வருமான மற்றும் வரி மதிப்பீட்டாளர் பயனர் கையேடு

 

1.மேலோட்டப்பார்வை

வருமானம் மற்றும் வரி மதிப்பீட்டாளர் சேவை, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்த பயனர்கள், வருமான வரிச் சட்டம், விதிகள் மற்றும் அறிவிப்புகளின் விதிகளின்படி தங்கள் வரியை மதிப்பிட உதவுகிறது. இதற்காக, அவர்கள் ஈட்டிய வருமானம் மற்றும் சட்டத்தின் கீழ் கோரப்படும் விலக்குகள் குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், இந்தச் சேவை பழைய அல்லது புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ் வரி மதிப்பீட்டை வழங்குவதோடு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் வரி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் உதவுகிறது.

2. இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கான முன் தேவைகள்

• செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல் கொண்ட, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்.

தயவுசெய்து கவனிக்கவும்: இந்தப் பயனர் கையேடு, வரி ஆண்டு (TY) 2026-27-க்கான வரியை மதிப்பீடு செய்ய/கணக்கிட, வருமான வரிச் சட்டம் 2025-இன் படி தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026-27-க்கான வரியை மதிப்பீடு செய்ய/கணக்கிட விரும்பினால், படிநிலை 3(a)-இல் பொருந்தக்கூடிய சட்டமாக வருமான வரிச் சட்டம் 1961-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. படிநிலை வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகையில்,‘வருமானம் மற்றும் வரி மதிப்பீட்டாளர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

‘வருமானம் மற்றும் வரி மதிப்பீட்டாளர்’-இல் நான்கு டாபுகள் உள்ளன; இந்த டாபுகளில் நீங்கள் உங்கள் விவரங்களை வழங்க வேண்டும்.

Data responsive

படிநிலை 3a: 'அடிப்படைத் தகவல்' தாவலில், PAN எண், வரி செலுத்துபவரின் பெயர் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும். மேலும், பொருந்தக்கூடிய சட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும் (வருமான வரிச் சட்டம் 2025 அல்லது வருமான வரிச் சட்டம் 1961), சட்டத்தின் தேர்வுக்கு ஏற்ப மதிப்பீட்டு ஆண்டு (AY) அல்லது வரி ஆண்டு (TY) ஆகியவற்றைக் குறிப்பிடவும். அத்துடன் வரி செலுத்துபவர் வகை, குடியிருப்பு நிலை, வயது, மற்றும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி மற்றும் தாக்கல் செய்யப்பட்ட உண்மையான தேதி ஆகிய விவரங்களையும் உள்ளிடவும்.

Data responsive

தயவுசெய்து கவனிக்கவும்:இந்தப் பயனர் கையேடு, I2026-27 வரி ஆண்டிற்கான (TY) வரியை மதிப்பீடு செய்ய/கணக்கிட, 2025-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026–27க்கான வரியை மதிப்பிட அல்லது கணக்கிட விரும்பினால், படிநிலை 3(a)-இல் பொருந்தக்கூடிய சட்டமாக வருமான வரிச் சட்டம், 1961 என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படிநிலை 3b: ‘வருமான விவரங்கள்’ டாபில், பின்வருவனவற்றிற்கான தேவையான விவரங்களை உள்ளிடவும்:

• சம்பளத் தலைப்பின் கீழ் வரும் வருமானம்,
• வீட்டுச் சொத்துத் தலைப்பின் கீழ் வரும் வருமானம்,
• மூலதன ஆதாயத் தலைப்பின் கீழ் வரும் வருமானம்,
• வணிகம் அல்லது தொழிலின் தலைப்பின் கீழ் வரும் வருமானம், மற்றும்
• மற்ற ஆதாரத் தலைப்பின் கீழ் வரும் வருமானம்

Data responsive

சம்பள வருமான விவரங்கள்: 

Data responsive

வீட்டுச் சொத்து வருமான விவரங்கள்:

Data responsive

மூலதன ஆதாய விவரங்கள்

Data responsive

வணிகம் அல்லது தொழிலிலிருந்து வரும் வருமானம்:

Data responsive

பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் வருமானம்:

Data responsiveData responsiveData responsiveData responsive

படிநிலை 3c: ‘வரி பிடித்தம் செய்தல் விவரங்கள்’ டாபில், உங்களுக்குப் பொருந்தக்கூடிய பிடித்த விவரங்களை உள்ளிடவும். இதில் PPF, LIC, வீட்டுக் கடன், NPS, மருத்துவக் காப்பீடு, உயர்கல்விக்கான கடன் மற்றும் இதர பொருந்தக்கூடிய வரி பிடித்தங்கள் செய்தல் அடங்கும்.

Data responsive

படிநிலை 3d: ‘வரி விவரங்கள்’ டாபில், உங்கள் TDS/TCS விவரங்களைப் பார்க்கவும்; உங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ள சுய-மதிப்பீட்டு வரி அல்லது முன்கூட்டிய வரி தொடர்பான விவரங்களை உள்ளிடவும் அல்லது திருத்தவும்.

Data responsive

படிநிலை 4: அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகு, ‘வரி மதிப்பீடு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsiveData responsive

படிநிலை 5: நீங்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு வரி கணக்கிடப்பட்டு திரையில் காண்பிக்கப்படும்.

Data responsive

 

Data responsiveData responsive

படிநிலை 6: மதிப்பிடப்பட்ட/கணக்கிடப்பட்ட வரியின் PDF-ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பினால், 'பதிவிறக்கம்' என்பதைக் கிளிக் செய்து, மதிப்பிடப்பட்ட வரி கணக்கீட்டு விவரங்களை PDF கோப்பாக உங்கள் கணினியில் சேமிக்கலாம்.

Data responsive

படிநிலை 7: நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட அல்லது கணக்கிடப்பட்ட வரி புள்ளிவிவரங்கள் அடங்கிய PDF இதோ:

Data responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsive