1. மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கு ITR-4-ஐ தாக்கல் செய்ய யார் தகுதியானவர்கள்?

இந்தியாவில் வசிக்கும் ஒரு தனிநபர் /HUF / கூட்டாண்மை நிறுவனம் (LLP தவிர்த்து) பின்வரும் நிபந்தனைகளை பூர்த்திச் செய்திருந்தால் ITR-4-ஐ தாக்கல் செய்யலாம்

  • FY மொத்த வருமானம் ₹50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • பிரிவு 44AD, 44ADA அல்லது 44AE-இன் கீழ் உத்தேச அடிப்படையில் கணக்கிடப்படும் வணிகம் மற்றும் தொழில் சார்ந்த வருமானம்.
  • பிரிவு 112A-இன் கீழ் ₹1.25 இலட்சத்தை மிகாமல் உள்ள நீண்ட கால மூலதன ஆதாயம்
  • ஊதியம் / ஓய்வூதியம், இரண்டு வீட்டு சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் வேளாண்மை வருமானம் (₹5,000 வரை) ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வருமானம்.
  • பிற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் வருமானம் (பரிசுச்சீட்டு வெற்றித் தொகை மற்றும் குதிரைப் பந்தய வருமானம் தவிர):
    • சேமிப்புக் கணக்கு மீதான வட்டி
    • வைப்புத்தொகை மீதான வட்டி (வங்கி / அஞ்சல் அலுவலகம் / கூட்டுறவுச் சங்கம்)
    • வருமான வரி திருப்பிச் செலுத்தலுக்கான வட்டி
    • குடும்ப ஓய்வூதியம்
    • இதர வட்டி வருமானம் (எ.கா., பிணையற்ற கடனுக்கான வட்டி வருமானம்)

2. AY 2026-27 க்கான ITR-4 படிவத்தைத் தாக்கல் செய்யத் தகுதியற்றவர் யார்?

ITR-4 படிவத்தைப் பின்வரும் நிபந்தனைகளைக் கொண்ட ஒரு தனிநபர் / HUF/ கூட்டாண்மை நிறுவனம் (LLP தவிர்த்து) ஆகியோர் தாக்கல் செய்ய முடியாது:

  • இந்தியாவில் வசிப்பவர் ஆனால் சாதாரணமாக வசிப்பவர் அல்ல அல்லது சாதாரணமாக வசிப்பவராக இருந்தால்
  • மொத்த வருமானம் ₹50 லட்சத்துக்கு அதிகமாகயிருந்தால்
  • குறுகிய கால மூலதன ஆதாயங்கள்;
  • பிரிவு 112A-இன் கீழ் ₹1.25 லட்சத்திற்கும் அதிகமான நீண்ட கால மூலதன ஆதாயம்
  • விவசாய வருமானம் ₹5,000-க்கும் அதிகமாக இருந்தால்
  • ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தால்
  • இரண்டிற்கும் மேற்பட்ட வீட்டு சொத்துக்கள் வாயிலாக வருமானம் பெற்றிருந்தால்
  • பின்வரும் வகையான வருமானங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால்:
    • பரிசுச்சீட்டு மூலம் கிடைத்த வெற்றித்தொகை
    • பந்தயக் குதிரைகளைச் சொந்தமாக வைத்திருத்தல் மற்றும் பராமரித்தல் செயல்பாடு
    • பிரிவு 115BBDA அல்லது பிரிவு 115BBE-இன் கீழ் சிறப்பு விகிதங்களில் வரி விதிக்கப்படக்கூடிய வருமானம்
  • முந்தைய நிதி ஆண்டில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில்,பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்கு நிறுவனங்களில் சாதாரணப் பங்குகளை வைத்திருந்தால்
  • தகுதியான ஒரு தொடக்க நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ESOP மீதான வருமான வரியை ஒத்திவைத்திருந்தால்
  • ITR-4-ஐ தாக்கல் செய்வதற்கான தகுதி வரம்புகளின் கீழ் வராதவராக இருந்தால்

3. 2026-27 AY-க்கான ITR-4 படிவத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் யாவை?

2026-27 AY-க்கான ITR-4 படிவத்தில் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:

  • இரண்டு வீட்டு சொத்துக்கள்: வரி செலுத்துபவர் இப்போது ITR-1-இல் ஒரு வீட்டு சொத்திற்குப் பதிலாக அதிகபட்சம் இரண்டு வீட்டு சொத்துகளிலிருந்து பெறப்படும் வருமானத்தைப் பதிவுசெய்யலாம்.
  • வசூலிக்க முடியாத வாடகைக்கான புலம்: வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் வாயிலாக வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், "வசூலிக்க முடியாத வாடகை" என்பதைக் குறிப்பிடுவதற்காகப் புதிய தனிப்பட்ட புலம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது
  • வெளிநாட்டு சொத்து அறிக்கையிடல்: வெளிநாட்டு ஓய்வூதியப் நன்மைகள் தொடர்பான தகவல்களை அறிக்கையிட வேண்டிய அவசியம் நீக்கப்பட்டுள்ளது.

4. நான் வணிக வருமானம் கொண்ட ஒரு தனிநபர். ITR-4-ஐ தாக்கல் செய்யும்போது பழைய வரி முறையைத் தேர்வு செய்ய முடியுமா?

ஆம், வணிக வருமானம் உள்ளவர்கள் பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 139(1)-இன் கீழ் ITR தாக்கல் செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிவம் 10-IEA-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

5. நான் வணிக வருமானம் கொண்ட ஒரு தனிநபர். ஒவ்வொரு ஆண்டும் நான் புதிய வரி விதிப்பு முறைக்கும் பழைய வரி விதிப்பு முறைக்கும் இடையில் மாறி மாறித் தேர்ந்தெடுக்க முடியுமா?

வணிக வருமானம் கொண்ட தனிநபர்கள், புதிய வரி விதிப்புமுறை மற்றும் பழைய வரி விதிப்புமுறை ஆகியவற்றிற்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் விருப்பப்படி தேர்வு செய்யத் தகுதியற்றவர்கள். அவர்கள் ஒருமுறை பழைய வரி விதிப்புமுறையைத் தேர்வு செய்துவிட்டால், தங்களது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே புதிய வரி விதிப்பு முறைக்குத் திரும்பும் வாய்ப்பு வழங்கப்படும். ஒருமுறை புதிய வரி விதிப்புமுறைக்குத் திரும்பிய பிறகு, அவர்களால் மீண்டும் பழைய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்ய முடியாது.

அடிப்படையில், வணிக வருமானம் கொண்டவர்கள் படிவம் 10-IEA-ஐ இரண்டு முறை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். முதல் முறை பழைய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்வதற்காகவும், இரண்டாவது முறை மீண்டும் புதிய வரி முறைக்கு மாறுவதற்காகவும் தாக்கல் செய்ய வேண்டும். புதிய வரி விதிப்பு முறைக்கு மீண்டும் மாறிய பிறகு, பழைய வரி விதிப்பு முறையை மீண்டும் தேர்வு செய்ய அனுமதி இல்லை.

6. பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு அல்லது அதிலிருந்து விலகுவதற்கு படிவம் 10-IEA-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி என்ன?

வருமான வரிச் சட்டங்களின்படி, வணிக வருமானம் கொண்ட ஒரு தனிநபர், வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 139 (1)-இன் கீழ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு முன்னதாகப் படிவம் 10-IEA-ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.

7. ITR-4 வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அனைத்து வரி பிடித்தங்களையும் கோர முடியுமா?

ஆம், வரி செலுத்துபவர் உரிய தேதிக்குள் படிவம் 10-IEA-வை தாக்கல் செய்த பிறகு, ‘பகுதி A பொதுவான-தனிப்பட்ட தகவல்கள்’ என்ற பிரிவின் கீழ், படிவம் 10-IEA தாக்கல் செய்த தேதி மற்றும் ஒப்புகை எண் ஆகியவற்றை வழங்கி, கீழே உள்ள கேள்விக்கு ‘ஆம், செலுத்த வேண்டிய தேதிக்குள்’ என்று தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, ‘இயல்புநிலை புதிய வரி விதிப்பு முறையிலிருந்து’ பழைய வரி விதிப்பு முறைக்கு மாறினால், வருமான வரி கணக்கில் அனைத்து பிடித்தங்களையும் வருமான வரி அறிக்கையில் கோரலாம்.

Data responsive

8. ITR-4 படிவத்தைத் தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? ITR தாக்கல் செய்ய ஆதாரை PAN எண்ணுடன் இணைப்பது கட்டாயமா?

ITR-4 படிவத்தைத் தாக்கல் செய்ய, கீழே உள்ள ஆவணங்களை (தேவைக்கேற்ப) நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்:

  • படிவம் 16
  • படிவம் 16A
  • படிவம் 26AS
  • AIS
  • செலுத்துச் சீட்டு
  • வங்கி கணக்கு அறிக்கைகள்
  • வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழ்கள்
  • வீட்டு வாடகை ரசீது (தேவைப்படும் பட்சத்தில்)
  • வாடகை ஒப்பந்தம்
  • நன்கொடைகளுக்கான ரசீதுகள்
  • முதலீடு மற்றும் காப்பீட்டுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகள் - LIC, ULIP போன்றவைகள் மற்றும் மற்றும் ITR படிவத்தில் தகவல்களை வழங்குவதற்குத் தேவையான பிற தொடர்புடைய ஆவணங்கள்.

ஆதார் மற்றும் PAN எண்ணை இணைப்பது முக்கியம். இருப்பினும், உங்கள் PAN எண்ணை ஆதாருடன் இணைக்கப்படாவிட்டாலும் உங்களால் ITR தாக்கல் செய்ய முடியும், ஆனால் வருமான வரி இணைய முகப்பில் உங்களுக்கான அணுகல் வரம்புக்குட்பட்டதாகவே இருக்கும். எனவே, PAN எண்ணை ஆதாருடன் இணைத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

9. ITR-4 படிவத்தைத் தாக்கல் செய்பவர்களுக்கான தோராய வரி விதிப்பு திட்டம் என்றால் என்ன?

வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 44AA-இன் படி, குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் சூழ்நிலைகளின் கீழ், வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் வழக்கமான கணக்குப் புத்தகங்களைப் பராமரிக்க வேண்டும். இத்தகைய சுமையிலிருந்து சிறு வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிப்பதற்காக, வருமான வரிச் சட்டம் பிரிவு 44AD, 44ADA மற்றும் 44AE ஆகியவற்றின் கீழ் தோராய வரி விதிப்பு முறையை உருவாக்கியுள்ளது. இந்தத் தோராய வரி விதிப்பு முறையை ஏற்கும் ஒரு நபர், சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் தனது வருமானத்தை அறிவிக்க முடியும். இந்தச் சட்டம் (ITR-4-ஐ பயன்படுத்துபவர்களுக்காக) வகுத்துள்ள தோராய வரி விதிப்பு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • பிரிவு 44AD : குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சில வணிகங்களில் ஈடுபட்டுள்ள வரி செலுத்துவோரின் (இந்தியாவில் வசிக்கும் தனிநபர், வசிக்கும் HUF அல்லது வசிக்கும் கூட்டாண்மை நிறுவனம் (LLP தவிர்த்து) ஆகியோரின் வருமானத்தை மதிப்பீட்டு அடிப்படையில் கணக்கிடுவதற்கான விதிமுறை.
  • பிரிவு 44ADA:குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தியாவில் குடியிருப்பவராக இருந்து, பிரிவு 44AA (1)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவராகவும் இருக்கும் வரிவிதிப்புக்குரிய நபரின் தொழில்முறை வருமானத்தை மதிப்பீட்டு அடிப்படையில் கணக்கிடுவதற்கான விதிமுறை.
  • பிரிவு 44AE: சரக்கு வாகனங்களை இயக்குதல், குத்தகைக்கு விடுதல் அல்லது வாடகைக்கு விடுதல் போன்ற வணிகத்தில் ஈடுபட்டுள்ள, மற்றும் கடந்த நிதியாண்டில் எந்தவொரு நேரத்திலும் பத்து சரக்கு வாகனங்களுக்கு மேல் சொந்தமாக வைத்திருக்காத வரி செலுத்துவோரின் (தனிநபர், இந்து கூட்டுக்குடும்பம், கூட்டாண்மை நிறுவனம் (LLP தவிர்த்து) அல்லது இந்தியாவில் வசிப்பவர் அல்லது வெளிநாட்டில் வசிப்பவராக இருக்கும் எந்தவொரு நபரின்) வருமானத்தை மதிப்பீட்டு அடிப்படையில் கணக்கிடுவதற்கான விதிமுறை.

10. பிரிவு 44AD மற்றும் பிரிவு 44ADA-இன் கீழ் தோராய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான உச்சவரம்பு என்ன?

பிரிவு 44AD-இன் கீழ் விற்றுமுதலுக்கான உச்சவரம்பு ₹3 கோடி ஆகும் (முந்தைய நிதியாண்டில் ரொக்கமாகப் பெறப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை, அந்த நிதியாண்டின் மொத்த வரவுகளில் 5%-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில்); இல்லையெனில் இந்த வரம்பு ₹2 கோடி ஆகும்.

பிரிவு 44ADA-இன் கீழ் உச்சவரம்பு ₹75 லட்சம் ஆகும் ( முந்தைய நிதியாண்டில் ரொக்கமாகப் பெறப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை, அந்த நிதியாண்டின் மொத்த வரவுகளில் 5%-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில்); இந்த வரம்பு தொகை ₹50 லட்சம் ஆகும்.

11. பிரிவு 44AD-இன் கீழ் வரும் தோராய வரி விதிப்பு முறைக்கு யார் தகுதியற்றவர்?

பிரிவு 44AD-இன் கீழ் உள்ள இந்தத் திட்டம் ஏதேனும் ஒரு வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் பின்வரும் வணிகங்கள் இதற்கு விதிவிலக்காகும்.

  • பிரிவு 44AE-இல் குறிப்பிடப்பட்டுள்ள சரக்கு வாகனங்களை இயக்குதல், வாடகைக்கு விடுதல் அல்லது குத்தகைக்கு விடுதல் போன்ற வணிகம்.
  • ஏதேனும் ஒரு முகமையக வணிகத்தை நடத்தும் நபர்.
  • தரகு அல்லது தரகு வடிவில் வருமானம் ஈட்டும் ஒரு நபர் (எடுத்துக்காட்டாக, காப்பீட்டு முகவர்கள்)
  • நிகரமொத்த விற்றுமுதல் அல்லது மொத்த வரவு ₹2 கோடிக்கு மேல் இருக்கும் எந்தவொரு வணிகமும்
  • நிகரமொத்த விற்றுமுதல் அல்லது மொத்த வரவு ₹3 கோடிக்கு மேல் இருக்கும் எந்தவொரு வணிகமும் (முந்தைய நிதியாண்டில் ரொக்கமாகப் பெறப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை, அந்த நிதியாண்டின் மொத்த வரவுகளில் 5%-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் இந்த ₹3 கோடி வரம்பு பொருந்தும்).

மேற்கூறியவை தவிர, பிரிவு 44AA (1)-இல் குறிப்பிட்டுள்ளபடி கணக்குப் புத்தகங்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு நபர், பிரிவு 44AD-இன் கீழ் உள்ள தோராய வரி விதிப்பு முறைக்குத் தகுதியற்றவர் ஆவார்.

12. நடப்பு ஆண்டில் எனது வணிகத்தின் மொத்த வரவுகள் ₹ 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. நான் பிரிவு 44AD-இன் கீழ் உள்ள தோராய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்க முடியுமா?

இல்லை. உங்கள் வணிகத்தின் நிகரமொத்த விற்றுமுதல் அல்லது மொத்த வரவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை (அதாவது, ₹3 கோடி) தாண்டாத பட்சத்தில் மட்டுமே உங்களால் பிரிவு 44AD-இன் கீழ் உள்ள தோராய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

13. பிரிவு 44ADA-இன் கீழ் உள்ள தோராய வரி விதிப்பு முறையை யார் தேர்ந்தெடுக்கலாம்?

ஒரு நிதியாண்டில் மொத்த வரவுகள் ₹50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்து வரும் இந்தியாவில் வசிக்கும் ஒரு தனிநபர் அல்லது கூட்டாண்மை நிறுவனம் (LLP தவிர்த்து) ஆகிய வரிவிதிப்புக்குரிய நபர்கள் பிரிவு 44ADA-இன் கீழ் உள்ள தோராய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

இருப்பினும், முந்தைய நிதியாண்டில் ரொக்கமாகப் பெறப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை, அந்த நிதியாண்டின் மொத்த வரவுகளில் 5%-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு நிதியாண்டிற்கான உச்சவரம்பு ₹75 லட்சம் வரை இருக்கும்.

கீழ்க்கண்ட தொழில்கள் குறிப்பிட்ட தொழில்கள் எனக் கருதப்படுகின்றன:

  • சட்டப்படி
  • மருத்துவம்
  • பொறியியல் அல்லது கட்டிடக்கலைத் தொழில்
  • கணக்கியல்
  • தொழில்நுட்ப ஆலோசனை
  • உட்புற அலங்காரம்
  • CBDT அறிவிக்கும் பிற தொழில்கள்

14. நான் பிரிவு 44AD அல்லது 44ADA-ன் கீழ் உள்ள உத்தேச வருமான திட்டத்தைத் தேர்வு செய்துள்ளேன். மொத்த வருவாயின் மீது தொடர்புடைய பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் லாபத்தை அறிவித்த பிறகு, கூடுதல் செலவுகளுக்கான பிடித்தங்களை கோர முடியுமா?

இல்லை. உத்தேச வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வு செய்த நபர், அனுமதிக்கப்பட்ட அனைத்து செலவுக் கழிவுகளையும் ஏற்கனவே கோரியவராகக் கருதப்படுவார். எனவே, குறிப்பிட்ட விகிதத்தில் லாபத்தை அறிவித்த பிறகு, கூடுதலாக எந்தச் செலவுக் கழிவையும் கோர அனுமதி இல்லை. எனினும், வருமான வரிச் சட்டத்தின் அத்தியாயம் VI-A கீழ் கிடைக்கும் கழிவுகளை நீங்கள் கோரலாம்

15. நான் பிரிவு 44ADA-ன் கீழ் உள்ள உத்தேச வருமான திட்டத்தைத் தேர்வு செய்துள்ளேன். பிரிவு 44ADA-ன் கீழ் வரும் தொழில் வருமானத்திற்காக நான் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டுமா?

ஆம். பிரிவு 44ADA-ன் கீழ் உள்ள உத்தேச வரிவிதிப்பு திட்டத்தைத் தேர்வு செய்பவர்கள், முந்தைய நிதியாண்டின் மார்ச் 15ஆம் தேதிக்குள் முன்கூட்டிய வரியின் 100% தொகையையும் செலுத்த வேண்டும். மார்ச் 15ஆம் தேதிக்கு முன்கூட்டிய வரியை செலுத்தத் தவறினால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234B மற்றும் பிரிவு 234C-இன் படி வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பு ஏற்படும். மேலும், முந்தைய நிதியாண்டின் மார்ச் 31ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வரியாக செலுத்தப்படும் எந்தத் தொகையும், அந்த நாளுடன் முடிவடையும் நிதியாண்டிற்கான முன்கூட்டிய வரியாகவே கருதப்படும்.

16. நான் பிரிவு 44ADA-ன் கீழ் உள்ள உத்தேச வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளேன். பிரிவு 44AA-ன் படி கணக்குப் புத்தகங்களை பராமரிக்க வேண்டுமா?

பிரிவு 44AA (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டு இருந்து, பிரிவு 44ADA-ன் கீழ் உத்தேச வரிவிதிப்பு திட்டத்தைத் தேர்வு செய்து (மொத்த வருவாயில் 50% வருமானமாக அறிவித்தால்), அக்குறிப்பிட்ட தொழில் தொடர்பான கணக்குப் புத்தகங்களை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை (அதாவது, பிரிவு 44AA-ன் விதிகள் உங்களுக்குப் பொருந்தாது).

17.நான் பிரிவு 44AE-ன் கீழ் உள்ள உத்தேச வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளேன். பிரிவு 44AE-ன் கீழ் வரும் வணிக வருமானத்திற்காக நான் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டுமா?

ஆம், நீங்கள் முன்கூட்டியே வரி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவீர்கள். பிரிவு 44AE-இன் கீழ் உத்தேச வரிவிதிப்புத் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், முன்கூட்டியே வரி செலுத்துவதில் எந்தவொரு சலுகையும் வழங்கப்பட மாட்டாது.

18.ஒரு வீட்டுச் சொத்து ஒரு பகுதி சுய பயன்பாட்டிற்காகவும், மற்றொரு பகுதி வாடகைக்கு விடப்பட்டதாகவும் இருந்தால், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது?

ஒரு வீட்டுச் சொத்தானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்தனி பகுதிகளைக் கொண்டிருக்கலாம்; அதில் ஒன்றை நீங்கள் சொந்தக் குடியிருப்புக்காகப் பயன்படுத்தலாம், மற்ற பகுதிகளை வேறு நோக்கங்களுக்காக (அதாவது, வாடகைக்கு விடுவதற்கோ அல்லது சொந்தத் தொழில் செய்வதற்கோ) பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் பின்வரும் முறையில் கணக்கிடப்படும்:

  1. ஆண்டு முழுவதும் உங்களது சொந்தக் குடியிருப்புக்காக நீங்கள் பயன்படுத்தும் பகுதி / அலகு ஒரு தனிச் சொத்தாகக் கருதப்படும்; மேலும், அந்தப் பகுதி / அலகிலிருந்து கிடைக்கும் வருமானமானது, சொந்தக் குடியிருப்புச் சொத்து தொடர்பாக ITR-4-ல் பயனர் கையேட்டில் விவரிக்கப்பட்டுள்ள முறைப்படியே கணக்கிடப்படும்.
  2. வாடகைக்கு விடப்பட்டுள்ள பகுதி / தனி அலகு ஒரு தனிச் சொத்தாகக் கருதப்படும்; மேலும், அந்தப் பகுதி / அலகிலிருந்து கிடைக்கும் வருமானமானது, வாடகைக்கு விடப்பட்ட சொத்து தொடர்பாக ITR-4-ல் பயனர் கையேட்டில் விவரிக்கப்பட்டுள்ள முறைப்படியே கணக்கிடப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்: மதிப்பீட்டு ஆண்டு 2026-27 முதல், நீங்கள் இரண்டு வீட்டுச் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை ITR-4 படிவத்தில் சமர்ப்பிக்கலாம்.

19. நான் பிரிவு 80DD மற்றும் 80U-இன் கீழ் கழிவு கோரினால், ஏதேனும் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

நீங்கள் பிரிவு 80DD மற்றும் 80U-இன் கீழ் பிடித்தம் கோர விரும்பினால், வருமான வரி அறிக்கைத் தாக்கலை சமர்ப்பிப்பதற்கு முன்பாக, படிவம் 10-IA ஐக் கட்டாயமாகத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வருமான வரித் தாக்கல் செய்யும்போது அட்டவணை 80DD மற்றும் 80U ஆகிய பகுதிகளில், படிவம் 10-IA தாக்கல் செய்யப்பட்ட தேதி மற்றும் அதன் ஒப்புகை எண் ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்

20. வராமல் இருந்து, பின்னர் வசூலாகும் வாடகைத் தொகைக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும்?

வசூலிக்கபடாமல் இருந்து, பின்னர் வசூலாகும் வாடகைத் தொகை எதுவாக இருந்தாலும், அது எந்த நிதியாண்டில் வசூலாகிறதோ அந்த ஆண்டின் 'வீட்டுச் சொத்து வாயிலாக கிடைக்கும் வருமானம்' என்ற தலைப்பின் கீழ் உங்களது வருமானமாகக் கருதப்படும் (அந்த குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் அந்தச் சொத்தின் உரிமையாளராக நீடித்திருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல). இந்தத் தொகைக்கு, வசூலான வாடகையிலிருந்து 30% தொகையைக் கழித்த பிறகு வரி விதிக்கப்படும்.

21. TAN எண்ணிற்குப் பதிலாக எனது பணி வழங்குபவரின் PAN எண்ணைக் குறிப்பிடலாமா?

இல்லை. TAN குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் PAN-ஐ ஒருபோதும் குறிப்பிடக் கூடாது; ஏனெனில் PAN மற்றும் TAN ஆகியவை வழங்கப்படுவதற்கான நோக்கங்கள் முற்றிலும் வேறுபட்டவை. மூலத்தில் வரி பிடித்தம் செய்பவர்கள் அல்லது வரி வசூலிப்பவர்களுக்கு ஒதுக்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண் TAN ஆகும். ஆனால், PAN என்பது ஒரு நபர் மேற்கொள்ளும் வரி செலுத்துதல், TDS / TCS வரவு, வருமான வரி அறிக்கை, செல்வத்திலிருந்து வரும் வருமானம், வருமான வரித் துறையுடனான தொடர்புகள், ஒரு நபர் செய்த முதலீடுகள், வாங்கிய கடன்கள் போன்ற பரிவர்த்தனைகளைத் தொடர்புபடுத்தி கண்காணிப்பதற்காக வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண் ஆகும்.

22. AY 2026-27 (FY 2025-26)-க்கான ITR-4 படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

AY 2026-27 (FY 2025-26)-க்கான ITR-4 படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31ஆம் தேதி ஆகஸ்ட் 2026 ஆகும்.

23. புதிய மற்றும் பழைய வரி விதிப்பு முறைகளின்படி பிரிவு 87A-இன் கீழான வரித் தள்ளுபடி என்றால் என்ன?

தற்போது, பிரிவு 87A-ன் படி தனிநபர்கள் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் ₹12,500 வரையிலும், புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ₹60,000 வரையிலும் வரிச்சலுகை கோரலாம்.

24. கடந்த 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான ITR-ஐ நான் இப்போது தாக்கல் செய்ய முடியுமா?

ஆம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கான ITR-ஐ நீங்கள் தாக்கல் செய்யத் தவறியிருந்தால், இப்போது ITR-U வாயிலாக அதைத் தாக்கல் செய்யலாம். நடப்பு ஆண்டிற்கு (AY 2026-27) உங்களது வழக்கமான ITR-ஐ நீங்கள் தாக்கல் செய்ய முடியும்.

25. பிரிவு 139(1)-ன் கீழுள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு நான் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தால் என்ன நடக்கும்?

பிரிவு 139(1)-ன் கீழுள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் ITR-ஐ தாக்கல் செய்யத் தவறினாலும், உங்களால் தொடர்ந்து வருமானவரி அறிக்கையைத் தாக்கலைச் செய்ய முடியும். ஆனால், அதற்காக நீங்கள் ₹5000/- வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன், உங்களுக்கு (ஏதேனும் ) வரிப் பொறுப்பு இருந்தால், அதற்கான வட்டியையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

26. பிரிவு 80C-ன் கீழ் நான் வரி விலக்குகள் கோரினால், கூடுதல் தகவல்களை வழங்க வேண்டுமா?

பிரிவு 80C-ன் கீழ் பிடித்தங்களைக் கோர விரும்பினால், அதற்கான கூடுதல் தகவல்களை கட்டாயமாக வழங்க வேண்டும். பிரிவு 80C-ன் கீழ் பிடித்தங்களை கோருவதற்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்:

  • பிடித்தம் செய்தவதற்குத் தகுதியானத் தொகை
  • கொள்கை எண். அல்லது ஆவண அடையாள எண்
Data responsive

27. பிரிவு 80CCD(1) அல்லது 80CCD(1B)-இன் கீழ் நான் பிடித்தங்களைக் கோரினால், கூடுதல் தகவல்களை வழங்க வேண்டுமா?

பதில்:

பிரிவு 80CCD(1) அல்லது 80CCD(1B)-இன் கீழ் வரி விலக்குக் கோருவது குறித்த கூடுதல் விவரங்களை நீங்கள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். நீங்கள் இந்த வரி விலக்குகளைப் பெற விரும்பினால், 'PRAN' டாபைக் கிளிக் செய்து உங்களது PRAN எண்ணை உள்ளிட வேண்டும்.

 

Data responsive

PRAN டாபில் உங்கள் PRAN எண்ணை உள்ளிட மறந்துவிட்டால், கீழ்க்காணும் சரிபார்ப்பு குறைபாட்டு செய்தி காண்பிக்கப்படும்:

Data responsiveData responsive

28. பிரிவு 80DD அல்லது 80U-ன் கீழ் கழிவுகளைக் கோருகிறேன் என்றால், ITR-4 படிவத்தில் கூடுதலாக என்ன தகவல்களை வழங்க வேண்டும்?

பிரிவு 80DD அல்லது பிரிவு 80U-இன் கீழ் பிடித்தங்களை கோருவதற்கான கூடுதல் விவரங்களை கட்டாயமாக வழங்க வேண்டும். பிரிவு 80DD அல்லது 80U-ன் கீழ் பிடித்தங்களைக் கோர விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்:

  • இயலாமையின் தன்மை
  • இயலாமையின் வகை
  • சார்ந்துள்ளவரின் வகை
  • பிடித்தம் செய்யும் தொகை
  • சார்ந்திருப்பவரின் PAN எண்
  • சார்ந்திருப்பவரின் ஆதார் எண்
  • தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10 IA-இன் ஒப்புகை எண்

பிரிவு 80DD-இன் கீழ் கழிவுகள்:

Data responsive

பிரிவு 80U-இன் கீழ் கழிவுகள்:

Data responsiveData responsive

29. பிரிவு 80D-ன் கீழ் பிடித்தங்களைக் கோருகிறேன் என்றால், கூடுதல் விவரங்களை வழங்க வேண்டுமா?

பிரிவு 80D-இன் கீழ் பிடித்தங்களைக் கோருவதற்கான கூடுதல் விவரங்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும். பிரிவு 80D-ன் கீழ் பிடித்தங்களைக் கோர விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்:

  • காப்பீட்டாளரின் பெயர் (காப்பீட்டு நிறுவனம்)
  • கொள்கை எண்
  • மருத்துவக் காப்பீட்டுத் தொகை
Data responsive

30. பிரிவுகள் 80E, 80EE, 80EEA மற்றும் 80EEB ஆகியவற்றின் கீழ் பிடித்தங்களைக் கோரினால், கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டுமா?

பிரிவுகள் 80E, 80EE, 80EEA மற்றும் 80EEB-ன் கீழ் பிடித்தங்களைக் கோருவதற்கான கூடுதல் விவரங்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்தப் பிரிவுகளின் கீழ் பிடித்தங்களைக் கோர விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்:

  • கடன் பெற்ற இடம்
  • நிறுவனம் அல்லது வங்கியின் பெயர்
  • கடன் கணக்கு எண்
  • கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட தேதி
  • கடன்களின் மொத்தத் தொகை
  • இன்றைய தேதியில் நிலுவையில் உள்ள கடன் தொகை
  • வட்டித் தொகை

பிரிவு 80E-ன் கீழ் உள்ள பிடித்தங்கள்:

Data responsive

பிரிவு 80EE-ன் கீழ் உள்ள பிடித்தங்கள்:

Data responsive

பிரிவு 80EEA-ன் கீழ் உள்ள பிடித்தங்கள்:

Data responsive

80EEB பிரிவின் கீழ் உள்ள பிடித்தங்கள்:

Data responsiveData responsive

31. பிரிவு 80GG-ன் கீழ் பிடித்தம் கோருகிறேன் என்றால், ஏதேனும் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

நீங்கள் பிரிவு 80GG-ன் கீழ் பிடித்தம் கோர விரும்பினால், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன் 'படிவம் 10 BA'-வை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும்; மேலும், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, 'அட்டவணை 80GG'-ல் படிவம் 10BA-வின் விவரங்களை (ஒப்புகை எண்) உள்ளிட வேண்டும்.

Data responsive

32. மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான ITR-4 படிவத்தின் TDS அட்டவணையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?

நீங்கள் TDS தொகையைக் கோர விரும்பினால், எந்தப் பிரிவின் கீழ் TDS பிடிக்கப்பட்டது என்பதைப் படிவத்தில் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Data responsive