படிவம் 55 பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
- இரட்டை வரி விதிப்பு தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கு இந்திய அதிகார வரம்பு ஆணையத்தின் உதவியை நாட விரும்பும் வரி செலுத்துவோர் படிவம் 55-இல் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வரிச் சிக்கலின் விவரங்களை ஆய்வு செய்யவும் வழங்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்கவும், தேவைப்பட்டால் வெளிநாட்டு அதிகார வரம்பு ஆணையத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் வருமான வரித்துறைக்கு இந்தப் படிவம் வழிவகுக்கிறது.
- படிவம் 55-ஐ மதிப்பீட்டு உத்தரவுகள் வரி கோரும் அறிவிப்புகள் அல்லது வெளிநாட்டு வரி அதிகாரிகளுடனான கடிதப் பரிமாற்றங்கள் போன்ற தொடர்புடைய துணை ஆவணங்களுடன் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதிகார வரம்பு ஆணையம் வழக்கைப் பரிசீலிக்கும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைக் கோரலாம்.
- இந்த செயல்முறையானது, வரி செலுத்துவோர் எதிர்பாராத இரட்டை வரி விதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதையும், எல்லை தாண்டிய வரி சிக்கல்களால் ஏற்படும் சர்ச்சைகள் சர்வதேச வரி ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான பொறிமுறையின் மூலம் தீர்க்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்.
- வரி செலுத்துபவரின் PAN -இன் நிலை "செயலில்" இருக்க வேண்டும்.
- படிவம் 55-ஐ DSC முறையில் சரிபார்க்க உங்களிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும், அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகி இருக்கக்கூடாது.
3. படிவம் குறித்து
3.1 நோக்கம்
படிவம் 55 என்பது பிற நாடுகள் அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் வழங்கப்பட்டுள்ள பரஸ்பர ஒப்பந்த நடைமுறையைக் கோருவதற்கான விண்ணப்பமாகும். (விதி 121-ஐப் பார்க்கவும்).
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு வரி விதிப்புக்குரியவரும், பிற நாடுகள் அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் வழங்கப்பட்டுள்ள பரஸ்பர ஒப்பந்த நடைமுறையைக் கோர விரும்பினால் அவர் படிவம் 55-ஐத் தாக்கல் செய்ய வேண்டும்.
3.3 படிவம் ஒரு பார்வை
படிவம் 55 நான்கு பலகைகளைக் கொண்டுள்ளது:
- பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள்
- பகுதி B: மற்ற விவரங்கள்
- இணைப்பு
- சரிபார்ப்பு
4. படிப்படியான வழிகாட்டி
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணுத்-தாக்கல் இணையமுகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: உங்கள் பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்க என்பதற்குச் செல்லவும்.
படிநிலை 4: வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழான படிவங்கள் தாவலைத் தேர்ந்தெடுத்து, படிவம் 55 என்பதைத் தேர்ந்தெடுத்து, இப்போது தாக்கல் செய்யவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: பொருந்தக்கூடிய வரி ஆண்டை (T.Y) தேர்ந்தெடுத்து, தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6. தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 7: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்த பிறகு, பயனர் பலகை திரைக்கு வழிநடத்தப்படுவார். அங்கு முதல் பலகையான பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 8: விவரங்களைச் சரிபார்த்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: "எனது சுயவிவரம்" பகுதியில் முகவரி உட்பட அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். "எனது சுயவிவரம்" என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தகவல்தொடர்பு மற்றும் முகவரி விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
படிநிலை 9: 1வது பலகையை சேமித்த பிறகு, 2வது பலகையான பகுதி B: பிற விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 10: “பகுதி B: பிற விவரங்கள்” பலகையை நிரப்பி சரிபார்த்து,சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: வரிசை எண். 7-இல், அறிவிப்பு அல்லது உத்தரவு தொடர்புடைய “வரி ஆண்டு(கள்)” என்ற புலத்தில், பயனர் பல தெரிவுப் பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

படிநிலை 11: 2வது பலகையை சேமித்த பிறகு, 3வது பலகையான இணைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 12: தொடர்புடைய ஆவணங்களை இணைத்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: பயனர் புலம் 11-இல் "ஆம் " என்பதைத் தேர்ந்தெடுத்தால் இணைப்பு A-3 கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும்.
படிநிலை 13: 3வது பலகையை சேமித்த பிறகு, “சரிபார்ப்பு” பலகையைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 14: உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 15: 4வது பலகையை சேமித்த பிறகு, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 16: முன்னோட்டம் பக்கத்தில், முன்னோட்டம் PDF-ஐ பதிவிறக்கம் செய்து விவரங்களை சரிபார்க்க “பதிவிறக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, மின்னணு-சரிபார்ப்புக்கு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 17: மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடரவும் என்ற பட்டனைக் கிளிக் செய்த பிறகு, மின்னணு-சரிபார்ப்பு செயல்முறைக்குத் தொடர விரும்புகிறீர்களா என்று உறுதிப்படுத்தும் ஒரு பாப்-அப் செய்தி தோன்றும். அதில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 18: ஆம் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு வழிநடத்தப்படுவீர்கள். அங்கு DSC/EVC (பொருந்துமிடத்து) பயன்படுத்திப் படிவம் 55-ஐ சரிபார்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய, மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படிநிலை 19: மின்னணு சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு வெற்றிச் செய்தி பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் காண்பிக்கப்படும். எதிர்காலப் குறிப்பிற்காக இந்த பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்(கள்)க்கு உறுதிப்படுத்தல் செய்தியும் அனுப்பப்படும்.
ஒப்புகைச் ரசீதைப் பதிவிறக்கம் செய்ய பதிவிறக்கம் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிவம் 55-ஐ வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு பயனர் பூர்த்தி செய்த படிவத்தை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம் - உங்கள் முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் > வருமானவரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும் > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் > என்பதைக் கிளிக் செய்து வருமானவரிச் சட்டம் 2025-இன் கீழ் உள்ள தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: மேலும் அறிய, நிரப்பப்பட்ட படிவத்தைப் பார்க்கவும் என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
5. தொடர்புடைய தலைப்புகள்
6.சொற்களஞ்சியம்
|
சுருக்கம்/சுருக்க விவரம் |
விவரம்/முழு வடிவம் |
|
DSC |
மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
|
EVC |
மின்னணு சரிபார்ப்பு சான்றிதழ் |
|
ARN |
ஒப்புகை ரசீது எண் |
|
PY |
முந்தைய ஆண்டு |
|
FY |
நிதி ஆண்டு |
|
TY |
வரி ஆண்டு |