உங்களுடைய JAO-ஐ அறிந்துகொள்ளுங்கள் பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
உங்களுடைய JAO-ஐ அறிந்துகொள்ளுங்கள் சேவை, செல்லுபடியாகும் PAN எண் கொண்ட வரி செலுத்துவோருக்கானது. (மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்தவர்கள் அல்லது பதிவு செய்யாதவர்கள்). இந்தச் சேவையைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட PAN எண்ணுக்குரிய அதிகார வரம்பு மதிப்பீட்டு அதிகாரி (JAO) குறித்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்தச் சேவையைப் பெற, நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- செல்லுபடியாகும் PAN
- செல்லுபடியாகும் அலைபேசி எண்
3. படிப்படியான வழிகாட்டி
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் பக்கத்திற்குச் சென்று, ‘உங்கள் JAO-வை அறியவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: ‘உங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அலுவலரை அறிய’ பக்கத்தில், உங்கள் PAN மற்றும் செல்லுபடியாகும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: படிநிலை 2-இல் நீங்கள் உள்ளிட்ட அலைபேசி எண்ணுக்கு 6 இலக்க OTP அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிட்டு,‘சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP-ஐ உள்ளிட நீங்கள் அதிகபட்சம் 3 முறை முயற்சி செய்யலாம்.
- திரையில் காட்டப்படும் OTP காலாவதி கவுண்ட்டவுன் டைமர், OTP எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
- OTPஐ மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்தவுடன், புதிய OTP உருவாக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
OTP வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் PAN-இன் நிலையைப் பொறுத்து அதிகார வரம்பு மதிப்பீட்டு அலுவலர் விவரங்கள் (உதாரணமாக பகுதி குறியீடு, AO வகை,வரம்பு குறியீடு, AO எண், அதிகார வரம்பு, முகவரி மற்றும் JAO-வின் மின்னஞ்சல் ID) திரையில் காண்பிக்கப்படும்.
4.தொடர்புடைய தலைப்புகள்