நெட் வங்கிங் மூலம் உள்நுழைவு - பயனர் கையேடு

 

1.மேலோட்டப்பார்வை

உள்நுழைவு சேவையானது, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனர் அந்த மின்னணு-தாக்கல் இணைய முகப்பை அணுகுவதற்கும் மற்றும் அதில் கிடைக்கப்பெறும் அனைத்துச் சேவைகளையும் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக அமைகிறது.

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உள்நுழைவதற்கான அனைத்து வழிமுறைகளும், அதனுடன் உள்ளிட வேண்டிய அடையாளச் சான்றுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 

உள்நுழைவு முறை உள்ளிட வேண்டிய அடையாளச் சான்றுகள்

இணைய வங்கிச்சேவை

(மின்னணு-தாக்கல் பெட்டகத்தில் உயர் பாதுகாப்பு வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது)
இணைய வங்கி பயனர் ID மற்றும் கடவுச்சொல்

இணைய வங்கிசேவை

(மின்னணு-தாக்கல் பெட்டகத்தில் உயர் பாதுகாப்பு வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது)
பயனர் ID (PAN) மற்றும்; கடவுச்சொல் + இரண்டாவது காரணி அங்கீகாரத்திற்கான இணைய வங்கி பயனர் ID மற்றும் கடவுச்சொல்

வங்கி/டிமேட் கணக்கு EVC

(மின்னணு-தாக்கல் பெட்டகத்தில் உயர் பாதுகாப்பு வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது)
பயனர் ID (PAN) &; கடவுச்சொல் + இரண்டாவதுகாரணி அங்கீகாரத்திற்கான வங்கி EVC
 DSC பயனர் ID (PAN) மற்றும்; கடவுச்சொல் + இரண்டாவதுகாரணி அங்கீகாரத்திற்கான DSC
பயனர் ID-ஐப் பயன்படுத்தி உள்நுழையவும் – CA, TAN பயனர், ERI,வெளி நிறுவனம் மற்றும் ITDREIN பயனர்களுக்கானது பயனர் ID மற்றும் கடவுச்சொல்

பெரும்பாலான முன்னணி வங்கிகள் தங்களின் இணைய வங்கிசேவைகள் மூலமாக மின்னணு-தாக்கல் இணைய முகப்பை அணுக உங்களை அனுமதிக்கின்றன. வரி தொடர்பான சேவைகளுக்காக மின்னணு-தாக்கல் கணக்குகளில் உள்நுழைவதற்கு இது ஒரு பாதுகாப்பான மற்றும் எளிதான வழியாகும்.
உங்கள் வங்கி இந்தச் சேவையை வழங்குகிறதா என்பதைச் சரிபார்க்க வருமான வரி மின்னணு-தாக்கல் இணையதளத்தில் உள்ள இணைய வங்கிசேவை மாற்றுவை நீங்கள் பார்க்கலாம்.
இணைய வங்கிசேவை மூலம் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் எவ்வாறு உள்நுழைவது (மின்னணு-வால்ட் உயர் பாதுகாப்பு தாக்கல் அம்சம் செயல்படுத்தப்பட்டிருக்கும் மற்றும் செயல்படுத்தப்படாத நிலைகளில்) என்பதைப் பற்றி இந்த பயனர் கையேட்டில் நாம் விவாதிப்போம்.

2. முன்தேவைகள்:

1. மின்னணு-தாக்கல் பயனர் ID மற்றும் கடவுச்சொல் (இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவதற்கு மின்னணு-தாக்கல் பெட்டகம் அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால்)
2. வங்கி கணக்குகள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. இணைய வங்கி பயனர் ID மற்றும் கடவுச்சொல்.
4. இணைய வங்கிசேவை மூலம் மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைவதற்கு முன் வரி செலுத்துவோர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களது இணைய வங்கிசேவையில் உள்நுழைவு செய்திருக்க வேண்டும்.

3. படிப் படியான செயல்முறை:

படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும். 'உள்நுழையவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 2: உள்நுழைவு பக்கத்தில், 'இணைய வங்கிசேவை' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

தயவுசெய்து கவனிக்கவும்:
1. இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவதற்கு மின்னணு-தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால் — முதலில், நீங்கள் உங்கள் மின்னணு-தாக்கல் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அதன்பிறகு இணைய வங்கிசேவை வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவு செய்வதற்கு, மின்னணு-தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்படவில்லை எனில்— உள்நுழைவுப் பக்கத்தில், இணைய வங்கிசேவை மாற்றுவை கிளிக் செய்ய வேண்டும்.

படிநிலை 3: இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவு பக்கத்தில் உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 4: வங்கியைத் தேர்ந்தெடுத்ததும், ‘நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் இருந்து வெளியேறி, பிற தரப்பினரால் இயக்கப்படும் இணையதளத்திற்குள் நுழைய உள்ளீர்கள்’ என்ற பாப்-அப் செய்தி தோன்றும். அதில் ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: உங்களுடைய இணைய வங்கிசேவை அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி இணைய வங்கி இணையதளத்தில் உள்நுழையவும்.

Data responsive

தயவுசெய்து கவனிக்கவும்: இணைய வங்கிசேவை வங்கி கணக்கு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைவதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.

படிநிலை 6: வங்கியின் இணையதளத்தில் வருமான வரி மின்னணு-தாக்கல் டாபைக் கண்டறியவும் (வங்கி இணையதளத்தின் வழிசெலுத்தல் அமைப்பு வங்கிக்கு வங்கி மாறுபடலாம்) வங்கியின் இணையதளத்தில் உள்ள ‘வருமான வரி மின்னணு தாக்கல் தளத்தில் உள்நுழையவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7: இங்கிருந்து நீங்கள் நேரடியாக மின்னணு-தாக்கல் இணையதளத்திற்கு மாற்றி அனுப்பப்படுவீர்கள்.

Data responsive