1. மின்னணு-நடவடிக்கைகள் என்றால் என்ன?
மின்னணு-நடவடிக்கைகள் என்பது மின்னணு-தாக்கல் இணைய முகப்பைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்துவதற்கான மின்னணு தளமாகும். இந்த சேவையைப் பயன்படுத்தி, எந்தவொரு பதிவு செய்யப்பட்ட பயனர் (அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி) வருமானவரித் துறை வழங்கிய எந்தவொரு அறிவிப்பு/ அறிவுறுத்தல்/கடிதத்திற்கும் பதிலைக் காணலாம் மற்றும் சமர்ப்பிக்கலாம்.

2. மின்னணு-நடவடிக்கைகளின் நன்மைகள் என்ன?
மின்னணு-நடவடிக்கைகள் என்பது வருமானவரித் துறையால் வழங்கப்பட்ட அனைத்து அறிவிப்புகள்/அறிவுறுத்தல்/ கடிதங்களுக்கும் மின்னணு முறையில் பதிலளிப்பதற்கான எளிய வழியாகும். வருமானவரி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், வரி செலுத்துபவரின் இணக்கச் சுமையை இது குறைக்கிறது. மேலும், எதிர்கால தேவைகளுக்கு சமர்ப்பிப்புகளையும் பதிவுகளையும் பின்தொடர எளிதானதாகும்.

3. எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பிற்குப் பதிலை சமர்ப்பித்த பிறகு அதை என்னால் பார்க்க முடியுமா?
ஆம், நீங்களோ உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ சமர்ப்பித்த பதிலை நீங்கள் பார்க்கலாம்.

4. பிரிவு 143(1)(a) இன் கீழ் எனக்கு வழங்கப்பட்ட சரிசெய்தலுக்கு எதிராக ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று நான் எங்கு பார்க்கலாம்?
வருமானவரித் துறை எழுப்பிய கேள்விகளை மின்னணு-நடவடிக்கைகளின் கீழ் பார்க்கலாம்.

5. பதிலைச் சமர்ப்பி என்ற பட்டன் எனக்கு ஏன் செயல்படவில்லை?
பின்வரும் காரணங்களால் பதிலைச் சமர்ப்பி என்ற பட்டன் செயல்படாமல் இருக்கலாம்
CPC அறிவிப்புகளுக்கு - பதிலளிக்க வேண்டிய தேதி காலாவதியாகிவிட்டால்.
ITBA அறிவிப்புகளுக்கு - வருமானவரி அதிகாரியால் நடவடிக்கைகள் நிலை மூடப்பட்டு/முடக்கப்பட்டு இருந்தால்.

6 மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் அறிவிப்புக்கு பதிலளித்த பிறகு எனது பதிலைத் திருத்த முடியுமா?
இல்லை, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஒருமுறை சமர்ப்பித்த உங்கள் பதிலைத் திருத்த முடியாது.

7. மின்னணு-நடவடிக்கைகளின் கீழ் நான் என்ன அறிவிப்புகளுக்கு பதிலளிக்கலாம்?

வருமானவரித் துறை மற்றும் CPC வழங்கும் அனைத்து அறிவிப்புகள்/அறிவுறுத்தல்கள்/ கடிதங்கள் மின்னணு-நடவடிக்கைகள் என்பதன் கீழ் உள்ளன. இதில் நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவேற்றிய அதே இணைப்புகளுடன் பதிலைச் சமர்ப்பிக்கலாம் பார்க்கலாம். இந்தச் சேவையின் மூலம் பின்வரும் அறிவிப்புகளைப் பார்த்து, அதற்கான பதிலைச் சமர்ப்பிக்கலாம்

  • பிரிவு 139(9) இன் கீழ் குறைபாடுள்ள அறிவிப்பு
  • பிரிவு 143(1)(a) இன் கீழ் முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தல்
  • பிரிவு 154 இன் கீழ் தாமாகவே முன்வந்து திருத்தங்களை செய்தல்
  • வருமானவரி அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவிப்புகள்
  • தெளிவுப்படுத்தக் கோரும் தகவல்தொடர்பு கோரிக்கை

பாதை
முகப்பு பக்கம்/நிலுவையில் உள்ள செயல்/மின்னணு-நடவடிக்கை

 

8. பதிலைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டின் கீழ் இணைப்புகளின் எண்ணிக்கை/அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு இணைப்பின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு 5 MB ஆகும். நீங்கள் பதிவேற்றுவதற்கு 1 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தால், நீங்கள் 10 இணைப்புகள் வரை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து இணைப்புகளும் சேர்ந்து அதிகபட்ச அளவு 50 MB க்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஆவணம் அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட அதிக அளவில் இருந்தால் அந்த கோப்பின் அளவை குறைப்பதன் மூலம் ஆவணத்தின் அளவை நீங்கள் மாற்றலாம்.

9. குறைபாடுள்ள வருமான வரி அறிக்கை என்றால் என்ன?
அட்டவணைகளில் அல்லது வேறு ிசல காரணங்களுக்காக தாக்கலானது விடுபட்டதாகவோ சீரற்ற தகவல்களைக் கொண்டதாகவோ கருதப்பட்டு அந்த தாக்கல் விடுபட்ட தாக்கல் என்று கருதப்படும்.

10. எனது தாக்கல் விடுபட்டுள்ளதா இல்லையா என்று நான் எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் வருமானவரி தாக்கலில் சில விடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டால், வருமானவரிச் சட்டப் பிரிவு 139(9) இன் கீழ் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வருமானவரித் துறை உங்களுக்கு விடுபடுதல் அறிவிப்பு (டிஃபெக்டிவ் நோட்டீஸ்) என்ற மின்னஞ்சலை அனுப்பும். மேலும் இதை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதன் மூலம் பார்க்கலாம்.


11. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிலைச் சமர்ப்பித்த பிறகு, எனது பதிலைப் புதுப்பிக்கலாமா அல்லது திரும்பப் பெறலாமா?
முடியாது. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஒருமுறை சமர்ப்பித்த உங்கள் பதிலைப் புதுப்பிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.

12. எனது விடுபடுதல் அறிவிப்புக்கு பதிலளிக்க மற்றொரு நபரை நான் அங்கீகரிக்க முடியுமா?
முடியும். பிரிவு 139(9) இன் கீழ் விடுபடுதல் அறிவிப்புக்கு பதிலளிக்க மற்றொரு நபரை நீங்கள் அங்கீகரிக்கலாம்.

13. ITR படிவத்தில் உள்ள விடுபடுதலை ஆன்லைனில் சரி செய்ய முடியுமா?
முடியும். ITR படிவத்தில் உள்ள விடுபடுதலை நீங்கள் ஆன்லைனில் சரிசெய்து பதிலைச் சமர்ப்பிக்கலாம்.

14. வருமானவரித் துறை அனுப்பிய விடுபடுதல் அறிவிப்புக்கு எத்தனை நாட்களுக்குள் நான் பதிலளிக்க வேண்டும்?
உங்கள் வருமானவரி தாக்கல் விடுபடுதல்கள் கொண்டவை எனக் கண்டறியப்பட்டால், அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து 15 நாட்கள் அல்லது நீங்கள் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள விடுபடுதல்களை சரிசெய்வதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரம்பு. இருப்பினும், நீங்கள் கால அளவை நீட்டிக்கவோ சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவோ கோரலாம்.

15. விடுபடுதல் அறிவிப்பிற்கு நான் பதிலளிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் விடுபடுதல் அறிவிப்புக்கு பதிலளிக்கத் தவறினால், உங்கள் வருமானம் சட்ட விரோதமானதாக கருதப்படலாம், எனவே வருமானவரிச் சட்டத்துடன் அபராதம், வட்டி, இழப்புகளை அடுத்த ஆண்டுகளுக்கு மாற்ற முடியாமை, குறிப்பிட்ட விலக்குகளிலிருந்து இழப்புகள் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

16. குறைபாடுள்ள வருமானவரி அறிக்கைகள் பற்றி பிரிவு 139(9)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தை நான் புதிய வருமானவரி தாக்கலாக தாக்கல் செய்யலாமா?
செய்யலாம். ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டில் வருமானவரியை தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்ட நேரம் காலாவதியாகாமல் இருந்தால், நீங்கள் புதிய/திருத்தப்பட்ட வருமானவரியாக தாக்கல் செய்யலாம் அல்லது பிரிவு 139 இன் கீழ் அறிவிப்புக்கு பதிலளிக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரியை தாக்கல் செய்வதற்கான நேரம் காலாவதியாகிவிட்டால், உங்களால் புதிய/திருத்தப்பட்ட வருமானவரியாக தாக்கல் செய்ய முடியாது, மேலும் பிரிவு 139(9) இன் கீழ் அறிவிப்புக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அறிவிப்புக்கு உங்களால் பதிலளிக்க முடியாவிட்டால், அந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரி சட்டவிரோதமானதாக கருதப்படும் அல்லது தாக்கல் செய்யப்படாததாக கருதப்படும்.

17. வருமானவரி தாக்கலை விடுபடுதல்கள் கொண்ட தாக்கல் ஆவதற்கான சில பொதுவான தவறுகள என்னென்ன?
வருமானவரியில் விடுபடுதல்களை உருவாக்கும் சில பொதுவான தவறுகள் பின்வருமாறு:

  • TDS-க்கான வரவு கோரப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய ரசீதுகள்/வருமானம் ஆகியவை வரிவிதிப்புக்காக இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செயாது இருத்தல்.
  • படிவம் 26 AS இல் காட்டப்பட்டுள்ள மொத்த ரசீதுகள், TDS-க்கான வரவு கோரப்பட்டுள்ளது, வருமானத் தொகையில் அனைத்து வருமானத் தலைப்புகளின் கீழும் காட்டப்படும் மொத்த ரசீதுகளை விட அதிகமாக இருத்தல்.
  • நிகர மொத்த வருமானம் மற்றும் அனைத்து வருமானத் தலைப்புகளும் இல்லை அல்லது 0 என உள்ளிடப்பட்டு வரிபொறுப்பு கணக்கிடப்பட்டு செலுத்தப்படுதல்
  • ITR இல் வரி செலுத்துவோரின் பெயர் PAN தரவுத்தளத்தின்படி பெயருடன் பொருந்தாமல் இருத்தல்.
  • வரி செலுத்துவோர் வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள் இன் கீழ் வருமானம் உள்ளவர் ஆனால் இருப்புநிலை குறிப்பு மற்றும் இலாபம் மற்றும் நஷ்டக் கணக்கை நிரப்பாமல் விடுதல்.

18. தெளிவுப்படுத்தக் கோரும் தகவல்தொடர்பு கோரிக்கை என்றால் என்ன?
ஒரு அட்டவணை அல்லது வருமான வரி அறிக்கையின் இணைப்புகளின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்றாலோ சரியாக இல்லை என்றாலோ மேலும் வரி செலுத்துவோரால் செய்யப்படும் சில உரிமைகோரல்களுக்கு விளக்கம் தேலைப்படும் சூழல்கள் இருப்பின் வரிசெலுத்துவோருக்கு தெளிவுப்படுத்தல் தககல்தொடர்பு கோரிக்கை அனுப்பப்படும்

19. மின்னணு-நடவடிக்கைகள் சேவையைப் பயன்படுத்தி பதிலைப் பார்க்கவும் சமர்ப்பிக்கவும் நான் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய வேண்டுமா?
ஆம், மின்னணு-நடவடிக்கைகள் சேவையைப் பயன்படுத்தி பதிலைப் பார்க்கவும் சமர்ப்பிக்கவும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் நீங்கள் உள்நுழைய வேண்டும்.

20. அளிக்கப்பட்ட பதில்/சமர்ப்பிப்பை நான் மின்னணு -சரிபார்ப்பு செய்ய வேண்டுமா?
வேண்டாம். உங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை.

21. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையாமல், தெளிவுபடுத்தல் கோரிக்கை அறிவிப்புக்கு நான் பதிலளிக்க முடியுமா?
முடியாது. நீங்கள் தெளிவுபடுத்தல் தொடர்பு கோரிக்கைக்கு பதிலளிக்க உள்நுழைய வேண்டும். நீங்கள் அறிவிப்பைப் பார்க்கவோ அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கான பதிலைச் சமர்ப்பிக்கவோ முடியாது.

22. வருமானவரி அதிகாரி எனக்கு அனுப்பிய அறிவிப்புகளுக்கு என் சார்பாக மின்னணு-நடவடிக்கைகள் சேவையைப் பயன்படுத்தி வேறு யாராவது பதிலளிக்க முடியுமா?
முடியும். மின்னணு-நடவடிக்கைகள் சேவையைப் பயன்படுத்தி அறிவிப்புக்கு உங்கள் சார்பாக பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நீங்கள் சேர்க்கலாம்.

23. ஏற்கெனவே சேர்க்கப்பட்ட/இருக்கின்ற அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நான் அகற்றலாமா?
அகற்றலாம். உங்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை அகற்றலாம் அல்லது திரும்பப் பெறலாம்.

24. எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கு பதிலளிக்க இரண்டு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நான் சேர்க்கலாமா?
முடியாது. நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும்.

25. திருத்தப்பட்ட வருமானவரி படிவத்தை தாக்கல் செய்துள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல் தொடர்பு கோரிக்கைக்கு நான் இன்னனும் பதிலளிக்க வேண்டுமா?
வேண்டாம். அதே மதிப்பீட்டு ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமானவரி படிவத்தை நீங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்தால், பதிலைச் சமர்ப்பிக்க தளம் அனுமதிக்காது. இந்த அறிவிப்பிற்குத் திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை' என்று குறிப்பிடும் ஒரு செய்தி காட்டப்படும்.

26. எனக்கு வழங்கப்பட்ட தெளிவுபடுத்துதல் தகவல்தொடர்பு கோரிக்கைக்கு நான் பதிலளிக்க வேண்டியது அவசியமா? ஆம் எனில், எனது பதிலைச் சமர்ப்பிக்க வேண்டிய கால வரம்பு என்ன?
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தேதியின்படி உங்கள் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும். காலக்கெடு முடிந்துவிட்டது. நான் எந்த பதிலும் வழங்கவில்லை எனில் CPC இருக்கும் தகவலைக் கொண்டு வருமானவரியை செயல்படுத்தும்.