படிவம் 67 பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

வருமான வரி விதிகள் 1962-இன் விதி 128-இன் படி, இந்தியாவில் குடியுரிமையுள்ள வரி செலுத்துபவர் இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு நாடு அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் செலுத்திய வெளிநாட்டு வரிக்கு கடன் கோரத் தகுதியுடையவர் ஆவார். வரி செலுத்துபவர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் படிவம் 67-இல் தேவையான விவரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே இந்த கடன் அனுமதிக்கப்படும்.
படிவம் 67-ஐ ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இந்தச் சேவையானது பதிவு செய்த பயனர்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பு வழியாகப் படிவம் 67-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய வழிவகுக்கிறது.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

• நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்.
• வரி செலுத்துபவரின் PAN நிலை "செயலில்" இருக்க வேண்டும்.
• வரி செலுத்துபவரின் PAN மற்றும் ஆதார் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.(பரிந்துரை)

3. படிவம் குறித்து

3.1 நோக்கம்

இந்தியாவிற்கு வெளியே ஒரு நாட்டில் வரி பிடித்தம் அல்லது பிற வழிகளில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு வரிக்கான கடன் கோர விரும்பும் இந்தியாவில் குடியுரிமையுள்ள வரி செலுத்துபவர் வருமான வரிச் சட்டம் பிரிவு 139-இன் உட்பிரிவு (1)-இன் கீழ் வருமான வரி அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு முன்பாகவோ அல்லது அன்றோ படிவம் 67-ல் அந்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த ஏதேனும் ஒரு ஆண்டில் கோரப்பட்ட வெளிநாட்டு வரி கடனின் விளைவாக நடப்பு ஆண்டின் இழப்பைப் பின்னோக்கி எடுத்துச் செல்வது வெளிநாட்டு வரியைத் திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்தால் அந்தச் சூழலிலும் படிவம் 67-ஐச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

3.2 யார் இதைப் பயன்படுத்தலாம்?

இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு நாட்டில் வரி பிடித்தம் செய்யப்பட்டதாகவோ அல்லது வேறு விதமாகவோ செலுத்தப்பட்ட வெளிநாட்டு வரிக்கான வரிச்சலுகை பெறும் குடியுரிமையுள்ள வரி செலுத்துபவர்.

3.3 படிவம் ஒரு பார்வை

படிவம் 67 4 பகுதிகளைக் கொண்டுள்ளது:
1. பகுதி A
2. பகுதி B
3. சரிபார்ப்பு
4. இணைப்புகள்

Data responsive

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணுத் தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல் பகுதிக்குச் செல்லவும்.

Data responsive

படிநிலை 4: வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் உள்ள படிவங்கள் தாவலுக்குச் சென்று, படிவம் 67-ஐத் தேர்ந்தெடுக்கவும் அல்லது கண்டுபிடிக்கவும்.

Data responsive

படிநிலை 5: மதிப்பீட்டு ஆண்டைத் (AY) தேர்ந்தெடுத்து தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்

Data responsive

படிநிலை 6: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.1.a: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்ததும் படிவம் 67 திரையில் தோன்றும். அதில் உள்ள "பகுதி A"-ஐக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 8.1.b: இந்தப் பகுதி, வரி செலுத்துபவரின் அடிப்படை விளக்கங்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு நாடு அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஈட்டிய வருமானம் மற்றும் வெளிநாட்டு வரி வரவு குறித்த விளக்கங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பு: தகவல் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்க, 'எனது சுயவிவரம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: நீங்கள் வருமான விவரங்களை 'விவரங்களைச் சேர்க்கவும்' பட்டனைப் பயன்படுத்தி நேரடியாக உள்ளீடு செய்யலாம். ஒருவேளை உங்களிடம் 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்தால், அதே பக்கத்தில் உள்ள CSV டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை நிரப்பி, 'CSV கோப்பை இணைக்கவும்' விருப்பத்தைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, CSV டெம்ப்ளேட்டை நிரப்புவதற்கான வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து பார்க்கவும். பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.2.a: பகுதி A தாவல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இப்போது பகுதி B தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.2.b: இந்தப் பகுதி வெளிநாட்டு வரி தொடர்பான 2 கேள்விகளைக் கொண்டுள்ளது.
விவரங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.3.a: பகுதி B தாவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இப்போது சான்றளிப்பு தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.3.b: விளக்கங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.4.a: சரிபார்ப்பு தாவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இப்போது இணைப்புகள் என்னும் தாவலைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7.4.b: இதில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு வரி பற்றிய விளக்கங்கள் உள்ளன.

குறிப்பு: இப்பகுதியில் வரி செலுத்துபவர் வெளிநாட்டு வரி செலுத்தியதற்கான அல்லது வரி பிடித்தம் செய்ததற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். பன்மடங்கு கோப்புகள் இருந்தால் அவற்றை ஒரு zip கோப்பாக உருவாக்கி இணைக்க வேண்டும். தேவையான கோப்புகளை இணைத்த பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 8: அனைத்துத் தாவல்களும் உறுதி செய்யப்பட்டன. முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 9: இது படிவத்தின் முன்னோட்டம் ஆகும். முன்னோட்டத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால், மின்னணு சரிபார்ப்பிற்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும் இல்லையெனில் நீங்கள் விளக்கங்களைத் திருத்திக் கொள்ளலாம்.

Data responsive

படிநிலை 10: சரிபார்ப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் படிவத்தை மின்னணு-சரிபார்ப்பு செய்யலாம்.

மின்னணு சரிபார்ப்பிற்குப் பிறகு, படிவம் 67 சமர்ப்பிக்கப்படும். ஒப்புகை எண் உருவாக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்குத் தெரிவிக்கப்படும்.

Data responsive

5. தாக்கல் செய்யப்பட்ட படிவத்தை எவ்வாறு காண்பது?

மின்னணு தாக்கல் பகுதிக்குச் செல்லவும் > வருமானவரிப் படிவங்கள் > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் > வருமான வரிச் சட்டம் 1961-இன் படி உள்ள படிவங்கள்.