1. திருத்துதல் என்றால் என்ன?
திருத்துதல் என்பது உங்கள் வருமானவரி அறிக்கையில் உள்ள பதிவிலிருந்து வெளிப்படையாகத் தெரியும் தவறைத் திருத்துவதற்கு வருமானவரித் துறையால் உங்களுக்கு வழங்கப்படும் ஒரு விருப்பமாகும். உங்களுக்கு பிரிவு 143(1) இன் கீழ் வருமானவரி மத்திய செயலாக்க மையம் (CPC) வழங்கிய அறிவிப்பில் உங்கள் வரி அறிக்கையில் ஏதேனும் தவறு இருப்பதாகத் தெரிந்தால் அல்லது உங்கள் மதிப்பீட்டு அதிகாரியால் (AO) ஆல் பிரிவு 154 இன் கீழ் உங்களுக்கு அனுப்பப்பட்ட ஆணையில் வெளிப்படையான தவறு இருந்தால் நீங்கள் ஒரு திருத்துதல் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். CPC ஆல் ஏற்கனவே செயலாக்கப்பட்ட அறிக்கைகளுக்கு மட்டுமே திருத்துதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியும்.
2. நான் முன்பு தாக்கல் செய்த திருத்துதல் கோரிக்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அதே கோரிக்கை வகைக்கு மற்றொரு திருத்துதல் கோரிக்கையை நான் சமர்ப்பிக்கலாமா அல்லது தாக்கல் செய்யலாமா?
இல்லை. நீங்கள் ஒரு மதிப்பீட்டு ஆண்டு மற்றும் CPC ஆர்டர் எண்ணுக்கான திருத்துதல் கோரிக்கையை, அதே கலவைக்கான முன்பு தாக்கல் செய்த திருத்துதல் கோரிக்கை முடிவு பெறாமல் சமர்ப்பிக்க முடியாது.
3. நான் சமர்ப்பித்த திருத்துதல் கோரிக்கையை திரும்பப் பெற முடியுமா?
இல்லை. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட திருத்துதல் கோரிக்கையை நீங்கள் திரும்பப் பெற முடியாது. ஒருமுறை சமர்ப்பித்த திருத்துதல் கோரிக்கை, திருத்துதல் ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னரே மூடப்படும்.
4. எனது திருத்துதல் குறிப்பு எண்ணை நான் எங்கே காணலாம்?
உங்கள் திருத்துதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், உங்கள் 15 இலக்க திருத்துதல் குறிப்பு எண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சல் அல்லது செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைந்த பிறகும், திருத்துதல் நிலையின் கீழ் உங்கள் 15 இலக்க திருத்துதல் எண்ணைக் காணலாம்.
5. வரி செலுத்துவோர் காகித முறையில் திருத்துதல் தாக்கல் செய்ய முடியுமா?
இல்லை, மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டு மத்திய செயல்பாட்டு மையம் (CPC) ஆல் செயலாக்கப்பட்ட வருமானவரி அறிக்கைக்கு, திருத்துதல் விண்ணப்பம் மின்னணு முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
6. ஆன்லைன் திருத்துதல் கோரிக்கையை தாக்கல் செய்யும் போது எந்த CPC எண் / ஆணை தேதியை நான் புதிப்பிக்க வேண்டும்?
நீங்கள் CPC இல் இருந்து 143(1) அல்லது 154 பிரிவின் கீழ் பெறப்பட்ட அறிவிப்பின் அல்லது சமீபத்திய ஆணையின் தகவல்தொடர்பு குறிப்பு எண் / ஆணை தேதியை புதிப்பிக்க வேண்டும்.
7. எனது மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி அறிக்கையை CPC ஆல் வரி பாக்கி அல்லது குறைவான பணத்தைத் திரும்பப் பெறுதல் என செயலாக்கப்பட்டால், திருத்துதல் செய்ய நான் யாரை அணுக வேண்டும்?
தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிற்கான உங்கள் வருமானவரி அறிக்கை CPC ஆல் செயலாக்கப்பட்டால், உங்கள் மின்-தாக்கல் கணக்கில் உள்நுழைந்த பிறகு CPC இல் ஆன்லைனில் திருத்துதல் செய்யலாம். திருத்துதல் கோரிக்கை ஏற்கனவே உங்களால் தாக்கல் செய்யப்பட்டு, திருத்துதல் கோரிக்கை வரி மதிப்பீட்டு அதிகாரி (AO)க்கு மாற்றப்பட்டிருந்தால், அதை AO தானே தீர்விற்கு எடுத்துக் கொள்வார். தேவைப்பட்டால், வரி மதிப்பீட்டு அதிகாரி (AO) உங்களிடமிருந்து சில விளக்கங்களையும் பெறலாம். இருப்பினும், உங்கள் திருத்தக் கோரிக்கை கால தாமதமவதாகக் கண்டால், தீர்வுக்கு உங்கள் வரி மதிப்பீட்டு அதிகாரி (AO) ஐத் தொடர்பு கொள்ளலாம்.
8. எனது திருத்துதல் கோரிக்கையின் நிலையை ஆஃப்லைனில் பார்க்க முடியுமா?
இல்லை, நீங்கள் உங்கள் கோரிக்கையின் நிலையை ஆஃப்லைனில் பார்க்க முடியாது. திருத்துதல் நிலையைப் பார்க்க, நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைய வேண்டும்.
9. நாள்பட்ட திருத்துதல் கோரிக்கையினை பிழை பொறுத்து அனுமதிக்கக் கோரிய எனது கோரிக்கையின் நிலையை நான் காண முடியுமா?
வருமானவரித் துறை பிழை பொறுத்தல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், திருத்துதல் கோரிக்கையின் நிலையை திருத்துதல் கோரிக்கையின் நிலை சேவை மூலம் நீங்கள் காண முடியும்.