படிவம் I SWF பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 92(2)(k)-இல் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடுகள், அதாவது கடன், பங்குகள் அல்லது அலகுகள் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் ஈவுத்தொகை, வட்டி மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு 100% வரி விலக்கு பெறுவதற்காக, ஒரு இறையாண்மை செல்வ நிதியம் படிவம் I SWF-ஐத் தாக்கல் செய்கிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- வரி செலுத்துபவர் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- வரி செலுத்துபவர் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் 2.0 சரியான பயனர் பெயர் (PAN) மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டுள்ளார்.
- PAN தரவுத்தளத்தின்படி, வரி செலுத்துபரின் PAN நிலை "செயலில் உள்ளது"
- DSC முறையில் படிவத்தைச் சரிபார்க்க, வரி செலுத்துபவர் செல்லுபடியாகும் DSC-ஐக் கொண்டிருக்க வேண்டும். அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகி இருக்கக்கூடாது.
3.படிவம் குறித்த விவரங்கள்
3.1 நோக்கம்
இந்த படிவத்தைத் தாக்கல் செய்வதன் முக்கிய நோக்கம், வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 92(2)(k)-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஈவுத்தொகை, வட்டி, மற்றும் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நபரால் கடன், பங்கு மூலதனம் அல்லது அலகுகள் வடிவில் செய்யப்படும் முதலீடுகளிலிருந்து ஈட்டப்படும் மூலதன ஆதாயங்களுக்கு 100% வரி விலக்கு பெறுவதாகும்.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
வருமான வரிச் சட்டம் 2025-இன் அட்டவணை V [அட்டவணை: வ.எண் 7, குறிப்பு 5(a)(ii)(G)]-இன்படி, படிவம் I SWF ஆனது ஒரு இறையாண்மை செல்வ நிதியத்தால் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அமைப்பானது, மத்திய அரசால் இதற்கென அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.
3.3 படிவம் ஒரு பார்வை
படிவம் I SWF நான்கு பலகைகளைக் கொண்டது:
- பகுதி A - இறையாண்மை செல்வ நிதியம் குறித்த விவரங்கள்:
- பகுதி B – நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்
- இணைப்புகள்
- சரிபார்ப்பு
4. படிப்படியான வழிகாட்டி
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: மின்னணு-தாக்கல் >வருமானவரிப் படிவங்கள்> வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும்.
படிநிலை 4: மூன்று தாவல்களில், வருமான வரி சட்டம் 2025-இன்படி உள்ள படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் படிவம் I SWF-ஐத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடவும். அதன் பிறகு இப்போது தாக்கல் செய்யவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: PAN சமர்ப்பிக்கும் முறை, தாக்கல் செய்யும் வகை ஆகியவற்றைச் சரிபார்த்து, பொருந்தக்கூடிய வரி ஆண்டைத் (T.Y) தேர்ந்தெடுத்து, தொடரவும் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: தொடங்குவோம் என்பதை கிளிக் செய்யவும்
படிநிலை 7: "தொடங்குவோம்" என்பதைக் கிளிக் செய்தவுடன், பயனர் திரைபலகைக்கு அழைத்துச் செல்லப்படுவார். தொடர்வதற்கு, முதல் பலகையைத் தேர்ந்தெடுக்கவும்: பகுதி A - இறையாண்மை செல்வ நிதியத்தின் விளக்கம். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, சரிபார்த்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: "எனது சுயவிவரம்" பிரிவின் கீழ் முகவரி உட்பட அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். "எனது சுயவிவரம்" என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

படிநிலை 8: முதல் பலகையைச் சேமித்த பிறகு, இரண்டாவது பலகையைத் தேர்ந்தெடுக்கவும்:பகுதி B – சான்றிதழ்.
தயவுசெய்து தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 9: 2வது பலகையைச் சேமித்த பிறகு, 3வது பலகையான இணைப்புகள்-ஐத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பலகையில் இணைப்புகள் பகுதியில் தொடர்புடைய ஆவணங்களை இணைத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 10: மூன்றாவது பலகையைச் சேமித்த பிறகு, "சரிபார்ப்பு" பலகையைத் தேர்ந்தெடுக்கவும். அந்தச் சரிபார்ப்புப் பக்கத்தை உறுதிசெய்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 11: சரிபார்ப்பு பலகையைச் சேமித்த பிறகு, அந்தப் பலகையின் நிலை முடிவடைந்தது எனக் காட்டப்படும். அதன் பின்னர் முன்னோட்டம் பொத்தான் செயல்படுத்தப்படும்.
படிநிலை 12: முன்னோட்டப் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: "பதிவிறக்கம்" பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் மின்னணுச் சரிபார்ப்பிற்கு செல்வதற்கு முன்பு முன்னோட்டத்தை PDF கோப்பாகப் பதிவிறக்கம் செய்து விவரங்களைச் சரிபார்க்கலாம்.
படிநிலை 13: மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மின்னணு-சரிபார்ப்பிற்கு செல்ல விரும்புகிறீர்களா என்பதைக் கேட்கும் உறுதிப்படுத்துதல் பாப்-அப் ஒன்று தோன்றும். அதில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 14: ஆம் என்பதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் மின்னணு-சரிபார்ப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு நீங்கள் DSC/EVC மூலம் படிவம் I SWF-ஐ சரிபார்க்கலாம்.
குறிப்பு: மேலும் தெரிந்துகொள்ள மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படிநிலை 15: வெற்றிகரமாக மின்னணு-சரிபார்ப்பு செய்த பிறகு, ஒரு வெற்றிச் செய்தி காட்டப்படும். அதனுடன் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவையும் வழங்கப்படும். எதிர்காலத் தேவைக்காக, அந்தப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்களுக்கு உறுதிப்படுத்தல் செய்தி ஒன்றும் அனுப்பி வைக்கப்படும்.
பதிவிறக்கப் பட்டனைக் கிளிக் செய்து, ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கவும்.
குறிப்பு:
- உங்கள் முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் > வருமானவரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும் > நிரப்பப்பட்ட படிவங்களைக் காண்க > என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வருமானவரி சட்டம் 2025-இன் கீழ் உள்ள நிரப்பப்பட்ட படிவங்களைக் காண்க எனும் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேலும் அறிய, நிரப்பப்பட்ட படிவங்களைக் காண்பதற்காகப் பயனர் கையேட்டைப் பார்க்கவும்:
5. தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- முகப்புப் பலகை
- மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி
- வருமான வரிப் படிவங்கள் (பதிவேற்றம்)
- DSC-ஐப் பதிவு செய்யவும்
6.சொற்களஞ்சியம்
| சுருக்கக் குறியீடு/சுருக்கம் | விளக்கம்/முழு வடிவம் |
|---|---|
| DSC | டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் |
| EVC | மின்னணு சான்றளிப்பு சான்றிதழ் |
| ARN | ஒப்புகை ரசீது எண் |
| PY | முந்தைய ஆண்டு |
| FY | நிதி ஆண்டு |
| TY | வரி ஆண்டு |