படிவம் 29B பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
படிவம் 29B, வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 115JB-இன் கீழ் உள்ள விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட வரிமதிப்பீட்டு ஆண்டிற்கான கணக்கு லாபத்தை, CA சான்றளித்து வெளிப்படுத்த நிறுவனங்களுக்கு வழிவகை செய்கிறது. இந்தப் படிவம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு முறைகளிலும் தாக்கல் செய்ய முடியும். படிவம் 29B-ஐ, பிரிவு 139(1)-இன் கீழ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவோ அல்லது பிரிவு 142(1)(i)-இன் கீழ் அனுப்பப்பட்ட அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக் கணக்குடன் சேர்த்தோ தாக்கல் செய்ய வேண்டும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- வரி செலுத்துவோரும் CA சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.
- வரி செலுத்துவோர் மற்றும் CA-வின் PAN நிலை செயலில் உள்ளது
- வரி செலுத்துவோர் எனது CA பக்கத்தில் படிவம் 29B-க்கான CA-வை நியமித்திருப்பது அவசியமாகும்
- CA மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்துள்ள டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (DSC) செல்லுபடியாவதாகவும், காலாவதியாகாமலும் இருக்க வேண்டும்.
3. படிவம் குறித்து
3.1 நோக்கம்
அனைத்து நிறுவனங்களும் தங்களது கணக்கு லாபம் வருமான வரிச் சட்டம், 1961-இன் படி கணக்கிடப்பட்டுள்ளதைச் சான்றளிக்க, அங்கீகரிக்கப்பட்ட CA-விடமிருந்து படிவம் 29B-இல் அறிக்கை பெறுவது கட்டாயமாகும்.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
நிறுவனங்கள் ஒரு CA-ஐ நியமிக்க வேண்டும்( எனது CA சேவையைப் பயன்படுத்தி உள்நுழைந்த பின்) அவர் படிவம் 29B-இல் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பார். அதன்பிறகு, பதிவுசெய்யப்பட்ட ஒரு CA -ஐ தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான அந்த கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் மற்றும் (ஏற்றுக்கொள்ளப்பட்டால்) படிவம் 29B-ஐத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
4. படிவம்-ஒரு பார்வை
படிவம் 29B மூன்று பகுதிகளைக் கொண்டது – பகுதி A, பகுதி B / பகுதி C மற்றும் ஒரு தணிக்கை அறிக்கை. இந்தப் படிவத்தின் இணைப்புகள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. இதில் முதல் பகுதி அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்; இரண்டு மற்றும் மூன்றாவது பகுதிகள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே பொருந்தும்.
படிவத்தை நிரப்பத் தொடங்குவதற்கு முன், பதிவுசெய்யப்பட்ட CA-விடம் பகுதி B மற்றும் பகுதி C ஆகியவை பொருந்துமா என்ற கேள்வி கேட்கப்படும்; அதற்கேற்ப, அந்தப் பகுதிகள் நிரப்புவதற்குக் கிடைக்கும்.
4.1 பகுதி A
முதல் பகுதியானது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய கணக்கு லாபத்தின் பொதுவான விவரங்களைக் கொண்டுள்ளது.
4.2 பகுதி B / பகுதி C
பகுதி B, பிரிவு 115JB-இன் துணைப் பிரிவு (2A)-க்கு இணங்க கூட்டப்பட வேண்டிய அல்லது குறைக்கப்பட வேண்டிய தொகையின் விவரங்களைக் கொண்டுள்ளது. பகுதி C, பிரிவு 115JB-இன் துணைப் பிரிவு (2C)-க்கு இணங்க கூட்டப்பட வேண்டிய அல்லது குறைக்கப்பட வேண்டிய தொகையின் விவரங்களைக் கொண்டுள்ளது.
4.3 கணக்காளரின் அறிக்கை
இறுதிப் பகுதி, CA சமர்ப்பிக்க வேண்டிய தணிக்கை அறிக்கையைக் கொண்டிருக்கும்.
5. அணுகல் மற்றும் சமர்ப்பிக்கும் முறை
படிவம் 29B-ஐப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்பவும் சமர்ப்பிக்கவும் முடியும்:
- ஆன்லைன் முறை — மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் வாயிலாக நேரடியாக நிரப்புதல்.
- ஆஃப்லைன் முறை - ஆஃப்லைன் பயன்பாடு வாயிலாக
குறிப்பு: இது குறித்து மேலும் அறிந்துகொள்ள ஆஃப்லைன் பயன்பாடு (சட்டப்படியான படிவங்கள்) பயனர் பட்டியலைப் பார்க்கவும்.
ஆன்லைன் முறையில் படிவம் 29B-ஐப் பதிவு செய்து சமர்ப்பிக்கப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
5.1. வரி செலுத்துவோரால் படிவம் 29B-ஐ தணிக்கையாளருக்கு ஒதுக்குதல்
படிநிலை 1: உங்களுடைய பயனர் ID மற்றும் கடவுசொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகையில் , மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் உள்ள படிவங்களில் இருந்து படிவம் 29B-ஐ தேர்ந்தெடுங்கள் அல்லது தேடுங்கள்.
எனது CA சேவையைப் பயன்படுத்தி ஒரு தணிக்கையாளரை நியமிக்கவும் (நீங்கள் இதுவரை எந்தவொரு CA-வையும் நியமிக்கவில்லை எனில்).
குறிப்பு: மேலும் அறிந்து கொள்ள எனது CA பயனர் மேனுவலைப் பார்க்கவும்.
படிநிலை 4: மதிப்பீட்டு ஆண்டை வழங்கி, எனது CA சேவையைப் பயன்படுத்தி CA-ஐ நியமிக்கவும். ஆதார ஆவணங்களை இணைத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படிவம் CA-யிடம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. பரிவர்த்தனை ID-யுடன் கூடிய உறுதிப்படுத்தல் செய்தி திரையில் காண்பிக்கப்படும். எதிர்காலக் குறிப்புக்காகப் பரிவர்த்தனை ID-யைக் குறித்து வைத்துக் கொள்ளவும்.
5.2. CA-ஆல் படிவம் 29B தாக்கல் செய்தல்
படிநிலை 1: உங்களது பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: உங்கள் முகப்பு பலகை , நிலுவையில் உள்ள செயல்கள் > பணிப் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: படிவம் 29B-ஐத் தாக்கல் செய்வதற்கான கோரிக்கையை ஏற்க ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- நீங்கள் நிராகரிப்பைத் தேர்வு செய்தால், அதற்கான காரணத்தைக் குறிப்பிடலாம்.
- நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்த விவரங்கள், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வரி செலுத்துவோரின் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணிற்கு முறையே மின்னஞ்சல் ID மற்றும் SMS வழியாக அனுப்பப்படும்.
ஏற்றுக்கொண்ட பிறகு, அதை உறுதிப்படுத்துவதற்கான செய்தி திரையில் தோன்றும்.
படிநிலை 4: உங்கள்பணிப்பட்டியலில் படிவத்தைத் தாக்கல் செய்யவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 5: விவரங்களைச் சரிபார்த்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: வழிமுறைகள் பக்கத்தில், தொடங்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 7: படிவம் 29B-இன் பகுதி B மற்றும் C ஆகியவற்றின் பொருந்தக்கூடிய தன்மையை, தொடர்புடைய விருப்பங்களைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில், உங்களுக்குப் பொருந்தக்கூடிய பகுதிகள் மட்டுமே படிவம் எண் 29B பக்கத்தில் தோன்றும்.
படிநிலை 8: பொருந்தக்கூடிய பிரிவுகளான – பகுதி A, பகுதி B / பகுதி C மற்றும் கணக்காளரின் அறிக்கை ஆகியவற்றிற்குத் தேவையான அனைத்துப் புலங்களையும் நிரப்பி, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 9: முன்னோட்டம் பக்கத்தில், மின்னணு சரிபார்ப்புக்குத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 10: உறுதிப்படுத்த ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 11: ஆம் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் மின்னணு சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய, மின்-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு-சரிபார்ப்பிற்குப் பிறகு, பரிவர்த்தனை ID உடன் ஒரு உறுதிப்படுத்தல் செய்தி திரையில் தோன்றும். படிவம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வரி செலுத்துவோர் அதை ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ ஏதுவாக, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
5.3. வரி செலுத்துவோரால் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 29B-ஐ ஏற்றுக்கொள்வது
படிநிலை 1: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்
படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகையில் , நிலுவையிலுள்ள செயல்கள் > பணிப் பட்டியல்
என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: CA பதிவேற்றிய படிவத்தை ஏற்க ஏற்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் / படிவத்தை நிராகரிக்க நிராகரிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நிராகரிப்பதற்கான கருத்துகளை வழங்கவும்.
குறிப்பு:
- நிராகரிக்கும் பட்சத்தில், அதற்கான சரியான காரணத்தைக் குறிப்பிடலாம்.
- நிராகரிக்கப்பட்டவுடன், நிராகரிப்பதற்கான காரணங்களின் விவரங்களுடன், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட CA-இன் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்கு மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.
படிநிலை 5: ஏற்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்தவுடன், பதிவேற்றப்பட்ட படிவத்தைச் சரிபார்க்கக்கூடிய மின்னணு சரிபார்ப்பு பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய, மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு-சரிபார்ப்புக்குப் பிறகு, ஒப்புகை ரசீதுடன் உறுதிசெய்வதற்கான செய்தி திரையில் தோன்றும். உங்கள் படிவம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், பதிவு செய்யப்பட்டுள்ள வரி செலுத்துவோர் மற்றும் CA-வின் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.