12A பிரிவின் கீழ் படிவம் 10A-க்கான பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை பயனர் கையேடு

1. மேலோட்டப்பார்வை

வரிசெலுத்துவோர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் படிவம் 10A-ஐ தாக்கல் செய்யத் தவறிய பட்சத்தில், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 10A தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமத்திற்கு மன்னிப்புகோரும் வசதி இதற்கு முன்பு இல்லை. ஆனால் இப்பொழுது, வரிசெலுத்துவோர் பிரிவு 12A-இன் கீழ் படிவம் 10A தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கான மன்னிப்பு கோரிக்கையை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சமர்ப்பிக்க முடியும்.

நிதி (எண். 2) சட்டம், 2024-இன் படி, பிரிவு 12A(1)-இன் உட்பிரிவு (ac)-க்கான நிபந்தனையின் கீழ், படிவம் 10A தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தை முதன்மை ஆணையர் அல்லது ஆணையருக்கு வழங்குவதற்காக, வருமான வரிச் சட்டம், 1961 திருத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயனர் கையேட்டில், தாமத மன்னிப்பு கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான படிப்படியான செயல்முறையைப் பற்றி விவரமாகப் பார்க்கப் போகிறோம். மேலும், அதனுடன் தொடர்புடைய சில அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் விவாதிப்போம்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

• செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்

•படிவம் 10A தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்துவிட்டது.

•தாமதத்திற்கான நியாயமான காரணம்

3. படிநிலை வழிகாட்டி

3.1 பிரிவு 12A-இன் கீழ் படி 10A தாக்கல் செய்வதில் ஏற்படும் பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை மன்னிக்க வேண்டும் கோரிக்கை

தாமதத்தை மன்னிப்பதற்காக, சரியான வரி மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான தாமத மன்னிப்புக் கோரிக்கையை PCIT/CIT(E))க்கு சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.

(படிவம் 10A-க்கான தாமத மன்னிப்புக் கோரிக்கையை ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்; ஆஃப்லைன் முறையில் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை)

படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, உள்நுழையவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3: சேவைகள் > தாமத மன்னிப்புக் கோரிக்கை > சட்டப்பூர்வ படிவங்களுக்கான விண்ணப்பத்திற்குச் செல்லவும்.

Data responsive

படிநிலை 4: +தாமத மன்னிப்புக் கோரிக்கையை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளைப் பார்க்க விரும்பினால், “விவரங்களைக் காண்க” என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: புதிய தாக்கலைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 6:தாமத மன்னிப்பு விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்:

1. வரிசெலுத்துபவரின் விவரங்கள்

2. படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்.

•தாமத மன்னிப்பு கோரப்படும் சட்டப்பிரிவு, படிவத்தின் பெயர், பிரிவின் குறியீடு, வரிமதிப்பீட்டு ஆண்டு மற்றும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்தப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய இறுதித் தேதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

• படிவம் 10A ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதன் ஒப்புகை எண் மற்றும் தாக்கல் செய்த தேதியை உள்ளிடவும்.

• படிவம் 10A தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தை உள்ளிடவும்.

3. இணைப்பு:"படிவம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?" என்ற ஃபீல்டில் 'ஆம்' என்பதைத் தேர்ந்தெடுத்தால், தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10A-இன் PDF வடிவத்தை பதிவேற்றுவது கட்டாயமாகும். மேலும், வேறு ஏதேனும் ஆவணங்களை இணைக்க விரும்பினால், அதற்கான விளக்கத்தைக் குறிப்பிட்டுவிட்டு, 'இதர இணைப்புகள்' என்ற ஃபீல்டில் இணைக்கலாம்.

4. மின்னணு-சரிபார்ப்புச் செய்ய தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்

Data responsiveData responsiveData responsive

படிநிலை 7:மின்னணு-சரிபார்ப்புச் முறையைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 8:மின்னணு-சரிபார்ப்புச் முடிந்ததும், உங்கள் படிவம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்படும். எதிர்காலக் குறிப்புக்காகப் பரிவர்த்தனை ID-யைக் குறித்துக் கொள்ளவும்.

Data responsive