1. மேலோட்ட பார்வை
எனது டீமேட் கணக்கு என்ற சேவையானது செல்லுபடியாகும் PAN மற்றும் செல்லுபடியாகும் டீமேட் கணக்கைக் கொண்ட பதிவுசெய்யப்பட்ட மின்னணு-தாக்கல் பயனர்களுக்கு கிடைக்கிறது. கீழ்கண்டவற்றிற்கு இந்த சேவை உங்களை அனுமதிக்கும்:
- ஒரு டீமேட் கணக்கை சேர்க்கவும்
- தற்போதுள்ள டீமேட் கணக்கை அகற்ற
- EVC ஐ செயல்படுத்த அல்லது முடக்க
- முதன்மை தொடர்பு விவரங்களை டீமேட் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களின்படி மேம்படுத்த
- தோல்வியுற்ற டீமேட் கணக்கை மறு சரிபார்ப்பு செய்யவும்
2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்து, செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல் வைத்திருக்கும் பயனர்
- NSDL அல்லது CDSL இல் பெற்றுள்ள PAN உடன் இணைக்கப்பட்ட செல்லுபடியாகும் டீமேட் கணக்கு
- NSDL வகை வைப்பகமென்றால் நீங்கள் வைப்பு ID மற்றும் வாடிக்கையாளர் ID ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்
- CSDL வகை வைப்பகமென்றால் நீங்கள் ஒரு டீமேட் கணக்கு எண்ணை வைத்திருக்க வேண்டும்
- டீமேட் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையின் மேல் வலது மூலையில் எனது சுயவிவரம் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: எனது சுயவிவரம் பக்கத்தில், டீமேட் கணக்கை கிளிக் செய்யவும்.
டீமேட் கணக்கைச் சேர்க்கும் விருப்பத்தேர்வுடன் ஏற்கனவேசேர்க்கப்பட்ட, தோல்வியடைந்த மற்றும் நீக்கப்பட்ட டீமேட் கணக்குகளின் பட்டியலை நீங்கள் பார்க்க முடியும்.
படி 4: ஒருவேளை நீங்கள் வேண்டினால் -
| டீமேட் கணக்கை சேர்க்கவும் | பிரிவு-4.1-ஐ பார்க்கவும் |
| டீமேட் கணக்கை நீக்கவும் | பிரிவு-4.2-ஐ பார்க்கவும் |
| EVC ஐ செயல்படுத்த அல்லது முடக்க | பிரிவு-4.3-ஐ பார்க்கவும் |
| முதன்மை தொடர்பு விவரங்களை டீமேட் கணக்கு விவரங்களுடன் பொருந்தும் வகையில் மேம்படுத்தவும். | பிரிவு-4.4-ஐ பார்க்கவும் |
| தோல்வியுற்ற டீமேட் கணக்கை மறு சரிபார்ப்பு செய்யவும் | பிரிவு-4.5-ஐ பார்க்கவும் |
4.1 டீமேட் கணக்கை சேர்க்கவும்
படி 1: + டீமேட் கணக்கை சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: வைப்பக வகையை தேர்ந்தெடுத்து தொடர்புடைய விவரங்களை உள்ளிடவும்.
படி 2a: வைப்பக வகையை NSDL என தேர்ந்தெடுத்தால் – பொருத்தமான விவரங்களை உள்ளிடவும் (DP ID, வாடிக்கையாளர் ID மற்றும் தொடர்பு விவரங்கள் - அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID).
படி 2b: வைப்பக வகையை CSDL என தேர்ந்தெடுத்தால் – பொருத்தமான விவரங்களை உள்ளிடவும் (டீமேட் கணக்கு எண் மற்றும் தொடர்பு விவரங்கள் - அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID).
படி 3: சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
டீமேட் கணக்கைச் சேர்ப்பதற்கான கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டவுடன் ஒரு பாப்அப் செய்தி தோன்றும்.
படி 4: மூடவும் என்பதை கிளிக் செய்யவும். டீமேட் கணக்கின் விவரங்கள் சேர்க்கப்பட்ட டீமேட் கணக்குகள் தாவலின் கீழ் காட்டப்படும், மேலும் நீங்கள் புதிதாக சேர்க்கப்பட்ட டீமேட் கணக்கின் நிலை "சரிபார்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" எனக் காண முடியும்.
சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தவுடன், டீமேட் கணக்கின் விவரங்கள் அதன் நிலையான சரிபார்க்கப்பட்டது மற்றும் EVC செயல்படுத்தப்பட்டது ஆகிய தகவல்களோடு சேர்க்கப்பட்ட டீமேட் கணக்குகள் தாவலின் கீழ் காண்பிக்கப்படும். சரிபார்ப்பின் நிலையை நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்புப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் பெறுவீர்கள்.
குறிப்பு:
- ஒரு நேரத்தில் ஒரு டீமேட் கணக்கிற்கு மட்டுமே EVC ஐ செயல்படுத்த முடியும். ஏற்கனவே டீமேட் கணக்குகள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்குமாயின், புதிதாக சேர்க்கப்பட்ட டீமேட் கணக்கின் நிலையானது சரிபார்க்கப்பட்டது என மேம்படுத்தப்படும்.
- ஒருவேளை உங்கள் டீமேட் கணக்கை நீங்கள் சரிபார்க்க இயலவில்லை என்றால், தோல்விக்கான காரணத்துடன் ஒரு செய்தி காண்பிக்கப்படும். மறுசரிபார்ப்பு பட்டனை கிளிக் செய்யவும், அவ்வாறாயின் டீமேட் கணக்குகளை சேர்க்கவும் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள், அங்கு விவரங்களை திருத்தி டீமேட் கணக்கை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
4.2 டீமேட் கணக்குகளை நீக்கவும்
படி 1: சேர்க்கப்பட்ட டீமேட் கணக்குகள் தாவலின் கீழ், நீங்கள் நீக்க விரும்பும் கணக்கின் மீது டீமேட் கணக்கை நீக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: கணக்கை நீக்குவதற்கான ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் காரணத்தை மற்றவை எனத் தேர்ந்தெடுத்தால், தொடர்புடைய காரணத்தை உரைப் பெட்டியில் உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
டீமேட் கணக்கை வெற்றிகரமாக நீக்கியதும் ஒரு பாப்அப் செய்தி தோன்றும், மேலும் அந்த டீமேட் கணக்கு நீக்கப்பட்ட டீமேட் கணக்குகள் தாவலுக்கு நகர்த்தப்படும்.
4.3. EVC ஐ செயல்படுத்தவும் மற்றும் முடக்கவும்
படி 1: நீங்கள் EVC ஐ செயல்படுத்த விரும்பும் கணக்கிற்கு EVC ஐ செயல்படுத்தவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: உறுதிப்படுத்தலுக்கான பாப்அப் செய்தி தோன்றும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட டீமேட் கணக்கிற்கு EVC செயல்படுத்தப்படும்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிற்கான அலைபேசி எண் வைப்பகத்தால் சரிபார்க்கப்படுகிறது
- வேறு எந்த டீமேட் கணக்கிற்கும் EVC செயல்படுத்தப்படவில்லை
குறிப்பு: ஒருவேளை உங்கள் அலைபேசி எண் சரிபார்க்கப்படவில்லை என்றால், நீங்கள் அலைபேசி எண்ணை டீமேட் கணக்குடன் இணைக்க வேண்டியிருக்கும்.
படி 3: ஏற்கனவே ஒரு டீமேட் கணக்கிற்கு EVC செயல்படுத்தப்பட்டிருந்து மேலும் நீங்கள் மற்றொரு டீமேட் கணக்கிற்கு EVC ஐ செயல்படுத்த முயலும்போது, அதைத் தெரிவிக்க ஒரு பாப்அப் செய்தி காண்பிக்கப்படும். EVC ஐ செயல்படுத்த தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: நீங்கள் EVC ஐ முடக்க விரும்பும் கணக்கிற்கு EVC ஐ முடக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: ஒரு உறுதிப்படுத்தும் செய்தி காட்டப்படும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிலிருந்து EVC முடக்கப்படும் மற்றும் அதன் நிலை சரிபார்க்கப்படும்.
4.4. டீமேட் கணக்கு தொடர்பு விவரங்களுடன் பொருந்தும் வகையில் முதன்மை தொடர்பு விவரங்களை மேம்படுத்தவும்
படி 1: உங்கள் டீமேட் கணக்குடன் சரிபார்க்கப்பட்ட உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID மற்றும் முதன்மை தொடர்பு விவரங்கள் வேறுபட்டால், ஒரு ! சரிபார்க்கப்பட்ட அலைபேசி எண் /மின்னஞ்சல் ID இன் அருகில் (எச்சரிக்கை குறியீட்டுடன்) ஒரு செய்தி காண்பிக்கப்படும். அலைபேசி எண் / மின்னஞ்சல் ID ஐ மேம்படுத்த, காண்பிக்கபடும் செய்தியில் உள்ள மிகை இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 2: சேர்க்கப்பட்ட டீமேட் தொடர்பு விவரங்களை ஒத்திசைக்கவும் பக்கத்தில், டீமேட் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID இல் பெறப்பட்ட 6-இலக்க OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் தோன்றும் OTP காலாவதி இறங்குமுகக் கடிகை உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
- உங்கள் அலைபேசி எண்ணை மேம்படுத்தும்போது, டீமேட் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்.
- நீங்கள் உங்கள் மின்னஞ்சல் ID ஐ மேம்படுத்தும்போது, டீமேட் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் ID இல் OTP ஐப் பெறுவீர்கள்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பின், ஒரு பாப்அப் செய்தியானது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் தொடர்பு விவரங்கள் டீமேட் விவரங்களில் உள்ளவாறு வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டவுடன் தோன்றும்.
4.5. தோல்வியுற்ற டீமேட் கணக்கை மறு சரிபார்ப்பு செய்யவும்
படி 1: தோல்வியுற்ற டீமேட் கணக்குகள் தாவலின் கீழ், நீங்கள் சரிபார்க்க விரும்பும் டீமேட் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
படி 2: மீண்டும் சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: முன் நிரப்பப்பட்ட விவரங்களை திருத்தி சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன் ஒரு பாப்அப் செய்தி காண்பிக்கப்படும், மேலும் மீண்டும்-சரிபார்க்கப்பட்ட டீமேட் கணக்கு, சரிபார்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற நிலையுடன் சேர்க்கப்பட்ட டீமேட் கணக்குகள் தாவலுக்கு நகர்த்தப்படும்.