1. நிலுவையில் உள்ள செலுத்தவேண்டிய தொகைக்கு நான் ஏன் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும்?
வருமான வரித்துறை உங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கு (PAN) எதிராக நிலுவையில் உள்ள சில வரித்தொகைகளைக் கண்டறியலாம். கேட்கப்பட்ட தொகை சரியானதா என்பதை உறுதிப்படுத்த, பதிலளிப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் அதற்குப் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் கட்ட வேண்டிய தொகை உறுதி செய்யப்பட்டு உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய தொகை (ஏதேனும் இருந்தால்) அதை கழித்துக் கொண்டு மீதம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் அல்லது உங்கள் PANக்கு எதிராக செலுத்த வேண்டிய தொகையாகக் (உங்களுக்கு வரித்தொகையை திரும்பபெறுதல் இல்லையென்றால்) காட்டப்படும்.
2. என் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கு(PAN) எதிராக நிலுவையில் உள்ள செலுத்தவேண்டிய தொகை இருந்தால் எனக்கு எப்படித் தெரியும்?
மின்னணு-தாக்கல் இணைய முகப்பு மூலம் ஏதேனும் நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகை உள்ளதா என்று நீங்கள் சரிபார்க்கலாம். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்து, நிலுவையில் உள்ள செயல்கள்> நிலுவையில் உள்ள கோரிக்கைக்கான பதில் என்பதைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு நிலுவையில் உள்ள கோரிக்கை பக்கத்திற்கு பதிலளிக்க நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் PANக்கு எதிராக நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகை ஏதேனும் இருந்தால், கடந்த / தற்போதுள்ள ஒவ்வொரு நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையின் தற்போதைய நிலையும் நிலுவையில் உள்ள செலுத்தவேண்டிய தொகை / பதில் எனப் புதுப்பிக்கப்படும். அதன்படி, நீங்கள் இப்போது பணம் செலுத்தவும் / பதிலைச் சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். கூடுதலாக, உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணில் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.
3. நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை நான் ஏற்கவில்லை என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் உடன்படவில்லை (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) என்பதைத் தேர்வு செய்யலாம். நீங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மதிப்புடன் உடன்படாத காரணங்களின் பட்டியலில் இருந்து அதற்கான காரணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டியலில் நீங்கள் தேர்ந்தெடுத்த பின்னர், உங்கள் பதிலை சமர்ப்பிக்கும் முன்னர் ஒவ்வொரு காரணங்களுக்குமான விவரங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகையில் பகுதியளவு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையின் மறுக்கமுடியாத பகுதியளவைச் செலுத்த வேண்டும் (அதவாது நீங்கள் ஒப்புக்கொண்ட தொகை).
4. நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையின் உடன்படாத காரணங்கள் பட்டியலிடப்படவில்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கோரிக்கையுடன் உடன்படவில்லை என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு மற்றவை என்பதை ஒரு காரணமாகத் தேர்ந்தெடுக்கலாம் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ). தேர்வு செய்த பிறகு, உங்கள் காரணத்திற்காக விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட காரணத்தின் கீழ் செலுத்த இயலாத பொருந்தக்கூடிய தொகை ஆகியவற்றை உள்ளிடலாம்.
5. நான் சமர்ப்பித்த கடந்த காலப் பதில்களை நான் எங்கே பார்க்க முடியும்?
நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு, நிலுவையில் உள்ள செயல்கள்> நிலுவையில் உள்ள கோரிக்கைக்கான பதிலைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு நிலுவையில் உள்ள கோரிக்கை பக்கத்திற்கான பதிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். கடந்த கால மற்றும் தற்போதைய நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையின் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு எதிரே உள்ள காண்க என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கனவே குறைந்தது ஒரு பதிலைச் சமர்ப்பித்த தொகைகளுக்கு மட்டுமே காண்க என்ற விருப்பத்தை உங்களால் பார்க்க முடியும்.
6. நிலுவையில் உள்ள கோரிக்கை பக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் காரணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, நான் பின்வரும் செய்தியைப் பெறுகிறேன் - மதிப்பீட்டு ஆண்டிற்கான திருத்தப்பட்ட/சீரமைக்கப்பட்ட வருமானத்திற்கான பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும். சிக்கல் தொடர்ந்தால், உங்கள் திருத்துதல்/ திருத்தப்பட்ட வருமானம் சமர்ப்பிப்புக் கோரிக்கையைச் சமர்ப்பித்த பின்னர் பெற்ற ஒப்புதல் எண்ணைச் சரிபார்க்கவும்.
7. நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய வரித் தொகையை நான் எவ்வாறு செலுத்துவது?
உங்களின் வருமான வரித் தொகையை மின்னணு-தாக்கல் இணைய முகப்பு மூலம் பின்வரும் வழிகளில் செலுத்தலாம்:
- நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில் அந்தந்த வரி கேட்புக் குறிப்பு எண்ணுக்கான (DRN) இப்போது பணம் செலுத்தவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக வரியைச் செலுத்தவும்; அல்லது
- நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகைக்கான பதிலைச் சமர்ப்பிக்கும் போது இப்போது பணம் செலுத்தவும் என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி வரியை முழுமையாகவோ/பாதியாகவோ செலுத்தவும் (ஒருவேளை நீங்கள் நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை ஒப்புக்கொண்டால் அல்லது பகுதியளவு ஒப்புக்கொண்டால்).
8. நான் பணம் செலுத்தக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?
நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பு வழியாக கொடுப்பனவை செலுத்தலாம். நீங்கள் வரியைச் செலுத்த பின்வரும் ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தலாம்:
- இணைய வங்கி; அல்லது
- பற்று அட்டை; அல்லது
- கொடுப்பனவு நுழைவாயில் (அங்கீகரிக்கப்படாத வங்கிகளின் கிரெடிட் அட்டை/டெபிட் அட்டை பயன்படுத்துதல்/அங்கீகரிக்கப்படாத வங்கியின் இணைய வங்கிச்சேவை/UPI பயன்படுத்துதல்)
வரியைச் செலுத்த நீங்கள் பின்வரும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தலாம்:
- NEFT / RTGS (உருவாக்கப்பட்ட கட்டாயப் படிவம் வங்கியில் சமர்ப்பிக்கப்படலாம் அல்லது இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படலாம்); அல்லது
- கவுன்ட்டர் மூலம் செலுத்தவும் (பணம்/காசோலை/வரைவோலை மூலம்)
மேலும் அறிய ஆன்லைனில் பணம் செலுத்துங்கள் மற்றும் ஆஃப்லைனில் பணம் செலுத்துங்கள் ஆகிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
9. இணைக்கப்பட வேண்டிய செலுத்துச் சீட்டின் நகல் இல்லை என்றால் என்ன செய்வது? அதை நான் எங்கே கண்டறிவது?
இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி அல்லது வங்கியின் கிளைக்குச் சென்று உங்களுடைய உரிய வங்கிக் கணக்கில் உங்களது செலுத்துச் சீட்டை நீங்கள் மறுமுறை அச்சிட்டுக்கொள்ளலாம் / உருவாக்கிக்கொள்ளலாம்.