படிவம் 15CC பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் பிரிவு 195 மற்றும் 1962-ஆம் ஆண்டு வருமான வரி விதிமுறைகளின் விதி 37BB-இன் படி, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஒருவர், நிறுவனம் அல்லாத வெளிநாடுவாழ் நபர் அல்லது வெளிநாட்டு நிறுவனத்திற்கு பணம் செலுத்தும் போது, அந்தப் பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை படிவம் 15CC-இல் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கை தொடர்புடைய நிதியாண்டின் காலாண்டு முடிந்ததிலிருந்து 15 நாட்களுக்குள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அதிகாரியிடம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

படிவம் 15CC-ஐ ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.


2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

பயனர் முன்தேவைகள்
அறிக்கையிடும் நிறுவனம்
  • மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்துள்ள பயனர்.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்த விவரப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் / முகவர்கள்.
  • ITDREIN உருவாக்கப்பட்டுள்ளது.
  • PAN /TAN செயலில் உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்
  • மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்துள்ள பயனர்.
  • ITDREIN செயலில் உள்ளது மற்றும் செல்லுபடியாக உள்ளது.
  • PAN /TAN செயலில் உள்ளது.
  • செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்
  • உருவாக்கப்பட்ட ITDREIN எண்ணுடன் பொருத்தி இணைக்கப்பட்டுள்ளது.
  • படிவம் 15CC-ஐ தாக்கல் செய்ய ITDREIN கணக்கு கோரிக்கை செயல்படுத்தப்பட்டது.


3. படிவத்தைப் பற்றி

3.1. நோக்கம்

விதி 37BB-இன் படி, நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் படிவம் 15CC மூலம் காலாண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

படிவம் 15CC-ஐ தாக்கல் செய்வதற்கு முன், அறிக்கையிடும் நிறுவனம், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ITDREIN (படிவம் 15CC மற்றும் படிவம் V சமர்ப்பிப்பதற்காக வருமான வரித்துறையால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்) உருவாக்க வேண்டும். ITDREIN வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த ITDREIN எண்ணுடன் தொடர்புடைய படிவம் 15CC-ஐ தாக்கல் செய்வதற்காக, அறிக்கையிடும் நிறுவனம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபரை சேர்க்க வேண்டும்.

3.2. யார் இதைப் பயன்படுத்தலாம்?

ITDREIN எண் வழங்கப்பட்ட பின்னர், அறிக்கையிடும் நிறுவனம் சேர்த்த அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்.

3. படிவம் ஒரு பார்வை

படிவம் 15CC-இல் மூன்று பிரிவுகள் உள்ளன:

  1. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் விவரங்கள்
  2. பணம் பரிமாற்ற விவரங்கள்
  3. சரிபார்ப்பு
Data responsive

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: உங்கள் ITDREIN, பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும் என்பதற்குச் செல்லவும்.

Data responsive

படிநிலை 4: வருமான வரிச் சட்டம், 1961-இன் படியான படிவங்கள் என்ற தாவலின் கீழ் படிவம் 15CC என்பதைத் தேர்ந்தெடுக்கவும் / தேடவும்.
 

Data responsive

படிநிலை 5: தாக்கல் வகை, நிதியாண்டு (F.Y.) மற்றும் காலாண்டை தேர்ந்தெடுத்து, 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 6: தொடங்குவோம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.1.a: தொடங்குவோம்' என்பதைக் கிளிக் செய்தவுடன், படிவம் 15CC காண்பிக்கப்படும். அதில் உள்ள 'அங்கீகரிக்கப்பட்ட முகவர் விவரங்கள்' என்னும் தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.1.b: இது அங்கீகரிக்கப்பட்ட முகவர் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.
விவரங்களைச் சரிபார்த்து, 'சேமி' என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட முகவர் பற்றிய விவரங்கள், 'எனது சுயவிவரம்' பிரிவிலிருந்து தானாகவே நிரப்பப்படும்.

Data responsive

படிநிலை 7.2.a: அங்கீகரிக்கப்பட்ட முகவர் விவரங்கள் தாவலை உறுதிப்படுத்திய பின், 'பணப் பரிமாற்ற விவரங்கள்' தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

 

படிநிலை 7.2.b: இந்தப் பிரிவில், பணம் அனுப்பியவர், பணம் பெறுபவர் மற்றும் பணம் அனுப்பப்பட்ட இடம் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்கலாம்.

அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி, பன்மடங்கு பணப் பரிமாற்ற விவரங்களைப் பதிவேற்ற நீங்கள் ஒரு .csv கோப்பைப் பயன்படுத்தலாம். CSV டெம்பிளேட்டைப் பதிவிறக்க என்பதைக் கிளிக் செய்யவும். .csv கோப்பில் விவரங்களைப் புதுப்பித்த பிறகு, அந்த விவரங்களைப் பதிவேற்ற "CSV கோப்பை இணைக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு, .csv டெம்பிளேட்டைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து, இறுதியாக "சேமி" என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.3.a: பணப் பரிமாற்ற விவரங்கள் டேப்பை உறுதிப்படுத்திய பின், 'சரிபார்ப்பு' தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.3.b: இடத்தை உள்ளிட்டு, 'சேமிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 8: அனைத்து தாவல்களும் இப்போது உறுதி செய்யப்பட்டன. 'முன்னோட்டம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 9: இது படிவத்தின் முன்னோட்டம் ஆகும். முன்னோட்டத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால் மின்னணு சரிபார்ப்பு செய்ய தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்; இல்லையெனில், விவரங்களைத் திருத்தலாம்.

Data responsive

படிநிலை 10: சமர்ப்பிக்க 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 11: 'ஆம்' என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் மின்னணு சரிபார்த்தல் பக்கத்திற்குச் செல்லப்படுவீர்கள். அங்கு டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் மூலம் சரிபார்க்கலாம்.

Data responsive

மின்னணு சரிபார்ப்பு முடிந்த பிறகு, படிவம் 15CC சமர்ப்பிக்கப்படும். ஒரு ஒப்புகை எண் உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

Data responsive

5. தாக்கல் செய்யப்பட்ட படிவத்தை எவ்வாறு காண்பது?

மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க > வருமான வரிச் சட்டம், 1961-இன்படியான படிவங்கள் என்பதற்குச் செல்லவும்.

Data responsive

 தாக்கல் செய்யப்பட்ட படிவம் இங்கே காட்டப்படும்.

Data responsive