1. வருமான வரி ஆணையத்தால் எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு/உத்தரவை நான் ஏன் அங்கீகரிக்க வேண்டும்?
அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்ட வருமான வரித் துறையின் ஒவ்வொரு தகவல்தொடர்பும் ஒரு DIN கொண்டிருக்கும் நீங்கள் பெற்ற அறிவிப்பு/உத்தரவு அல்லது கடிதமானது உண்மையானது மற்றும் வருமான வரி ஆணையத்தால் வழங்கப்பட்டவை என்று உங்களை திருப்திப்படுத்த, நீங்கள் பெற்ற எந்தவொரு அறிவிப்பு/உத்தரவு அல்லது கடிதத்தையும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி அங்கீகரிக்கலாம்
2. வருமான வரித் துறையின்(ITD) அறிவிப்பு/உத்தரவில் DIN இல்லாவிட்டால் என்னாகும்?
அவ்வாறான நிலையில், நீங்கள் பெற்ற அறிவிப்பு/உத்தரவு/கடிதம் செல்லாதது எனக் கருதப்படும், அது சட்டப்படி செல்லாதது அல்லது அது துறையிலிருந்து ஒருபோதும் அனுப்பப்பட்டது இல்லை என்று கருதப்படும். நீங்கள் அந்த விதமான கடிதத்துக்கோ, அறிவிப்புக்கோ, உதரவுக்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அல்லது அத்தகைய தகவல்தொடர்புக்கு பதிலளிக்கவோ தேவையில்லை.
3. வருமான வரித் துறை (ITD) எனக்கு வழங்கிய உத்தரவை நான் எங்கே அங்கீகரிப்பது?
ITD சேவையால் வழங்கப்பட்ட அறிவிப்பு / ஆணைக்கு உத்தரவாதமளித்தலை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் வருமான வரித் துறை அதிகாரிகள் வழங்கிய ஆணைக்கு நீங்கள் அங்கீகரிக்கலாம்.
4. வருமான வரித் துறையால் (ITD) எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை அங்கீகரிக்க நான் உள்நுழைய வேண்டுமா?
இல்லை, அறிவிப்பு / ஆணைக்கு உத்தரவாதமளித்தலுக்கு நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பிற்குள் உள்நுழைவு செய்ய வேண்டியதில்லை. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கும் ITD ஆல் வழங்கப்பட்ட அறிவிப்பு/ஆணைக்கு உத்தரவாதமளித்தல் இணைப்பில் கிளிக் செய்வதன் நீங்கள் அறிவிப்பிற்கு உத்தரவாதமளிக்கலாம்.
5. எனது அறிவிப்பை அங்கீகரிக்க மின்னணு-தாக்கல் (இணைய முகப்பில்) பதிவுசெய்யப்பட்ட அதே அலைபேசி எண்ணை நான் உள்ளிட வேண்டுமா?
இல்லை, வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட அறிவிப்பு / கடிதம் அல்லது எந்தத் தகவல்தொடர்பிற்கும் உத்தரவாதமளிப்பதற்கு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணை உள்ளிட வேண்டியது கட்டாயமில்லை. அலைபேசி எண் உரைப்பெட்டியில் உள்ளிடுவதன் மூலம் உங்களால் அனுகப்படக்கூடிய எந்த அலைபேசி எண்ணில் வேண்டுமானாலும் OTP பெறுவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
6. DIN என்றால் என்ன?
ஆவண அடையாள எண் (DIN) என்பது ஆவண அடையாள எண்ணைக் குறிக்கிறது. இது ஒரு கணினி உருவாக்கிய இலக்க பிரத்யேக எண்ணாகும், இது எந்தவொரு வரி செலுத்துனருக்கும் எந்தவொரு வருமான வரி அதிகாரியாலும் வழங்கப்படுகின்ற அனைத்து தகவல்தொடர்பிலும் (கடிதம் / அறிவிப்பு / ஆணை / வேறு ஏதேனும் தொடர்புமுறை) முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.