1. மேலோட்டப்பார்வை
திருத்துதல் நிலை சேவை, மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும், அவர்கள் சமர்ப்பித்த திருத்துதல் கோரிக்கைகளின் நிலை மற்றும் விவரங்களைக் காண வழிவகுக்கிறது. சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை வகையின் படி திருத்துதல் விவரங்களைக் காண பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு இது உதவுகிறது. பதிவு செய்யப்பட்ட பயனர் பின்வரும் வகையான சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரங்களைக் காணலாம்:
- படிவத்தை மீண்டும் செயல்படுத்துதல்
- பொருந்தாத வரி வரவை திருத்தல்
- 234C வட்டிக்கான கூடுதல் தகவல்
- தகுநிலை (status) திருத்தம் (ITR 5 மற்றும் ITR 7 க்கு AY 2018 – 2019 வரை மட்டுமே பொருந்தும்)
- விலக்கு பிரிவு திருத்தம் (ITR 7 க்கு AY 2018 – 19 வரை மட்டுமே பொருந்தும்)
- வருமானவரி அறிக்கை தரவு திருத்துதல் (ஆஃப்லைன்) XML பதிவேற்றம்
- வருவாய் தகவல் திருத்தல் (ஆன்லைன்)
- DIN குறிப்பிடப்படாமல் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட ஆணை
- ஆவண அடையாள எண் (DIN) குறிப்பிடப்பட்டு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட ஆணை
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
- திருத்துதல் கோரிக்கை ஆன்லைனில் மின்னணு-தாக்கல் முகப்பின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், சேவைகள் > திருத்துதல் கோரிக்கை > திருத்துதல் நிலை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: திருத்துதல் நிலை பக்கத்தில் உள்ள திருத்துதல் குறிப்பு எண்ணைக் கிளிக் செய்து தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் வகையினை (வருமானவரி திருத்துதல் அல்லது சொத்து வரி திருத்துதல்) கொண்டு திருத்துதல் விவரங்களைக் காணலாம்.
படி 4: நீங்கள் திருத்துதல் குறிப்பு எண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அல்லது விவரங்களைப் பார்க்கவும் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பு:
- நீங்கள் நடவடிக்கை எடுக்கவும் என்பதை தேர்ந்தெடுத்தால் - அனைத்து அறிவிப்புகள், தகவல்தொடர்புகள் மற்றும் ஆணைகளுக்கான பதில்களைச் சமர்ப்பிப்பதற்காக நீங்கள் மின்னணு-நடவடிக்கைகள் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
- விவரங்களைக் பார்க்கவும் - என்பதைத் தேர்ந்தெடுத்தால் - திருத்துதல் கோரிக்கை நிலை - சமர்ப்பிக்கப்பட்டது / நிறைவு செய்யப்பட்டது / நிராகரிக்கப்பட்டது / செயல்பாட்டில் உள்ளது / தாமத பிழை பொறுத்தல் கோரிக்கை ஏற்கப்பட்டது / மின்னணு-சமர்ப்பிப்பு வரி மதிப்பீட்டு அதிகாரி (AO) ஆல் மீண்டும் இயக்கப்பட்டது என காட்டப்படும்.