1. நான் ஏன் எனது கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டும்?

நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்தினால் உங்கள் கடவுச்சொல் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டாலோ, இந்தச் சேவையைப் பயன்படுத்தி அதை நீங்கள் மீட்டமைக்கலாம்.

2. எனது கடவுச்சொல் வெற்றிகரமாக மீட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மீட்டமைக்கப்பட்டதும், ஒரு பரிவர்த்தனை எண் உருவாக்கப்படும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் நீங்கள் பதிவு செய்துள்ள உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

3. DSC-ஐப் பயன்படுத்தி எனது கடவுச்சொல்லை மீட்டமைக்கும்போது தவறான டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் என்ற செய்தி வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

DSC-ஐ பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கிறீர்கள் என்றால் சான்றளிக்கும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செல்லுபடியாகும் நிலை 2 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையைச் சேர்ந்த DSC-ஐ நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

4. எனது கடவுச்சொல்லை மீட்டமைக்க என்னென்ன வழிகள் உள்ளன?

நீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம்:
• மின்னணு-தாக்கல் OTP (மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்)
• ஆதார் OTP (ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்)
•    DSC

5. நான் EVC-ஐ எங்கு பெறுவேன்?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பொறுத்து முன்னரே சரிபார்க்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கு/டிமேட் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் அலைபேசி எண்ணிற்கு EVC அனுப்பப்படும்.

6. வங்கி கணக்கு EVC மூலம் எனது கடவுச்சொல்லை மீட்டமைக்க விரும்புகிறேன் ஆனால் அந்த விருப்பம் பட்டியலில் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களின் மின்னணு-தாக்கல் கணக்கைப் பாதுகாப்பதற்காக 'மின்னணு-தாக்கல் உயர் பாதுகாப்பு பெட்டகம்' சேவையின் மூலம் நீங்கள் எந்த விருப்பங்களைத் தேர்ந்தெடுத்தீர்களோ அவை மட்டுமே காட்சிப்படுத்தப்படும். வங்கி கணக்கு EVC அல்லது வேறு ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க விரும்பியும், அந்த விருப்பம் பட்டியலில் இல்லை என்றால், மின்னணு-தாக்கல் உயர் பாதுகாப்பு பெட்டகச் சேவையின் மூலம் அதை நீங்கள் முன்னரே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. எந்தவொரு முறையிலும் என்னால் கடவுச்சொல்லை மீட்டமைக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?

மேலும் உதவிக்கு நீங்கள் உதவி மையத்தைத் (1800 103 0025) தொடர்பு கொள்ளலாம்.