Know Your AO
1. வரி மதிப்பீட்டு அலுவலர்(AO) என்பவர் யார்?
வரி மதிப்பிட்டு அலுவலர் (AO) என்பவர் வருமானவரித் துறையின் ஒரு அலுவலர் ஆவார், அவர் தனது அதிகார வரம்பில் வரி செலுத்துவோரால் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி அறிக்கையின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கு பொறுப்பானவர்.
2. எனது AO ஐ நான் எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்?
நீங்கள் தாக்கல் செய்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், உங்கள் AO ஐத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒரு பொது விதியாக, அனைத்து வரி செலுத்துவோரின் சேவைகளையும் முகமற்ற முறையில், ஆன்லைனில் வழங்க ITD முயற்சிக்கிறது. இருப்பினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், உங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட AO ஐ அணுகுமாறு ITD உங்களை கோரலாம்.
3. உங்கள் வரி மதிப்பீட்டு அலுவலரை (AO) தெரிந்து கொள்ளுங்கள் என்ற சேவையைப் பெறுவதற்கு மின்னணு-தாக்கல் இணையமுகப்பில் பதிவுசெய்யப்பட்ட எனது அலைபேசி எண்ணை நான் பயன்படுத்த வேண்டுமா?
இந்த சேவையைப் பெறுவதற்கு நீங்கள் எந்த செல்லுபடியாகும் அலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம்.
4. நான் வேறு நகரம்/மாநிலத்திற்குச் சென்றுவிட்டேன், எனது AO ஐ மாற்ற வேண்டுமா?
ஆம், உங்கள் நிரந்தர முகவரி அல்லது குடியிருப்பு முகவரியை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றும்போது, உங்கள் PAN ஐ புதிய AOக்கு மாற்ற வேண்டியது அவசியம். வரி செலுத்துவோருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்க வருமானவரித் துறை முயற்சித்தாலும், அரிதான சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் AO ஐ தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். எனவே, உங்கள் PAN ஐ முறையான அதிகார வரம்புக்குட்பட்ட AOக்கு மாற்ற வேண்டியது அவசியம், அப்போதுதான் தேவை ஏற்படும்போது நீங்கள் அவரை எளிதாக அணுகலாம்.
5. வருமான வரி வார்டு/வட்டம் என்றால் என்ன?
வருமானவரி தொடர்பான சேவைகள்/பணியைத் திறம்பட நிர்வகிக்க, வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பின் அடிப்படையில் நாடு முழுவதும் பல பகுதிகள் (வார்டுகள்)/வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டு/வட்டத்திற்கும் ஒரு அதிகார வரம்பு AO உள்ளார், அது DCIT/ACIT அல்லது ITO ஆக இருப்பார்.
6. எனது PAN எண்ணை புதிய AOக்கு மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் PAN ஐ உங்கள் தற்போதைய அதிகார வரம்பிற்குட்பட்ட AOக்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். உள்ளடக்கிய செயல்முறை:
- உங்கள் தற்போதைய AOவிற்கு முகவரி மாற்றத்திற்கான காரணத்தைக் குறிப்பிட்டு ஒரு விண்ணப்பத்தை எழுதவும்.
- புதிய AOவிடம் ஒரு விண்ணப்பத்தை எழுதி, மாற்றத்திற்காக தற்போதுள்ள AOவிடம் விண்ணப்பிக்குமாறு கோரவும்.
- தற்போதைய AO இந்த விண்ணப்பத்தை ஏற்க வேண்டும்.
- ஒப்புதல் அளித்தவுடன், விண்ணப்பம் வருமான வரித்துறை ஆணையருக்கு அனுப்பப்படுகிறது.
- ஆணையரின் ஒப்புதலுக்குப் பிறகு, AO மாற்றப்படுகிறது.
உங்கள் புதிய முகவரியின் அடிப்படையில் உங்கள் PAN ஐ புதிய AOக்கு மாற்றுவதற்கு உங்கள் தற்போதைய AOவிடம் நீங்கள் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்க வேண்டும்.
7. எனது PAN புதிய AOக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?
உங்கள் PANக்கான அதிகார வரம்பிற்குட்பட்ட AO இன் தற்போதைய நிலையை மின்னணு தாக்கல் இணையமுகப்பு > உங்கள் மதிப்பீட்டு அலுவலரை (AO) தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் சரிபார்க்கலாம். இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் பதிவு செய்யவோ அல்லது உள்நுழையவோ தேவையில்லை.