எனது வங்கிக் கணக்கு பயனர் கையேடு

1. மேலோட்டப்பார்வை

எனது வங்கிக் கணக்கு சேவை, மின்னனு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவு செய்த பின், செல்லுபடியாகும் PAN மற்றும் செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு கொண்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கும் கிடைக்கிறது. இந்தச் சேவை பின்வரும் வசதிகளை கொடுக்கிறது:

  • வங்கிக் கணக்கைச் சேர்த்து, அதை முன்கூட்டியே சரிபார்க்கவும்
  • மூடப்பட்ட அல்லது செயலிழந்த வங்கிக் கணக்கை அகற்றவும்
  • வருமான வரித் திரும்பப் பெறுவதற்கும் இணைய வங்கிசேவை உள்நுழைய செய்வதற்கும் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும்.
  • அந்த வங்கிக் கணக்கில் கட்டிய வருமானவரியை திரும்பப் பெறப்படாத வகையில், அந்த வங்கிக் கணக்கை பரிந்துரையிலிருந்து நீக்கவும்.
  • சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கான EVC ஐ இயக்கவும் அல்லது முடக்கவும் (தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு மட்டும், மின்னனு- தாக்கல் செய்யும் வசதி கொண்டுள்ள வங்கிகளுக்கு மட்டுமே)
  • முன் சரிபார்ப்பு தோல்வியுற்ற வங்கிக் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவும்

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

  • செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னனு தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனர்
  • முன் சரிபார்க்கப்பட வேண்டிய வங்கிக் கணக்குடன் PAN இணைக்கப்பட்டிருக்க வேண்டும்

 

சேவை முன்நிபந்தனைகள்
வங்கி கணக்கைச் சேர்த்து, சரிபார்க்கவும்

1. கணக்கு PAN உடன் இணைக்கப்பட வேண்டும்
2. பயனரிடம் செல்லுபடியாகும் IFSC மற்றும் கணக்கு எண் இருக்க வேண்டும்
3. ஏதேனும் ஒரு சரிபார்ப்பு முறைக்கான அணுகல்*:

  • OTP-க்கான ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
  • வங்கி கணக்கு / டிமேட் கணக்கு வாயிலாக EVC
  • இணைய வங்கிசேவை வாயிலாக
  • செல்லுபடியாகும் DSC

குறிப்பு*: பயனர் உள்நுழைவு செய்யும் முறையின் அடிப்படையில் சரிபார்ப்பு விருப்பங்கள் கிடைக்கின்றன

வங்கி கணக்கை அகற்று

1. ஏதேனும் ஒரு சரிபார்ப்பு முறைக்கான அணுகல்*:

  • OTP-க்கான ஆதார் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்
  • வங்கி கணக்கு / டிமேட் கணக்கு வாயிலாக EVC
  • இணைய வங்கி சேவை வாயிலாக
  • செல்லுபடியாகும் DSC

குறிப்பு*: பயனர் உள்நுழைவு வகையின் அடிப்படையில் சரிபார்ப்பு விருப்பங்கள் கிடைக்கின்றன

ஒரு வங்கிக் கணக்கைப் பரிந்துரைக்கவும் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான பரிந்துரையிலிருந்து வங்கிக் கணக்கை அகற்றவும்

1. சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு
2. கணக்கு வகை சேமிப்புக் கணக்கு / நடப்புக் கணக்கு / ரொக்கக் கடன் / மிகைப்பற்று / குடியுரிமையற்ற சாதாரணக் கணக்கு (NRO) ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.

  EVC ஐ இயக்கு

1. மின்னணு-தாக்கல் இணைக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றில் கணக்கு
2. முதன்மை அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID-உடன் ஒன்றாக இருக்க வேண்டும்

 

3. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
 

Data responsive

படிநிலை 2:இணைய முகப்பிலிருந்துஎனது சுயவிவரம்பக்கத்திற்குச் செல்லவும்.
 

Data responsive

படிநிலை 3: எனது வங்கிக் கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

Data responsive

எனது வங்கிக் கணக்குகள்  பக்கத்தில், சேர்த்தது, தோல்வியுற்றது மற்றும்  அகற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் தாவல்களில் காண்பிக்கப்படும்.
 

Data responsive

எனது வங்கிக் கணக்கு சேவையின் கீழ் உள்ள பல்வேறு வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய, பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

வங்கிக் கணக்கைச் சேர்த்து, முன்-சரிபார்க்கவும் பிரிவு 3.1க்குச் செல்க
வங்கி கணக்கை அகற்று  பிரிவு 3.2க்குச் செல்க
பணம் திரும்பப் பெறுவதற்காக ஒரு வங்கிக் கணக்கைப் பரிந்துரைக்கவும் அல்லது பரிந்துரையிலிருந்து வங்கிக் கணக்கை நீக்கவும் பிரிவு 3.3க்குச் செல்க
EVC- ஐ இயக்கு மற்றும் முடக்கு பிரிவு 3.4க்குச் செல்க
வங்கி கணக்கை மீண்டும் சரிபார்க்கவும் பிரிவு 3.5க்குச் செல்க
இணைய வங்கி வாயிலாக உள்நுழைய வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும் பிரிவு 3.6க்குச் செல்க

 

3.1 ஒரு வங்கிக் கணக்கைச் சேர்த்து, முன்கூட்டியே சரிபார்க்கவும்
 

PAN / ஆதார் மூலம் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதன் மூலம்  

படிநிலை 1: எனது வங்கி கணக்குகள் பக்கத்தில், வங்கி கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 2: வங்கி கணக்கைச் சேர் பக்கத்தில், வங்கி கணக்கு எண்ணை, உள்ளிட்டு கணக்கு வகை மற்றும் வைத்திருப்பவர் வகை என்பதைத் தேர்ந்தெடுத்து IFSC ஐ உள்ளிடவும். IFSC குறியீட்டின் அடிப்படையில் வங்கியின் பெயர் மற்றும் கிளை விவரங்கள் தானாகவே நிரப்பப்படும். உங்கள் வங்கி மின்னணு-தாக்கல் உடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், உங்கள் அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் ID-யும் உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்திலிருந்து முன்பே நிரப்பப்படும், மேலும் திருத்தம் செய்ய முடியாது.

Data responsive

படிநிலை 3:மின்னணு சரிபார்ப்புக்குச் செல்லவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

மின்னணு சரிபார்ப்பு என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.

Data responsive

சரிபார்ப்புக் கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், ஒரு வெற்றிச் செய்தி திரையில் காட்டப்படும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் நீங்கள் பதிவு செய்துள்ள உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.

Data responsive

 

Data responsive

3.2 வங்கிக் கணக்கை நீக்கவும்

படிநிலை 1: நீங்கள் நீக்க விரும்பும் வங்கி கணக்கிற்குநேராக செயல் நெடுவரிசையின் கீழ் உள்ள வங்கி கணக்கை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

 

Data responsive

படிநிலை 2: வங்கி கணக்கை நீக்குவதற்கான காரணத்தை கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும் மற்றவை என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான காரணத்தை உரைப்பெட்டியில் உள்ளிட்டு  தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணு சரிபார்ப்பு என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்

Data responsive

படிநிலை 4: OTP- ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.

Data responsive

வங்கிக் கணக்கு வெற்றிகரமாக நீக்கப்பட்டதும், ஒரு வெற்றிச் செய்தி திரையில் காண்பிக்கப்படும்.

Data responsive

'சரிபார்ப்பு நடைபெறுகிறது' என்ற நிலையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கை நீங்கள் நீக்கலாம். அவ்வாறு நீக்கிய பிறகு, சரியான விவரங்களுடன் அதே வங்கிக் கணக்கை மீண்டும் சேர்க்க முயற்சிக்கலாம்.

3.3 வருமானவரி திரும்பப் பெறுதலுக்கு வங்கி கணக்கை பரிந்துரைத்தல் அல்லது பரிந்துரைத்ததிலிருந்து வங்கி கணக்கை நீக்குதல்

A. வருமான வரி திரும்பப் பெறுதலுக்கு ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைத்தல்  

படிநிலை 1:  வருமான வரி திரும்பப் பெறுதலுக்கு ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்க, நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் வங்கிக் கணக்கிற்கு அருகில் உள்ளவருமான வரி பணத்தைத் திரும்பப் பெறுதலுக்குபரிந்துரைக்கவும் என்ற மாற்றி / சொடுக்கியைக் கிளிக் செய்யவும் (இந்தச் சொடுக்கி இடது பக்கம் அமைக்கப்பட்டிருக்கும்).
 

Data responsive


படிநிலை 2: தேர்ந்தெடுத்த வங்கிக் கணக்கை பரிந்துரைக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். 
 

Data responsive

வெற்றிபெற்றதும், சொடுக்கி வலது பக்கம் நகரும்.

Data responsive

B. வருமானவரி திரும்பப் பெறுதலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வங்கி கணக்கை நீக்குதல்  

படிநிலை 1:பணத்தைத் திருப்பிச் செலுத்த பரிந்துரைக்கப்பட்ட வங்கி கணக்கை நீக்க, நீங்கள் நீக்க விரும்பும் வங்கி கணக்கிற்கானபணத்தைத் திருப்பிச் செலுத்தப் பரிந்துரைக்கவும்என்ற மாற்றி/சொடுக்கியை (வலப்புறத்தில் இருக்கும்) கிளிக் செய்யவும்.
 

Data responsive

படிநிலை 2: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கின் பரிந்துரையை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

வெற்றிகரமாக முடிந்தவுடன், சொடுக்கி இடது பக்கத்திற்கு நகரும்.

Data responsive

3.4 EVC- ஐ இயலச்செய்தல் மற்றும் முடக்குதல்  

A. EVC-ஐ இயலச்செய்யவும்  

படிநிலை 1:நீங்கள் EVC-ஐச் செயல்படுத்த விரும்பும் வங்கிக் கணக்கிற்கானசெயல்கள்நிரலில் உள்ளEVC-ஐச் இயலச்செய்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2: ஒரு உறுதிப்படுத்துதல் செய்தி திரையில் தோன்றும் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

குறிப்பு:

  • சரிபார்க்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு EVC வசதியைச் செயல்படுத்த பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:
  • உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID வங்கியால் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மின்னணு-தாக்கலில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணும் வங்கியால் சரிபார்க்கப்பட்ட அலைபேசி எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவை பொருந்துவதை உறுதிப்படுத்த, உங்கள் மின்னணு -தாக்கல் சுயவிவரத்தில் உள்ள அலைபேசி எண்ணை வங்கியில் இணைக்கப்பட்ட எண்ணாக மாற்றவும் அல்லது உங்கள் வங்கியில் உள்ள அலைபேசி எண்ணை உங்கள் மின்னணு -தாக்கல் சுயவிவரத்தில் உள்ள எண்ணாகப் புதுப்பிக்கவும்.
  • வேறு எந்த வங்கிக் கணக்கிற்கும் EVC வசதி செயல்பாட்டில் இருக்கக்கூடாது.
  • உங்கள் வங்கி, மின்னணு- தாக்கல் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மின்னணு-தாக்கல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் பட்டியலைப் பார்க்க, பின்வரும் வழிமுறையைப் பின்பற்றவும்: உள்நுழையவும்> எனது சுயவிவரம்> எனது வங்கி கணக்கு > குறிப்புகள் பிரிவில் > “வங்கிகளின் பட்டியல்” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கை மட்டும் முன்-சரிபார்ப்பு செய்ய விரும்பி EVC-ஐ இயலச்செய்ய விரும்பவில்லை என்றால், உங்கள் மின்னணு-தாக்கல் அலைபேசி அல்லது மின்னஞ்சல் வங்கியில் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களுடன் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை.

மேற்கூறிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு EVC வெற்றிகரமாக இயக்கப்படும், மேலும் அதன் நிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் EVC செயல்பாட்டில் உள்ளது:

Data responsive

படிநிலை 3: ஏற்கனவே ஒரு வங்கிக் கணக்கிற்கு EVC வசதி செயல்பாட்டில் இருக்கும்போது, நீங்கள் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு EVC-ஐச் செயல்படுத்த முயற்சித்தால், அது குறித்த அறிவிப்புச் செய்தி திரையில் தோன்றும். அந்தச் செய்தியில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். படிநிலை 2-இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த வங்கிக் கணக்கிற்கு EVC செயல்பாட்டுக்கு வரும். இத்தகைய சூழலில், முன்னதாக EVC வசதி பெற்றிருந்த வங்கிக் கணக்கிற்கு EVC முடக்கப்படும்.

Data responsive

குறிப்பு: நீங்கள் ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்தாலோ அல்லது அந்தச் செய்தியை நீக்கிவிட்டாலோ, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு EVC தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

B. EVC-ஐ முடக்கவும்  

படிநிலை 1:EVC வசதி செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கிற்குசெயல்கள்நெடுவரிசையின் கீழ் உள்ளEVC-ஐ முடக்குஎன்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2: ஒரு உறுதிப்படுத்துதல் செய்தி திரையில் தோன்றும் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


வெற்றிகரமாக முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிற்கான EVC முடக்கப்படும், மேலும் அதன் நிலைசரிபார்க்கப்பட்டதுஎன்று மட்டும் புதுப்பிக்கப்படும்.

Data responsive

3.5 வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்கவும்

படிநிலை 1: ஒரு வங்கிக் கணக்கின் சரிபார்ப்பு முன்பு தோல்வியடைந்திருந்தால், அதன் விவரங்களை தோல்வியடைந்த வங்கிக் கணக்குகள் டாபில் காணலாம். நீங்கள் மீண்டும் சரிபார்க்க வேண்டிய வங்கிக் கணக்கிற்கான செயல் நெடுவரிசையின் கீழ் மீண்டும் சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்/மின்னஞ்சல் அல்லது உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அல்லது உங்கள் கணக்கு வகை/கணக்கு நிலை புதுப்பிக்கப்பட்டால் நீங்கள் சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்க முடியும்.

Data responsive

படிநிலை 2: வங்கி கணக்கைச் சேர்க்கவும் என்ற பக்கத்தில், வங்கி விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். வங்கி விவரங்களைத் திருத்த முடியும், ஆனால் தொடர்பு விவரங்களைத் திருத்த முடியாது. தேவையெனில் திருத்தக்கூடிய விவரங்களைப் புதுப்பிக்கவும். பின்னர் மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்ல தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 3:மின்னணு சரிபார்ப்புக்கான முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வந்த OTP-ஐ உள்ளிடவும்.

Data responsive

 

Data responsive

வெற்றிகரமாக முடிந்ததும், வங்கிக் கணக்கு சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்குகள் டாபின் கீழ் சேர்க்கப்படும்; மேலும் அதன் நிலை புதுப்பிக்கப்படுவதோடு சரிபார்ப்பு நடைபெறுகிறது

Data responsive

பின்னர், உங்கள் தொடர்பு விவரங்கள் வங்கி விவரங்களுடன் சரிபார்க்கப்படும். வங்கியால் கணக்கு விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டால், உங்கள் வங்கி கணக்கு செல்லுபடியானதாக விளங்கும். உங்கள் சரிபார்ப்பு நிலையை சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்குகள் டாபின் நிலையில்நெடுவரிசையில் பார்க்கலாம்.

Data responsive

சரிபார்ப்பு இன்னும் தோல்வியுற்றால், தோல்விக்கான காரணத்தின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கையை எடுக்கவும் (ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளுக்கு):

தோல்விக்கான காரணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை
PAN-வங்கி கணக்கு-IFSC இணைப்பு தோல்வியடைந்தது PAN எண்ணை உங்கள் வங்கி கணக்குடன் இணைக்க வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும், பின்னர் கோரிக்கையைச் சமர்ப்பிக்க மீண்டும் சரிபார்க்கவும்என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் புள்ளிவிவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
பெயர் பொருத்தமின்மை PAN-இல் உள்ளபடி பெயரைப் புதுப்பிக்க உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும். பின்னர், மீண்டும் சரிபார்க்கவும், விவரங்களைப் மறுமதிப்பீடு செய்து மீண்டும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
வங்கி கணக்கு எண் பொருத்தமின்மை மீண்டும் சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்து, சரியான வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு மீண்டும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
கணக்கு எண் செல்லுபடியாகவில்லை சரியான வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு மீண்டும் மறுமதிப்பீடு செய்தல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
வங்கி கணக்கு மூடப்பட்டது /செயல்பாட்டில் இல்லை வேறு ஒரு வங்கி கணக்கு எண்ணைப் பயன்படுத்தி முயற்சிக்கவும். மேலும் தகவல்தொடர்புக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

ஒருங்கிணைக்கப்படாத வங்கிகளில் ஒன்றில் கணக்கு இருந்தால், பின்வரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்:

தோல்விக்கான காரணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை
PAN வங்கி கணக்குடன் இணைக்கப்படவில்லை சரியான PAN எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து கோரிக்கையைச் சமர்ப்பிக்க மீண்டும் சரிபார்க்கவும்என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் தகவல்தொடர்புக்கு உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
PAN பொருத்தமின்மை சரியான PAN எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து கோரிக்கையைச் சமர்ப்பிக்க மீண்டும் சரிபார்க்கவும்என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் தகவல்தொடர்புக்கு உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
தவறான கணக்கு வகை மீண்டும் சரிபார்க்கவும், என்பதைக் கிளிக் செய்து, சரியான வங்கி கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்து, சரிபார்ப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
கணக்கு மூடப்பட்டது / செயலிழந்த கணக்கு / சட்டச் சிக்கலில் உள்ள கணக்கு / முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட கணக்கு வேறு ஒரு செல்லுபடியாகும் வங்கி கணக்கு எண்ணைப் பயன்படுத்தி முயற்சிக்கவும். மேலும் தகவலுக்கு உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
கணக்கு வைத்திருப்பவரின் பெயர் தவறானது மீண்டும் சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்து விவரங்களைப் புதுப்பிக்கவும். PAN-இல் உள்ளபடி பெயரைப் புதுப்பிக்க உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

வங்கி சரிபார்ப்பு நிலை 'சரிபார்ப்பை மேற்கொள்ள முடியாது' எனக் காட்டப்பட்டால், அது அந்த வங்கி கணக்கு விவரங்களை துறை சரிபார்க்க முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. காரணம், அந்த வங்கி ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி அல்ல அல்லது NPCI உடன் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில், நீங்கள் RBI பட்டியலின் படி ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி அல்லது NPCI உடன் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றொரு வங்கி கணக்கை சேர்க்கலாம்.

3.6 இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைவதற்கு சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கைப் பரிந்துரைக்கவும்

படிநிலை 1:இணைய வங்கிசேவை மூலம் உள்நுழையப் பரிந்துரைக்கவும் என்ற பட்டனைச் செயல்படுத்தவும்.

Data responsive

படிநிலை 2: தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 3: இப்போது, ​​வங்கி கணக்கு இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Data responsive

4. தொடர்புடைய தலைப்புகள்