1. மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய எனது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டுமா?
மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய பல்வேறு முறைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் பயனுள்ளதாக இருக்கும்.
2. எனது PAN மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமா?
வருமான வரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் PAN பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில்,PAN இல்லை, தயவுசெய்து இந்த PAN-ஐப் பதிவு செய்யவும் அல்லது வேறொரு PAN-ஐப் பயன்படுத்தவும் என்ற செய்தி உங்களுக்குத் தோன்றும். ஒருவேளை உங்கள் PAN-உடன் இணைக்கப்பட்ட மின்னணு-தாக்கல் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், உதவி மையத்தைத் தொடர்புகொண்டு அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும்.
3. தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் எனது கணக்கு பூட்டப்படுமா?
ஆம், 5 முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய முயன்றால் கணக்கு முடக்கப்படும். "உங்கள் கணக்கை திறக்கவும்" என்ற வசதியைப் பயன்படுத்தி கணக்கை நீங்களே திறக்கலாம் அல்லது 30 நிமிடங்களுக்குப் பிறகு அது தானாகவே முடக்க செயல்பாடு நீக்கப்படும்.
4. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய, நான் என் PAN-ஐ ஆதாருடன் இணைக்க வேண்டுமா?
உங்கள் PAN மற்றும் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருந்தாலும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்களால் உள்நுழைய முடியும், ஆனால் உங்களுக்குக் குறைந்த அளவிலான வசதிகள் மட்டுமே கிடைக்கும். எனவே, உங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைக்க அறிவுறுத்தப்படுகிறது.
5. மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைய அனைத்து வங்கிகளும் இணைய வங்கி வசதியை வழங்குகின்றனவா?
பெரும்பாலான தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்குகின்றன. இருப்பினும், பாதுகாப்பிற்காக அந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவோ அல்லது இது குறித்து வங்கியுடன் தொடர்புகொள்ளவோ பரிந்துரைக்கப்படுகிறது. இணைய வங்கி விருப்பத்தைக் கிளிக் செய்த பிறகு, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
6. OTP பெறுவதற்கு என்னிடம் அலைபேசி இணைப்பு இல்லை. எனது மின்னணு-தாக்கல் கணக்கில் நான் எவ்வாறு உள்நுழையலாம்?
மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கு உங்களுக்கு OTP தேவையில்லை. நீங்கள் "மின்னணு தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு" சேவையின் மூலம் ஏதேனும் உயர் பாதுகாப்பு விருப்பத்தை செயல்படுத்தியிருந்தால், 2வது அடுக்கு அங்கீகாரத்திற்காக கீழே உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையலாம்:
- வங்கி கணக்கு EVC (உங்களிடம் ஏற்கனவே EVC இருந்தால்), அல்லது
- டீமேட் கணக்கு EVC (உங்களிடம் ஏற்கனவே EVC இருந்தால்), அல்லது
- DSC அல்லது
- நடைமுறையில் உள்ள ஆதார் OTP
7. மின்னணு-தாக்கல் பெட்டகம் என்றால் என்ன? அது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
மின்னணு-தாக்கல் பெட்டகம் வசதி, உள்நுழைவதற்கும் மற்றும் கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கும் பல காரணி அங்கீகாரத்தை வழங்குகிறது. உள்நுழையும்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்க, நீங்கள் வங்கி கணக்கு EVC, டிமேட் கணக்கு EVC மற்றும் டிஜிட்டல் கையொப்பம் (DSC) போன்ற பல விருப்பங்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
8. புதிய இணைய முகப்பில் உள்நுழைவு சேவையில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் என்னென்ன?
புதிய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில், தொந்தரவு இல்லாத உள்நுழைவை உறுதிசெய்ய கேப்ச்சா நீக்கப்பட்டுள்ளது. மின்-தூண்டிலிடல் இணையதளங்களிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பான அணுகல் செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இ-வால்ட் பாதுகாப்பைப் பயன்படுத்தி பல அடுக்கு அங்கீகாரத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.
9. நான் ஒரு தனிநபர் வரி செலுத்துபவர். உள்நுழைவதற்கான எனது பயனர் ID என்ன?
தனிநபர்களுக்கான பயனர் ID PAN ஆகும்.
10. CA, ERI, வெளி நிறுவனம், ITDREIN பயனர் மற்றும் TIN 2.0 பயனர்களுக்கான பயனர் ID என்ன?
மேற்கூறிய பயனர்களுக்கான பயனர் ID, அவர்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யும் போது உருவாக்கப்படுகிறது. அந்தந்த பயனர்களுக்கான பயனர் IDs பின்வருமாறு:
- CA – ARCA-க்கு அடுத்து CA-வின் 6 இலக்க உறுப்பினர் எண்ணை உள்ளிடவும்.
- ERI – ERIP-க்கு அடுத்து, பதிவின்போது உருவாக்கப்பட்ட 6 இலக்க எண்ணை குறிப்பிட வேண்டும்.
- வெளி நிறுவன முகமையகம் – பதிவின்போது உருவாக்கப்பட்ட 6 இலக்க எண்ணை EXTA-க்கு அடுத்து குறிப்பிட வேண்டும்.
- ITDREIN பயனருக்கு, பதிவின்போது உருவாக்கப்பட்ட பயனர் ID பயன்படுத்தப்பட வேண்டும்.
- TIN2.0 பயனருக்கு, TINP-க்கு அடுத்து பதிவின்போது உருவாக்கப்பட்ட 6 இலக்க எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
11. எனது மின்னணு-தாக்கல் கணக்கை வேறொரு நபர் அனுமதியின்றி அணுகியதாக நான் கருதினால், நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கு சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கருதினால், நீங்கள் சைபர் கிரைம் குற்றத்திற்குப் பலியானவராக இருக்கலாம். முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அல்லது சைபர் செல் அதிகாரிகளிடம் இந்தச் சம்பவத்தைப் புகாரளியுங்கள். சைபர் கிரைம் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள்/புகார்தாரர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசாங்கத்தின் ஒரு முயற்சியான https://cybercrime.gov.in/, என்ற இணையதளத்திற்குச் சென்று நீங்கள் ஆன்லைன் குற்றப் புகார் /FIR பதிவு செய்யலாம். வருமான வரித் துறையானது, விசாரணையின் போது சட்டப்பூர்வ அதிகாரங்களின் கீழ் சம்மன் அனுப்பப்படும் பட்சத்தில், அந்தத் தகவல் தொடர்பான எந்தவொரு தகவலையும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும்.
பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உங்களின் உள்நுழைவு விவரங்களையோ அல்லது பிற முக்கியமான புள்ளிவிவரங்களையோ யாருடனும் பகிர வேண்டாம்.
12. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய எனது பயனர் ID மற்றும் கடவுச்சொல் எனக்குத் தேவையா?
ஆம், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கு பயனர் ID மற்றும் கடவுச்சொல் தேவை. இணைய வங்கிசேவை போன்ற சந்தர்ப்பங்களில், மின்னணு-தாக்கல் இணைய முகப்புக்கான தனிப்பட்ட பயனர் ID மற்றும் கடவுச்சொல் தேவைப்படாது.
13. எனது மின்னணு-தாக்கல் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணை அணுக முடியாவிட்டால், புதிய இணைய முகப்பில் நான் எப்படி உள்நுழைவது?
புதிய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் நீங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையலாம். ஒருவேளை நீங்கள் ஆதார் OTP மூலம் உள்நுழையும் வசதியைச் செயல்படுத்தியிருந்தால், உங்கள் PAN கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஆதார் OTP-யைப் பெற்று மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் உங்களிடம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும்.
14. இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைய பல வங்கி கணக்குகளைப் பயன்படுத்த முடியுமா?
இல்லை, இணைய வங்கிசேவை உள்நுழைவு வசதிக்குச் சரிபார்க்கப்பட்ட ஒரு வங்கி கணக்கை மட்டுமே செயல்படுத்த முடியும். சரிபார்க்கப்பட்ட எந்தவொரு வங்கி கணக்கையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், கணினி அணுகல் மறுக்கப்பட்டது என்ற செய்தியைக் காண்பிக்கும்
15. அணுகல் மறுக்கப்பட்டது சிக்கலைத் தீர்க்க, எனது சுயவிவரப் பகுதியில் 'இணைய வங்கிசேவை மூலம் உள்நுழையும்' வசதியை எப்படிச் செயல்படுத்துவது?
'அணுகல் மறுக்கப்பட்டது' சிக்கலைப் பொறுத்தவரை, தயவுசெய்து உங்கள் சுயவிவரப் பகுதியில் உள்ள வங்கி கணக்கு மெனுவில், இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழையும் வசதியைச் செயல்படுத்தவும். ஒருமுறை இதைச் செயல்படுத்திவிட்டால், நீங்கள் இணைய வங்கிச் சேவை முறையைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.
இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழையும் வசதியைச் செயல்படுத்துவதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- உங்கள் கணக்கில் உள்நுழையவும்
- சுயவிவரத்திற்குச் செல்லவும்
- எனது வங்கிக் கணக்கைச் சேர் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- இணைய வங்கிசேவை மூலம் உள்நுழையும் வசதியைச் செயல்படுத்தவும்.
16. இணைய வங்கி சேவைக்கான இ-வால்ட் அதிக பாதுகாப்பு உள்நுழைவு வசதியைச் செயல்படுத்துவதற்கான முன்தேவைகள் யாவை?
இணைய வங்கிசேவைக்கான இ-வால்ட் உயர் பாதுகாப்பு உள்நுழைவு வசதியைச் செயல்படுத்துவதற்கு, நீங்கள் முதலில் எனது வங்கி கணக்கு திரையில் உள்ள "இணைய வங்கிசேவை பரிந்துரைப்பு மூலம் உள்நுழையும்" என்ற விருப்பத்தைச் செயல்படுத்த வேண்டும்.
17. இணைய வங்கிசேவைக்கான இ-வால்ட் உயர் பாதுகாப்பு உள்நுழைவு வசதி ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும்போது, 'இணைய வங்கிசேவை பரிந்துரைப்பு' மூலம் உள்நுழையும் என்ற விருப்பத்தை முடக்கினால் என்னவாகும்?
"இணைய வங்கிசேவை பரிந்துரைப்பு மூலம் உள்நுழையும்" வசதியை நீங்கள் முடக்கினால், உங்கள் இணைய வங்கிசேவை உள்நுழைவுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான உள்நுழைவு அம்சம் செயலிழந்துவிடும். இந்த வசதி முடக்கப்பட்டவுடன், இந்த முறையைப் பயன்படுத்தி உங்களால் இணைய முகப்பில் உள்நுழைய முடியாது. இருப்பினும், நீங்கள் வேறு ஏதேனும் இ-வால்ட் உள்நுழைவு வசதிகளைச் செயல்படுத்தியிருந்தால், அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.