EVC உருவாக்கம் பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்குதல் (EVC) சேவையானது, வருமான வரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்துள்ள தனிநபர் பயனர்கள் EVC-ஐ உருவாக்குவதற்காக மட்டுமே கிடைக்கிறது. இந்தச் சேவையின் வாயிலாக நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- ஒரு ஆவணத்தை மின்னணு-சரிபார்ப்பு செய்தல் (சட்டரீதியான படிவங்கள், வருமான வரி அறிக்கைகள்)
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்
- கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன், வருமான வரி அறிக்கைத் தாக்கல் இணைய முகப்பில் தனிநபர் வரிசெலுத்துவோராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்டு, EVC செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு (வங்கிக் கணக்கு விருப்பத்திற்கு)
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்டு, EVC வசதி அளிக்கப்பட்ட டிமேட் கணக்கு (டிமேட் கணக்கு விருப்பம்)
- வங்கித் கணக்குடன் இணைக்கப்பட்ட PAN (இணைய வங்கி விருப்பம்)
- செல்லுபடியாகும் பற்று அட்டை (வங்கி ATM தெரிவிற்கு)
3. படிப்படியான வழிகாட்டி
படிநிலை 1: உங்களின் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: உங்கள் முகப்பு பலகை சேவைகள் > EVC ஐ உருவாக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: EVC-ஐ உருவாக்குதல் பக்கத்தில், மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை (EVC) எவ்வாறு உருவாக்க விரும்புகிறீர்கள்? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி EVC-ஐ உருவாக்கலாம்:
| இணைய வங்கிச்சேவை | பிரிவு 3.1-ஐ பார்க்கவும். |
| வங்கி கணக்கு | பிரிவு 3.2-ஐ பார்க்கவும். |
| டிமேட் கணக்கு | பிரிவு 3.3-ஐ பார்க்கவும். |
3.1 இணைய வங்கிசேவை வாயிலாக EVC உருவாக்குதல்
படிநிலை 1: EVC-ஐ உருவாக்குதல் பக்கத்தில், இணைய வங்கிசேவை என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: இணைய வங்கி மூலம் மின்னணு தாக்கல் உள்நுழைவு பக்கத்தில், வங்கியின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: உங்கள் வங்கியின் இணைய வங்கிசேவை உள்நுழைவுப் பக்கம் தோன்றும்போது, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் இருந்து நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.
படிநிலை 3: உங்கள் வங்கியின் இணைய வங்கிசேவை உள்நுழைவு பக்கத்தில், வங்கி வழங்கிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 4: உங்கள் இணைய வங்கிசேவை இணையதளத்தில், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்கள் இணைய வங்கிசேவை இணையதளத்தில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டு, உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைவீர்கள்.
படிநிலை 5: உங்கள் முகப்புப் பலகை -இல், சேவைகள் > EVC உருவாக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID - க்கு உருவாக்கப்பட்ட EVC அனுப்பப்படும், மேலும் வெற்றிச் செய்தி காட்டப்படும்.
3.2 வங்கிக் கணக்கு மூலம் EVC உருவாக்குதல்
படிநிலை 1: EVC-ஐ உருவாக்குதல் பக்கத்தில், வங்கிக் கணக்கு மூலம் என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு உறுதிப்படுத்தல் செய்தி திரையில் தோன்றும். மேலும், வங்கியால் சரிபார்க்கப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு EVC அனுப்பப்படும்.
குறிப்பு:
- வங்கிக் கணக்கு மூலம் EVC உருவாக்கும் விருப்பத்தைப் பயன்படுத்த, மின்னணு-தாக்கல் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்டு, EVC செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- வங்கி கணக்கு சரிபார்க்கப்பட்டால் மட்டுமே, உங்களுடைய அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID-க்கு EVC அனுப்பப்படும்.
3.3. டிமேட் கணக்கு மூலம் EVC-ஐ உருவாக்குதல்
படிநிலை 1: EVC-ஐ உருவாக்குதல் பக்கத்தில், டிமேட் கணக்கு மூலம் என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்தல் செய்தி திரையில் காண்பிக்கப்படும். மேலும், NSDL / CDSL-ஆல் சரிபார்க்கப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு EVC அனுப்பப்படும்.
குறிப்பு:
- டிமேட் கணக்கு மூலம் EVC உருவாக்கும் விருப்பத்தைப் பயன்படுத்த, மின்னணு-தாக்கல் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள டிமேட் கணக்கு சரிபார்க்கப்பட்டு, EVC செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- உங்கள் டிமேட் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID, NSDL/CDSL வாயிலாக சரிபார்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த அலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு EVC அனுப்பப்படும்.
4. தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- முகப்புப் பலகை
- மின்னணு முறையில் சரிபார்ப்பது எப்படி
- எனது வங்கிக் கணக்கு
- எனது டிமேட் கணக்கு
- உடனடி e-PAN