படிவம் 80 பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

தகுதியுள்ள நிறுவனம் ஒன்று, படிவம் எண் 80-இல் பிரிவு 231(1)-இன் கீழ் சரக்குக் கணக்குக் கட்டண வரி முறையைத் தேர்வு செய்ய விண்ணப்பிப்பதன் மூலமோ, அல்லது பிரிவு 231(10)-இன் கீழ் சரக்குக் கட்டண வரி முறையைத் தொடர விண்ணப்பிப்பதன் மூலமோ, இந்த வரி முறையைத் தேர்வு செய்யலாம்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

•  நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்
•  வரி செலுத்துபவரின் PAN-இன் நிலை “செயலில்” என்று இருக்க வேண்டும்.
•  DSC முறையின் மூலம் படிவத்தைச் சரிபார்க்க, உங்களிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும். மேலும், அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகாமல் இருக்க வேண்டும்.

3. படிவம் குறித்து

3.1 நோக்கம்

படிவம் 80-ஐச் தாக்கல் செய்வதன் நோக்கம், தகுதியுள்ள நிறுவனம் ஒன்று சரக்குக் கட்டண வரி முறையைத் தேர்வு செய்யவோ அல்லது ஏற்கனவே உள்ள விருப்பத்தைப் புதுப்பிக்கவோ விண்ணப்பம் செய்வதாகும்.

3.2 இதை யார் பயன்படுத்தலாம்?

படிவம்-80, "சரக்குக் கட்டண வரி முறையைத்" தேர்வு செய்யும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

3.3 படிவம் ஒரு பார்வை

படிவம் 80 ஆறு பலகைகளைக் கொண்டுள்ளது:

  1. விண்ணப்பத்தின் வகை
  2. பகுதி A – விண்ணப்பதாரரின் விவரங்கள்
  3. கப்பல்கள்/உள்நாட்டு வாகன விவரங்கள்
  4. பகுதி B - சரக்குக் கட்டண வரி முறையைத் தொடர்வதற்கான விண்ணப்பத்தின் போது மட்டும் வழங்கப்பட வேண்டிய விவரங்களின் அறிக்கை
  5. இணைப்புகள்
  6. அறிவிப்பு
Data responsive

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணு-தாக்கல்> வருமான வரி படிவங்கள்>வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்யவும் என்பதற்குச் செல்லவும்.

Data responsive

படிநிலை 4: மூன்று தாவல்களில், வருமான வரிச் சட்டம் 2025-இன் படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுத்து, படிவம் 80-ஐத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடவும். பின்னர் இப்போது தாக்கல் செய்யவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: PAN, சமர்ப்பிப்பு முறை, மற்றும் தாக்கல் வகை ஆகியவற்றைச் சரிபார்க்கவும். பின் பொருந்தக்கூடிய வரி ஆண்டைத் (T.Y) தேர்ந்தெடுத்து தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

படிநிலை 6 தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7 - "தொடங்குவோம்", என்பதைக் கிளிக் செய்த பிறகு, பயனர் பலகைத் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். தொடர்வதற்கு, முதலாவது பலகையான "விண்ணப்ப வகையைத்” தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: கீழ்தோன்றும், இந்தப் படிவத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும். சம்பந்தப்பட்ட விவரங்களை நிரப்பி, சரிபார்த்து சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

  1. நீங்கள் சரக்குக் கணக்கு வரி முறையை முதல் முறையாகத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், தயவுசெய்து “விருப்பத் தேர்வைப் பயன்படுத்துதல்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டசரக்குக் கணக்கு வரி முறையைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதாக இருந்தால், தயவுசெய்து “விருப்பத் தேர்வைப் புதுப்பித்தல்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Data responsive

படிநிலை 8 : முதல் பலகையைச் சேமித்த பிறகு, அடுத்த கட்டத்திற்குச் செல்ல இரண்டாவது பலகையான பகுதி A – விண்ணப்பதாரரின் விவரங்கள்: தொடரவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் சம்பந்தப்பட்ட விவரங்களை நிரப்பி, சரிபார்த்து சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:

  1. "என்னுடைய சுயவிவரம்" பிரிவின் கீழ் முகவரி உட்பட அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். "என்னுடைய சுயவிவரம்" என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
  2. வரிசை எண் 3-கீழ் உள்ள கிளை அலுவலகத்தின் முகவரி(கள்) என்பதில், 'விவரங்களைச் சேர்க்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான விவரங்களை நிரப்பி, அடுத்த கட்டத்திற்குச் செல்ல 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.
Data responsive

வரிசை எண் 7 மற்றும் 8-கீழ் உள்ள நிறுவனத்தின் இயக்குநர்களின் பெயர்(கள்) மற்றும் முகவரி(கள்) என்பதில், 'விவரங்களைச் சேர்க்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான விவரங்களை நிரப்பி, அடுத்த கட்டத்திற்குச் செல்ல 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படிநிலை 9: இரண்டாவது பலகையைச் சேமித்த பிறகு, மூன்றாவது பலகையான கப்பல் / உள்நாட்டு நீர்வழி கப்பல் விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

புலம் 11-கீழ் உள்ள “நிறுவனத்திற்குச் சொந்தமான அல்லது நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்கள் அல்லது உள்நாட்டு நீர்வழி கப்பல்களின் விவரங்கள்” என்பதில், தேவையான விவரங்களை நிரப்பி, அடுத்த கட்டத்திற்குச் செல்ல 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:- கப்பல் / உள்நாட்டு நீர்வழிக் கப்பலின் பெயர், நிகர டன் அளவு, கொடி, கப்பல் / உள்நாட்டு நீர்வழிக் கப்பலின் வகை, வாடகை ஒப்பந்தம் தொடங்கிய தேதி, கப்பல் போக்குவரத்து இயக்குனர் உள்நாட்டு நீர்வழிக் கப்பல்கள் பதிவாளரின் அனுமதி குறிப்பு எண் மற்றும் ஒவ்வொன்றின் கீழும் அது தகுதியுடையதா இல்லையா என்பது போன்ற விவரங்களை வழங்கவும்.
 

Data responsiveData responsive

படிநிலை 10: மூன்றாவது பலகையைச் சேமித்த பிறகு, நான்காவது பலகையான பகுதி B - சரக்குக் கணக்கு வரித் திட்டத்தை புதுப்பிக்கும்போது மட்டுமே சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களின் அறிக்கை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான விவரங்களை உள்ளீடு செய்து, சரிபார்த்துவிட்டு, சேமி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இந்தப் பலகையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விருப்பங்கள் குறித்த விவரங்களை வழங்கவும்

குறிப்பு: விண்ணப்பப் பலகையில் உள்ள விண்ணப்பத்தின் வகை என்ற புலத்தில், "விருப்பத் தேர்வைப் புதுப்பித்தல்" என்பதைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, இந்தப் பகுதியை நிரப்ப முடியும்.

Data responsive

படிநிலை 11: நான்காவது பலகையைச் சேமித்த பிறகு, ஐந்தாவது பலகையான இணைப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பலகையில் "இணைப்புகள்" தேவையான ஆவணங்களை இணைத்து, சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 12: ஐந்தாவது பலகையைச் சேமித்த பிறகு, “அறிவிப்பு” பலகையைத் தேர்ந்தெடுக்கவும். அந்தப் பிரகடனத்தை உறுதிசெய்து, சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 13: அறிவிப்பு பலகையைச் சேமித்த பிறகு, அந்தப் பலகையின் நிலை முடிந்தது என்று காட்டப்படும். அதன் பிறகு முன்னோட்டம் பட்டன் செயல்பாட்டுக்கு வரும்.

Data responsive

படிநிலை 14: முன்னோட்டப் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, மின்னணு சரிபார்ப்பிற்குச் செல்லவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: “பதிவிறக்கம்” பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் படிவத்தின் மாதிரியை (PDF) பதிவிறக்கம் செய்து, மின்னணு சரிபார்ப்பிற்குச் செல்வதற்கு முன்பு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Data responsive

படிநிலை 15: மின்னணு சரிபார்ப்பு செய்ய தொடரவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மின்னணு சரிபார்ப்பிற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்கும் உறுதிப்படுத்தல் பாப்-அப் ஒன்று தோன்றும். அதற்கு ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 16: ஆம் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு DSC-ஐப் பயன்படுத்தி மட்டுமே நீங்கள் படிவம் 80-ஐச் சரிபார்க்க முடியும்.

குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும் 

படிநிலை 17: மின்னணு சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் ஒரு வெற்றிச் செய்தி திரையில் தோன்றும். வருங்காலத் தேவைக்காக, அந்தப் பரிவர்த்தனை மற்றும் ஒப்புகை ரசீது எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

ஒப்புகை ரசீதை பதிவிறக்கம் செய்ய பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிவம் 80-ஐ வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, பயனர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை இதன் கீழ் பார்க்கலாம்-முகப்புப் பலகை,மின்னணு-தாக்கல் > வருமானவரி படிவம் தாக்கல் செய்யவும் > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் > வருமான வரிச் சட்டம், 2025 என்பதன் கீழ் உள்ள தாக்கல் செய்யப்பட்ட படிவத்தைப் பார்க்கவும் தாவலைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: நிரப்பப்பட்ட படிவத்தைப் பார்ப்பது எப்படி என்பதை அறிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்

5. தொடர்புடைய தலைப்புகள்

6.சொற்களஞ்சியம்

சுருக்கக் குறியீடு/சுருக்கம் விளக்கம்/முழு வடிவம்
DSC டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்
EVC மின்னணு சரிபார்ப்புச் சான்றிதழ்
ARN ஒப்புகை ரசீது எண்
PY முந்தைய ஆண்டு
FY நிதி ஆண்டு
TY வரி ஆண்டு