மின்னணு தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
மின்னணுத் தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு, சேவை, பதிவு செய்யப்பட்ட பயனர்கள் தங்களின் மின்னணுத் தாக்கல் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.மின்னணுத் தாக்கல் பெட்டகம், மின்னணுத் தாக்கல் கணக்கில் உள்நுழையும்போது இரண்டாம் நிலை அங்கீகாரத்தையும், கடவுச்சொல்லை மீட்டமைக்கும் போது இரண்டாம் கட்ட அங்கீகாரத்தையும் பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் வழங்குகிறது:
- இணைய வங்கிச் சேவை
- மின்னணு கையொப்பச் சான்றிதழ்(DSC)
- ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP
- வங்கிக் கணக்கு EVC
- டிமேட் கணக்கு EVC
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
• மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்யப்பட்ட பயனர்
• பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்:
o மின்னணுத் தாக்கலில் பதிவுசெய்யப்பட்ட, செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்
o மின்னணுத் தாக்கலில், முன் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC வசதி செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு
o மின்னணுத் தாக்கலில் முன் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC வசதி செயல்படுத்தப்பட்ட டிமேட் கணக்கு
o செல்லுபடியாகும் இணைய வங்கிச் சேவை கணக்கு
3. படிநிலை வழிகாட்டி
படிநிலை 1: உங்களுடைய பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் வாயிலாக உள்நுழையவும்.

படிநிலை 2: உங்களுடைய முகப்புப் பலகை மேல் வலது மூலையில் உள்ள எனது சுயவிவரம். என்பதைக் கிளிக் செய்யவும்.எனது சுயவிவரம் பக்கத்தில்,மின்னணு - தாக்கலின் பெட்டகம் உயர் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னணுத் தாக்கலில் பெட்டகக் கூடுதல் பாதுகாப்பு பக்கத்தில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்
| ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP-ஐச் செயல்படுத்தவும் | பிரிவு 3.1-ஐப் பார்க்கவும். |
| வங்கிக் கணக்கு EVC /டிமேட் கணக்கு EVC / DSC / இணைய வங்கிச் சேவை வாயிலாக செயல்படுத்தவும். | பிரிவு 3.2-வைப் பார்க்கவும். |
| உயர் பாதுகாப்பு விருப்பங்களை ரத்து செய் | பிரிவு 3.3-வைப் பார்க்கவும். |
3.1 ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP வசதியைச் செயல்படுத்துதல்
படிநிலை 1: உள்நுழைவதற்கான உயர் பாதுகாப்பை அமைத்தல் மற்றும் கடவுச்சொல் மீட்டமைப்பிற்கான உயர் பாதுகாப்பை அமைத்தல் ஆகிய பிரிவுகளில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் உயர் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP வாயிலாக இரண்டாம் கட்ட அங்கீகாரத்தை பயன்படுத்த விரும்பினால், அதற்கான குறிப்பிட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 2: ஆதார் OTP வாயிலாக நீங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் ஒரு பாப்-அப் செய்தி காண்பிக்கப்படும். சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: உங்களிடம் OTP இருந்தால், ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசியில் ஏற்கனவே OTP உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில், OTP-ஐ உருவாக்கவும். ஆதார் உடன் பதிவுசெய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணுக்கு OTP வந்து சேரும்.

படிநிலை 4: எனது ஆதார் விவரங்களைச் சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஆதார் OTP-ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 5: OTP-ஐ சரிபார்க்கவும் பக்கத்தில், ஆதார் உடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு பெறப்பட்ட 6-இலக்க OTP-ஐ உள்ளிட்டு, சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP 15 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
- சரியான OTP-ஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
- OTP-ஐ மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தவுடன், ஆதார் உடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டவுடன், பின்வரும் செய்தி காண்பிக்கப்படும்.
3.2 வங்கிக் கணக்கு EVC / டிமேட் கணக்கு EVC / DSC / இணைய வங்கிச் சேவை வாயிலாக செயல்படுத்துதல்.
படிநிலை 1: உள்நுழைவதற்கு உயர் பாதுகாப்பை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லுக்கு உயர் பாதுகாப்பை அமைக்கவும் மீட்டமைக்கவும் பிரிவுகளில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் உயர் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 2: தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் ஒரு தகவல் செய்தி காண்பிக்கப்படும். சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுத்ததும், நீங்கள் உறுதிப்படுத்தல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களுக்கு உயர் பாதுகாப்பை செயல்படுத்த, தயவுசெய்து 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்யவும்.
3.3 உயர் பாதுகாப்பு விருப்பங்களின் தேர்வை நீக்குதல்
படிநிலை 1: மின்னணுத் தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு பக்கத்தில், உள்நுழைவுயவும் மற்றும் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும் ஆகியவற்றிற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த இரண்டாம் நிலை அங்கீகார விருப்பங்களைக் காணலாம். உயர் பாதுகாப்பு தேவையில்லாத விருப்பங்களின் தேர்வை நீக்கி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உள்நுழையவும் மற்றும் / அல்லது கடவுச்சொல் மீட்டமைப்பதற்கான உயர் பாதுகாப்பு விருப்பத்தின் தேர்வை நீங்கள் நீக்கலாம்.
படிநிலை 2: உறுதிப்படுத்தல் பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களுக்கான உயர் பாதுகாப்பை முடக்க உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், ஒரு வெற்றிச் செய்தி மற்றும் பரிவர்த்தனை ID-ஐ காண்பிக்கப்படும்.
4. தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்
- கடவுச்சொல்லை மாற்றவும்
- EVC-ஐ உருவாக்கவும்
- DSC-ஐ பதிவு செய்யவும்
- ஆதார் இணைப்பு