Skip to main content
  1. ஆவணங்களை அறி வருடல் (ஸ்கேன்) செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  2. ஆவணங்களை அறி வருடல் (ஸ்கேன்) செய்வதற்கான உதவிக்குறிப்புகள்

இணைப்புகளை ஸ்கேன் செய்வதற்கும் பதிவேற்றுவதற்கும் சிறந்த நடைமுறைகள்

எந்தவொரு சேவை கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் எந்தவொரு ஆவணமும் மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றும் போது, பின்வரும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்.

ஸ்கேன் அமைப்புகள்

✓ PDF ஆக ஸ்கேன் செய்யவும்.

✓ 300dpi இல் ஸ்கேன் செய்யவும்.

✓ கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே ஸ்கேன் செய்யவும்.

✓ படித்தல்/எழுதுதல்/கடவுச்சொல் பாதுகாப்புடன் உள்ள கோப்புகளை பதிவேற்ற வேண்டாம்.

மூல ஆவணங்களை ஸ்கேன் செய்தல்

✓ நகல்களும் தொலைநகல்களும் அல்லாமல், அசல் வரி ஆவணத்தை ஸ்கேன் செய்யவும்.

✓ ஆவணத்தை A4 அல்லது கடித அளவில் மட்டும் ஸ்கேன் செய்யவும்.

✓ பல பக்க ஆவணங்களை ஒன்று சேர்த்து, தர்க்கபூர்வமான வரிசையில் ஸ்கேன் செய்யவும்.

✓ தட்டை வகை ஸ்கேனரில் ஒற்றை பக்கங்களை ஸ்கேன் செய்யும் போது தட்டு மூடியை திறந்தவாறே விட வேண்டாம்.

தரக் குறைவுகளைத் தவிர்க்க தேவையான முக்கியப் புள்ளிகள்

✓ மங்கலான அல்லது தெளிவில்லாத உரையுள்ள ஆவணங்கள்.

✓ PAN போன்ற முக்கிய அடையாளத் தகவல்களைக் கொண்ட, படிக்க சிரமமான கையால் எழுதப்பட்ட ஆவணங்கள்.

✓ மை கசிந்த அல்லது தெளிவற்ற நிலையில் உள்ள ஆவணங்கள்.

✓ முக்கிய அடையாளத் தகவல்கள் சேர்க்கப்படாமல், குறுக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட படிவங்கள்.

குறிப்பு:

பதிவேற்றப்படும் ஆவணங்களுக்கு கோப்பு அளவிற்கு வரம்புகளை துறை விதித்து, கட்டாயமாக்க முன்மொழிகிறது. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மிகுந்த பரிந்துரை செய்யப்படுகிறது.