படிவம் எண் 1(28/2024) பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
படிவம் எண் 1 என்பது, வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 147-உடன் இணைந்து படிக்கப்படும் பிரிவு 395-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணம் செலுத்தல்களுக்கு TDS பிடித்தம் செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காக, IFSC அலகுகள் (பெறுபவர்கள்) எந்தவொரு செலுத்துபவரிடமும் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை - மற்றும் - உறுதிமொழி ஆகும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
• நீங்கள் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்
• வரி செலுத்துவோரின் PAN நிலை "செயலில்" இருக்க வேண்டும்.
• குறிப்பிட்ட அந்த நிறுவனம் ஒரு செல்லுபடியாகும் IFSC பிரிவாக இருக்க வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் பிரிவு 147-இன் கீழ் வரி விலக்கு பெற தகுதி பெற்றிருக்க வேண்டும்
• படிவத்தைத் தாக்கல் செய்வதற்கு முன், குறிப்பிட்ட அந்தப் பிரிவு இதனை இறுதி செய்ய வேண்டும்: பிரிவு 147-இன் கீழ், தொடர்புடைய வரி ஆண்டிலிருந்து தொடங்கும் பதினைந்து ஆண்டுகளில், ஏதேனும் பத்து தொடர்ச்சியான வரி ஆண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
• DSC முறை வாயிலாக சரிபார்ப்பு செய்யப்படும் பட்சத்தில், வரிவிதிப்பாளர் செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள DSC-ஐக் கொண்டிருக்க வேண்டும்.
3.படிவம் குறித்து
3.1 நோக்கம்
1.பிரிவு 147-இன் கீழ் வரி பிடித்தம் பலனைப் பெறுவதற்கு, IFSC அலகு தேர்ந்தெடுக்கும் அடுத்தடுத்து பத்து வரி ஆண்டுகளைக் குறிப்பிடுவதற்கு.
2.படிவம் எண் 1-ஐ பெற்றவுடன், குறிப்பிட்ட கட்டணங்களுக்கு TDS பிடித்தம் செய்யாமல் இருக்க பணம் செலுத்துபவர்களை அனுமதிப்பதற்கு.
3.2 யார் இதைத் தாக்கல் செய்யலாம்?
பின்வரும் இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்யும் IFSC -இன் ஒரு அலகு, அதாவது பணம் பெறுபவர் , படிவம் எண் 1-ஐ தாக்கல் செய்யலாம்:
- இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட IFSC அலகு ஆகும், இது சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் (GIFT IFSC போன்றவை) இயங்குகிறது, மற்றும்
- இது 15 ஆண்டுகளில் ஏதேனும் 10 அடுத்தடுத்த வரி ஆண்டுகளுக்கு, வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 147-இன் கீழ் வரி விலக்கு கோருவதைத் தேர்ந்தெடுத்துள்ளது
3.3 படிவம் ஒரு பார்வை
படிவம் 1-28-ல் மூன்று தலைப்புகள் உள்ளன.
- IFSC-இன் விளக்கம்
- அறிக்கை மற்றும் உறுதிமொழி
- சான்றளிப்பு
4. படிப்படியான வழிகாட்டி
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணுத்-தாக்கல் இணையமுகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல்
படிநிலை 4: வருமான வரிச் சட்டம் 2025-இன் படியான படிவங்கள் என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதில் படிவம் எண்.1-புதியது என்பதைத் தெரிவு செய்து, பின்னர் இப்பொழுதே தாக்கல் செய்ய வேண்டிய பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: பொருந்தக்கூடிய வரி ஆண்டைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்
படிநிலை 7: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்தவுடன், பயனர் படிவத்திற்குச் சென்று, தகுந்த விவரங்களை உள்ளிட்ட பிறகு, புள்ளிவிவரங்களைச் சேமிக்க வரவைச் சேமி என்பதைக் கிளிக் செய்து, மேல்நடவடிக்கைக்குச் செல்ல முன்னோட்டம் PDF என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- வரிசை எண்: 6-இல் IFSC அலகில் பெயரும் முகவரியும் அடங்கியுள்ளன.
- வரிசை எண்: 7-இல் IFSC எந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி போன்ற பதிவின் விளக்கம் அடங்கியுள்ளன.
- வரிசை எண்: 8-இல் இணைப்புப் பகுதி உள்ளது; இங்கு பயனர், வரிசை எண்: 7-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அதிகார அமைப்பால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் நகலைப் பதிவேற்ற வேண்டும்.


குறிப்பு: "உறுதிமொழிப் படிவத்தில் அறிவிப்பாளரின் விவரங்கள், IFSC பிரிவின் வணிகத் தன்மை மற்றும் "எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை" இந்த வரி விலக்கு பொருந்தும் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன.
குறிப்பு:சான்றளிப்பு பகுதியில் சான்றளிப்பவர்/அறிவிப்பாளரின் விளக்கங்களுடன் இடம், தேதி மற்றும் IP முகவரி ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன.
விவரங்களைச் சேமித்த பிறகு, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 8: விவரங்களை மதிப்பாய்வு செய்து, முன்னோட்டப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கப் பட்டனைக் கிளிக் செய்வதன் வாயிலாக முன்னோட்ட PDF-ஐப் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 9: கிளிக் செய்தவுடன் மின்னணு-சரிபார்ப்பிற்குத் தொடரவும் உறுதிப்படுத்தல் பாப்-அப் ஒன்று தோன்றும். படிவத்தைச் சமர்ப்பிக்க, தொடரவும் என்பதைத் கிளிக் செய்யவும்.
படிநிலை 10: ஆம் என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் மின்னணு சரிபார்ப்பு பக்கத்திற்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் படிவம் 1-புதிய- 28/2024 DSC/EVC ஐப் (பொருந்தும்) பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படிநிலை 11: மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், திரையில் வெற்றிச் செய்தி மற்றும் அதனுடன் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகைச் சீட்டு எண் ஆகியவை காண்பிக்கப்படும். எதிர்காலக் குறிப்புக்காக, இந்தப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகைச் சீட்டு எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணையமுகப்பில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்(களை) உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
படிவம் 1-புதியது-28/2024 வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பயனர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பின்வரும் வழியில் பார்க்கலாம்: உங்கள் முகப்புப் பக்கத்தில், மின்னணு- தாக்கல் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல் > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்த்தல் > வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்த்தல் என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:பூர்த்திச் செய்யப்பட்ட படிவத்தைக் காண்க பயனர் கையேட்டை மேலும் அறியவும்..
5. தொடர்புடைய தலைப்புகள்
6. சொற்களஞ்சியம்
| சுருக்கச்சொல் / சுருக்கம் | விளக்கம் / முழு வடிவம் |
| DSC | டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் |
| EVC | மின்னணு சரிபார்ப்புச் சான்றிதழ் |
| ARN | ஒப்புகை ரசீது எண் |
| PY | முந்தைய ஆண்டு. |
| FY | நிதி ஆண்டு |
| TY | வரி ஆண்டு |