இணைப்பு ஆதார் பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 139AA அல்லது வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 262-இன் விதிகளின்படி, PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். புதிய PAN கார்டு விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்ப நிலையிலேயே ஆதார்-PAN இணைப்பு தானாகவே செய்யப்பட்டுவிடும். 01-07-2017 அன்று அல்லது அதற்கு முன்னதாக PAN ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே உள்ள PAN வைத்திருப்பவர்கள், PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஆதார் இணைப்பு சேவையானது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் (www.incometax.gov.in) தனிநபர் வரி செலுத்துவோருக்கு (பதிவு செய்யப்பட்டது மற்றும் பதிவு செய்யப்படாதது இருவருக்கும்) கிடைக்கிறது. உங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைக்கவில்லை எனில், உங்கள் PAN செயல்படாததாகிவிடும். இருப்பினும், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வரும் சில நபர்களுக்கு, PAN செயல்படாததால் ஏற்படும் பாதிப்புகள் பொருந்தாது.
ஆதாருடன் PAN எண்ணை இணைப்பதில் இரண்டு முக்கியப் படிநிலைகள் உள்ளன
1. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஆதார்–PAN இணைப்புக் கட்டணத்தைச் செலுத்துதல் (ஒரே செலுத்துச் சீட்டில், முக்கியத் தலைப்பு 0021-இன் கீழ் சிறு தலைப்பு 500-ஐத் தேர்ந்தெடுக்கவும்)
2. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஆதாரை PAN உடன் இணைக்கவும்.
ஆதாரை PAN உடன் இணைத்த பிறகு, ஆதார் இணைப்பு நிலை வசதியின் மூலம் இணைப்பு நிலையைச் சரிபார்க்கவும்.
2. இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கான முன்தேவைகள்:
- செல்லுபடியாகும் PAN
- ஆதார் எண்
- செல்லுபடியாகும் அலைபேசி எண்
3. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஆதார்–PAN இணைப்புக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது?
படிநிலை 1:மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்பு பக்கத்திற்குச் செல்லவும்.
விரைவு இணைப்புகள் பகுதியில் உள்ள ‘ஆதாரை இணைக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். மாற்றாக, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்து, ‘சுயவிவரம்’ பகுதியில் உள்ள ‘ஆதாரை இணைக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 2:‘ஆதாரை இணைக்கவும்’ பிரிவில் ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: உங்கள் PAN எண்ணையும் ஆதார் எண்ணையும் உள்ளிட்டு, ‘சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4:‘தொடரவும் மூலம் மின்னணு-வரி செலுத்தல்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: பொருந்தக்கூடிய வருமானவரி சட்டம் 2025 என்பதைத் தேர்ந்தெடுத்து, 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: உங்கள் PAN எண்ணை உள்ளிட்டு, அதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் PAN எண்ணைப் பதிவிடவும். மேலும், OTP பெறுவதற்கான செல்லுபடியாகும் அலைபேசி எண்ணை உள்ளிடவும்.
படிநிலை 7: OTP சான்றளிப்பு முடிந்த பின், நீங்கள் மின்னணு-வரி செலுத்துதல் பக்கத்திற்கு இட்டுச் செல்லப்படு வீர்கள். அங்கு ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 8:‘வருமானவரி’ என்ற தலைப்பு பகுதியில் உள்ள 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 9: சம்பந்தப்பட்ட வரி ஆண்டைத் தேர்ந்தெடுத்து, பணம் செலுத்தும் வகைக்கான இடத்தில் இதர வரவுகள்(500) என்பதையும், பணம் செலுத்தும் துணை வகைக்கான இடத்தில் (PAN-ஐ ஆதாருடன் இணைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான கட்டணம்) என்பதையும் தேர்ந்தெடுத்து, பின்னர் 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 10:செலுத்த வேண்டிய தொகை இதர பிரிவின் கீழ் தானாகவே நிரப்பப்பட்டிருக்கும். பின்னர் 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது, செலுத்துச் சீட்டு உருவாக்கப்படும். அடுத்த திரையில், நீங்கள் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் வங்கியின் இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்; அங்கே நீங்கள் பணத்தைச் செலுத்தவும்.
பணம் செலுத்திய பிறகு, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்கவும்.
4. பணம் செலுத்திய பிறகு ஆதார்–PAN இணைப்பு கோரிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது?
ஆதார்-PAN இணைப்பு கோரிக்கையை, இணையதளத்தில் முந்தைய-உள்நுழைவு அல்லது பிந்தைய உள்நுழைவு ஆகிய இரு வழிகளிலும் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு வழிமுறைக்குமான படிநிலைகள் கீழே ஒவ்வொன்றாக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன:
ஆதார்–PAN இணைப்பு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் (பிந்தைய உள்நுழைவு):
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பிற்கு சென்று ‘உள்நுழைவு’ செய்யவும். பின்னர் முகப்புப் பலகையில், சுயவிவரப் பகுதியில் உள்ள ஆதார்–PAN இணைப்பு விருப்பத்தின் கீழ் ‘ஆதாரை இணையுங்கள்’ என்பதை கிளிக் செய்யவும்.
அல்லது, மாற்றாக, தனிப்பட்ட விவரங்கள் பகுதியில் உள்ள ‘ ஆதார் எண்ணை இணைக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, ‘சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதார்–PAN இணைப்புக் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்(முந்தைய உள்நுழைவு):
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்பு பக்கத்திற்குச் சென்று, ‘விரைவு இணைப்புகள்’ பகுதியில் உள்ள ‘ஆதாரை இணையுங்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: ஆதாரை இணையுங்கள் பகுதியில் உள்ள 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: உங்கள் PAN எண்ணையும் ஆதார் எண்ணையும் உள்ளிட்டு, 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆதார்–PAN இணைப்புக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தால், அந்தக் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு, 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4: தேவையான கட்டாய விவரங்களை உள்ளிட்டு, 'ஆதாரை இணையுங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: கடந்த படிநிலையில் குறிப்பிடப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வந்த 6 இலக்க OTP-யை உள்ளிட்டு 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: ஆதார்–PAN இணைப்பு கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்பட்டது. இப்போது நீங்கள் ஆதார்–PAN இணைப்பு நிலையைச் சரிபார்க்கலாம்.
சூழல் 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்படாதிருந்தால்.
படிநிலை 1: PAN மற்றும் ஆதார் எண்ணை சரிபார்த்த பிறகு, ஒரு பாப்-அப் செய்தி திரையில் தோன்றும்.
கட்டண விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை'. ஆதாருடன் PAN எண்ணை இணைப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும் என்பதால், கட்டணத்தைச் செலுத்த 'மின்னணு வரி செலுத்தல் மூலமாக செலுத்த தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தால், 4–5 வேலை நாட்கள் காத்திருக்கவும். அதன் பிறகு, ஆதார்–பான் இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
குறிப்பு: உங்கள் PAN எண்ணுடன் சரியான ஆதார் எண்ணை இணைக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்தவும்.
ஆதார் மற்றும் PAN ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது PAN வேறு ஒரு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது ஆதார் வேறு ஒரு PAN-உடன் இணைக்கப்பட்டிருந்தாலோ, பின்வரும் பிழைச் செய்திகள் தோன்றலாம்:
சூழல் 2: PAN ஏற்கனவே அந்த ஆதாருடன் அல்லது மற்ற வேறு ஏதாவது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதார் எண் தவறான PAN-உடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த இணைப்பை நீக்க கோரி, உங்கள் அதிகார வரம்பு மதிப்பீட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் JAO-வின் தகவல்தொடர்பு விவரங்களை அறிய, உள்நுழையாமல் பக்கத்தைப் பார்வையிடுங்கள்:https://eportal.incometax.gov.in/iec/foservices/#/உள்நுழைவதற்கு முன்/உங்கள் AO-ஐ அறியவும்(முந்தைய உள்நுழைவு)
அல்லது https://eportal.incometax.gov.in/iec/foservices/#/dashboard/myProfile/jurisdictionDetail (பிந்தைய உள்நுழைவு)
சூழல் 3: நீங்கள் செலுத்துச் சீட்டு மூலம் பணம் செலுத்தியிருந்தால், மேலும் அந்தப் பண விவரங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்டிருக்கும்.
படிநிலை 1: PAN மற்றும் ஆதார் சரிபார்க்கப்பட்ட பிறகு, 'உங்கள் பணம் செலுத்தும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன' என்ற பாப்-அப் செய்தி தோன்றும். PAN மற்றும் ஆதார் இணைப்பு கோரிக்கையைச் சமர்ப்பிக்க, அந்த பாப்-அப் செய்தியில் உள்ள 'தொடரவும்' என்பதனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: தேவையான விவரங்களை உள்ளிட்டு, 'ஆதாரை இணைக்கவும்' என்பதனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: ஆதார்–PAN இணைப்பிற்கான கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் ஆதார்–PAN இணைப்பு நிலையைச் சரிபார்க்கவும்.
5. ஆதார்–PAN இணைப்பு நிலையைப் பார்க்கவும்.(பிந்தைய-உள்நுழைவு)
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முதன்மைப் பக்கத்தில், 'விரைவு இணைப்புகள்' பிரிவின் கீழ் உள்ள 'ஆதாரை இணைக்கவும்/நிலையைப் பார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: 'நிலையைக் காண்க' பகுதியில் உள்ள 'தொடரவும்' என்பதனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: உங்கள் PAN மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிட்டு, 'ஆதார் இணைப்பு நிலையைப் பார்க்கவும்' என்பதனைக் கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு நிறைவடைந்தவுடன், உங்கள் ஆதார்–PAN இணைப்பு நிலை தொடர்பான ஒரு செய்தி காண்பிக்கப்படும்.
ஆதார்–PAN இணைப்பு பரிசீலனையில் இருந்தால்:
ஆதார்–PAN இணைப்பு நிறைவடைந்துவிட்டது என்றால்:
6. ஆதார் இணைப்பு நிலையைப் பார்க்கவும் (உள்நுழைந்த பிறகு)
படிநிலை 1: உள்நுழைந்த பிறகு, உங்கள் முகப்புப் பலகையில் உள்ள 'ஆதாரை இணையுங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: மாற்றாக, ‘எனது சுயவிவரம்’ > ‘ஆதார் இணைப்பு நிலை’ என்பதற்குச் செல்லலாம்.
(உங்கள் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் எண் காண்பிக்கப்படும். ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், 'ஆதார் இணைப்பு நிலை' எனக் காண்பிக்கப்படும்).
குறிப்பு:
- ஒருவேளை சரிபார்ப்பு தோல்வியுற்றால், ‘நிலவரம்' பக்கத்தில் உள்ள ‘ஆதாரை இணை’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கான படிகளை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும்."
- உங்கள் PAN மற்றும் ஆதார் இணைப்புக் கோரிக்கை UIDAI சரிபார்ப்பிற்காக நிலுவையில் இருந்தால், பின்னர் நிலையை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
- கீழ்க்கண்ட நிலைகளில் ஆதார் மற்றும் PAN இணைப்பை நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அலுவலரை (AO) தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம்:
- உங்கள் ஆதார் எண் வேறு ஒரு PAN எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- உங்கள் PAN எண் வேறு ஒரு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் ஆதார் இணைப்பு நிலவரம் தொடர்பான ஒரு செய்தி காண்பிக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தப் பயனர் கையேடு தகவல் மற்றும் பொதுவான வழிகாட்டுதலுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களது சூழல்களுக்குப் பொருந்தும் துல்லியமான புள்ளிவிவரங்கள், விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களுக்காக தொடர்புடைய சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், விதிமுறைகள் மற்றும் வருமானவரி சட்டத்தின் விதிகளைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் பயனர் கையேட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும்/அல்லது முடிவுகளுக்குத் துறை பொறுப்பேற்காது.