படிவம் 189 பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

  • பங்குச் சந்தை அல்லது கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து மூலதனத்தைத் திரட்ட விரும்பும் ஒரு பொதுத்துறை நிறுவனம் அல்லது பொது நிதி நிறுவனம், வருமான வரி விதிகள் 2026-இன் விதி 331-இன் கீழ் படிவம் 189-ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த படிவம் முன்மொழியப்பட்டுள்ள நிதி வெளியீட்டிற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே நிதி திரட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு இணக்கமான தேவையாக இது செயல்படுகிறது.
  • படிவம் 189 உடன், நிறுவனம் பின்வரும் ஆதார ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவை, நிறுவனங்கள் சட்டம், 2013-இன் கீழ் வழங்கப்பட்ட நிறுவனப் பதிவு சான்றிதழ் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான அல்லது நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கான காலம் குறைவாக இருப்பின் அந்தக் காலத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் (இருப்புநிலைக் குறிப்பு மற்றும் இலாபம் மற்றும் நட்டக் கணக்கு) ஆகும்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

  • நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்.
  • வரி செலுத்துபவரின் PAN -இன் நிலை "செயலில்" இருக்க வேண்டும்
  • DSC பயன்முறை மூலம் படிவத்தைச் சரிபார்க்க உங்களிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும். மேலும் அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அத்துடன் அதன் காலாவதி தேதி முடிந்திருக்கக் கூடாது.

3. படிவம் குறித்து

3.1 நோக்கம்

பொதுப் பங்கு வெளியீடு மூலம் மூலதனத்தை திரட்டுவதற்கு வாரியத்திடம் முன்அனுமதி பெறவும், நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட தகுதி மற்றும் இணக்க நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் படிவம் 189 தாக்கல் செய்யப்படுகிறது.

3.2 இதை யார் பயன்படுத்தலாம்?

பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் தொடர்பான தகுதிவாய்ந்த வெளியீட்டின் மூலம் பொதுமக்களிடமிருந்து மூலதனத்தைத் திரட்ட விரும்பும் பொது நிறுவனங்கள் அல்லது பொது நிதி நிறுவனங்கள் இப்படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

3.3 படிவம் ஓர் பார்வை

படிவம் 189 நான்கு பலகைகளைக் கொண்டுள்ளது:

  1. பகுதி A
  2. பகுதி B
  3. பகுதி C
  4. இணைப்புகள்
  5. சரிபார்ப்பு

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: பயனர் அடையாள எண் (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணு தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்க என்பதற்குச் செல்லவும்.

Data responsive

படிநிலை 4: வருமான வரிச் சட்டம், 2025-இன் படி உள்ள படிவங்கள் என்ற தாவலின் கீழ், படிவம் 189-ஐத் தேர்ந்தெடுத்து இப்போது தாக்கல் செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: பொருந்தக்கூடிய வரி ஆண்டைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 6: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்தவுடன், பயனர் பலகை திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர். அங்கு முதல் பலகையான பகுதி A -ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 8: தொடர்புடைய விவரங்களைப் பூர்த்தி செய்து, சரிபார்த்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: "எனது சுயவிவரம்" பகுதியின் கீழ் முகவரி உள்ளிட்ட அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். “எனது சுயவிவரம்” என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் வாயிலாக உங்கள் தகவல்தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம்.

Data responsiveData responsive

வரிசை எண். (vii) வணிகத்தின் தன்மை என்பதன் கீழ், “விவரங்களைச் சேர்” என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு, தொடர “சேர்” என்பதைக் கிளிக் செய்யவும். “துறை மற்றும் துணைத் துறை” புலத்திற்கு கீழ்தோன்று பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விருப்பங்களிலிருந்து பயனர் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Data responsive

படிநிலை 9: முதல் பலகையைச் சேமித்த பிறகு, இரண்டாவது பலகையான பகுதி B-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 10: பகுதி B பலகையின் கீழ் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, அவற்றைச் சரிபார்த்த பின் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வரிசை எண். 3 வங்கியாளர்களின் பெயர் மற்றும் முகவரி என்பதன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

வரிசை எண். 4 தணிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி என்பதன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

வரிசை எண். 3 மற்றும் 4-இன் கீழ் உள்ளிடப்பட்ட விவரங்கள், சேர்க்கப்பட்டவுடன் ஒரு அட்டவணையில் காண்பிக்கப்படும். பயனர் “விவரங்களைச் சேர்” என்ற பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகபட்சம் 50 பதிவுகள் வரை சேர்க்கலாம்.

Data responsive

படிநிலை 11: இரண்டாவது பலகையைச் சேமித்த பிறகு, மூன்றாவது பலகையான பகுதி C-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 12: “பகுதி C” பலகையில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

வரிசை எண். 8-இன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும். மூலதனம் வெளியிடும் முறை மற்றும் வெளியிடப்பட்ட இடம்/தேதியைத் தேர்ந்தெடுக்கவும்' என்ற புலத்தில் கீழ்தோன்றும் பட்டியல் உள்ளது. அதிலிருந்து பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Data responsiveData responsive

வரிசை எண் 10-ன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும். 'வகை' என்ற புலத்திற்காக கீழ்தோன்றும் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது, அதிலிருந்து பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Data responsive

வரிசை எண் 11-இன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும். 'நிதியாண்டு' என்ற புலத்திற்காக கீழ்தோன்றும் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது, அதிலிருந்து பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Data responsive

வரிசை எண் 12-இன் கீழ், 'விவரங்களைச் சேர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான புலங்களைப் பூர்த்தி செய்து, தொடர 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 13: மூன்றாவது பலகையைச் சேமித்த பிறகு, நான்காவது பலகையான இணைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 14: கட்டாயமாக இணைக்க வேண்டிய ஆவணங்களை இணைத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:

இணைப்பு A-2-இல், பயனர் ஏதேனும் கோப்பைப் பதிவேற்றினால், விளக்க உரைப்பெட்டி விவரங்களை உள்ளிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

புலம் எண் 7-இல் பயனர் “ஆம்” என்பதைத் தேர்ந்தெடுத்தால், இணைப்பு A-6 கட்டாயமாகும்.

Data responsiveData responsive

படிநிலை 15: நான்காவது பலகையைச் சேமித்த பிறகு, சரிபார்ப்பு பலகையைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 16: உறுதிமொழியை உறுதிப்படுத்தி, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 17: சரிபார்ப்பு பலகையைச் சேமித்த பிறகு, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 18: முன்னோட்டம் பக்கத்தில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: “பதிவிறக்கவும்” பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் முன்னோட்டம் PDF-ஐ பதிவிறக்கம் செய்து, மின்னணு-சரிபார்ப்பை மேற்கொள்வதற்கு முன் அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Data responsiveData responsive

படிநிலை 19: "மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடரவும்" என்ற பட்டனைக் கிளிக் செய்தவுடன், மின்னணு-சரிபார்ப்பைத் தொடர விரும்புகிறீர்களா என்ற உறுதிப்படுத்துதல் பாப்-அப் திரை தோன்றும். அதில் 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 20: ஆம் என்பதைக் கிளிக் செய்ததும், நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு (பொருந்தக்கூடியவாறு) DSC அல்லது EVC-ஐப் பயன்படுத்தி படிவம் 189-ஐச் சரிபார்க்கலாம்.

குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்பதைப் பற்றிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

Data responsive

படிநிலை 21: வெற்றிகரமாக மின்னணு-சரிபார்ப்பு முடிந்ததும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் ஒரு வெற்றிச் செய்தி திரையில் தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காகப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணைக் குறித்துக் கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணையமுகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்(கள்) ஆகியவற்றிற்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கம் செய்ய, பதிவிறக்கவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிவம் 189-ஐ வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பயனர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைக் காணலாம் - உங்கள் முகப்புப் பக்கத்தில், மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்க > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் > வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் உள்ள தாக்கல் செய்யப்பட்ட படிவத்தைப் பார்க்க தாவலைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: மேலும் விவரங்களை அறிய, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைக் காணவும் என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

6. சொற்களஞ்சியம்

சுருக்கக் குறியீடு/சுருக்கம்

விளக்கம்/முழு வடிவம்

DSC

மின்னணு கையொப்பச் சான்றிதழ்

EVC

மின்னணு சரிபார்ப்புச் சான்றிதழ்

ARN

ஒப்புகை ரசீது எண்

PY

முந்தைய ஆண்டு

FY

நிதியாண்டு

TY

வரியாண்டு