எனது சுயவிவர பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

எனது சுயவிவரம் / சுயவிவரத்தை புதுப்பித்தல் சேவை என்பது, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்துள்ள அனைத்து பயனர்களும், தங்களது கணக்கில் உள்நுழைந்த பிறகு, சுயவிவரத் தகவலைப் பார்ப்பதற்கும் மற்றும் திருத்துவதற்கும் / புதுப்பிப்பதற்கும் வழங்கப்படுகிறது. இந்தச் சேவை, பல்வேறு பயனர் வகைகளுக்கு ஏற்ப, சுயவிவரத் தகவல்களைத் திருத்த / புதுப்பிக்க உங்களை அனுமதிக்கிறது:

  • PAN விவரங்கள், TAN விவரங்கள், ஆதார் எண் போன்ற உங்களது தனிப்பட்ட விவரங்களைப் பார்த்தல்
  • அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் வீட்டு முகவரி போன்ற உங்களது தொடர்பு விவரங்களைப் பார்த்தல் / புதுப்பித்தல்
  • உங்கள் பிற விவரங்களைப் பார்க்கவும் / மேம்படுத்தவும்:
    • வங்கிக் கணக்கு மற்றும் டீமேட் கணக்கு விளக்கங்கள்
    • DSC-ஐப் பதிவு செய்யவும்
    • மின்னணு-தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்பு
    • PAN – JAO அதிகார வரம்பு விளக்கங்கள்
    • வருமானவரி அறிக்கைகள் / படிவங்களுக்கான மதிப்பீட்டு பிரதிநிதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களின் விளக்கங்கள்
    • வருமானம் வரும் இனத்தின் விளக்கங்கள்
    • பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்
    • பாராட்டுகள் மற்றும் விருதுகள்
    • போர்த்துகீசிய சிவில் சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை

2. இச்சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

  • செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் கூடிய, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்

3. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive


 

படிநிலை 2: முகப்பு பலகையின் பக்கத்தின் மேல் வலது மூலையில், உங்களது பெயரைக் கிளிக் செய்து, பின்னர் எனது சுயவிவரம் என்பதைத் கிளிக் செய்யவும்.

Data responsive

 
 

படிநிலை 3: எனது சுயவிவரம் பக்கத்தில் நீங்கள் பின்வருவனவற்றைப் பார்க்கலாம் மற்றும்/அல்லது புதுப்பிக்கலாம்:

குடியுரிமை, வசிப்பிட விவரங்கள், பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள்

பிரிவு 3.1-ஐப் பார்க்கவும்.

அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி போன்ற தொடர்பு விவரங்கள்

பிரிவு 3.2-ஐப் பார்க்கவும்.

வருமான ஆதார விவரங்கள்

பிரிவு 3.3-ஐப் பார்க்கவும்.

போர்த்துகீசிய பொதுக் குறியீடு பொருந்தக்கூடிய தன்மை

பிரிவு 3.4-ஐப் பார்க்கவும்.

வருமான வரி அறிக்கை / படிவங்களைத் தாக்கல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நபர்

வருமான வரி அறிக்கை / படிவங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் என்ற பக்கத்தைக் கிளிக் செய்யவும். விவரங்களைப் புதுப்பிக்க திருத்து என்ற பக்கத்தைக் கிளிக் செய்து, பின் சேமிக்கவும் என்பதைப் பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / கையொப்பமிடுபவராகப் பதிவு செய்வது எப்படி என்பதை அறிய, அங்கீகரித்தல் மற்றும் பிரதிநிதியாகப் பதிவு செய்தல் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

பிரதிநிதி வரிவிதிப்புதாரர்

பிரதிநிதி வரிவிதிப்புதாரர் என்றப் பக்கத்தைக் கிளிக் செய்யவும். விவரங்களைப் புதுப்பிக்க திருத்து என்பதைக் கிளிக் செய்து, பின் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: பிரதிநிதி மதிப்பீட்டாளராகப் பதிவு செய்வது எப்படி என்பதை அறிய, அங்கீகரித்தல் மற்றும் பிரதிநிதியாகப் பதிவு செய்தல் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

பாதுகாப்பான அணுகல் செய்தியை அமைத்தல்

(நீங்கள் வருமான வரித் தாக்கல் இணையதளத்தில் உள்நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செய்தி திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் உங்களது பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் இணையதளம், உண்மையான மின்னணு தாக்கல் இணைய முகப்பு தானா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள இந்தத் தனிப்பயனாக்கப்பட்ட செய்தி ஒரு பயனுள்ள வழியாகும்)

பாதுகாப்பான அணுகல் செய்தி என்ற பக்கத்தைக் கிளிக் செய்யவும். பாதுகாப்பான அணுகல் செய்திப் பக்கத்தில் உள்ள உரைப்பெட்டியில் உங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை உள்ளிட்டு, சேமி என்பதைக் செய்யவும்.

ஆதார் OTP வாயிலாக உள்நுழையவும்

ஒற்றைக் காரணி அங்கீகாரத்திற்காக ஆதார் OTP வாயிலாக நீங்கள் உள்நுழைவதைச் செயல்படுத்த, 'ஆதார் OTP வாயிலாக உள்நுழையவும்' என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் OTP வாயிலாக உள்நுழையும் பக்கத்தில், ஆம் என்பதைத் தேர்ந்தெடுத்து சேமி என்பதைக் கிளிக் செய்தால், ஆதார் OTP வாயிலாக உள்நுழையும் வசதி செயல்படுத்தப்படும்.

அதிகார வரம்பு விவரங்கள்

அதிகார வரம்பு விவரங்களைப் பார்ப்பதற்கு அதிகார வரம்பு விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்

e-PAN விவரங்கள், தொடக்க அங்கீகார விவரங்கள் மற்றும் மின்னணுத் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களின் விவரங்களைப் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம் செய்யவும் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

பாராட்டுக்கள் மற்றும் வெகுமதிகள்

பாராட்டுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய பாராட்டுக்கள் மற்றும் வெகுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

வங்கி கணக்கு விவரங்கள்

வங்கி கணக்கு விவரங்கள் என்ற பக்கத்தைக் கிளிக் செய்தால், நீங்கள் வங்கி கணக்கு சேவைப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள் வங்கி கணக்கைச் சேர்க்கலாம் / நீக்கலாம் அல்லது அதிலிருந்து EVC வசதியை இயக்கலாம் / முடக்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய எனது வங்கி கணக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

டிமேட் கணக்கு விவரங்கள்

டிமேட் கணக்கு விவரங்கள் என்ற பக்கத்தைக் கிளிக் செய்தால், நீங்கள் டிமேட் கணக்கு சேவைப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள் டிமேட் கணக்கைச் சேர்க்கலாம் / நீக்கலாம் அல்லது அதிலிருந்து EVC வசதியை இயக்கலாம் / முடக்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய எனது டிமேட் கணக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும்

DSC-ஐப் பதிவு செய்யவும் அல்லது DSC-ஐப் பார்க்கவும் மற்றும் புதுப்பிக்கவும்

DSC-ஐப் பதிவு செய்யவும் என்ற பக்கத்தைக் கிளிக் செய்தால், நீங்கள் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) பதிவுப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள்:

குறிப்பு: மேலும் அறிய DSC-ஐப் பதிவு செய்யவும் பயனர் கையேட்டைப் பார்க்கவும்

மின்னணுத் தாக்கல் பெட்டகம் - கூடுதல் பாதுகாப்பு

மின்னணு-தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்பு என்ற பக்கத்தைக் கிளிக் செய்தால், நீங்கள் மின்னணு-தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கிற்கான கூடுதல் அடுக்கு சரிபார்ப்பை நீங்கள் சேர்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணுத் தாக்கல் பெட்டகம் உயர் பாதுகாப்பு பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

நிலையான கடவுச்சொல்

நிலையான கடவுச்சொல்லை உருவாக்க நிலையான கடவுச்சொல் என்ற பக்கத்தைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: மேலும் அறிய நிலையான கடவுச்சொல்லை உருவாக்குதல் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

Data responsive

குறிப்பு:

  • வெளிப்புற முகமைகள் பின்வரும் தங்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருத்தலாம் / புதுப்பிக்கலாம் - வெளிப்புற முகமையின் வகை, சேவையின் வகை, அமைப்பின் PAN, அமைப்பின் TAN, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID.
  • ERIs மற்றும் TIN 2.0 பதிவுப் பங்குதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை மட்டுமே பார்க்க முடியும்; எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் அவர்களால் திருத்தவோ / புதுப்பிக்கவோ இயலாது.
  • ERIs வெளிப்புற முகமைகள் மற்றும் TIN 2.0 பதிவுப் பங்குதாரர்கள் தங்களின் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
  • ERIs மற்றும் வெளிப்புற முகமைகள் தங்களின் அந்தந்த சுயவிவரங்களின் வாயிலாகச் சேவைகளைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
  • மேலும் அறிய அந்தந்தப் பயனர் கையேடுகளைப் பார்க்கவும்.

3.1 தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிப்பதற்கு

படிநிலை 1: தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க எனது சுயவிவரம் பக்கத்தில் திருத்து என்பதைப் பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

Data responsive

குறிப்பு: குடியுரிமை மற்றும் குடியிருப்பு நிலை ஆகியவற்றை மட்டுமே மாற்ற முடியும்.


படிநிலை 2: விரும்பிய விவரங்களைத் திருத்திய பிறகு சேமி என்பதைப் பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு:பயனர் வகையைப் பொறுத்து சில விவரங்களைத் திருத்த இயலாது என்பதை நினைவில் கொள்ளவும்.

3.2 முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு விவரங்களைப் (அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID) புதுப்பிப்பதற்கு
(ஆதார், PAN அல்லது வங்கி விவரங்களின்படி உங்கள் அலைபேசி எண்ணையும் நீங்கள் புதுப்பிக்கலாம்)

படிநிலை 1: தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்க எனது சுயவிவரம் பக்கத்தில் திருத்து  என்பதைப் பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படிநிலை 2: வங்கி / ஆதார் / PAN விவரங்களின்படி அலைபேசி எண்ணை உள்ளிட்டு, மின்னணு சரிப்பார்ப்பிற்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


 

படிநிலை 3a: உங்கள் தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கவும் பக்கத்தில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அலைபேசி எண்ணுக்குப் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6-இலக்க OTP-களையும், மற்றும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்னஞ்சல் ID-க்கு அனுப்பப்பட்ட மற்றொன்றையும் உள்ளிடவும். OTP-களை உள்ளிட்ட பிறகு, “சமர்ப்பித்து சரிபார்ப்பைத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

 
படிநிலை 3b: மின்னணு-சரிபார்ப்பு பக்கத்தில் , உங்கள் வருமான வரி அறிக்கையை மின்னணு-சரிபார்ப்பு செய்ய விரும்பும் முறையைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

குறிப்பு: PAN இல்லாத மற்றும் வைத்திருக்கத் தேவையில்லாத வெளிநாடு வாழ் இந்தியராக நீங்கள் இருந்தால், படிநிலை 3B உங்களுக்குப் பொருந்தாது.


3.3. வருமான ஆதாரத்தைப் புதுப்பிப்பதற்கு (வரி செலுத்துவோருக்கு மட்டும்)

படிநிலை 1: எனது சுயவிவரம் பக்கத்தில், வருமான ஆதாரம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


 

படிநிலை 2: விவரங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனில், விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு: வருமான ஆதாரம் ஏற்கனவே நிரப்பப்பட்டு, அதன் விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள வருமான ஆதாரத்தை நீக்க விரும்பினால், நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர், அந்த விவரங்கள் உங்கள் சுயவிவரத்திலிருந்து நீக்கப்படும்.

படிநிலை 3: கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து வருமான ஆதாரம் (சம்பளதாரர் / ஓய்வூதியதாரர், வீட்டுச் சொத்து, வணிகம் / தொழில், வேளாண்மை, பிறவை) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive


படிநிலை 4: கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  • நீங்கள் சம்பளம் பெறுபவர் / ஓய்வூதியம் பெறுபவர் என்பதைத் தேர்ந்தெடுத்தால், பணியமர்த்துபவரின் TAN /ஓய்வூதியம் வழங்கும் அதிகார அமைப்பின், பணியின் தன்மை, பணியமர்த்துபவரின் பெயர் / ஓய்வூதியம் வழங்கும் அதிகார அமைப்பின் பெயர் மற்றும் பணிபுரிந்த காலம் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
Data responsive
  • நீங்கள் வணிகம் / தொழில்,என்பதைத் தேர்ந்தெடுத்தால் வணிகம்/தொழிலுடனான தொடர்பின் வகை என்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அத்துடன் தொழில்முறை விவரங்கள்மற்றும் வணிக முகவரி ஆகியவற்றை உள்ளிடலாம்.
Data responsive
  • நீங்கள் வீட்டுச் சொத்து என்பதைத் தேர்ந்தெடுத்தால் சொத்தின் உரிமையாளர் விவரம் (சுயமானது என்பது போல), முகவரி, வீட்டுச் சொத்தின் வகை (சுய ஆக்கிரமிப்பு / வாடகைக்கு விடப்பட்டது / வாடகைக்கு விடப்பட்டதாகக் கருதப்படுவது) உரிமையின் சதவீதம் இதர கூட்டாண்மை உரிமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் கூட்டாண்மை உரிமையாளர்களின் விவரங்களான குடியிருப்பு நிலை PAN விவரங்கள், ஆதார் விவரங்கள், பெயர் மற்றும் உரிமையின் சதவீதம் போன்ற விவரங்களை உள்ளிடலாம்.
Data responsive

குறிப்பு: நீங்கள் பல வருமான ஆதாரங்களைச் சேர்க்கலாம். அனைத்து வருமான ஆதாரங்களையும் சேர்க்க விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

3.4 போர்த்துகீசிய குடிமைச் சட்டம் பொருந்தும் நிலையைப் புதுப்பித்தல்

படிநிலை 1: எனது சுயவிவரம் பக்கத்தில் போர்த்துகீசிய சிவில் குறியீடு பொருந்தக்கூடிய தன்மை என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு: அது உங்களுக்குப் பொருந்துமா என்பதைத் தெரிந்துகொள்ள போர்த்துகீசிய குடிமகன் குறியீடு என்றால் என்ன? என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive



படிநிலை 2: பிரிவு 5A-இன் படி நீங்கள் போர்த்துகீசிய குடிமக்கள் குறியீட்டால் நிர்வகிக்கப்படுபவராக இருந்தால் ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

 

Data responsive


 

படிநிலை 3: PAN, ஆதார் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயர் போன்ற விவரங்களை உள்ளிட்டு, சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு: தனிநபர்கள் அல்லாத பிற வரி செலுத்துவோரும் தங்களது சுயவிவரத்தில் பின்வரும் விவரங்களை உள்ளிடலாம் / புதுப்பிக்கலாம்:

வரி செலுத்துவோர் வகை

விவரங்கள்

HUF

முக்கிய நபரின் விவரங்கள்

நிறுவனம்

நிர்வாகப் பங்குதாரர் / நியமிக்கப்பட்ட பங்குதாரர் விவரங்கள்

நிறுவனம்

முக்கிய நபரின் விவரங்கள், பதவி, முதன்மைத் தொடர்பாளர், பங்குதாரர் விவரங்கள்

AOP

உறுப்பினர் விவரங்கள், முதன்மை அதிகாரி விவரங்கள்

நம்பிக்கை

அறங்காவலர் விவரங்கள்

AJP, உள்ளூர் நிர்வாகம், வரிப்பிடித்தம் செய்பவர் மற்றும் வரி வசூலிப்பாளர் அரசு

முதன்மை அதிகாரி விவரங்கள்

CA

உறுப்பினர் எண், சேர்க்கப்பட்ட தேதி உள்ளிட்ட வணிகம் / தொழில்முறை விவரங்கள்

 

4. தொடர்புடைய தலைப்புகள்