2026-27 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான குடியுரிமை அல்லாத தனிநபர்
பொறுப்புத் துறப்பு: இப்பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் ஒரு பொதுவான வழிகாட்டுதலையும் மேலோட்டமான பார்வையை வழங்குவதற்கும் மட்டுமே. இது முழுமையானது அல்ல.
முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, தயவுசெய்து வருமானவரிச் சட்டம், 1961-ஐப் பார்க்கவும்.
வரி நோக்கங்களுக்காக இந்தியாவில் வசிப்பவராக இல்லாத ஒரு தனிநபரே வசிப்பவர் அல்லாத தனிநபர் ஆவார். ஒரு தனிநபர் வசிப்பவர் அல்லாதவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, அவருடைய குடியிருப்புத் தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6-இன் கீழ் தீர்மானிக்கப்பட வேண்டும்:
அவர்/ அவள் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தால், அவர் முந்தைய எந்தவொரு ஆண்டிலும் இந்தியாவில் வசிப்பவராகக் கருதப்படுவார்.
- அவர்/ அவள் முந்தைய ஆண்டில் 182 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான காலம் இந்தியாவில் இருந்தால் அல்லது
- அவர்/ அவள் முந்தைய ஆண்டில் 60 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் மற்றும் முந்தைய ஆண்டிற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 365 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் இந்தியாவில் இருந்திருந்தால்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாத ஒரு நபர் அந்த முந்தைய ஆண்டில் இந்தியாவில் வசிக்காதவராகக் கருதப்படுவார்.
இருப்பினும், அந்த ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தரும் ஓர் இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரைப் பொறுத்தவரை, மேலே (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 60 நாட்கள் என்ற கால அளவிற்குப் பதிலாக 182 நாட்கள் என மாற்றியமைக்கப்படும். இதேபோன்ற சலுகை, முந்தைய எந்தவொரு ஆண்டிலும் ஒரு கப்பல் பணியாளராகவோ அல்லது இந்தியாவிற்கு வெளியே வேலைவாய்ப்பு பெறும் நோக்கத்திற்காகவோ இந்தியாவை விட்டு வெளியேறும் ஓர் இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டின் நிதிச் சட்டம், 2021-22 மதிப்பீட்டு ஆண்டு முதல் அமலுக்கு வரும் வகையில், மேற்கண்ட விதிவிலக்கில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டில் ஓர் இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் மொத்த வருமானம்,வெளிநாட்டு மூலங்களிலிருந்து வரும் வருமானத்தைத் தவிர்த்து ₹ 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், மேலே (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 60 நாட்கள் என்ற கால அளவிற்குப் பதிலாக 120 நாட்கள் என மாற்றியமைக்கப்படும்.
நிதிச் சட்டம் 2020, மதிப்பீட்டு ஆண்டு 2021-22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு புதிய பிரிவு 6(1A)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எந்தவொரு நாட்டிலும் வரி செலுத்தக் கடமைப்படாத ஓர் இந்தியக் குடிமகன் முந்தைய ஆண்டில் ₹ 15 லட்சத்திற்கும் அதிகமாக மொத்த வருமானம் (வெளிநாட்டு மூலங்களிலிருந்து வரும் வருமானத்தைத் தவிர்த்து) ஈட்டினால் அவர் இந்தியாவில் வசிப்பவராகக் கருதப்படுவார்.
|
1. ITR-2 பார்மானது இந்தியாவில் வசிக்காத தனிநபருக்குப் பொருந்தும் |
|
இந்த வருமானவரி அறிக்கை தனிநபர் (இந்தியாவில் வசிப்பவர் அல்லது வசிக்காதவர்) மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் (HUF) ஆகியோருக்குப் பொருந்தும். |
|
வணிகம் அல்லது தொழிலின் லாபம் மற்றும் ஆதாயங்கள் தவிர, பிற எந்தவொரு தலைப்பின் கீழும் வருமானம் பெற்றிருப்பவர். |
|
2. ITR-3 பார்மானது இந்தியாவில் வசிக்காத தனிநபருக்குப் பொருந்தும் |
|
|
இந்த ரிட்டர்ன் தனிநபர் (இந்தியாவில் வசிப்பவர் அல்லது வசிக்காதவர்) மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் (HUF) ஆகியோருக்குப் பொருந்தும்: |
|
|
சம்பளம்/ஓய்வூதியம், வீட்டுச் சொத்து, வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் அல்லது ஆதாயங்கள், மூலதன ஆதாயங்கள் அல்லது இதர மூலங்களிலிருந்தான வருமானம் ஆகிய தலைப்புகளின் கீழ் வருமானம் பெற்றிருப்பவர். |
ITR-1, 2 அல்லது 4 ஐத் தாக்கல் செய்யத் தகுதியற்றவர்கள் யார் |
வருமானவரிச் சட்டம், 1961 இன் படி பொருந்தக்கூடிய பார்ம்ஸ்
வெளிநாடு வாழ் தனிநபருக்குப் பொருந்தக்கூடிய பார்ம்ஸ் பின்வருமாறு:
|
1. பார்ம் 12BB - வரிக் கழிவு கோரி ஊழியர் சமர்ப்பிக்கும் கோரிக்கையின் விவரங்கள் (வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 192-இன் கீழ்) |
|
|
வழங்கியவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
ஒரு பணியாளர் தனது வேலை அளிப்பவருக்கு(களுக்கு) |
மூலத்தில் வரி பிடித்தம் (TDS) கணக்கிடுவதற்காக, வீட்டு வாடகைப்படி, விடுப்புப் பயணச் சலுகை, கடனாகப் பெற்ற மூலதனத்தின் மீதான வட்டிக் கழிப்பு, வரிச் சேமிப்புக் கோரிக்கைகள் / கழிவுகள் ஆகியவற்றிற்கான சான்றுகள் அல்லது விவரங்கள் |
|
2. பார்ம் 16 - சம்பளத்தின் மீதான TDS செய்யப்பட்ட விவரங்கள் (வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 203-இன் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்) |
|
|
வழங்கியவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
வேலை அளிப்பவரால் பணியாளருக்கு |
செலுத்த வேண்டிய / திரும்பப் பெற வேண்டிய வரியைக் கணக்கிடுவதற்காக வழங்கப்பட்ட சம்பளம், வரி விலக்குகள் / கழிவுகள் மற்றும் TDS செய்யப்பட்ட விவரங்கள் |
|
3. பார்ம் 16A – வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 203-இன் கீழ் சம்பளம் அல்லாத பிற வருமானங்களின் மீதான TDS செய்ததற்கான சான்றிதழ் |
|
|
வழங்கியவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
வரி பிடித்தம் செய்பவரால் வரி பிடித்தம் செய்யப்பட்டவருக்கு |
பார்ம் 16A என்பது காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மூலத்தில் வரி பிடித்தம் (TDS) சான்றிதழாகும். இது வரி பிடித்தத் தொகை, கொடுப்பனவுகளின் தன்மை மற்றும் வருமானவரித் துறையில் செலுத்தப்பட்ட TDS ஆகிய விவரங்களைக் கொண்டுள்ளது. |
|
4. பார்ம் 26 AS மற்றும் ஆண்டுத் தகவல் அறிக்கை |
|
|
பார்ம் 26 AS |
AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை) |
|
வழங்கியவர்:
வருமானவரித் துறை (இது இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கிறது: லாகின் > இ-ஃபைலிங் > வருமானவரி அறிக்கை > பார்ம் 26AS-ஐப் பார்க்கவும் |
வழங்கியவர்:
வருமானவரித் துறை (வருமானவரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழைந்த பிறகு இதை அணுகலாம்) இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும் > லாகின் > ஆண்டுத் தகவல் அறிக்கை |
|
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள்:
மூலத்தில் வரி பிடித்தம் / வரி வசூலிப்பு. |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள்:
இதர தகவல்கள் (நிலுவையில் உள்ள/முடிவடைந்த நடவடிக்கைகள், GST தகவல், வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல் போன்றவை) |
|
5. பார்ம் 10E - வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 89(1)-இன் கீழ் நிவாரணம் கோருவதற்காக வருமான விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான பார்ம் நிலுவைத் தொகை அல்லது முன்பணமாகச் சம்பளம் வழங்கப்படும் போது |
|
|
வழங்கியவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
வருமானவரித் துறைக்கு வரி செலுத்துபவர் |
|
|
6. பார்ம் 3CB-3CD |
|
|
சமர்ப்பித்தவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 44AB-இன் கீழ், ஒரு கணக்காளர் மூலம் தன் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய கடமைப்பட்டுள்ள வரி செலுத்துவோர்.
வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 139 உட்பிரிவு (1)-இன் கீழ் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகச் சமர்ப்பிக்க வேண்டும் |
Rவருமானவரிச் சட்டம், 1961 பிரிவு 44AB இன் கீழ் கணக்குகளின் தணிக்கை அறிக்கை மற்றும் விவரங்களின் அறிக்கையை வழங்க வேண்டும் |
|
7. பார்ம் 3CEB |
|
|
சமர்ப்பித்தவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
சர்வதேசப் பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக, வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 92E-இன் கீழ் ஒரு கணக்காளரிடமிருந்து அறிக்கை பெற வேண்டிய கடமைப்பட்டுள்ள வரி செலுத்துவோர்.
வருமானவரிச் சட்டம், 1961 பிரிவு 139 உட்பிரிவு (1)-ன் கீழ் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
சர்வதேசப் பரிவர்த்தனை(கள்) மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனை(கள்) தொடர்பான கணக்காளரிடமிருந்தான அறிக்கை |
|
8. பார்ம் 3CE |
|
|
சமர்ப்பித்தவர் |
பார்மில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
|
குறிப்பிட்ட நபர்களிடமிருந்து குறிப்பிட்ட வருமானங்களைப் பெற்றதற்காக, வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 44DA-இன் கீழ் ஒரு கணக்காளரிடமிருந்து அறிக்கை பெற வேண்டிய கடமைப்பட்டுள்ள வரி செலுத்துவோர்.
வருமானவரிச் சட்டம், 1961 பிரிவு 139 உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான இறுதிக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
அரசு அல்லது இந்திய நிறுவனத்திடமிருந்து உரிமைத்தொகை அல்லது தொழில்நுட்பச் சேவைகளுக்கான கட்டண வடிவில் பெற்ற வருமானம் தொடர்பான கணக்காளரிடமிருந்தான அறிக்கை. |
மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வரி அடுக்குகள்
- நிதிச் சட்டம் 2023, மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல் அமலுக்கு வரும் வகையில் பிரிவு 115BAC-இன் விதிகளைத் திருத்தியுள்ளது. இதன் மூலம் தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம் (HUF), நபர்களின் கூட்டமைப்பு (AOP) (கூட்டுறவுச் சங்கங்கள் தவிர), தனிநபர்களின் அமைப்பு (BOI) அல்லது செயற்கை சட்டப்பூர்வ நபர் ஆகிய வரி செலுத்துவோருக்குப் புதிய வரி விதிப்பு முறையே இயல்புநிலை வரி விதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தகுதியுடைய வரி செலுத்துவோர் இந்த இயல்புநிலை வரி முறையிலிருந்து விலகி, பழைய வரி முறையின்கீழ் வரி விதிக்கப்படுவதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பழைய வரி முறை என்பது புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த வருமானவரிக் கணக்கீடு மற்றும் வரி அடுக்கு முறையைக் குறிக்கிறது. பழைய வரி முறையில் வரி செலுத்துவோர் பல்வேறு வரி பிடித்தங்கள் மற்றும் வரி விலக்குகளைக் கோருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
- வணிக வருமானம் இல்லாத சூழ்நிலைகளில்", இயல்புநிலை வரி முறையை மாற்றுவதற்கான விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வருமான வரிக் கணக்கீட்டுப் படிவத்திலேயே தேர்வு செய்து கொள்ளலாம்; மேலும் அத்தகைய வருமானவரிக் கணக்கீட்டுப் படிவத்தை வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 139(1)-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள்ளோ அல்லது அதற்கு முன்பாகவோ தாக்கல் செய்ய வேண்டும்.
- வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் ஈட்டும் தகுதியுள்ள வரி செலுத்துவோர், இயல்புநிலை வரி முறையிலிருந்து விலக விரும்பினால், வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 139(1)-இன் கீழ் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்குள் பார்ம் எண் 10-IEA-வைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அத்தகைய விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கும் அதாவது, பழைய வரி முறையிலிருந்து விலகுவதற்கும் பார்ம் எண் 10-IEA-வைச் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், பழைய வரி விதிப்பு முறையிலிருந்து விலகி, மீண்டும் இயல்புநிலை வரி முறைக்குள் திரும்புவதற்கான விருப்பத்தேர்வு அதற்கு அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே கிடைக்கும்; மேலும், வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் ஈட்டும் தகுதியுள்ள வரி செலுத்துவோருக்கு இந்த வாய்ப்பு வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
|
பழைய வரி விதிப்பு முறை |
வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115BAC-இன்கீழ் புதிய வரி விதிப்பு முறை |
||
|
வருமானவரி வரம்பு |
வருமானவரி விகிதம்
|
வருமானவரி வரம்பு |
வருமானவரி விகிதம் |
|
₹ 2,50,000 வரை |
ஒன்றும் இல்லை
|
₹ 4,00,000 வரை |
ஒன்றும் இல்லை |
|
₹ 2,50,001 - ₹ 5,00,000 |
5% மேல் ₹ 2,50,000
|
₹ 4,00,001 - ₹ 8,00,000 |
5% மேல் ₹ 4,00,000 |
|
₹ 5,00,001 - ₹ 10,00,000 |
₹ 12,500 + 20% மேல் ₹ 5,00,000
|
₹ 8,00,001 - ₹ 12,00,000 |
₹ 20,000 + 10% மேல் ₹ 8,00,000 |
|
₹ 10,00,000 மேல் |
₹ 1,12,500 + 30% மேல் ₹ 10,00,000
|
₹ 12,00,001 - ₹ 16,00,000 |
₹ 60,000 + 15% மேல் ₹ 12,00,000 |
|
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 + 20% மேல் ₹ 16,00,000 |
|
|
|
₹ 20,00,001 - ₹ 24,00,000 |
₹ 2,00,000 + 25% மேல் ₹ 20,00,000 |
|
|
₹ 24,00,000 மேல்,00,000
|
₹ 3,00,000 + 30% மேல் ₹ 24,00,000 |
||
குறிப்பு: பழைய வரி முறையின் கீழ், இந்தியாவில் வசிக்காத தனிநபருக்கான வரி விகிதங்கள், வரி செலுத்துவோரின் பிறந்த தேதியைக் கணக்கில் கொள்ளாமல் மேலே குறிப்பிட்டுள்ளவாறே இருக்கும்.
|
வருமான வரம்பு |
வருமான வரி தொகைக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி விகிதம்
(புதிய வரி முறை) |
வருமான வரி தொகைக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி விகிதம்
(பழைய வரி முறை)
|
|
ரூ. 50 லட்சம் வரை |
ஒன்றும் இல்லை |
ஒன்றும் இல்லை |
|
ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை |
10% |
10% |
|
ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடிகள் வரை |
15% |
15% |
|
ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடிகள் வரை |
25% |
25% |
|
ரூ. 5 கோடிகளுக்கு மேல் |
25% |
37% |
குறிப்பு: இந்தியாவில் வசிக்காதவர்களுக்குப் பொருந்தக்கூடிய வரம்பில், பிரிவுகள் 111A, 112, 112A இன் கீழ் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் ஈவுத்தொகை வருவாய் ஆகியவற்றின் மீது 25% மற்றும் 37% என்ற உயர்த்தப்பட்ட உபரி வரிக் கட்டணம் விதிக்கப்படாது. எனவே, 115A, 115AB, 115AC, 115ACA மற்றும் 115E ஆகிய பிரிவுகளின் கீழ் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் நிகழ்வுகளைத் தவிர, இத்தகைய வருமானங்களின் மீது செலுத்த வேண்டிய வரிக்கான அதிகபட்ச உபரி வரிக் கட்டண விகிதம் 15% ஆக மட்டுமே இருக்கும்.
பழைய வரி முறையின் கீழ் ஈட்டப்பட்ட வருமானம் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி, ₹ 2 கோடி அல்லது ₹ 5 கோடியைத் தாண்டும்போதும், மற்றும் புதிய வரி முறையின் கீழ் ஈட்டப்பட்ட வருமானம் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி மற்றும் ₹ 2 கோடியைத் தாண்டும்போதும், உபரி வரிக் கட்டணத்திலிருந்து மார்ஜினல் நிவாரணத்தை பின்வருமாறு கோரலாம்:
|
நிகர வருமான வரம்பு |
மார்ஜினல் நிவாரணம் |
|
|
(ரூ.) க்கு மேல் |
(ரூ.)-க்கு மிகாமல் |
|
|
50 லட்சம். |
1 கோடி |
இரு வரி முறைகளின் கீழும், ரூ50 லட்சத்திற்கும் அதிகமான மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரிக் கட்டணத்தின் தொகையானது, ரூ50 லட்சம் மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை விட, ரூ50 லட்சத்தைத் தாண்டிய உபரி வருமானத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கக் கூடாது. |
|
1 கோடி |
2 கோடிகள் |
இரு வரி முறைகளின் கீழும், ரூ1 கோடிக்கும் அதிகமான மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரிக் கட்டணத்தின் தொகையானது, ரூ1 கோடி மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை விட, ரூ1 கோடியைத் தாண்டிய உபரி வருமானத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கக் கூடாது. |
|
2 கோடிகள் |
5 கோடிகள் |
இரு வரி முறைகளின் கீழும், ரூ2 கோடிக்கும் அதிகமான மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரிக் கட்டணத்தின் தொகையானது, ரூ2 கோடி மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை விட, ரூ2 கோடியைத் தாண்டிய உபரி வருமானத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கக் கூடாது. |
|
5 கோடிகள் |
- |
இரு வரி முறைகளின் கீழும், ரூ5 கோடிக்கும் அதிகமான மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரிக் கட்டணத்தின் தொகையானது, ரூ5 கோடி மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை விட, ரூ5 கோடியைத் தாண்டிய உபரி வருமானத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கக் கூடாது. |
வரிச் சலுகை கிடைக்கக்கூடிய முதலீடுகள் / செலுத்தல்கள் / வருமானங்கள்:
வருமானவரிச் சட்டம் 1961 பிரிவு 115BAC-இன் கீழ், புதிய வரி முறையைத் தேர்வு செய்யும் வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் வரிக் கழிவுகள்:
பிரிவு 24(b) - வீட்டு லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது வீட்டுச் சொத்து மூலமான வருமானத்திலிருந்து பெறப்படும் வரி கழிவு
|
சொத்தின் தன்மை |
லோன் பெறும் நோக்கம் |
அனுமதிக்கத்தக்கது (அதிகபட்ச வரம்பு) |
ITR இல் நிரப்பப்பட வேண்டிய விவரங்கள் |
|
லெட் அவுட் |
வீட்டுச் சொத்தின் கட்டுமானம் அல்லது வாங்குதல் |
வரம்பற்ற அசல் மதிப்பு (ஆனால், “வீட்டுச் சொத்திலிருந்து வரும் வருமானம்” என்ற தலைப்பின் கீழ் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால், அதனை CYLA அட்டவணையில் உள்ள வேறு எந்தத் தலைப்புகளுக்கும் எதிராக ஈடு செய்ய முடியாது மேலும் அதனை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லவும் முடியாது) |
|
பிரிவு 24(b) - வீட்டு லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது வீட்டுச் சொத்து மூலமான வருமானத்திலிருந்து பெறப்படும் வரி கழிவு
|
சொத்தின் தன்மை |
லோன் பெறும் நோக்கம் |
அனுமதிக்கத்தக்கது (அதிகபட்ச வரம்பு) |
ITR இல் நிரப்பப்பட வேண்டிய விவரங்கள் |
|
லெட் அவுட் |
வீட்டுச் சொத்தின் கட்டுமானம் அல்லது வாங்குதல் |
வரம்பற்ற அசல் மதிப்பு (ஆனால், “வீட்டுச் சொத்திலிருந்து வரும் வருமானம்” என்ற தலைப்பின் கீழ் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால், அதனை CYLA அட்டவணையில் உள்ள வேறு எந்தத் தலைப்புகளுக்கும் எதிராக ஈடு செய்ய முடியாது மேலும் அதனை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லவும் முடியாது) |
|
Deductions available to a taxpayer opting for Old Tax Regime as per Income Tax act,1961
1. பிரிவு 24(b) – வீட்டு லோன் மற்றும் வீட்டு மேம்பாட்டு லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டிக்கு , வீட்டுச் சொத்தின் வருமானத்திலிருந்து கிடைக்கும் கழிவு..
சுய பயன்பாட்டுச் சொத்தைப் பொறுத்தவரை, வீட்டு லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியைக் கழிப்பதற்கான உச்ச வரம்பு ₹ 2 லட்சம் ஆகும். பிரிவு 24(b)-ன் கீழ் அனுமதிக்கப்படும் லோன் வட்டி விவரங்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:
|
சொத்தின் தன்மை |
லோன் பெறப்பட்ட போது |
லோனின் நோக்கம் |
அனுமதிக்கத்தக்கது (அதிகபட்ச வரம்பு) |
தேவையான விவரங்கள் |
|
சுய-பயன்பாடு |
1/04/1999 அன்று அல்லது அதற்குப் பிறகு |
வீட்டுச் சொத்தின் கட்டுமானம் அல்லது வாங்குதல் |
₹ 2,00,000 |
|
|
1/04/1999 அன்று அல்லது அதற்குப் பிறகு |
வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக |
₹ 30,000 |
||
|
1/04/1999-க்கு முன்பு |
வீட்டுச் சொத்தின் கட்டுமானம் அல்லது வாங்குதல் |
₹ 30,000 |
||
|
1/04/1999-க்கு முன்பு |
வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக |
₹ 30,000 |
||
|
லெட் அவுட் |
எந்த நேரத்திலும் |
வீட்டுச் சொத்தின் கட்டுமானம் அல்லது வாங்குதல் |
வரம்பற்ற அசல் மதிப்பு |
|
பிரிவு 80C, 80CCC, 80CCD (1) செலுத்தப்பட்ட தொகைகளுக்கான கழிவு |
||
|
80C |
|
ஒருங்கிணைந்த கழிவு வரம்பு ₹ 1,50,000 தகுதி வாய்ந்த ஒவ்வொரு செலுத்தலுக்கும் ITR இல் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
|
|
80CCC |
LIC அல்லது இதர காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியத்திற்கான ஆண்டுத்தொகை திட்டம் |
|
|
80CCD (1) |
மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம் |
|
| 80CCD (2) | Pension Scheme of Central Government by the Employer |
14% if contribution made by CG or SG; 10% if contribution made other employer |
|
பிரிவு 80CCD(1B) |
|
|
பிரிவு 80CCD (1)-ன் கீழ் கோரப்பட்ட கழிவு நீங்கலாக, மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்காகச் செலுத்தப்பட்ட தொகைகளுக்கான கழிவு 2)வரி செலுத்துவோர், அத்தகைய மைனர் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருந்து, குறிப்பிட்ட அந்த உட்பிரிவில் கூறப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மைனரின் கணக்கில் ஏதேனும் தொகை செலுத்தப்பட்டாலோ அல்லது வைப்பு வைக்கப்பட்டாலோ, இந்த உட்பிரிவின் கீழ் அந்தக் கழிவு அனுமதிக்கப்படும். |
கழிவிற்கான வரம்பு ₹ 50,000 |
நீங்கள் பிரிவு 80CCC, 80 CCD (1), 80 CCD (1B) இன் கீழ் கழிவு கோர விரும்பினால் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்
• அடையாள ஆவணத்தின் வகை
• அடையாள ஆவணத்தின் பெயர்
• தொகை
|
பிரிவு 80D |
|
|
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் தடுப்பு ஆரோக்கிய பரிசோதனைக்காகச் செலுத்தப்பட்ட தொகைகளுக்கான கழிவு |
|
|
தனக்கு / வாழ்க்கைத் துணைக்கு அல்லது சார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு |
₹ 25,000 (₹50,000 யாரேனும் ஒரு நபர் மூத்த குடிமகனாக இருந்தால்) ₹ 5,000 நோய் தடுப்பு மருத்துவப் பரிசோதனை மேற்கண்ட வரம்பிற்குள் அடங்கும் |
|
பெற்றோருக்கு |
₹ 25,000 ₹50,000 யாரேனும் ஒரு நபர் மூத்த குடிமகனாக இருந்தால்) ₹ 5,000 நோய் தடுப்பு மருத்துவப் பரிசோதனை மேற்கண்ட வரம்பிற்குள் அடங்கும் |
|
மூத்த குடிமகனுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தவணை செலுத்தப்படாத பட்சத்தில், அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் செலவுகளுக்கான வரிக் கழிவு |
|
|
தனக்கு / வாழ்க்கைத் துணைக்கு அல்லது சார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு |
கழிவிற்கான வரம்பு ₹ 50,000 |
|
பெற்றோர்க்கு |
கழிவிற்கான வரம்பு ₹ 50,000 |
|
குறிப்பு: பிரிவு 80D-இன் கீழ் கழிவு கோரும் வரி செலுத்துவோர், கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
|
|
|
80E |
|
|
தனக்கோ அல்லது தன் உறவினருக்கோ உயர்கல்விக்காகப் பெறப்பட்ட லோன் மீதான வட்டிச் செலுத்தலுக்கான வரிக்கழிவு |
பெறப்பட்ட லோன் மீதான வட்டிக்காகச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை |
குறிப்பு:
பிரிவு 80E-இன் கீழ் கழிவு கோருவதற்கு, ITR-இல் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
- நிறுவனம்/வங்கியிடமிருந்து பெறப்பட்ட லோன்
- லோன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்.
- நிறுவனம்/ வங்கியின் லோன் கணக்கு எண்.
- லோன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி.
- லோனின் மொத்தத் தொகை
- நிதியாண்டின் இறுதித் தேதியில் நிலுவையில் உள்ள லோன் தொகை
- பிரிவு 80E-இன் கீழ் வட்டி
|
80EE |
|
|
ஏப்ரல் 2016 முதல் 31 மார்ச் 2017 வரையிலான காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட, குடியிருப்பு வீட்டுச் சொத்து வாங்குவதற்கான லோன் மீதான வட்டிச் செலுத்தலுக்கான வரிக்கழிவு |
கழிவு வரம்பு ₹ 50,000 பெறப்பட்ட லோன் மீதான வட்டிச் செலுத்தலுக்கானது |
குறிப்பு:
பிரிவு 80EE-இன் கீழ் கழிவு கோருவதற்கு, ITR-இல் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
- வங்கி / நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட லோன்
- லோன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்
- வங்கி / நிறுவனத்தின் லோன் கணக்கு எண்
- லோன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
- லோனின் மொத்தத் தொகை
- நிதியாண்டின் இறுதித் தேதியில் நிலுவையில் உள்ள லோன் தொகை
- பிரிவு 80EE-இன் கீழ் வட்டி
|
80EEA |
|
|
முதன்முறையாகக் குடியிருப்பு வீட்டுச் சொத்து வாங்குவதற்காகப் பெறப்பட்ட லோன் மீதான வட்டிச் செலுத்தலுக்கான கழிவு. இந்த லோன் 1 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இக்கழிவு பிரிவு 80EEA-இன் கீழ் கோரப்பட்டிருக்கக் கூடாது |
வரிக் கழிவு வரம்பு ₹ 1,50,000 பெற்ற லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது |
குறிப்பு:
பிரிவு 80EEA-இன் கீழ் வரிக் கழிவு கோருவதற்கு, கீழே உள்ள விவரங்களை ITR படிவத்தில் வழங்க வேண்டும்:
- குடியிருப்புச் சொத்தின் முத்திரை மதிப்பு
- வங்கி/ நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட லோன்
- லோன் பெறப்பட்ட வங்கி/ நிறுவனத்தின் பெயர்
- வங்கி/ நிறுவனத்தின் லோன் கணக்கு எண்
- லோன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
- லோனின் மொத்தத் தொகை
- நிதியாண்டின் இறுதித் தேதியில் உள்ள நிலுவை லோன் தொகை
- பிரிவு 80EEA-இன் கீழ் வட்டி
குறிப்பு பிரிவு 24(b)-ன் கீழ் உள்ள வரம்பு முழுமையாகத் தீர்ந்தால் மட்டுமே, பிரிவு 80EEA-ன் கீழ் வரிக் கழிவைக் கோர முடியும். மேலும், லோன் ஒப்புதல் தேதி மற்றும் இதர தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில், வரி செலுத்துவோர் 80EE அல்லது 80EEA ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் மட்டுமே பலன் பெற முடியும்.
|
80EEB |
|
|
எலக்ரிக் வாகனம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டிக்கு வழங்கப்படும் கழிவு இந்த லோன் 1 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2023 வரை அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் |
வரிக் கழிவு வரம்பு ₹ 1,50,000 பெற்ற லோனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது |
குறிப்பு:
பிரிவு 80EEA-இன் கீழ் வரிக் கழிவு கோருவதற்கு, கீழே உள்ள விவரங்களை ITR பார்மில் வழங்க வேண்டும்:
- வங்கி/ நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட லோன்
- லோன் பெறப்பட்ட வங்கி/ நிறுவனத்தின் பெயர்
- நிறுவனம்/ வங்கியின் லோன் கணக்கு எண்.
- லோன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
- லோனின் மொத்தத் தொகை
- நிதியாண்டின் இறுதித் தேதியில் உள்ள நிலுவை லோன் தொகை
- பிரிவு 80EEB -இன் கீழ் வட்டி
- வாகனப் பதிவு எண்.
|
80G |
|
|
தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதியமைப்புகள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கான கழிவு
நன்கொடைகள் கீழ்க்கண்ட வகைகளில் கழிவு பெறத் தகுதியுள்ளவை: |
|
|
எந்த வரம்பும் இல்லாமல் |
100% கழிவு 50% கழிவு |
|
தகுதி வரம்பிற்கு உட்பட்டது |
100% கழிவு 50% கழிவு |
|
குறிப்பு: ₹2,000/-க்கு மிகையாக ரொக்க வடிவில் அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்கு இப்பிரிவின்கீழ் எவ்விதக் கழிவும் அனுமதிக்கப்படாது |
|
|
80GG |
||
|
வீட்டு வாடகைக்கான வரிக் கழிவு, இது HRA பெறாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பின்வருவனவற்றில் மிகக் குறைவான தொகை கழிவாக அனுமதிக்கப்படுகிறது: |
||
|
இக்கழிவிற்கு முந்தைய மொத்த வருமானத்தில் 10%-க்கும் அதிகமாகச் செலுத்தப்பட்ட வீட்டு வாடகை |
>மாதத்திற்கு ₹ 5,000
|
இந்த விலக்கிற்குமுன் மொத்த வருமானத்தில் 25% |
|
குறிப்பு: பிரிவு 80GG-ன் கீழ் வரிக் கழிவைக் கோருவதற்கு, பார்ம் 10BA-வைத் தாக்கல் செய்வது கட்டாயமாகும் மேலும் அட்டவணை 80 GG-இல் பார்ம் 10BA-வின் ரசீது எண்ணை உள்ளிட வேண்டும். |
||
|
80GGA |
|
அறிவியல் ஆராய்ச்சி அல்லது ஊரக வளர்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கான கழிவு. நன்கொடைகள் கீழ்க்கண்ட வகைகளில் கழிவு பெறத் தகுதியுள்ளவை: |
|
ஆராய்ச்சி சங்கம் அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனங்களுக்கானவை:
|
|
சங்கம் அல்லது நிறுவனம்
|
|
பிஎஸ்யு அல்லது உள்ளாட்சி அமைப்பு, அல்லது ஓர் சங்கம் அல்லது எந்தவொரு தகுதியான திட்டத்தையும் மேற்கொள்வதற்காகத் தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் |
|
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிதிகள்:
|
|
மத்திய அரசால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தேசிய நகர்ப்புற வறுமை ஒழிப்பு நிதி |
|
குறிப்பு: ₹ 2,000-க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கோ அல்லது மொத்த வருமானத்தில் வணிகம்/தொழிலில் இருந்து கிடைக்கும் இலாபம்/ஆதாயங்கள் சேர்ந்திருந்தாலோ இந்தப் பிரிவின் கீழ் எந்தக் கழிவும் அனுமதிக்கப்படாது |
|
80GGC |
|
|
அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கான கழிவு |
அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கான கழிவு. ஒருவேளை நன்கொடைகள் ரொக்கமாக அளிக்கப்பட்டிருக்குமானால் கழிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது |
|
80IA |
|
|
பிரிவு 80-IA(4)(iv)-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் இலாபம் தொடர்பான கழிவு |
100% வரி செலுத்துபவர் உட்கட்டமைப்பு வசதியை உருவாக்கத் தொடங்கிய அல்லது இயக்கிப் பராமரிக்கத் தொடங்கிய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து (AY) கணக்கிடப்படும் 15 / 20 மதிப்பீட்டு ஆண்டுகளுக்குள், தொடர்ச்சியான 10 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான இலாபத்திற்கு வழங்கப்படும் கழிவு 1 ஏப்ரல் 2017 அல்லது அதற்குப் பிறகு உள்கட்டமைப்பு வசதியின் மேம்பாடு அல்லது இயக்கம் மற்றும் பராமரிப்பைத் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எந்தவொரு கழிவு அனுமதிக்கப்படாது. (குறிப்பிட்ட வணிகத்தின் வளர்ச்சி, செயல்பாடு போன்றவை, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்டது என்றால் எந்தவொரு கழிவும் அனுமதிக்கப்படாது) |
|
80IB |
|
உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களைத் தவிர, குறிப்பிட்ட பிற தொழில்துறை நிறுவனங்களின் இலாபம் மற்றும் ஆதாயங்களுக்கான கழிவு — நிர்ணயிக்கப்பட்ட அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு 100% இலாபக் கழிவு அனுமதிக்கப்படும் (31 மார்ச் 2000-க்குப் பிறகு ஆனால் 1 ஏப்ரல் 2007-க்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தால்).
இப்பிரிவின் கீழ் உள்ள கழிவானது, தங்களது மொத்த வருமானத்தில் கீழ்க்காணும் தொழில்களிலிருந்து பெறப்பட்ட இலாபம் மற்றும் ஆதாயங்கள் உள்ளடங்கியுள்ள ஒரு வரி செலுத்துபவருக்குக் கிடைக்கும்: |
|
|
(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது) |
|
100% / 25% பல்வேறு வகையான நிறுவனங்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 5 / 10 / 7 ஆண்டுகளுக்கான இலாபத்திற்கு வழங்கப்படும் கழிவு (1 ஏப்ரல் 1999-க்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தால்). |
|
80IE |
|
|
வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான கழிவு
(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது) |
100% குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 10 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான இலாபங்களுக்கானது |
|
80JJA |
|
|
மக்கும் கழிவுகளைச் சேகரித்து மற்றும் பதப்படுத்தும் தொழிலில் இருந்து கிடைக்கும் இலாபம் மற்றும் ஆதாயங்கள் தொடர்பான கழிவு (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
100% ஒரு வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தில், மக்கும் கழிவுகளைச் சேகரித்தல், பதப்படுத்துதல் அல்லது சுத்திகரித்தல் தொழிலில் இருந்து பெறப்பட்ட இலாபம் மற்றும் ஆதாயங்கள் உள்ளடங்கியிருந்தால், அந்த இலாபத்திற்கு 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் கழிவு |
|
80JJAA |
|
|
பிரிவு 44AB பொருந்தக்கூடிய ஒரு வரி செலுத்துபவருக்கு, புதிய தொழிலாளர்கள் / ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக அனுமதிக்கப்படும் கழிவு (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு). |
30% சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்குக் கூடுதல் பணியாளர் செலவில் அனுமதிக்கப்படும் கழிவு |
|
80TTA |
|
|
தனிநபர் (மூத்த குடிமகன் அல்லாதோர்) / இந்து கூட்டுக்குடும்பத்தினர் ஆகியோரால் சேமிப்பு வங்கிக் கணக்கு வைப்புத்தொகை மூலம் பெறுப்படும் வட்டி மீதான கழிவு. |
கழிவின் வரம்பு ₹ 10,000/- |