1. மேலோட்டப்பார்வை
பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் தங்கள் மின்னணு-தாக்கல் கணக்கின் அதிக பாதுகாப்பை செயல்படுத்த மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு சேவை கிடைக்கிறது. மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழையும் போது மின்னணு-தாக்கல் பெட்டக இரண்டாவது நிலை அங்கீகாரத்தையும், கடவுச்சொல் மீட்டமைப்பிற்கான இரண்டாவது காரணி அங்கீகாரத்தையும் பின்வரும் விருப்பங்களில் ஒன்றின் மூலம் சேர்க்கிறது:
- இணைய வங்கி சேவை
- இலக்கமுறை கையொப்ப சான்றிதழ் (DSC)
- ஆதாரில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் ஒரு முறை கடவுச் சொல்
- வங்கிக் கணக்கு EVC
- டீமேட் கணக்கு EVC
அனைத்து மின்னனு பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பங்களும் (முந்தைய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் அமைக்கப்பட்டது) முடக்கப்பட்டுள்ளன. பயனர்கள் புதிய இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு விருப்பங்களை மீட்டமைக்க வேண்டும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனரின், சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
- PAN உடன் இணைக்கப்பட்ட சரியான ஆதார்
- மின்னணு-தாக்கல் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் DSC
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் முன் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC உடன் கூடிய வங்கி கணக்கு
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் முன் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC உடன் கூடிய டிமேட் கணக்கு
- சரியான இணைய வங்கி கணக்கு
குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்தும் முன்நிபந்தனைகளையும் ஒரே நேரத்தில் பின்பற்ற/கடைபிடிக்க தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது காரணி பாதுகாப்பு / அங்கீகாரத்தின் வகையின் அடிப்படையில் 3 முதல் 6 வரை விருப்பங்களில் ஒன்று தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த சேவைக்கு முதல் இரண்டு முன்தேவைகள் கட்டாயமாகும்.
3. படிப்படியான வழிகாட்டி
படி1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்பலகையின் மேல் வலது மூலையில், எனது சுயவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.எனது சுயவிவரப் பக்கத்தில், மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு பக்கத்தில், நீங்கள் -
| ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTPயை இயக்கவும் | பிரிவு 3.1 ஐ பார்க்கவும் |
| வங்கி கணக்கு EVC / டீமேட் கணக்கு EVC / DSC / இணைய வங்கி மூலம் இயக்கவும் | பிரிவு 3.2 ஐ பார்க்கவும் |
| உயர் பாதுகாப்பு விருப்பங்களைத் ரத்து செய்யவும் | பிரிவு 3.3 ஐ பார்க்கவும் |
3.1 ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP ஐ இயக்கவும்
படி 1: உள்நுழைவதற்கான உயர் பாதுகாப்பை அமைத்தல்மற்றும் கடவுச்சொல் மீட்டமைப்பு பிரிவுகளுக்கு உயர் பாதுகாப்பை அமைத்தல் ஆகியவற்றில், நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் உயர் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTPயைப் பயன்படுத்தி இரண்டாவது காரணி அங்கீகாரத்தை நீங்கள் விரும்பினால், அந்த குறிப்பிட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: ஆதார் OTP மூலம் நீங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஒரு மேல்-விரி (பாப்அப்) செய்தி காண்பிக்கப்படுகிறது. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்களிடம் OTP இருந்தால், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசியில் ஏற்கனவே OTP உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால், ஒரு முறை கடவு எண்ணை உருவாக்கவும். ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் அதைப் பெறுவீர்கள்.
படி 4: எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஆதார் OTP உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: OTP ஐ சரிபார்க்கவும் பக்கத்தில், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
வெற்றிகரமான சரிபார்த்தலில், வெற்றிச் செய்தி காட்டப்படும்.
3.2 வங்கி கணக்கு EVC / டீமேட் கணக்கு EVC / DSC / இணைய வங்கி மூலம் இயக்கவும்
படி 1: உள்நுழைவுக்கான உயர் பாதுகாப்பை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல் மீட்டமைப்பு உயர் பாதுகாப்பை அமைக்கவும் பிரிவுகளில், நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் உயர் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், வெற்றிகரமான சரிபார்ப்பில், ஒரு தகவல் செய்தி காண்பிக்கப்படும். சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் இப்போது உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தியும் காட்டப்படும்.
3.3 உயர் பாதுகாப்பு விருப்பங்களைத் ரத்து செய்யவும்
படி 1: மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு பக்கத்தில், உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் மீட்டமைப்பிற்கான இரண்டாம் காரணி அங்கீகாரத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தைக் காண்பீர்கள். உங்களுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படாத விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உள்நுழைவு மற்றும்/அல்லது கடவுச்சொல் மீட்டமைப்பதற்கான உயர் பாதுகாப்பு விருப்பத்தை நீக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.
படி 2: உறுதிப்படுத்து என்ற பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களில் உயது பாதுகாப்பை முடக்கஉறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு வெற்றிகரமாக அமைந்ததும், பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும்.