அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரைச் சேர்க்கவும் பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
இந்தச் சேவை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்துள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. நாட்டிற்கு வெளியே இருப்பது, குடியுரிமையற்றவராக இருப்பது அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் — தங்களுடைய ITR-கள், படிவங்கள் அல்லது சேவை கோரிக்கைகளைச் — சரிபார்க்க முடியாத பயனர்கள், தங்களுக்குப் பதிலாக சரிபார்ப்பை நிறைவு செய்ய மற்றொரு நபருக்கு அதிகாரம் வழங்க இந்தச் சேவை உதவுகிறது. மேலும், பயனர்கள் பிரதிநிதி மதிப்பீட்டாளர்களாகப் பதிவுசெய்து, மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படவும் இந்தச் சேவை அனுமதிக்கிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன் தேவைகள்
-
செல்லுபடியாகும் சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
-
PAN ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
3. செயல்முறை/படிப்படியான வழிகாட்டி
3.1 மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படப் பதிவு செய்யவும்
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
படிநிலை 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்கள் என்பதற்குச் சென்று, தனக்குப் பதிலாகச் செயல்பட மற்றொரு நபருக்கு அங்கீகாரம் வழங்குதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: + அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரைச் சேர்ப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் PAN-ஐ உள்ளிட்டு, அங்கீகாரம் வழங்க வேண்டிய காலத்தை (தொடக்கத் தேதி முதல் முடிவுத் தேதி வரை) அல்லது பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு::
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரைச் சேர்க்கலாம்.
- வருமானவரி அறிக்கையைச் சமர்ப்பித்தல் மற்றும் சரிபார்த்தல்
- வருமானவரி அறிக்கையைச் சரிபார்த்தல்
- படிவத்தைச் சமர்ப்பித்தல்
- சேவைக் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்
படிநிலை 7: கோரிக்கையைச் சரிபார்க்க, மின்னணு-தாக்கலில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு வந்த 6 இலக்க OTP-ஐ உள்ளிடவும்.
படிநிலை 8: கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் 7 நாட்களுக்குள் அந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டும். அதன் பிறகு, அந்தக் கோரிக்கை வருமானவரித் துறையால் 7 நாட்களுக்குள் செயலாக்கப்படும்.
கோரிக்கையைக் காண்க என்பதைக் கிளிக் செய்து கோரிக்கையைப் பார்க்கவும்.
3.2 அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபரால் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுதல்:
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்.
படிநிலை 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: நிலுவையிலுள்ள செயல்கள் என்பதற்குச் சென்று, பணிப் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4: பணிப் பட்டியல் திறக்கும். அதில், மதிப்பீட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரைச் சேர்ப்பதற்காக அனுப்பப்பட்ட கோரிக்கையைப் பார்க்கலாம். கோரிக்கையை ஏற்க ஏற்றுக்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 5:இப்போது கோப்பை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்துஅங்கீகாரம் பெற்ற நபர் ஆவணத்தை இணைக்கவும். பிறகு சரிபார்ப்பிற்குத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
1) கோப்பின் அதிகபட்ச அளவு 5 MB ஆக இருக்கலாம்.
2) கோப்புகளை PDF வடிவில் மட்டுமே பதிவேற்ற முடியும்.
படிநிலை 6: இப்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி கோரிக்கையைச் சரிபார்க்கவும்:

படிநிலை 7: ஆதார் விவரங்களைச் சரிபார்க்க என்பதைக் கிளிக் செய்து, ஆதார் OTP உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வந்த OTP-ஐ உள்ளிடவும்.

படிநிலை 8: மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். படிவத்தைச் சமர்ப்பிப்பதைத் தொடர ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு முடிந்த பிறகு, வருமான வரித் துறை கோரிக்கையைச் செயலாக்கும். அங்கீகாரம் நடைமுறைக்கு வர 24 முதல் 72 மணி நேரம் வரை ஆகலாம்.
தொடர்புடைய தலைப்புகள்
சொற்களஞ்சியம்
|
சுருக்கப்பெயர்/ சுருக்கக் குறியீடு |
விவரம்/முழு வடிவம் |
|
AO |
மதிப்பீட்டு அலுவலர் |
|
AY |
மதிப்பீட்டு ஆண்டு |
|
AOP |
நபர்களின் கூட்டமைப்பு |
|
BOI |
தனிநபர்களின் கூட்டமைப்பு |
|
CA |
பட்டயக் கணக்காளர் |
|
CPC |
மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் |
|
ERI |
மின்னணு-வருமானவரி அறிக்கை இடைத்தரகர் |
|
LA |
உள்ளூர் நிர்வாகம் |
|
TDS |
மூலத்தில் வரி பிடித்தம் |
|
EXTA |
வெளி நிறுவனம் |
|
ITDREIN |
வருமானவரித் துறையின் அறிக்கையிடல் நிறுவன அடையாள எண் |
|
HUF |
பிரிக்கப்படாத இந்து குடும்பம் |
|
EVC |
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு |
|
DSC |
மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
|
ITD |
வருமான வரித் துறை |
|
ITR |
வருமானவரி அறிக்கை |