மின்னணு தாக்கல் முன்பதிவு (வரி பிடித்தம் செய்பவர் மற்றும் வசூலிப்பவர்) பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

இந்த முன்-உள்நுழைவு சேவை, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்து அணுக விரும்பும் அனைத்து வரி பிடித்தம் செய்பவர்களுக்கும் / வரி வசூலிப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.பதிவு சேவை, பயனர் தங்களின் அனைத்து வரி தொடர்பான செயல்பாடுகளையும் அணுகவும் கண்காணிக்கவும் உதவுகிறது.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
 

  • பயன்பாட்டில் மற்றும் செயலில் உள்ள TAN
  • முதன்மைத் தொடர்பாளரின் PAN எண் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. படிப்படியான வழிகாட்டி
 

படிநிலை 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, பதிவுசெய்க என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2: பிறவை என்பதைக் கிளிக் செய்து, வகை என்பதில் வரி பிடித்தம் செய்பவர் மற்றும் வசூலிப்பவர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 

Data responsive


படிநிலை 3: நிறுவனத்தின் TAN எண்ணை உள்ளிட்டு, சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 4a: TAN தரவுத்தளத்தில் கிடைக்கப்பெற்று, TRACES-இல் பதிவு செய்யப்பட்டு, மேலும் பதிவுக்கான கோரிக்கை ஏற்கனவே எழுப்பப்படாமல் ஒப்புதலுக்காக நிலுவையில் இல்லாவிட்டால்:

  • அடிப்படை விவரங்கள் பக்கத்தைப் பார்க்க  தொடரவும்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடிப்படை விவரங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
     

Data responsive


படிநிலை 4b: ஒருவேளை அந்த TAN தரவுத்தளத்தில் இருந்து, ஆனால் TRACES-இல் பதிவு செய்யப்படாமல், மற்றும் ஏற்கனவே பதிவு கோரிக்கை ஏதும் எழுப்பப்படாமல் மற்றும் ஒப்புதலுக்காக நிலுவையில் இல்லையெனில்:

  • TRACES பக்கத்தைப் பார்க்க தொடரவும்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  • TRACES தளத்தில், மின்னணு-தாக்கல் தளத்தில் பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்து, அடிப்படை விவரங்கள் பக்கத்தைப் பார்க்கவும்.
  • தேவையான அடிப்படை விவரங்களை உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக்செய்யவும்.


குறிப்பு: முதலில் TRACES தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்குள்ள மின்னணு-தாக்கல் தளத்தில் பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்தால், மின்னணு-தாக்கல் பதிவு பக்கத்திற்குச் செல்லலாம்.

படிநிலை 4c: தரவுத்தளத்தில் TAN ஏற்கனவே இருந்தால், பதிவுக் கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் இருக்கும்:

  • பிழைச் செய்தி காட்டப்படும், மேலும் நீங்கள் பதிவு செய்யும் செயல்முறையைத் திரும்பப் பெற விரும்பினால், அதைத் தேர்வு செய்யலாம்.


படிநிலை 5: பணம் செலுத்தும் அல்லது வரியைச் சேகரிக்கும் தனிநபரின் விவரங்களை உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 6: முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் அஞ்சல் முகவரி , உள்ளிட்ட தகவல்தொடர்பு விவரங்களை வழங்கவும். பின்னர் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 7: படிநிலை 6-இல் நீங்கள் உள்ளிட்ட முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID -க்கு தலா ஒரு OTP என மொத்தம் இரண்டு வெவ்வேறு OTP-கள் அனுப்பப்படும். உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID -க்கு வந்த அந்த 6 இலக்க OTP-களை தனித்தனியாக உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


குறிப்பு:

  • OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான OTP-ஐ உள்ளீடு செய்ய உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளது.
  • திரையில் உள்ள OTP காலாவதி கவுண்டவுண் டைமர் , OTP எப்போது இடைநிறுத்தமாகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
  • OTP-ஐ மீண்டும் அனுப்பவும், என்பதைக் கிளிக் செய்யும்போது, ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

படிநிலை 8: விவரங்களைச் சரிபார்க்கவும் பக்கத்தில், நீங்கள் வழங்கிய விவரங்களைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களைச் செய்யவும். பின்னர் உறுதிப்படுத்தவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படிநிலை 9: கடவுச்சொல்லை அமைக்கவும் பக்கத்தில், கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய உரைப்பெட்டிகளில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், உங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை அமைத்து, பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


குறிப்பு:

  • புதுப்பித்தல்  அல்லது  பின்செல் பட்டன்களைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையைக் கவனமாகப் பின்பற்றுங்கள்:
    • அது குறைந்தது 8 எழுத்துகளையும் அதிகபட்சம் 14 எழுத்துகளையும் கொண்டிருக்க வேண்டும்.
    • அதில் பெரிய எழுத்துகள் மற்றும் சிறிய எழுத்துகள் இரண்டும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
    • அதில் குறைந்தது ஒரு எண் இருக்க வேண்டும்.
    • அதில் ஒரு சிறப்பு எழுத்து (எ.கா., @#$%) இருக்க வேண்டும்.

ஒரு வெற்றிச் செய்தி மற்றும் பரிவர்த்தனை ID காட்டப்படும். எதிர்காலத் தேவைக்காக இந்த பரிவர்த்தனை ID- ஐ குறித்து வைத்துக்கொள்ளவும். தகுதியுடைய அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்றவுடன் பதிவு செயல்முறை நிறைவடையும்.

 

Data responsive


4. தொடர்புடைய தலைப்புகள்