அறிவிப்பிற்கு இணங்கல் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி 1:
"அறிவிப்பிற்கு இணங்குதல்" செயல்பாட்டின் பயன் என்ன?
பதில்:
"அறிவிப்பிற்கு இணங்குதல்" என்பது வருமான வரி இணைய முகப்பில், வழங்கப்பட்ட அறிவிப்புகளுக்கு பதிலைச் சமர்ப்பிக்க மதிப்பீட்டாளருக்கு வழங்கப்பட்ட முன் உள்நுழைவு செயல்பாடாகும்.
கேள்வி 2:
நாம் இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்தி எந்தவொரு அறிவிப்பிற்கும் பதிலை சமர்ப்பிக்கலாமா?
பதில்:
இல்லை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளுக்கான பதிலை சமர்ப்பிக்க மட்டுமே இந்தச் செயல்பாட்டை பயன்படுத்தலாம்:
- எந்தவொரு PAN/TAN உடனும் இணைக்கப்படாத எந்தவொரு ITBA அறிவிப்பு/ஆவணம்
- ITBA அறிவிப்புகள் பிரிவு 133(6) இன் கீழ் அறிவிப்பு வழங்கப்பட்ட நிறுவனத்தின் மின்னணு-தாக்கலை அணுக முடியாத அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் பதிலளிக்கப்பட வேண்டும்
கேள்வி 3:
நான் முழுமையான DINஐ உள்ளிட வேண்டுமா அல்லது DIN இன் கடைசி சில இலக்கங்களை உள்ளிட வேண்டுமா?
பதில்:
ஆம், மதிப்பீட்டாளர் அறிவிப்பு / கடிதம் PDF இல் குறிப்பிட்டுள்ளபடி முழுமையான DIN உள்ளிட வேண்டும்.
கேள்வி 4:
சரிபார்ப்பிற்கு எந்த அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிடப்பட வேண்டும்?
பதில்:
சரிபார்ப்புகளுக்காக இரண்டிற்குமே OTP அனுப்பப்படும் என்பதால் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இரண்டுமே செயல்பாட்டு நிலையில் இருக்க வேண்டும்.
கேள்வி 5:
இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்தி அறிவிப்பிற்குப் பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நான் சேர்க்கலாமா?
பதில்:
இல்லை, இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்தி அறிவிப்பிற்குப் பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நீங்கள் சேர்க்க முடியாது.
கேள்வி 6:
இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்தி அறிவிப்பிற்குப் பதிலளிப்பதற்காக நான் ஒத்திவைப்பு கோரலாமா?
பதில்:
இல்லை, இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்தி அறிவிப்பிற்குப் பதிலளிப்பதற்காக நீங்கள் ஒத்திவைப்பு கோர முடியாது.
கேள்வி 7:
இணைப்பின் வடிவம் மற்றும் அளவு என்னவாக இருக்க வேண்டும்?
பதில்:
ஆவணத்தின் வடிவமைப்பு PDF/XLS/XLSX/CSV ஆக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு இணைப்பின் அளவும் 5 MBக்கு மிகாமல் இருக்க வேண்டும். மதிப்பீட்டாளர் ஒரே நேரத்தில் 10 கோப்புகள் வரை இணைக்கலாம்.
கேள்வி 8:
பதில் சரிபார்ப்பிற்காக ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டியது கட்டாயமா?
பதில்:
ஆம், பதிலை தாக்கல் செய்யும் நபரின் திறனை மதிப்பீட்டாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் UIDAI இல் உள்ளபடி சரியான ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும்.
கேள்வி 9:
எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பிற்கு என்னுடைய பதிலை நான் சமர்ப்பித்ததும் எனது பதிலை நான் பார்க்கலாமா?
பதில்:
ஆம், "சமர்ப்பிக்கப்பட்ட பதிலை காண்க" என்பதை கிளிக் செய்து நீங்கள் சமர்ப்பித்த பதிலை காணலாம், பின்னர் பதிலை சமர்ப்பிப்பதற்கு மதிப்பிடப்படுனர் பயன்படுத்திய அதே அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் DINஐ சரிபார்க்க வேண்டும்.
கேள்வி 10:
ஓர் அறிவிப்பிற்குப் பதிலளித்த பிறகு எனது பதிலை நான் திருத்தலாமா?
பதில்:
இல்லை, சமர்ப்பித்தவுடன் உங்கள் பதிலை நீங்கள் திருத்த முடியாது. மதிப்பீட்டு அதிகாரியால் தடுக்கப்படுதல் அல்லது மூடப்படும் வரை அறிவிப்பிற்கான மற்றொரு பதிலை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
பொறுப்புத்துறப்பு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எனும் இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த ஆவணத்தில் எதுவும் சட்ட ஆலோசனையை கொண்டிருக்கவில்லை