மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள்

Frequently Asked Questions

மறுமதிப்பீட்டு நடவடிக்கை-FAQs

1. வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ்,வழக்குகளை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான நடைமுறையைச் சுருக்கமாக விளக்குக.

வரி மதிப்பீட்டிலிருந்து விடுபட்ட வருமானத்திற்கான, 2025ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 280-இன் கீழ் அறிவிப்பு வெளியிடுவதற்கான நடைமுறை பின்வருமாறு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது:

i) தகவல் - குறிப்பிட்ட வருமானம் மதிப்பீட்டிலிருந்து விடுபட்டது என்பதைக் குறிக்கும் தகவல் மதிப்பீட்டு அலுவலரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ii) காரணம்- கேட்கும் குறிப்பாணை - இச்சட்டத்தின் பிரிவின் கீழ் 280-இன் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், மதிப்பீட்டு அலுவலரிடம், புதிய சட்டத்தின் பிரிவு 281(1)-இன் கீழ் ஒரு காரண குறிப்பாணை அறிவிப்பை வழங்குவதன் மூலம் வரி செலுத்துவோருக்கு தன் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். அந்த அறிவிப்பில், வரிவிதிக்ககூடிய வருமானம் மதிப்பீட்டிலிருந்து தவறவிட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் தகவல்களைத் தெரிவிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அதற்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்.

iii)பதிலைப் பரிசீலித்தல் -வரி செலுத்துவோரின் பதிலை AO கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும்.

iv) காரணங்களுடன் கூடிய ஆணை - கூடுதல் ஆணையர் அல்லது இணை ஆணையரின் முன் அனுமதி ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையுடன், பிரிவு 281(3)-இன் கீழ் ஒரு ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். அதில், இவ்வழக்கு மறுமதிப்பீட்டிற்கு உகந்த ஒரு வழக்கு என்பதைத் தீர்மானித்து எழுத வேண்டும்.

v) இச்சட்டத்தின் பிரிவு 280-இன் கீழ் வழக்கை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு வழங்குதல்.குறிப்பு: இச்சட்டத்தின் பிரிவு 281(4)-இல் வழங்கப்பட்டுள்ள சில சூழ்நிலைகளின் கீழ், மதிப்பீட்டு அதிகாரி பிரிவு 281-இல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய சூழ்நிலைகளிலும் கூட, பிரிவு 280-இன் கீழ் அறிவிப்பு வழங்கப்படுவதற்கு முன், கூடுதல் ஆணையர் அல்லது இணை ஆணையரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும்.

2. புதிய சட்டத்தின் கீழ் வருமான மதிப்பீட்டை மீண்டும் தொடங்குவதற்காக, 'வருமானம் மதிப்பீட்டிலிருந்து விடுபட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் தகவல்' என்று எது கருதப்படுகிறது?

சட்டப் பிரிவு 280(6) ஆனது, வருமானம் மதிப்பீட்டிலிருந்து விடுபட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் தகவலாக பின்வருபவை கருதப்படும் என்று வழங்குகிறது:

(i)தொடர்புடைய ஆண்டிற்காக, வாரியத்தின் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் இடர் மேலாண்மை உத்தியின் கீழ் கண்டறியப்பட்ட தகவல்.

(ii) குறிப்பிட்ட வருமான வரி மதிப்பீடானது இச்சட்டத்தின்படி மேற்கொள்ளப்படவில்லை என்பதைக் சுட்டிக்காட்டும் தணிக்கை ஆட்சேபனைகள்.

(iii) சட்டப் பிரிவு 159-ல் குறிப்பிட்டுள்ளபடி, ஏதேனும் வெளிநாட்டு அரசுடன் அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் பெறப்பட்ட தகவல்.

(iv) தகவல் சேகரிக்கும் நோக்கங்களுக்காக சட்டப் பிரிவு 260-இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலமாக, மதிப்பீட்டு அலுவலரிடம் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்.

(v) நீதி ஆயம் அல்லது நீதிமன்ற உத்தரவின் விளைவாக நடவடிக்கை எடுக்கக் கோரும் தகவல்கள்.

சட்டத்தின் 253-வது பிரிவின் கீழ் (உட்பிரிவு 4 தவிர்த்து) நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள்.

(vii) சட்டப்பிரிவு 274(6)-ன் கீழ் ஒப்புதல் குழுவின் வழிகாட்டுதல்கள்

(viii) வருமான வரிச் சட்டம், 2025-ன் கீழ் நடவடிக்கை செயல்பாடுகளில் ஏதேனும் ஓர் அதிகாரி, நீதி ஆயம் அல்லது நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் உள்ள, அல்லது வேறு ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் செயல்பாடுகளில் ஒரு நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் உள்ள முடிவுகள் அல்லது வழிகாட்டுதல்கள்.

3. புதிய சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு வழங்காமல் மதிப்பீட்டு அதிகாரி ஏதேனும் மதிப்பீடு, மறுமதிப்பீடு அல்லது மறு கணக்கீடு செய்ய முடியுமா?

இல்லை, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 148-க்கு இணையான, புதிய சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் அறிவிப்பு வழங்காமல், பிரிவு 279-ன் கீழ் மதிப்பீட்டு அதிகாரி எந்தவொரு மதிப்பீடு, மறுமதிப்பீடு அல்லது மறு கணக்கீட்டையும் செய்யக்கூடாது.

4. புதிய சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மதிப்பீட்டு அதிகாரி பிரிவு 281-ன் கீழ் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லையா?

புதிய சட்டத்தின் விதிகளின்படி, பொதுவாக, மதிப்பீட்டு அதிகாரி பிரிவு 281-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை முடித்து, பிரிவு 281(3)-ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுடன் சேர்த்து பிரிவு 280-ன் கீழ் அறிவிப்பை வெளியிட வேண்டும். இருப்பினும், மதிப்பீட்டு அதிகாரிக்கு பின்வருபவை பெறப்பட்ட சந்தர்ப்பங்களில், அவர் பிரிவு 281-ல் உள்ள நடைமுறைகளைத் தவிர்க்கலாம் :

(i)புதிய சட்டத்தின் பிரிவு 260-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, இணையவழி தகவல் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்; அல்லது

(ii)அனுமதிக்கப்படாத வரி தவிர்ப்பு ஏற்பாடு என அறிவிப்பது தொடர்பாக, அத்தியாயம் 11-இன் விதிகளின்படி, அங்கீகரிக்கும் குழுவால் வழங்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அத்தகைய அறிவிப்பு எந்த வரி ஆண்டிற்கு அல்லது ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்பதைக் குறிப்பிட்டு, பிரிவு 274(6)-ன் கீழ் வழங்கப்பட்ட வழிமுறைகள்; அல்லது

(iii)இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீடு, பாிந்துரை அல்லது மறுஆய்வு மூலமாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் எந்தவொரு அதிகாரி, நீதி ஆயம் அல்லது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் உள்ள எந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது வழிகாட்டுதலும், அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் உள்ள கண்டுபிடிப்பு அல்லது வழிகாட்டுதல்.

5. புதிய சட்டத்தின் மறுமதிப்பீட்டு விதிகள் எந்தெந்த வரி ஆண்டுகளுக்குப் பொருந்தும்?

வருமான வரிச் சட்டம், 2025-இன் மறுமதிப்பீட்டு விதிகள் (பிரிவுகள் 279 - 286), வரி ஆண்டு 2026 - 27 மற்றும் அதற்கு அடுத்தடுத்த வரி ஆண்டுகளுக்குப் பொருந்தும். 2026 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாகத் தொடங்கும் எந்தவொரு வரி ஆண்டுக்கும், மறுமதிப்பீட்டிற்கு பழைய சட்டத்தின் விதிகள் மட்டுமே பொருந்தும்.

6. வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் மறுமதிப்பீட்டை முடிப்பதற்கான கால வரம்பு என்ன?

சட்டப்பிரிவு 279-ன் கீழான மறுமதிப்பீட்டு ஆணை சட்டப்பிரிவு 280-()1ன் கீழான அறிவிப்பு வழங்கி முடிக்கப்பட்ட நிதியாண்டின் இறுதியிலிருந்து ஓராண்டிற்குள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பிரிவு 286(1)-ன் [அட்டவணை: வரிசை எண். 4] கீழ் விதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சூழலுகளுக்காக (எடுத்துக்காட்டாக: பரிமாற்றம் விலை நிர்ணயப் பரிந்துரைகள்], வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் [ITAT]/ நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுகள் போன்றவை) பல்வேறு கால நீட்டிப்புகளும் மற்றும் கால விலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

7. முந்தைய ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் பழைய சட்டத்தின் பிரிவு 147/148-ன் கீழ் தொடங்கப்பட்டு, 01.04.2026 அன்றைய நிலவரப்படி நிலுவையில் இருந்தால், அவை பழைய சட்டத்தின் கீழேயே தொடருமா?

ஆம். புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கைக்கும், ரத்து செய்யப்பட்ட (பழைய) சட்டத்தின் விதிகள் தொடர்ந்து பொருந்தும் என்று வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(2)(c) தெளிவாக வழங்குகிறது. எனவே, பழைய சட்டத்தின் கீழ் ஏற்கனவே தொடங்கப்பட்ட மறுமதிப்பீடு நடவடிக்கைகள், தொடர்ந்து 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படியே நிர்வகிக்கப்படும். எடுத்துக்காட்டு: மதிப்பீட்டு அதிகாரி, திரு. X என்பவருக்கு மதிப்பீட்டு ஆண்டு (AY) 2023-24 க்கான பழைய சட்டத்தின் பிரிவு 148A(1)-இன் கீழுள்ள அறிவிப்பை டிசம்பர் 2025-இல் வழங்கி, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2026-இல் பிரிவு 148-இன் கீழுள்ள அறிவிப்பையும் வழங்குகிறார். இதற்கான மதிப்பீட்டு உத்தரவு 01.04.2026-க்குப் பிறகு பிறப்பிக்கப்பட்டாலும், இந்த மறுமதிப்பீடு நடவடிக்கை பழைய சட்டத்தின் கீழேயே நிறைவு செய்யப்படும்.

8. 01.04.2026-க்குப் பிறகு, வருமான வரித்துறை முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (AY 2022-23 அல்லது AY 2024-25 போன்ற) புதிய மறுமதிப்பீடு நடவடிக்கைகளை பழைய சட்டத்தின் கீழ் தொடங்க முடியுமா?

ஆம், 1 ஏப்ரல் 2026-க்குப் பிறகும், மதிப்பீட்டு ஆண்டு (A.Y.) 2026-27 வரையிலான முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வரி மதிப்பீடு, மறுமதிப்பீடு, திருத்தம், அபராதம், மறுஆய்வு போன்ற நடவடிக்கைகள் பழைய சட்டத்தின் கீழ் தொடர்ந்து தொடங்கப்பட்டு நிறைவு செய்யப்படலாம்.உதாரணமாக, நிதியாண்டு (F.Y.) 2027-28-இல், வருமான வரிச் சட்டம் 1961-இல் குறிப்பிடப்பட்டுள்ள மறுஆய்வுக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், மதிப்பீட்டு ஆண்டு (A.Y.) 2023-24-க்கான வரி மதிப்பீட்டை பழைய சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மீண்டும் தொடங்க முடியும்.

9.பழைய சட்டத்தின் பிரிவு 148A(1)-இன் கீழுள்ள அறிவிப்பு 01.04.2026-க்கு முன் வழங்கப்பட்டு, ஆனால் பிரிவு 148-இன் கீழுள்ள அறிவிப்பு இன்னும் வழங்கப்படாமல் இருந்தால், அதை 01.04.2026-க்குப் பிறகு வழங்க முடியுமா?

ஆம். புதிய சட்டம் தொடங்கும் தேதியில் நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கைக்கும், ரத்து செய்யப்பட்ட (பழைய) சட்டத்தின் விதிகள் தொடர்ந்து பொருந்தும் என்று வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(2)(c) தெளிவாக வழங்குகிறது. பிரிவு 148A(1)-இன் கீழ் அறிவிப்பு வழங்கப்பட்டதன் மூலம் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் நடவடிக்கைகள்தொடங்கப்பட்டதால், அதன் விளைவாக எடுக்கப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் — பிரிவு 148A(3)-இன் கீழுள்ள உத்தரவு மற்றும் பிரிவு 148-இன் கீழுள்ள அறிவிப்பு உட்பட — 1961 ஆம் ஆண்டு சட்டத்தின் விதிகளின்படியே நிர்வகிக்கப்படும். இருப்பினும், இத்தகைய தொடர்ச்சி, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 149-இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள கால வரம்பிற்கு உட்பட்டதாகும்.எடுத்துக்காட்டு: மதிப்பீட்டு அதிகாரி (AO) ஒரு வரி செலுத்துவோருக்கு, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2022-23 க்கான விளக்கம் கேட்கும் அறிவிப்பை பிரிவு 148A(1)-இன் கீழ் 20 மார்ச் 2026 அன்று வழங்குகிறார். அவரது பதிலை பரிசீலித்த பிறகு, மதிப்பீட்டு அதிகாரி 15 ஏப்ரல் 2026 அன்று பிரிவு 148A(3)-இன் கீழ் ஓர் உத்தரவை பிறப்பித்து, 30 ஏப்ரல் 2026 அன்று பழைய சட்டத்தின் பிரிவு 148-இன் கீழ் அறிவிப்பை வெளியிடுகிறார். புதிய சட்டம் 1 ஏப்ரல் 2026 அன்று நடைமுறைக்கு வந்தபோதிலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செல்லுபடியாகும்.

10. 01.04.2026 அன்று புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026-27 அல்லது அதற்கு முந்தைய எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கான மறுமதிப்பீடு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு யாருடைய ஒப்புதல் தேவைப்படும்??

மதிப்பீட்டு ஆண்டு 2026-27 அல்லது அதற்கு முந்தைய எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளும் பழைய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், பழைய சட்டத்தின் பிரிவு 151-இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒப்புதல் படிநிலை பொருந்தும். எனவே, வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவுகள் 148 மற்றும் 148A ஆகியவற்றின் நோக்கங்களுக்காக கூடுதல் ஆணையர், கூடுதல் இயக்குனர், இணை ஆணையர் அல்லது இணை இயக்குனர் ஆகியோரே குறிப்பிட்ட அதிகார அமைப்பாக இருப்பார்கள்.

11. மதிப்பீட்டு ஆண்டு 2022-23 க்கான மறுமதிப்பீடு அறிவிப்பு, பழைய சட்டத்தின் பிரிவு 148-இன் கீழ் பிப்ரவரி 2026-இல் வழங்கப்பட்டு, அதற்கான வருமான வரிக் கணக்கை மதிப்பீட்டாளர் இதுவரை தாக்கல் செய்யாமல் இருந்தால், அந்த வருமான வரிக் கணக்கை 01.04.2026-க்குப் பிறகு தாக்கல் செய்ய முடியுமா?

"ஆம். ஒட்டுமொத்த மறுமதிப்பீடு நடவடிக்கைகளும் பழைய சட்டத்தின் கீழ் (பிரிவு 536(2)(c)-இன் படி) நிர்வகிக்கப்படுவதால், மதிப்பீட்டாளர் பிரிவு 148 அறிவிப்பிற்கான வருமான வரிக் கணக்கை, பழைய சட்டத்தின் கட்டமைப்பின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த அறிவிப்பு வழங்கப்பட்ட மாதத்தின் இறுதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மிகாமல், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் இதைச் செய்ய வேண்டும். இந்த வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்யப்பட வேண்டிய படிவம், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு இணையானதாக இருக்க வேண்டும்."

12. மதிப்பீட்டு அலுவலர் வரிச்செலுத்துனருக்கு, மதிப்பீட்டு ஆண்டு 2024 -25-க்கான மறுமதிப்பீட்டையும் (பழைய சட்டத்தின் கீழ்) மற்றும் வரி ஆண்டு 2026 -27க்கான மதிப்பீட்டையும் (புதிய சட்டத்தின் கீழ்) ஒரே நேரத்தில் நடத்த முடியுமா?

ஆம். இவை இரண்டு வெவ்வேறு வருமானக் காலங்களுக்காக,இரண்டு வெவ்வேறு சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் தனித்தனியாக நடைமுறைகள் ஆகும். தேவைப்படும் இடங்களில், வருமான வரித்துறை ஒரே நேரத்தில் இரண்டு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மதிப்பீட்டு ஆண்டு AY 2024-25 க்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கை பழைய சட்டம் கட்டுப்படுத்தும், அதே நேரத்தில் வரி ஆண்டு TY 2026-27 க்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளைப் புதிய சட்டம் கட்டுப்படுத்தும்.

13. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் தொடங்கும் எந்தவொரு வரி விதிப்பு ஆண்டிற்கு தொடர்புடைய அபராத நடவடிக்கைகளை எந்தச் சட்டம் கட்டுப்படுத்தும்?

பிரிவு 536(2) (d) ஆனது, 2026 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் தொடங்கும் எந்தவொரு வரி ஆண்டுக்கான அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கையும், புதிய சட்டம் இயற்றப்படாதது போலவே, பழைய சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம் என்பதைத் தெளிவாக வழங்குகிறது. எனவே, முந்தைய ஆண்டுகளின் மறுமதிப்பீட்டிலிருந்து எழும் அபராதங்கள், வருமான வரிச் சட்டம், 1961 இல் வழங்கப்பட்டுள்ள அபராதங்களுக்கான கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும்.