படிவம் 3CA-3CD பயனர் கையேடு
1.மேலோட்டப்பார்வை
வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பொருட்டு, 1984-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் வாயிலாக மதிப்பீட்டு ஆண்டு 1985-86 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பிரிவு 44AB சேர்க்கப்பட்டு, வரித் தணிக்கை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வரி தணிக்கை என்பது, வரி செலுத்துநர் வருமான வரி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் சில உண்மைத் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் சரியான தன்மை குறித்து வரி தணிக்கையாளர் தனது கருத்தைத் தெரிவிப்பதை உள்ளடக்கியதாகும். அனைத்து சலுகைகள், பிடித்தம் செய்தல்கள், இழப்புகள், சரிசெய்தல்கள், விலக்குகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மொத்த வருமானத்தைச் சரியாக மதிப்பீடு செய்வதற்கும், அதற்குரிய வரியை நிர்ணயிப்பதற்கும் இந்தத் தகவல்கள் உதவுகின்றன. வரி தணிக்கை பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படுகிறது:
- வரி செலுத்துபவர் கணக்குப் புத்தகங்களைச் சரியாகப் பராமரிப்பதையும், அதன் துல்லியத்தன்மையையும் உறுதி செய்வதோடு, அதனை CA முறைப்படி சான்றளிப்பதை உறுதி செய்தல்.
- தணிக்கையின் போது CA-வால் கண்டறியப்பட்ட முரண்பாடுகள்/ஒத்திசைவின்மைகள் குறித்து அறிக்கையிடுதல்.
- படிவம் 3CD-இல் குறிப்பிட்டுள்ளவாறு, வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளுக்கு இணங்க, பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை அறிக்கையாக வெளியிடுதல்
இந்தப்படிவம், CA-வால் DSC-யைப் பயன்படுத்திப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பிரிவு 44AB-இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குத் தணிக்கை அறிக்கையை வழங்குதல் மற்றும் அறிக்கையிடும் முறையை விதி 6G வரையறுக்கிறது. இதற்காக 3CA-3CD மற்றும் 3CB-3CD என இரண்டு வகையான படிவங்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வரிசெலுத்துநருக்கு இந்த இரண்டில் ஏதேனும் ஒரு படிவம் மட்டுமே பொருந்தும்.
- ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் தங்களது கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு நபருக்கு படிவம் 3CA-3CD பொருந்தும்.
- மேலே குறிப்பிடப்படாத ஒரு நபருக்கு, அதாவது வேறு எந்தவொரு சட்டத்தின் கீழும் தங்களது கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு நபருக்கு, படிவம் 3CB-3CD பொருந்தும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- வரி செலுத்துபவர் மற்றும் CA ஆகிய இருவரும் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- வரி செலுத்துபவர் மற்றும் CA ஆகிய இருவரின் PAN எண் செயலில் இருக்க வேண்டும்
- வரி செலுத்துபவர் படிவம் 3CA-CD-க்காக CA-வை நியமித்திருக்க வேண்டும்
- CA மற்றும் வரி செலுத்துபவர் ஆகிய இருவரிடமும் செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் உள்ள DSC இருக்க வேண்டும்.
- தனிநபர் வரி செலுத்துபவர் என்றால், வரி செலுத்துபவரின் PAN-ஐ ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும் (பரிந்துரைக்கப்படுகிறது).
3.படிவம் பற்றிய விவரங்கள்
3.1. நோக்கம்
வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பொருட்டு, 1984-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் வாயிலாக மதிப்பீட்டு ஆண்டு 1985-86 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பிரிவு 44AB சேர்க்கப்பட்டு, வரித் தணிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
படிவம் 3CA-3CD என்பது, ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் அல்லது சட்டத்தின்படி தங்களது கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு நபருக்குப் பொருந்தும்
3.2. யார் இதைப் பயன்படுத்தலாம்?
மின்னணு வரித் தாக்கல் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் படிவம் 3CA-3CD-ஐத் தணிக்கை செய்வதற்காக வரி செலுத்துபவரால் நியமிக்கப்பட்டுள்ள CA மட்டுமே இப்படிவத்தை அணுகுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.
4. படிவம்-ஒரு பார்வை
படிவம் 3CA-3CD-ஐ சமர்ப்பிப்பதற்கு முன், அதில் உள்ள 2 பிரிவுகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும். அவை பின்வருமாறு:
- படிவம் எண்.3CA
- படிவம் எண். 3CD
படிவம் 3CA-3CD-இன் பிரிவுகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை இதோ
- படிவம் 3CA மற்றும் படிவம் 3CD ஆகியவற்றிற்குச் செல்வதற்கான முதல் பக்கம்
- வரி செலுத்துபவரின் வணிகம் அல்லது தொழில் சார்ந்த கணக்குத் தணிக்கை விவரங்களைப் படிவம் எண் 3CA பக்கத்தில் CA பதிவு செய்வார். பயனர், படிவம் எண் 3CD-க்குச் செல்வதற்கு முன்னதாக, முதலில் படிவம் எண் 3CA-வில் உள்ள விவரங்களைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.
- படிவம் 3CD-இல், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AB-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய விவரங்களை CA-வால் பதிவு செய்வதற்காக மேலும் 5 பிரிவுகள் உள்ளன. படிவம் 3CD, பகுதி A& பகுதி B என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- படிவம் 3CD-இன் பகுதி A (கூறுகள் 1 முதல் 8 வரை), வரி செலுத்துபவரின் அடிப்படை விவரங்களை CA வழங்க வேண்டும் எனக் கோருகிறது. படிவத்தின் பகுதி A-வைப் பூர்த்திச் செய்து சேமித்த பிறகு மட்டுமே பயனர் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியும்.
- படிவம் 3CD-இன் பகுதி B, கூறுகள் 9 முதல் 44 வரை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துச் கூறுகளின் விவரங்களையும் பூர்த்திச் செய்வது அவசியமாகும்.
5. எவ்வாறு அணுகுவது மற்றும் சமர்ப்பிப்பது
நீங்கள் இப்படிவத்தை CA-வுக்கு ஒதுக்கி, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கலாம். ஆனால், CA இந்த படிவத்தை ஆஃப்லைன் பயன்பாடு வாயிலாக மட்டுமே பூர்த்திச் செய்ய வேண்டும்.
குறிப்பு: மேலும் அறிய சட்டப்பூர்வ படிவங்களுக்கான ஆஃப்லைன் பயன்பாடு பயனர் கையேட்டை பார்க்கவும்.
5.1 CA-வுக்கு படிவத்தை ஒதுக்குதல்
படிநிலை 1 உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு வரித் தாக்கல் இணையதளத்தில் உள்நுழையவும்.
தனிநபர் பயனர்களைப் பொறுத்தவரை, PAN எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், உங்கள் PAN எண் ஆதாருடன் இணைக்கப்படாததால் அது செயலற்றதாக்கப்பட்டுள்ளது' என்ற பாப்-அப் செய்தி திரையில் தோன்றும்.
PAN-ஐ ஆதாருடன் இணைக்க, இப்போது இணைக்கவும் பொத்தானைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகை-இல், மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்ய பக்கத்தில், வருமான வரிச் சட்டம், 1961-இன்படி உள்ள படிவங்கள் என்ற தாவலின் கீழ் உள்ள படிவம் 3CA-3CD என்பதைக் கிளிக் செய்யவும். மாற்று வழியாக படிவத்தை நிரப்புவதற்கு தேடல் பெட்டியில் படிவம் 3CA-3CD என உள்ளிடவும்.
படிநிலை 4: படிவம் 3CA-3CD பக்கத்தில், தாக்கல் வகை மற்றும் மதிப்பீட்டு ஆண்டு (A.Y.) -ஐத் தேர்ந்தெடுத்து, பட்டயக் கணக்காளர்-ஐ நியமித்து, ஏதேனும் துணை ஆவணங்கள் இருந்தால் அவற்றை இணைக்கவும். தொடர தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- நீங்கள் ஏற்கனவே ஒரு CA-வை நியமித்திருந்தால், தாக்கல் செய்யவோ அல்லது ஏற்றுக்கொள்வதற்காகவோ CA-விடம் நிலுவையில் உள்ள படிவம் 3CA-3CD-இன் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
- CA நியமிக்கப்படவில்லை என்றால், நடைமுறையில் உள்ள CA-க்கள் என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே நியமிக்கப்பட்ட CA-களின் பட்டியலில் இருந்து ஒரு CA-வை நியமிக்கலாம்.
- CA-க்கள் எவரும் சேர்க்கப்படவில்லை என்றால், முகப்புப் பலகை > அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்கள் > எனது CA > புதிய CA-வைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்து ஒரு CA-வைச் சேர்க்கலாம்.
படிவம் CA-விடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, பரிவர்த்தனை ID-யுடன் கூடிய வெற்றிகரமான சமர்ப்பிப்புச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID-யைக் குறித்துக் கொள்ளவும்.
5.2 CA-ஆல் படிவம் தாக்கல் செய்யப்படுதல்
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகையில் , நிலுவையிலுள்ள செயல்பாடுகள் > பணிப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும். அங்கு நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
படிநிலை 3: உங்களின் நடவடிக்கைக்காக என்ற தாவலின் கீழ், உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படிவம் 3CA-CD-க்கு எதிரே உள்ள ஏற்றுக்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி செலுத்துவோரின் PAN எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லையெனில், படிவத்தை ஏற்க அல்லது நிராகரிப்பதற்கான பாப்-அப் செய்தி CA-வின் திரையில் காண்பிக்கப்படும். அந்தச் செய்தியில் வரி செலுத்துவோரின் PAN எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாததால் அது செயலற்றதாக்கப்பட்டுள்ளது என்று காண்பிக்கப்படும்.
படிவத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: இந்தச் சேவை கோரிக்கையை நீங்கள் நிராகரிக்க முடிவு செய்தால், அதற்கான சரியான காரணத்தை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
படிநிலை 4: கோரிக்கை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், ஒரு பரிவர்த்தனை ID-யுடன் கூடிய வெற்றிக்கான செய்தி திரையில் தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID-யைக் குறித்துக் கொள்ளவும். படிவத்தைப் பூர்த்திச் செய்ய பணிப்பட்டியலுக்குத் திரும்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: உங்கள் பணிப்பட்டியல்-இல், தாக்கல் செய்ய நிலுவையில் உள்ளது தாவலின் கீழ், நீங்கள் ஏற்றுக்கொண்ட படிவம் 3CA-3CD-க்கு எதிரே உள்ள படிவத்தைத் தாக்கல் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி செலுத்துபவரின் PAN, ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், படிவத்தைத் தாக்கல் செய்யும் / பதிவேற்றும் போது, வரி செலுத்துபவரின் PAN ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்ற நிலையில் உள்ளது என்ற பாப்-அப் செய்தியை CA காண்பார். படிவத்தைத் தாக்கல் செய்ய / பதிவேற்றத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: படிவம் 3CA-3CD பக்கத்தில், தொடர்வதற்காக தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 7: ஆஃப்லைன் பயன்பாட்டுக் கருவியைப் பதிவிறக்கம் செய்து (இது உங்கள் முகப்புப் பக்கத்தில் உள்ள), அந்த கருவியைப் பயன்படுத்திப் படிவத்தைத் தாக்கல் செய்யவும். ஆஃப்லைன் பயன்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட JSON கோப்பை படிவம் 3CA-3CD பக்கத்தில் பதிவேற்றவும். தேவையான துணை ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 8: தனித்துவ அடையாள எண் பக்கத்தில், தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 9: நீங்கள் தொடரவும் என்பதைத் தேர்ந்தெடுத்தால், மின்னணு சரிபார்ப்பு பக்கத்திற்குச் செல்லப்படுவீர்கள். அங்கு, மின்னணு கையொப்பச் சான்றிதழை பயன்படுத்தி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
குறிப்பு: மேலும் அறிய, மின்னணு சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பரிவர்த்தனை ID உடன் வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்காலப் பயன்பாட்டிற்காக பரிவர்த்தனை ID-ஐக் குறித்துக் கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள வரி செலுத்துபவரின் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
5.3. வரி செலுத்துபவரால் சரிபார்த்தல்
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
தனிநபர் பயனர்களைப் பொறுத்தவரை, PAN எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், உங்களது PAN எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாததால் அது செயலற்றதாக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தி உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
PAN-ஐ ஆதாருடன் இணைக்க, இப்போது இணைக்கவும் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 2: உங்கள் முகப்புப் பலகையில் , நிலுவையிலுள்ள செயல்பாடுகள் > பணிப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: உங்கள் பணிப்பட்டியல்-இல், ஏற்றுக்கொள்ள நிலுவையில் உள்ளது என்பதன் கீழ், உங்கள் CA சமர்ப்பித்துள்ள படிவம் 3CA-3CD-க்கு எதிரே உள்ள ஏற்றுக்கொள்ளவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: கோரிக்கையை நிராகரிக்க நீங்கள் தேர்வு செய்தால், சேவை கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தை வழங்க வேண்டும்.
படிநிலை 4: கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்தி சரிபார்க்கக்கூடிய மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய, மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்காலக் குறிப்புக்காக பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிலும் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.