1. மேலோட்டப்பார்வை
வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய (ஆன்லைன் பயன்முறைக்குப் பதிலாக) ஆஃப்லைன் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு வரி செலுத்துபவரும் ITRகளுக்கு ஆஃப்லைன் பயன்பாட்டை உபயோகப்படுத்துதல் அவசியமாகும். பயன்பாடுகளின் மூலம், பயன்பாட்டினால் உருவாக்கம் செய்யப்பட்ட JSON ஐ பதிவேற்றுவதன் மூலம் நீங்கள் வருமானவரி அறிக்கைகளைத் (ITRs) தாக்கல் செய்யலாம்:
- மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைதலுக்கு பிந்தைய, அல்லது
- ஆஃப்லைன் பயன்பாட்டின் மூலம் நேரடியாக
மின்னணு-தாக்கல் முகப்பில் உள்ள இந்தச் சேவை ITRகளைத் தாக்கல் செய்வதற்கான இரண்டு தனித்தனி ஆஃப்லைன் பயன்பாடுகளை வழங்குகிறது, அவை பின்வருமாறு:
- ITR-1 முதல் ITR-4 வரை, மற்றும்
- ITR-5 முதல் ITR-7 வரை
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
- ஆஃப்லைன் பயன்பாட்டின் மூலம் ITR-ஐத் தாக்கல் செய்வதற்கான செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்
- ITR-1 முதல் ITR-4 வரை அல்லது ITR-5 முதல் ITR-7 வரைக்குமான பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆஃப்லைன் பயன்பாடு
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழையாமல், முதன்மை பக்கம் > பதிவிறக்கங்கள் என்பதிலிருந்து உரிய ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம். அதை உங்கள் கணினியில் நிறுவி, தொடர்ந்து படி 2-க்கு செல்லவும்.
படி 1a: மாற்றாக, மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைந்த பிறகு, மின்னணு-தாக்கல் > வருமானவரி அறிக்கைகள் > வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்க என்பதைக் கிளிக் செய்து, >தற்போதைய மதிப்பீட்டு ஆண்டு மற்றும் தாக்கல் பயன்முறையை (ஆஃப்லைன்) தேர்ந்தெடுக்கவும் பின்னர், ஆஃப்லைன் பயன்பாட்டு விருப்பத்தேர்வின் கீழ் உள்ள பதிவிறக்குக என்பதைக் கிளிக் செய்வதன் மூலமும் ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்..
படி 2: ஆஃப்லைன் பயன்பாட்டை நிறுவி, திறக்கவும். முன்னரே நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படும்போது (எதாவது பதிப்பு புதுப்பிப்புகள் இருக்குமானால்) பயன்பாட்டின் பதிப்பு புதுப்பிக்கப்படும் . தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் வருமானவரி அறிக்கைகள் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு பின்வரும் தாவல்களையும் அவற்றின் உள்ளடக்கங்களையும் காண்பீர்கள்:
- படிவங்கள் - உங்களின் அனைத்து ITRகளும் (மதிப்பீட்டு ஆண்டின் (AYன்) அடிப்படையில்) இங்கே இருக்கும். படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து, இங்கிருந்து நீங்கள் புதிய படிவத்தை தாக்கல் செய்யத் தொடங்கலாம்.
- வருமான வரைவு பதிப்பு - ஓரளவு நிரப்பப்பட்ட ITR வரைவைத் திருத்த விரும்பினால், அறிக்கை வரைவு பதிப்பிலிருந்து தொடர்புடைய வரைவைத் திருத்தவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- முன்-நிரப்பப்பட்ட தரவு - மின்னணு-தாக்கலிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து முன்-நிரப்பப்பட்ட JSON கோப்புகளும் (PAN, பெயர், இறுதியாக செய்த இறக்குமதி/பதிவிறக்கம் மற்றும் மதிப்பீட்டு ஆண்டு - AY போன்ற விவரங்களுடன்) இங்கே உள்ளன. தொடர்புடைய JSON இல் படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கிடைக்கக்கூடிய முன்-நிரப்பப்பட்ட தரவுடன் உங்கள் படிவத்தை தாக்கல் செய்யும் செயல்முறையை நீங்கள் தொடங்கலாம்.

குறிப்பு:
- JSON என்பது உங்கள் முன்-நிரப்பப்பட்ட படிவத்தின் தரவை ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு பதிவிறக்கம் அல்லது இறக்குமதி செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு கோப்பு வடிவமாகும், மேலும் ஆஃப்லைன் பயன்பாட்டில் உங்களின் தயாரிக்கப்பட்ட ITRஐ உருவாக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது.
- ஆஃப்லைன் பயன்பாட்டில் அறிக்கையை தாக்கல் செய்யும் முறை குறித்து அறிய, பிரிவு 4.4வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல் என்பதைப் பார்க்கவும்
படி 4: ITRஐ தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடங்க படிவங்கள் தாவலின் கீழ், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டுக்கான (AY) ITRஇல் படிவங்களைத் தாக்கல் செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- புதிய வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்க வருமானவரி அறிக்கை தாவலில் வருமானவரி அறிக்கை தாக்கல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் ஏற்கனவே உங்கள் முன் நிரப்பப்பட்ட தரவை ஆஃப்லைன் பயன்பாட்டில் பதிவிறக்கம் செய்திருந்தால்/இறக்குமதி செய்திருந்தால், முன்பே நிரப்பப்பட்ட தரவு தாவலில் இருந்து அறிக்கை தாக்கலை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்கலாம்.
ஆஃப்லைன் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருமானவரி அறிக்கைகளை எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை அறிய, பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
| வருமானவரி அறிக்கைகளுக்கு (ITR-1 முதல் ITR-4வரை மற்றும் ITR-5 முதல் ITR-7 வரை) | |
| முன்-நிரப்பப்பட்ட தரவை (JSON கோப்பு) பதிவிறக்கவும் | பிரிவு 4.1 ஐப் பார்க்கவும் |
| முன்-நிரப்பப்பட்ட தரவை (JSON கோப்பு) இறக்குமதி செய்யவும் | பிரிவு 4.2 ஐப் பார்க்கவும் |
| ஆன்லைன் பயன்முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்யவும் (ஆன்லைன் பயன்முறையில் கிடைக்கும் ITR படிவங்களுக்குப் பொருந்தும்) |
பிரிவு 4.3 ஐப் பார்க்கவும் |
| வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல் | பிரிவு 4.4 ஐப் பார்க்கவும் |
4.1 முன்-நிரப்பப்பட்ட (JSON) தரவைப் பதிவிறக்கம் செய்யவும்
படி 1: படிவங்கள் தாவலின் கீழ் படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் இந்தப் பக்கத்தை அடைவீர்கள். முன்-நிரப்பப்பட்ட தரவைப் பதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் PAN ஐ உள்ளிட்டு, மதிப்பீட்டு ஆண்டை (2021-22) தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் 'புதிய தாக்கல் செய்யும் செயல்முறையை தொடர்ந்தால் உங்கள் PANக்கு நிகராக சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள் கைவிடப்படும்' என்ற எச்சரிக்கைச் செய்தியைப் பெறுவீர்கள். ஆம் என கிளிக் செய்யவும்.
படி 4: நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் ஆஃப்லைன் பயன்பாடு மூலம் மின்னணு-தாக்கலில் உள்நுழையலாம்.
படி 5: உள்நுழைவுக்கு பின், நீங்கள் உள்ளிட்ட PAN மற்றும் மதிப்பீட்டு ஆண்டுக்கான உங்களின் முன்-நிரப்பப்பட்ட தரவைக் காண்பீர்கள். படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்
பின்னர், தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடர, உங்கள் தகுதி நிலையை (தனிநபர் /இந்துக் கூட்டுக்குடும்பம் (HUF) / பிற) தேர்ந்தெடுக்க வேண்டிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
மீதமுள்ள செயல்முறையை அறிய, பிரிவு 4.4 வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.
4.2 முன்-நிரப்பப்பட்ட (JSON) தரவை இறக்குமதி செய்யவும்
படி 1: படிவங்கள் தாவலின் கீழ் படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் இந்தப் பக்கத்தை அடைவீர்கள். முன்-நிரப்பப்பட்ட தரவை இறக்குமதி செய்யவும் என்பதைக் கிளிக் செய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் PAN ஐ உள்ளிட்டு, மதிப்பீட்டு ஆண்டை (AY) 2021-22 தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் மேலும் தொடர விரும்பினால் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: கோப்பை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்து, மின்னணு-தாக்கல் முகப்பில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமித்த முன்-நிரப்பப்பட்ட தரவை (JSON கோப்பை) தேர்ந்தெடுக்கவும்
படி 5: JSON ஐப் பதிவேற்றியவுடன், தொடரவும் என்பதைக் கிளிக் செய்தால், கணினி அமைப்பு இறக்குமதி செய்யப்பட்ட JSON கோப்பைச் செல்லதக்கதாக்கும்.
படி 6: சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவிறக்கம் செய்யப்பட்ட முன்-நிரப்பப்பட்ட தரவுகளின் விவரங்களை நீங்கள் காண்பீர்கள். அறிக்கையை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும். இறக்குமதி செய்யப்பட்ட JSON-இலிருந்து அனைத்து தரவையும் நீங்கள் முன்-நிரப்பி, உங்கள் படிவத்தை தாக்கல் செய்வதைத் தொடரலாம். நீங்கள் ITR படிவத் தேர்வுப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
பின்னர், தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடர, உங்கள் தகுதி நிலையை (தனிநபர் /இந்துக் கூட்டுக்குடும்பம் (HUF) / பிற) தேர்ந்தெடுக்க வேண்டிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
மீதமுள்ள செயல்முறையை அறிய, பிரிவு 4.4 வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல் என்பதைப் பார்க்கவும்
4.3 ஆன்லைன் பயன்முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்யவும்
படி 1: படிவங்கள் தாவலின் கீழ் உள்ள படிவங்களை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் இந்தப் பக்கத்தை அடைவீர்கள். ஆன்லைன் பயன்முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்யவும் எனபதை கிளிக் செய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்களிடம் உள்ள ஆன்லைன் பயன்முறையில் ஓரளவு நிரப்பப்பட்ட ITR ஐ, தாக்கல் செய்யும் முறையினை ஆஃப்லைனுக்கு மாற்ற விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு ஆன்லைன் பயன்முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்தல் உங்களுக்கு அதை செய்ய உதவுகிறது.
படி 2: கோப்பை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் முன்னர் மின்னணு-தாக்கல் முகப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமித்த வரைவு ITR JSONஐத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: மின்னணு-தாக்கல் முகப்பில் வருமானவரி அறிக்கை விவரசுருக்கம் பக்கத்திலிருந்து JSON ஐப் பதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் வரைவு ITR JSON ஐப் பதிவிறக்கம் செய்யலாம். கிளிக் செய்வதன் மூலம் இந்தப் பக்கத்தை நீங்கள் அடையலாம்:
- மின்னணு-தாக்கல் > வருமானவரி அறிக்கைகள் > வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யவும்
- பின்னர், மதிப்பீட்டு ஆண்டு(AY) > தாக்கல் முறை (ஆன்லைன்) > தாக்கல் செய்வதை மீண்டும் தொடங்குக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 3: JSON ஐப் பதிவேற்றிய பிறகு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: நீங்கள் மேலும் தொடர விரும்பினால் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர், தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடர உங்கள் ITR படிவத்தின் தொடக்கப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
செயல்முறையை பற்றி மேலும் அறிய, பிரிவு ல் 4.4 வருமானவரி அறிக்கைகளைத் தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல் என்பதை பார்க்கவும் (படி 3 லிருந்து)
4.4 வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், முன்னோட்டமிடுதல் மற்றும் சமர்ப்பித்தல்
படி 1: உங்களின் முன் நிரப்பப்பட்ட தரவைப் பதிவிறக்கி அல்லது இறக்குமதி செய்து, படிவத்தை தாக்கல் செய்யவும் என்பதைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் இந்தப் பக்கத்தை அடைவீர்கள். உங்களுக்கு பொருந்தக்கூடிய தகுதி நிலையைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: வருமானவரி அறிக்கை வகையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன:
- எந்த ITR படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க எனக்கு உதவுங்கள்: தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். கணினி அமைப்பு சரியான ITRஐத் தீர்மானிக்க உதவியதும், நீங்கள் உங்கள் ITRஐத் தாக்கல் செய்வதை தொடரலாம்.

- நான் எந்த ITR படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்: கீழத்தோன்றலில் இருந்து பொருந்தக்கூடிய வருமானவரி படிவத்தைத் தேர்ந்தெடுத்து, ITRஉடன் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்களுக்கு பொருந்தக்கூடிய ITRஐ நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன், தேவையான ஆவணங்களின் பட்டியலைக் குறித்துக்கொண்டு, தொடங்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: நீங்கள் ஏன் வருமானவரி படிவத்தை தாக்கல் செய்கிறீர்கள் என்பதற்கு பொருந்தமான காரணம்(களை) தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் ITRஇன் ஒவ்வொரு பிரிவிலும் (TRஐ எவ்வாறு நிரப்புவது என்பது குறித்த விவரங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வழங்கிய ITRஐத் தாக்கல் செய்வதற்கான நெறிமுறைகளைப் பார்க்கவும்):
- முன்-நிரப்பப்பட்ட / இறக்குமதி செய்யப்பட்ட தரவை சீராய்வு செய்யவும்
- உங்களின் முன்-நிரப்பப்பட்ட தரவை (தேவைப்பட்டால்) திருத்தவும்
- உங்களின் மீதமுள்ள / கூடுதல் விவரங்களை உள்ளிடவும்
படிவத்தின் அனைத்து பிரிவுகளையும் நிறைவு செய்து உறுதி செய்த பிறகு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: உங்கள் அறிக்கை விவரசுருக்கம் உறுதிப்படுத்துதல் பக்கத்தில், நீங்கள் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் உங்கள் வரிக் கணக்கீட்டின் விவரசுருக்கம் காண்பிக்கப்படும்.
அ) வரிப் பொறுப்பு இருந்தால்:
கணக்கீட்டின் அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி பொறுப்பு இருந்தால், பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இப்போது வரி செலுத்தவும் மற்றும் பின்னர் வரி செலுத்தவும் என்ற விருப்பத்தேர்வுகளை காண்பீர்கள்.
குறிப்பு:
- இப்போது வரி செலுத்தவும் விருப்பத்தேர்வை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. BSR குறியீடு மற்றும் செலுத்துச் சீட்டின் வரிசை எண்ணை கவனமாக குறித்துக்கொண்டு, அவற்றை வரி செலுத்தும் விவரங்களில் உள்ளிடவும்
- நீங்கள் பின்னர் வரி செலுத்தவும் என்பதைத் தேர்வு செய்தால், உங்கள் வருமானவரி படிவத்தை தாக்கல் செய்த பிறகு நீங்கள் வரியை செலுத்தலாம், ஆனால் நீங்கள் வரி செலுத்தத் தவறியவர் எனக் கருதப்படக்கூடிய ஆபத்து உள்ளது, மேலும் செலுத்த வேண்டிய வரிக்கான வட்டியையும் செலுத்த வேண்டிய பொறுப்பும் எழக்கூடும்.
ஆ) வரி பொறுப்பு எதுவும் இல்லை (வரி கோரிக்கை எதுவும் இல்லை / வரித்தொகையை திரும்பபெறுதல் இல்லை) அல்லது வரித்தொகையை திரும்பப்பெற தகுதியுடையவராக இருந்தால்:
வரி பொறுப்பு எதுவும் இல்லை என்றால், அல்லது உங்கள் வரிக் கணக்கீட்டின் அடிப்படையில் வரித்தொகையை திரும்பப் பெற வேண்டி இருந்தால், உங்கள் படிவத்தை நேரடியாக முன்னோட்டமிடுவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு கிடைக்கும். படிவத்தை முன்னோட்டமிடவும் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 7: படிவத்தை முன்னோட்டமிட்டு சமர்ப்பிக்கவும் பக்கத்தில் அறிவிப்பு சரிபார்ப்பு பெட்டியை கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிடவும் முன்னோட்டமிடுதலை தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்கள் வருமானவரி அறிக்கையை தயாரிக்க வருமானவரி அறிக்கை தயாரிப்பவர் அல்லது TRP ஐ ஈடுபடுத்தவில்லை என்றால், TRP தொடர்பான உரைப்பெட்டிகளை காலியாக விட்டு விடலாம்.
படி 8: படிவத்தை முன்னோட்டமிட்டு சமர்ப்பிக்கவும் பக்கத்தில், செல்லுபடியாக்குதலுக்கு செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: கணினி அமைப்பு உங்கள் படிவத்தில் செல்லுபடியாக்கல் சோதனைகளை செயல்படுத்தும். பிழைகளின் பட்டியல், ஏதேனும் இருந்தால், படிவத்தை முன்னோட்டமிட்டுச் சமர்ப்பிக்கவும் என்கிற பக்கத்தில் காண்பிக்கப்படும். செல்லுபடியக்குதலில் பிழைகள் ஏதேனும் இருந்தால் நீங்கள் பின்னோக்கி சென்று உங்கள் படிவத்தில் பிழைகளை திருத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெற்றிகரமான செல்லுபடியாக்கல் குறித்த செய்தியை பெறுவீர்கள்.
வெற்றிகரமான செல்லுபடியாக்கலுக்கு பிறகு, படிவத்தின் தாக்கல் செயல்முறையை நிறைவு செய்ய சரிபார்ப்புக்கு செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் JSONஐப் பதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்தால், தயாரிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட உங்கள் படிவத்தின் JSON கோப்பு உங்கள் கணினியில் சேமிக்கப்படும். நீங்கள் அதை பின்னர் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவேற்றலாம், அல்லது அயல்நிலை பயன்பாட்டில் சமர்ப்பிக்கலாம் (கீழே உள்ள படிகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது).
படி 10: சரிபார்ப்பை தொடரவும் என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பயன்பாடு மூலம் உள்நுழைவு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் மின்னணு-தாக்கல் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
படி 11: ஆஃப்லைன் பயன்பாடு மூலம் உள்நுழைந்த பிறகு, உங்கள் படிவத்தை பதிவேற்றுவதற்கான விருப்பத்தேர்வை பெறுவீர்கள். படிவத்தை பதிவேற்றவும் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 12: சரி என்பதை கிளிக் செய்யவும்.
படி 13: உங்கள் சரிபார்ப்பை நிறைவு செய்யவும் பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான தேர்வைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் அறிக்கையை சரிபார்ப்பது கட்டாயமாகும், மேலும் மின்னணு-சரிபார்ப்பு என்பது (பரிந்துரைக்கப்படும் விருப்பத்தேர்வாகும் - இப்போதே மின்னணு-சரிபார்ப்பு செய்யவும்) உங்கள் ITR ஐச் சரிபார்க்க எளிதான வழியாகும் - கையொப்பமிடப்பட்ட அச்சிடப்பட்ட ITR-V ஐ CPCக்கு தபால் மூலம் அனுப்புவதை காட்டிலும் விரைவானது, காகித தேவையற்றது மற்றும் பாதுகாப்பானது.
குறிப்பு:
- மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
- பின்னர் மின்னணு-சரிபார்க்கவும் என்பதைத் தேர்வுசெய்தாலும், உங்கள் படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்கலாம், இருப்பினும், உங்கள் ITRஐத் தாக்கல் செய்த 120 நாட்களுக்குள் உங்கள் படிவத்தை மின்னணு-சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
- ITR_V வழியாக சரிபார்க்கவும் என்பதைத் தேர்வுசெய்தால், உங்கள் ITR_V இன் கையொப்பமிடப்பட்ட அசலின் பிரதியை மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம், வருமானவரித் துறை, பெங்களூரு 560500என்ற முகவரிக்கு சாதாரண / துரித அஞ்சல் மூலம் 120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
- உங்கள் வங்கிக் கணக்கின் செல்லுபடித்தன்மையை நீங்கள் முன்னரே உறுதிப்படுத்திக் கொண்டால் வரிப்பணம் ஏதேனும் திருப்பியளிக்கப்படுமானால் அது உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக இருக்கும்.
- மேலும் அறிய எனது வங்கி கணக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படி 14: இப்போதே மின்னணு-சரிபார்ப்பு செய்யவும் என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் படிவத்தை மின்னணு-சரிபார்க்க நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய பயனர் கையேட்டை மின்னணு-சரிபார்ப்பது எப்படி என்பதைப் பார்க்கவும்.
ITR வெற்றிகரமாக மின்னணு-சரிபார்க்கப்பட்டதும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தி தோன்றும். மேலும் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் உறுதிப்படுத்தும் செய்தியைப் பெறுவீர்கள்.