வருமானவரித் துறையால் வழங்கப்பட்ட அறிவிப்பு/ஆணையை உறுதிப்படுத்தவும்
(முழு நம்பிக்கையுடன் இருக்க இன்றே உறுதிப்படுத்துக)
(முழு நம்பிக்கையுடன் இருக்க இன்றே உறுதிப்படுத்துக)
ITD வழங்கிய அறிவிப்பை அங்கீகரித்தல் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்
1. வருமான வரித்துறையால் எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அல்லது உத்தரவை நான் ஏன் சரிபார்க்க வேண்டும்?
1 அக்டோபர் 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒவ்வொரு தகவல்தொடர்பும் ஒரு தனித்துவமான ஆவண அடையாள எண்ணைக் (DIN) கொண்டிருக்க வேண்டும். வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு வந்த நோட்டீஸ், உத்தரவு அல்லது ஏதேனும் தகவல்தொடர்பு உண்மையானது மற்றும் வருமான வரி அதிகாரியால் வழங்கப்பட்டது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த, இந்தச் சேவையைப் பயன்படுத்தி எந்தவொரு நோட்டீஸ், உத்தரவு அல்லது தகவல்தொடர்பையும் சரிபார்க்கலாம்.
2. வருமான வரித்துறையின் (ITD) நோட்டீஸ் அல்லது உத்தரவில் DIN குறிப்பிடப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
மேலே குறிப்பிட்டுள்ள சூழலில், நீங்கள் பெற்ற நோட்டீஸ், உத்தரவு அல்லது கடிதம் செல்லுபடியாகாததாகக் கருதப்படும் மற்றும் சட்டப்பூர்வமாக அது ஒருபோதும் வழங்கப்படாததாகவே கருதப்படும். இத்தகைய தகவல்தொடர்புக்கு நீங்கள் எந்தவிதமான பதிலோ அல்லது நடவடிக்கையோ எடுக்க வேண்டிய அவசியமில்லை.
3. வருமான வரித்துறை (ITD) எனக்கு வழங்கிய ஆணையை நான் எங்கே சரிபார்க்கலாம்?
வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட உத்தரவு அல்லது அறிவிப்பின் உண்மைத்தன்மையை, மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்ள வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட அறிவிப்பு / உத்தரவை உறுதிப்படுத்துதல் சேவையைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.
4. வருமான வரித்துறை (ITD) எனக்கு அனுப்பிய நோட்டீஸைச் சரிபார்க்க நான் உள்நுழைய வேண்டுமா?
இல்லை, அறிவிப்பு / உத்தரவைச் சரிபார்க்க நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள 'ITD வழங்கிய அறிவிப்பு/உத்தரவை சரிபார்க்கவும் என்ற இணைப்பைக் கிளிக் செய்து அறிவிப்பைச் சரிபார்க்கலாம்.
5. நோட்டீஸைச் சரிபார்க்க, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள அதே அலைபேசி எண்ணைத்தான் நான் பயன்படுத்த வேண்டுமா?
வருமான வரித்துறை வழங்கிய நோட்டீஸ், கடிதம் அல்லது பிற தகவல்தொடர்புகளைச் சரிபார்க்க, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அதே அலைபேசி எண்ணைத்தான் உள்ளிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. நீங்கள் எந்த அலைபேசி எண்ணிற்குச் செய்தி பெற விரும்புகிறீர்களோ, அந்த எண்ணை 'அலைபேசி எண்' என்ற பெட்டியில் உள்ளிட்டு, அதில் வரும் OTP-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
6. DIN என்றால் என்ன?
DIN என்பது 'ஆவணப்படுத்துதல் அடையாள எண்' என்பதன் சுருக்கமாகும். இது கணினி மூலம் உருவாக்கப்படும் ஒரு தனித்துவமான எண்ணாகும். வருமான வரித்துறை அதிகாரி எந்தவொரு வரி செலுத்துபவருக்கும் அனுப்பும் ஒவ்வொரு தகவல் தொடர்பிலும் (கடிதம் / நோட்டீஸ் / ஆணை / வேறு ஏதேனும் கடிதப் போக்குவரத்து) இந்த எண் முறையாகக் குறிப்பிடப்பட வேண்டும்.