவரங்கள் மேம்படுத்தப்பட்டவுடன், உங்கள் வங்கிக் கணக்கை மறு சரிபாருங்கள்.

10. எனது விவரங்களை சமர்ப்பித்த பிறகு என் வங்கிக் கணக்கை முன்-சரிபார்க்க எவ்வளவு நேரம் ஆகும்?

முன்-சரிபார்ப்புச் செயல்முறையானது தன்னியக்கமானது. உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது உங்கள் வங்கிக்கு அனுப்பப்படுகிறது. சரிபார்ப்பு நிலை 10 - 12 வேலை நாட்களுக்குள் உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கில் மேம்படுத்தப்படும்.