1. மேலோட்ட பார்வை

எனது சுயவிவரம் /சுயவிவர மேம்பாடு சேவையானது மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும், முகப்பில் உள்நுழைவிற்குப் பின் அவர்களின் சுயவிவரத் தகவல்களை பார்வையிடவும் மற்றும் திருத்தவும் / மேம்படுத்தவும் கிடைக்கிறது. இந்த சேவையானது பயனர் வகைக்கேற்ப சுயவிவர தகவல்களை திருத்த / மேம்படுத்த உங்களை அனுமதிக்கிறது:

  • PAN விவரங்கள், TAN விவரங்கள், ஆதார் எண் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை பார்க்கவும் / மேம்படுத்தவும்
  • உங்கள் தொடர்பு விவரங்களான அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி போன்ற தொடர்பு விவரங்களை மேம்படுத்தவும்
  • இவ்வாறான உங்களின் பிற விவரங்களை பார்க்கவும் / மேம்படுத்தவும்:
    • வங்கிக் கணக்கு மற்றும் டீமேட் கணக்கு விவரங்கள்
    • DSC ஐ பதிவு செய்யவும்
    • மின்னணு-தாக்கல் பெட்டகத்தின் உயர் பாதுகாப்பு
    • PAN – AO இன் அதிகார வரம்பு விவரங்கள்
    • வருமானவரி அறிக்கை / படிவங்களுக்கான வரி மதிப்பிடப்படுபவரின் பிரதிநிதி மற்றும் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவரின் விவரங்கள்
    • வருமான ஆதார விவரங்கள்
    • பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்
    • பாராட்டுகள் மற்றும் விருதுகள்
    • போர்த்துகீசிய பொதுக்குறியீடு பொருந்தக் கூடிய தன்மை

2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்

  • செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனர்

3. படிப்படியான வழிகாட்டி

படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

1

 

படி 2: முகப்புப் பலகை பக்கத்தில், உங்கள் முகப்புப் பலகையின் மேல் வலது மூலையில், உங்கள் பெயரைக் கிளிக் செய்து, எனது சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

2

 

படி 3: எனது சுயவிவரப் பக்கத்தில், நீங்கள் இவற்றைப் பார்க்கலாம் மற்றும் / அல்லது புதுப்பிக்கலாம்:

தனிப்பட்ட விவரங்களான குடியுரிமை, வாழ்விட விவரங்கள், கடவுச்சீட்டு எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் பிரிவு 3.1 ஐ பார்க்கவும்
அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி போன்ற தொடர்பு விவரங்கள் பிரிவு 3.2 ஐ பார்க்கவும்
வருமான ஆதார விவரங்கள் பிரிவு 3.3 ஐ பார்க்கவும்
போர்த்துகீசிய பொதுக்குறியீடு பொருந்தக் கூடிய தன்மை பிரிவு 3.4 ஐ பார்க்கவும்
வருமானவரி அறிக்கைகள் / படிவங்களை கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர்

வருமானவரி அறிக்கைகள் / படிவங்களை கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை கிளிக் செய்யவும். விவரங்களை மேம்படுத்த திருத்துக என்பதை கிளிக் செய்து சேமிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / கையொப்பமிடுபவர் எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிய அங்கீகாரம் அளித்தல் மற்றும் பிரதிநிதியாக பதிவு செய்தல் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

வரி மதிப்பிடப்படுபவரின் பிரதிநிதி

வரி மதிப்பிடப்படுபவரின் பிரதிநிதி என்பதை கிளிக் செய்யவும். விவரங்களை மேம்படுத்த திருத்துக என்பதை கிளிக் செய்து சேமிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: ஒரு மதிப்பீட்டு பிரதிநிதியை எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிய அங்கீகாரம் அளித்தல் மற்றும் பிரதிநிதியாக பதிவு செய்தல் பயனர் கையேட்டை பார்க்கவும்.

பாதுகாப்பான அணுகல் செய்தியை அமைக்கவும்

(நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் நுழையும் ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட செய்தி ஒன்று தோன்றும். தனிப்பட்ட செய்தியானது நீங்கள் உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் வலைதளம் மெய்யான மின்னணு-தாக்கல் இணைய முகப்புதானா என்பதை சோதித்துப் பார்க்க ஒரு பயனுள்ள வழியாகும்)
பாதுகாப்பான அணுகல் செய்தியை கிளிக் செய்யவும். பாதுகாப்பான அணுகல் செய்தி பக்கத்தில், உரைப்பெட்டியில் தனிப்பட்ட செய்தியை உள்ளிட்டு சேமிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
ஆதார் OTP உள்நுழைவு உங்கள் உள்நுழைவை ஒற்றைக் காரணி அங்கீகாரம் வேண்டி ஆதார் OTP மூலம் செயலாக்க, ஆதார் OTP உள்நுழைவு என்பதை கிளிக் செய்யவும் ஆதார் OTP உள்நுழைவு பக்கத்தில், ஆம் என்பதைத் தேர்ந்தெடுத்து சேமி என்பதை கிளிக் செய்தால் ஆதார் OTP மூலமான உள்நுழைவு செயல்படுத்தப்படும்.
அதிகார வரம்பு விவரங்கள் அதிகார வரம்பு பற்றிய விவரங்களைக் காண அதிகார வரம்பு விவரங்கள் என்பதை கிளிக் செய்யவும்
பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் e-PAN விவரங்கள், தொடக்க அங்கீகார விவரங்கள் மற்றும் மின்னணு-தாக்கல் செய்யப்பட்ட படிவங்களின் விவரங்களை காணவும் பதிவிறக்கவும் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பதை கிளிக் செய்யவும்.
பாராட்டு மற்றும் விருதுகள் பாராட்டுச் சான்றிதழை பதிவிறக்க பாராட்டு மற்றும் விருதுகள் என்பதை கிளிக் செய்யவும்
வங்கிக் கணக்கு விவரங்கள்

வங்கிக் கணக்கு விவரங்கள் என்பதை கிளிக் செய்தால், நீங்கள் வங்கிக் கணக்கு சேவை பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் வங்கிக் கணக்குடன் EVC ஐ சேர்க்கலாம் / நீக்கலாம் அல்லது செயல்படுத்தலாம் / முடக்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய எனது வங்கிக் கணக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும்

டீமேட் கணக்கு விவரங்கள்

டீமேட் கணக்கு விவரங்கள் என்பதை கிளிக் செய்தவுடன், நீங்கள் டீமேட் கணக்கு சேவை பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் டீமேட் கணக்குடன் EVC ஐ சேர்க்கலாம் / நீக்கலாம் அல்லது செயல்படுத்தலாம் / முடக்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய எனது டீமேட் கணக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும்

DSC ஐ பதிவு செய்யவும் அல்லது DSC ஐ பார்வையிடவும் மேலும் மேம்படுத்தவும் DSC ஐ பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்தவுடன், நீங்கள் இலக்கமுறை கையொப்ப சான்றிதழை (DSC) பதிவு செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள்:
  • DSC ஐ பதிவு செய்யவும்
  • DSC ஐ மீண்டும் பதிவு செய்யவும்
  • முதன்மை தொடர்பாளரின் DSC ஐ பதிவு செய்யவும்

குறிப்பு: மேலும் அறிய DSC ஐ பதிவு செய்யவும் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

மின்னணு-தாக்கல் பெட்டகத்தின் உயர் பாதுகாப்பு

மின்னணு-தாக்கல் பெட்டகத்தின் உயர் பாதுகாப்பு என்பதை கிளிக் செய்தால், நீங்கள் மின்னணு-தாக்கல் பெட்டகத்தின் உயர் பாதுகாப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கிற்கான அங்கீகாரமளித்தலின் கூடுதல் பாதுகாப்பு நிலையை நீங்கள் சேர்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு பயனர் கையேட்டைப் பார்க்கவும்

நிலையான கடவுச்சொல்

நிலையான கடவுச்சொல்லை உருவாக்க நிலையான கடவுச்சொல் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு: மேலும் அறிய நிலையான கடவுச்சொல்லை உருவாக்கவும் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

3

குறிப்பு:

  • வெளி முகவாண்மைகள் முகவாண்மையின் வகை, சேவையின் வகை, அமைப்பின் PAN, அமைப்பின் TAN, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID போன்ற தனிப்பட்ட விவரங்களை திருத்தலாம் / மேம்படுத்தலாம்.
  • மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERIகள்) மற்றும் TIN 2.0 பதிவு செய்யும் பங்குதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பார்க்க மட்டுமே முடியும் மேலும் எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் திருத்த / மேம்படுத்த முடியாது.
  • மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERIகள்), வெளி முகவாண்மைகள் மற்றும் TIN 2.0 பதிவு செய்யும் பங்குதாரர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை மேம்படுத்த முடியும்.
  • மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERIகள்) மற்றும் வெளி முகவாண்மைகள் அவரவர் சுயவிவரங்கள் வாயிலாக சேவைகளை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.
  • மேலும் அறிய அதற்க்குரிய பயனர் கையேடுகளைப் பார்க்கவும்.

3.1 தனிப்பட்ட விவரங்களை மேம்படுத்த

படி 1: எனது சுயவிவரப் பக்கத்தில், தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

3

குறிப்பு: குடியுரிமை மற்றும் குடியிருப்பு நிலைகளை மட்டுமே மாற்ற முடியும்.


படி 2: விரும்பிய விவரங்கள் திருத்தப்பட்டதும், சேமி என்பதை கிளிக் செய்யவும்

3


குறிப்பு: பயனர் வகையைப் பொறுத்து சில விவரங்கள் திருத்த முடியாதவையாக இருக்க கூடும் என்பதை கவனத்தில் கொள்க.

3.2 முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு விவரங்களை மேம்படுத்த (அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID)
(நீங்கள் ஆதார், PAN அல்லது வங்கி விவரங்களில் உள்ளவாறு உங்கள் அலைபேசி எண்ணையும் மேம்படுத்தலாம்)

படி 1: எனது சுயவிவரம் பக்கத்தில், தொடர்பு விவரங்களை மேம்படுத்த திருத்தவும் என்பதை கிளிக் செய்யவும்.

3


படி 2: வங்கி / ஆதார் / PAN இன் படி அலைபேசி எண்ணை உள்ளிடவும் மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

3

 

படி 3a: உங்கள் தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கும் பக்கத்தில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அலைபேசி எண்ணில் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6-இலக்க OTP-ஐ உள்ளிடவும், மற்றொன்று முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்னஞ்சல் IDக்கு அனுப்பப்படும். OTP-களை உள்ளிட்ட பிறகு, “சமர்ப்பித்து சரிபார்ப்புக்குச் செல்லவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

3


படி 3b: மின்னணு-சரிபார்ப்பு பக்கத்தில், நீங்கள் எந்த விருப்பத்தைப் பயன்படுத்தி வருமானவரி அறிக்கையை மின்னணு-சரிபார்க்க விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

3

குறிப்பு: நீங்கள் ஒரு இந்தியாவில் குடியல்லாதோராக இருந்தால், PAN வைத்திருக்கவில்லை மற்றும் PAN வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றால், படி 3B பொருந்தாது.


3.3. வருமான ஆதார விவரங்களை மேம்படுத்துவதற்காக (வரி செலுத்துவோருக்கு மட்டும்)

படி 1: எனது சுயவிவரம் பக்கத்தில், வருமான ஆதாரம் என்பதை கிளிக் செய்யவும்.

5

 

படி 2: விவரங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றால், விவரங்களை சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

6


குறிப்பு: ஒருவேளை வருமான ஆதார விவரங்கள் நிரப்பப்பட்டிருந்து மேற்கொண்டு அதை நீங்கள் மேம்படுத்த விரும்பினால் திருத்தவும் என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை நீங்கள் முன்னர் சேர்க்கப்பட்ட வருமான ஆதார விவரங்களை அழிக்க விரும்பினால், அழிக்கவும் என்பதை கிளிக் செய்யவும், விவரங்கள் உங்கள் சுயவிவரத்திலிருந்து அழிக்கப்படும்.

படி 3: கீழ்தோன்றலிலிருந்து வருமான ஆதாரத்தை (சம்பளம் / ஓய்வூதியம், வீட்டுச் சொத்து, வணிகம் / தொழில், விவசாயம், மற்றவை) தேர்ந்தெடுக்கவும்.

7


படி 4: கீழ்தோன்றலிலிருந்து ஒரு விருப்பத்தை தேர்ந்தெடுக்கும்போது, தேவையான விவரங்களை உள்ளிட்டு பின் சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

  • நீங்கள் சம்பளதாரர் / ஓய்வூதியர் என்பதை தேர்ந்தெடுக்கும்போது, பணியமர்த்துபவரின் / ஓய்வூதியம் வழங்கும் துறையின் TAN, பணியின் தன்மை, பணியமர்த்துபவரின் பெயர் / ஓய்வூதியம் வழங்கும் துறை மற்றும் பணிக்காலம் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
4
  • நீங்கள் வணிகம் / தொழில் என்பதை தேர்ந்தெடுத்தால், நீங்கள் வணிகம் / தொழில் ஆகியவற்றுடனான தொடர்பின் வகையை தேர்ந்தெடுக்கலாம், தொழில்முறை விவரங்கள் மற்றும் வணிக முகவரியை உள்ளிடவும்.
8
  • நீங்கள் வீட்டுச் சொத்தை தேர்ந்தெடுத்தால், நீங்கள் அது சம்பந்தப்பட்ட விவரங்களான சொத்தின் உரிமை (தன்னுடையது போன்ற), முகவரி, வீட்டுச் சொத்தின் வகை (சொந்த குடியிருப்பு / வாடகைக்கு விடப்பட்டது / வாடகைக்கு விடப்பட்டதாகக் கருதப்படுவது), உரிமை சதவிகிதம், பிற இணை உரிமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் இணை உரிமையாளர்களின் விவரங்களான குடியிருப்பு நிலை, PAN விவரங்கள், ஆதார் விவரங்கள், பெயர் மற்றும் உரிமை சதவிகிதம் போன்றவற்றை உள்ளிடலாம்.
9

குறிப்பு: நீங்கள் பலதரப்பட்ட வருமான ஆதாரங்களை சேர்க்கலாம். அனைத்து வருமான ஆதாரங்களையும் சேர்க்க விவரங்களை சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

3.4 போர்த்துகீசிய பொதுக்குறியீடு பொருந்தக் கூடிய தன்மையை மேம்படுத்த

படி 1: எனது சுயவிவரம் பக்கத்தில், போர்த்துகீசிய பொதுக்குறியீடு பொருந்தக் கூடிய தன்மை என்பதை கிளிக் செய்யவும்.

10


குறிப்பு: போர்த்துகீசிய பொதுக்குறியீடு என்றால் என்ன? என்பதை கிளிக் செய்யவும் இது உங்களுக்கு பொருந்துமா என்பதை அறிந்துகொள்ளவும்.

11



படி 2: பிரிவு 5A இன் படி போர்த்துகீசிய பொதுக்குறியீட்டிற்கு கட்டுப்பட்டவர் என்றால் ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

12

 

படி 3: உங்கள் வாழ்க்கை துணையின் விவரங்களான PAN, ஆதார் மற்றும் பெயர் போன்றவற்றை உள்ளிட்டு சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

13

 

குறிப்பு: தனிநபர்கள் அல்லாத வரி செலுத்துவோரும், தங்கள் சுயவிவரத்தில் பின்வரும் விவரங்களை உள்ளிட / மேம்படுத்த முடியும்:

வரி செலுத்துபவரின் வகை விவரங்கள்
HUF முக்கிய நபரின் விவரங்கள்
நிறுவனம் நிர்வாக பங்குதாரர் / நியமிக்கப்பட்ட பங்குதாரர் விவரங்கள்
பெரு நிறுவனம் முக்கிய நபரின் விவரங்கள், பதவி, முதன்மைத் தொடர்பு, பங்குதாரரின் விவரங்கள்
AOP உறுப்பினர் விவரங்கள், முதன்மை அதிகாரியின் விவரங்கள்
அறக்கட்டளை அறங்காவலர் விவரங்கள்
செயற்கையான சட்டப்பூர்வ நபர் (AJP), உள்ளூர் நிர்வாகம், வரி பிடித்தம் செய்பவர் மற்றும் வசூல் செய்பவர், அரசு முதன்மை அதிகாரியின் விவரங்கள்
CA வணிகம் / தொழில்முறை பற்றிய விவரங்கள் உறுப்பினர் எண், சேர்க்கை தேதி உள்ளிட்டவையுடன்

4. தொடர்புடைய தலைப்புகள்