Do not have an account?
Already have an account?

எனது சுயவிவர மேலோட்டம்

(உங்கள் சுயவிவரத்தின் எளிமையான சுருக்கம்)

(உங்கள் சுயவிவரத்தின் எளிமையான சுருக்கம்)

Frequently Asked Questions

எனது சுயவிவரம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் எனது சுயவிவரம் புதுப்பிக்கப்பட்டதை நான் எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் சுயவிவரத்தில் ஏதேனும் தகவல் புதுப்பிக்கப்பட்டால், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட முதன்மை மின்னஞ்சல் ID-க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

2.நான் ஒரு NRI மற்றும் என்னிடம் இந்திய அலைபேசி எண் இல்லை. எனது தொடர்பு விவரங்களைச் சரிபார்க்க நான் எவ்வாறு OTP-ஐப் பெறுவேன்?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID-க்கு ஒரு OTP அனுப்பப்படும்

3. சுயவிவரத்தைப் புதுப்பிப்பது கட்டாயமா?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை. இருப்பினும், சிறந்த பயனர் அனுபவத்தைப் பெறுவதற்கும் (முன்பே நிரப்பப்பட்ட தரவுகள் உட்பட), வருமான வரித் துறையிடமிருந்து சரியான நேரத்தில் தகவல்களைப் பெறுவதற்கும் உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

4. சுயவிவரத்தைப் புதுப்பிப்பதன் பயன் என்ன?

நீங்கள் புதுப்பிக்கும் சுயவிவரத் தகவல்கள், தேவைப்படும்போது ITD உங்களுடன் சரியான நேரத்தில் தொடர்புகொள்வதற்கு உதவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்களுக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு படிவங்கள் மற்றும் ITRs படிவங்களை முன்கூட்டியே நிரப்புவதற்குத் தேவையான தரவுகளையும் இது வழங்கும்.

5. எனது சுயவிவரத்தின் மூலம் நான் என்னென்ன விவரங்களை மாற்றலாம் / புதுப்பிக்கலாம்?

உங்கள் சுயவிவரத்தின் மூலம் நீங்கள் பின்வருவனவற்றை புதுப்பிக்க அல்லது மாற்ற முடியும்:

  • வருமான ஆதார விவரங்கள்
  • வங்கி மற்றும் டிமேட் கணக்கு விவரங்கள்
  • DSC-ஐ பதிவு செய்யவும்
  • தகவல்தொடர்பு விவரங்கள் (OTP அங்கீகாரம் மூலம்), முக்கிய நபர்களின் விவரங்கள்
    • நீங்கள் வரி செலுத்துபவராக உள்நுழைந்திருந்தால் – குடியிருப்பு நிலை மற்றும் பாஸ்போர்ட் எண் போன்ற அடிப்படை சுயவிவர விவரங்களையும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி போன்ற தொடர்பு விவரங்களையும் நீங்கள் திருத்தலாம்.
    • நீங்கள் ERI ஆக உள்நுழைந்திருந்தால் – வெளிப்புற முகமையின் வகை, சேவைகளின் வகை, நிறுவனத்தின் PAN, நிறுவனத்தின் TAN போன்ற அடிப்படை சுயவிவர விவரங்களையும், தொடர்பு விவரங்களையும் நீங்கள் திருத்தலாம். மேலும், சான்றிதழ்களை நிர்வகிக்கலாம், முதன்மை தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கலாம், ERI-ஐச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், ERI வகையை மாற்றலாம்.
    • நீங்கள் வெளிப்புற முகமையாக உள்நுழைந்திருந்தால் – தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கலாம், சான்றிதழ்களை நிர்வகிக்கலாம், முக்கிய நபர்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், மேலும் சேவைகளைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
    • நீங்கள் TIN 2.0 பங்குதாரராக உள்நுழைந்திருந்தால் – தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கலாம், சான்றிதழ்களை நிர்வகிக்கலாம், மேலும் தொழில்நுட்ப SPOC விவரங்களைப் புதுப்பிக்கலாம் அல்லது புதியவற்றைச் சேர்க்கலாம்.

6. எனது சுயவிவரத்தில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு விவரங்கள் இரண்டிலும் நான் ITD -இலிருந்து தகவல்களைப் பெற முடியுமா?

ஆம், உங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் சுயவிவரத்தில் சேர்க்கப்பட்டுள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆகிய இரண்டு தொடர்பு விவரங்களிலும் ITD-இடமிருந்து தகவல்களைப் பெற முடியும்.

7. எனது DSC பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நான் எவ்வாறு அறிவது?

உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று, அதன் நிலையை அறிய 'பதிவு செய்க DSC' என்பதைக் கிளிக் செய்யலாம். CA / நிறுவனம் / ERI, PAN / முதன்மைத் தொடர்பாளருக்கான DSC பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது காலாவதியாகி இருந்தாலோ, உள்நுழைந்த பிறகு சுயவிவரத்தில் அது குறித்த செய்தி காட்டப்படும். கூடுதலாக, இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள 'பதிவு செய்க DSC' பயனர் கையேட்டை நீங்கள் சரிபார்க்கலாம்.

Detailed guides and documentation