Do not have an account?
Already have an account?

 

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான மூத்த குடிமக்கள் மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு பொருந்தும் வருமானவரி அறிக்கைகள் மற்றும் படிவங்கள்

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான மூத்த குடிமக்கள் மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு பொருந்தும் வருமானவரி அறிக்கைகள் மற்றும் படிவங்கள்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் ஒரு மேலோட்டமான விளக்கத்தை / பொதுவான வழிகாட்டுதலை அளிப்பதற்கு மட்டுமே மேலும் இது முழுமையானதல்ல. முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு வருமானவரிச் சட்டம், விதிகள் மற்றும் அறிவிப்புகளை பார்க்கவும்.

 

முந்தைய ஆண்டில் எந்தவொரு நேரத்திலும் 60 வயதை அடைந்த, ஆனால், 80 வயதிற்கு குறைவான ஒரு உள்நாடு வாழ் தனிநபர், வருமான வரி நோக்கங்களுக்காக, மூத்த குடிமகனாக கருதப்படுவார். முந்தைய ஆண்டில் எந்தவொரு நேரத்திலும் 80 வயதை அடைந்த ஒரு உள்நாடு வாழ் தனிநபர் மிக மூத்த குடிமகனாக கருதப்படுவார்.

 

குறிப்பு:

வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194P வகுத்துள்ள நிபந்தனைகளின் படி 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.

விலக்கு பெறுவதற்கான நிபந்தனைகள்:

  • மூத்த குடிமகன் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  • மூத்த குடிமகன் முந்தைய ஆண்டு "உள்நாட்டில் வாழ்பவராக" ஆக இருந்திருக்க வேண்டும்
  • மூத்த குடிமகன், ஓய்வூதிய வருமானம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் பெறுபவராகவும் மேலும் அவர் ஓய்வூதியம் பெறும் குறிப்பிட்ட வங்கியில் திரண்ட / ஈட்டிய வட்டி வருமானம் ஆகியவற்றை பெறுபவராக இருக்க வேண்டும்.
  • மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட வங்கியில் ஒரு உறுதிமொழியை சமர்ப்பிப்பார்கள்.
  • இந்த வங்கி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு 'குறிப்பிட்ட வங்கி'. அத்தியாயம் VI-A இன் கீழ் பிடித்தங்களையும் மற்றும் 87A இன் கீழ் தள்ளுபடியையும் பரிசீலித்த பின்னர், மூத்த குடிமக்களின் மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) செய்வதற்கு அத்தகைய வங்கிகள் பொறுப்பாகும்.
  • மேலே குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட வங்கி, 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரியை பிடித்தம் செய்தால், மூத்த குடிமக்கள் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பிரிவு 194P ஆனது 2021, ஏப்ரல் 1 முதல் பொருந்தும்.

 

 

1. ITR-1 (சஹஜ்) – தனிநபருக்கு மட்டுமே பொருந்தும்.

பின்வரும் மூலங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ₹ 50 லட்சம் வரை மொத்த வருமானம் உள்ள உள்நாடுவாழ் (பொதுவாக எப்போதாவது உள்நாட்டில் வாழ்பவரைத் தவிர) தனிநபருக்கு இந்த வருமான வரி அறிக்கை பொருந்தும்.

ஊதியம் / ஓய்வூதியம்

ஒரு வீடு வைத்திருப்பவர்

பிற வருவாய் ஆதாரங்கள் (வட்டி, குடும்ப ஓய்வூதியம், ஈவுத்தொகை போன்றவை.)

விவசாய வருமானம் ₹ 5,000 வரை

ரூ.125000 வரை பிரிவு 112A இன் கீழ் வரும் மூலதன ஆதாயங்கள்

 

குறிப்பு: ITR-1 ஐ பின்வருபவரால் பயன்படுத்த முடியாது:

  1. ஒரு வணிக குழுமத்தின் இயக்குநர்
  2. குறுகிய கால மூலதன ஆதாயம் பெற்றவர்
  3. பிரிவு 112A இன் கீழ் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1.25 லட்சத்திற்கு மேல் உள்ளது.
  4. முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளை வைத்திருப்பவர்கள்
  5. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள ஏதேனும் சொத்து (எந்தவொரு நிறுவனத்தின் பொருளாதார உரிமை உட்பட) வைத்திருப்பவர்
  6. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள எந்தவொரு கணக்கிலும் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்
  7. இந்தியாவிற்கு வெளியே எந்தவொரு ஆதாயம் மூலம் வருமானம் பெறுபவர்
  8. பிரிவு 194N இன் கீழ் வரி பிடித்தம் செய்யப்பட்டவர்
  9. ESOP இல் வரி செலுத்துதல் அல்லது வரி பிடித்தம் ஒத்திவைக்கப்பட்ட நபர்
  10. மொத்த வருமானம் ரூ. 50 லட்சங்களுக்கு மேல் உள்ளவர்.

 

 

2. ITR-2 - தனிநபர் (ITR 1க்கு தகுதியற்றவர்கள்) மற்றும் HUFக்கு பொருந்தும்.

இந்த வருமானவரி அறிக்கை தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்திற்கு (HUF) பொருந்தும்.

வணிகம் அல்லது தொழிலிலிருந்து இலாபங்கள் அல்லது ஆதாயங்கள் என்ற தலைப்பின் கீழ் வருமானம் இல்லாதவர்கள்

ITR-1 ஐத் தாக்கல் செய்ய தகுதி இல்லாதவர்கள்

 

3. ITR-3 - தனிநபர் மற்றும் HUFக்கு பொருந்தும்

இந்த வருமானவரி அறிக்கை தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்திற்கு (HUF) பொருந்தும்.

வணிகம் அல்லது தொழிலிலிருந்து இலாபங்கள் அல்லது ஆதாயங்கள் என்ற தலைப்பின் கீழ் வருமானம் உள்ளவர்கள்

ITR-1, 2 அல்லது 4 ஐ தாக்கல் செய்யத் தகுதி இல்லாதவர்கள்

 

 

 

 

4. ITR-4 (சுகம்)– தனிநபர், HUF மற்றும் நிறுவனத்திற்கு (LLP தவிர) பொருந்தும்

இந்த வருமானவரி அறிக்கை ₹ 50 இலட்சம் வரை மொத்த ஆண்டு வருமானம் பெறும் உள்நாடுவாழ் தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் (HUF) (பொதுவாக எப்போதாவது உள்நாட்டில் வாழ்பவரைத் தவிர) அல்லது நிறுவனம் (LLP அல்லாத) மற்றும் ஊகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் பெறுபவர்கள் மற்றும் பின்வரும் ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருமானம் பெறுபவர்களுக்கு பொருந்தும்:

ஊதியம் / ஓய்வூதியம்

ஒரு வீடு வைத்திருப்பவர்

பிற வருவாய் ஆதாரங்கள் (வட்டி, குடும்ப ஓய்வூதியம், ஈவுத்தொகை போன்றவை.)

விவசாய வருமானம் ₹ 5,000 வரை

பிரிவு 44AD / 44ADA / 44AE இன் கீழ் ஊக அடிப்படையில் வணிகம் / தொழிலில் இருந்து வரும் வருமானம் கணக்கிடப்படுகிறது

ரூ.125000 வரை பிரிவு 112A இன் கீழ் வரும் மூலதன ஆதாயங்கள்

 

குறிப்பு: ITR-1 ஐ பின்வருபவரால் பயன்படுத்த முடியாது:

  1. ஒரு வணிக குழுமத்தின் இயக்குநர்
  2. குறுகிய கால மூலதன ஆதாயம் பெற்றவர்
  3. பிரிவு 112A இன் கீழ் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1.25 லட்சத்திற்கு மேல் உள்ளது.
  4. முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளை வைத்திருப்பவர்கள்
  5. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள ஏதேனும் சொத்து (எந்தவொரு நிறுவனத்தின் பொருளாதார உரிமை உட்பட) வைத்திருப்பவர்
  6. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள எந்தவொரு கணக்கிலும் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்
  7. இந்தியாவிற்கு வெளியே எந்தவொரு ஆதாயம் மூலம் வருமானம் பெறுபவர்
  8. ESOP இல் வரி செலுத்துதல் அல்லது வரி பிடித்தம் ஒத்திவைக்கப்பட்ட நபர்
  9. மொத்த வருமானம் ரூ. 50 லட்சங்களுக்கு மேல் உள்ளவர்.

 

குறிப்பு: 2 ITR-4 (சுகம்) கட்டாயமில்லை. இது 44AD, 44ADA அல்லது 44AE ஆகிய பிரிவுகளின் கீழ் ஊக அடிப்படையில் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து இலாபம் மற்றும் ஆதாயங்களை அறிவிக்க தகுதியுடையவராக இருந்தால், ஒரு வரி செலுத்துபவர் தனது விருப்பத்தின் பேரில் பயன்படுத்தக்கூடிய எளிமைப்படுத்தப்பட்ட வருமானவரிப் படிவமாகும்.

 

 

பொருந்தக்கூடிய படிவங்கள்

1. படிவம் 15H - குறிப்பிட்ட வருமானங்களை, வரிப் பிடித்தம் செய்யாமல் வழங்கக் கோரும் தனிநபர் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்) சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

60 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட ஓரு உள்நாடு வாழ் தனிநபர் தனது வட்டி வருமானத்திற்கு, TDS பிடித்தம் செய்யாமலிருக்க, வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி

நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட வருமானம்

 

2. படிவம் 12BB - வரிக் கழிவிற்காக (பிரிவு 192 இன் கீழ்) ஒரு ஊழியர் செய்யும் உரிமைகோரல்களின் விவரங்கள்

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

ஒரு முதலாளி தனது பணியாளருக்கு வழங்குவது

மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படுதலை (TDS) கணக்கிடும் நோக்கத்திற்கக HRA, LTC, வீட்டுக் கடனுக்கான வட்டி பிடித்தம், வரி சேமிப்பு கோரிக்கைகள் / பிடித்தங்கள் ஆகிவற்றின் ஆதாரங்கள் அல்லது விவரங்கள்.

 

3. படிவம் 16 - ஊதியத்தின் மீது மூலத்தில் கழிக்கப்பட்ட வரியின் விவரங்கள் (வருமான வரிச் சட்டம், 1961 இன் 203 இன் கீழ் சான்றிதழ்)

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

ஒரு முதலாளி தனது பணியாளருக்கு வழங்குவது

வழங்கப்பட்ட ஊதியம், வரி பிடித்தங்கள் / விலக்குகள் மற்றும் செலுத்தப்பட வேண்டிய வரி / திரும்பப்பெறக்கூடிய வரியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரி பற்றிய விவரங்கள்.

 

 

4. படிவம் 16A – வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 203 இன் கீழ் ஊதியம் அல்லாத பிற வருமானத்தின் மீதான TDS சான்றிதழ்

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி பிடித்தம் செய்தவர் வரி செலுத்தியவருக்கு வழங்குவது

படிவம் 16A என்பது, மூலத்தில் பிடித்தம் செய்த வரியை (TDS) பற்றி காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் சான்றிதழாகும், இது செலுத்திய TDS தொகையின் தன்மை மற்றும் வருமான வரித் துறைக்கு செலுத்தப்பட்ட TDS ஆகியவற்றை அளிக்கிறது.

 

5.

படிவம் 26 AS

AIS (ஆண்டு தகவல் அறிக்கை)

வழங்குபவர்:

வருமான வரித் துறை (இது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது:

உள்நுழையவும் > மின்னணு தாக்கல் > வருமான வரி அறிக்கை > படிவம் 26AS ஐ காண்க)

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி.

வழங்குபவர்:

வருமான வரித் துறை (வருமான வரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு இதை அணுகலாம்)

மின்னணு-தாக்கல் இணைய முகப்பு > உள்நுழைவு > AISக்கு செல்லவும்

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

  • மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி
  • SFT தகவல்
  • வரி செலுத்துதல்
  • வருமானவரி நிலுவைத் தொகை / திருப்பிச் செலுத்திய தொகை

பிற தகவல்கள் (நிலுவையிலுள்ள/முடிவுற்ற நடவடிக்கைகள், GST பற்றிய தகவல், வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவை)

 

6. படிவம் 10E - ஊதியம், நிலுவைத்தொகையாகவோ அல்லது முன்பணமாகவோ வழங்கப்படும் போது, பிரிவு 89(1)இன் கீழ் நிவாரணம் பெறுவதற்காக வருமான விவரங்களை வழங்குவதற்கானப் படிவம்

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வருமான வரித் துறைக்கு ஒரு தனிநபர் வழங்குவது

  • நிலுவைத் தொகை / ஊதிய முன்பணம்
  • பணிக்கொடை
  • பணி நீக்கத்திற்கான இழப்பீடு
  • ஓய்வூதிய மாற்றுகை

 

7. படிவம் 67- வெளிநாட்டு வரி வரவு மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடு அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் பற்றிய அறிக்கை

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி செலுத்துபவர்

இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு நாடு அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து பெறுபட்ட வருமானம் மற்றும் கோரப்பட்ட வெளிநாட்டு வரி வரவு

 

8. படிவம் 3CB-3CD

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

பிரிவு 44AB இன் கீழ் ஒரு கணக்காளரால் தங்களது கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர்.

பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்.


 

 

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 44AB இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளின் தணிக்கை அறிக்கை மற்றும் விவரங்களின் அறிக்கை

 

9. படிவம் 3CEB

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

ஒரு சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் நுழைவதற்கு, பிரிவு 92E இன் கீழ் கணக்காளரிடமிருந்து அறிக்கையைப் பெற வேண்டிய வரி செலுத்துபவர்.

பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 92E இன் கீழ், சர்வதேச பரிவர்த்தனை(கள்) மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை(கள்) தொடர்பான தணிக்கை அறிக்கை

 

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான வரி அடுக்குகள்***

  • நிதிச் சட்டம் 2024 பிரிவு 115BAC இன் விதிகளை மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல் திருத்தியுள்ளது, இதன்படி தனிநபர், HUF, AOP (கூட்டுறவுச் சங்கங்கள் அல்லாதவை), BOI அல்லது செயற்கையான சட்டப்பூர்வ நபர் ஆகியவர்களுக்கு புதிய வரி விதிப்பு முறையே இயல்பு நிலை வரி விதிப்பு முறையாக மாறியுள்ளது. இருப்பினும், தகுதியான வரி செலுத்துவோர் புதிய வரிவிதிப்பன்றி பழைய வரிவிதிப்பு முறையின் கீழ் வரி விதிக்கப்படுவதைத் தேர்வு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. பழைய வரிவிதிப்பு முறை என்பது புதிய வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த வருமானவரி கணக்கீடு மற்றும் அடுக்குகளை குறிக்கிறது. பழைய வரிவிதிப்பு முறையில், வரி செலுத்துவோராகிய உங்களுக்கு பல்வேறு வரி பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை கோருவதற்கான விருப்ப வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இயல்பான வரி கணக்கீட்டில், வரிவிகிதங்கள் பழைய வரிவிதிப்பு முறையின் அடிப்படையில் ஒப்பிடப்படும்.
  • "வணிகம் அல்லாத வழக்குகள்/நபர்கள்" இல், வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக ITR இல் பயன்படுத்தலாம், மேலும் அத்தகைய ITR ஐ பிரிவு 139(1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிய தேதியில் அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்.
  • வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் பெறும் தகுதியுள்ள வரி செலுத்துபவர், வரி செலுத்துபவர் இயல்புநிலை வரிவிதிப்பு முறையிலிருந்து விலக விரும்பினால், வருமானவரி அறிக்கையை வழங்குவதற்கான படிவம்-10-IEA-ஐ 139(1) இன் கீழ் உரிய தேதியில் அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம். மேலும், அத்தகைய விருப்பத்தைத் திரும்பப் பெறும் நோக்கத்திற்காக, அதாவது புதிய வரி விதிப்பு முறையில் மீண்டும் நுழைவது, படிவம் எண்.10-IEA ஐ வழங்குவதன் மூலமும் செய்யப்படும். இருப்பினும், பழைய வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெற்று, இயல்புநிலை வரி முறையில் மீண்டும் நுழைவதற்கான விருப்பம் அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டில் மட்டுமே கிடைக்கும் அத்துடன் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் கொண்ட தகுதியுள்ள வரி செலுத்துபவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.

 

  1. முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட (குடியுரிமை உள்ளவர் அல்லது குடியுரிமை இல்லாதவர்) ஆனால் 80 வயதுக்கு குறைவானவர்களுக்கான வரி விகிதங்கள் பின்வருமாறு:

பழைய வரிவிதிப்பு முறை

இயல்புநிலை வரி விதிப்பு பிரிவு 115BAC (1A) இன் கீழ்

வருமான வரி அடுக்கு

வருமான வரி விகிதம்

உபரி வரி

வருமான வரி அடுக்கு

வருமான வரி விகிதம்

உபரி வரி

₹ 3,00,000 வரை

ஏதுமில்லை

ஏதுமில்லை

₹ 3,00,000 வரை

ஏதுமில்லை

ஏதுமில்லை

₹ 3,00,001 - ₹ 5,00,000**

₹ 3,00,000க்கு மேல் 5%

ஏதுமில்லை

₹ 3,00,001 - ₹ 7,00,000**

₹ 3,00,000க்கு மேல் 5%

ஏதுமில்லை

₹ 5,00,001 - ₹ 10,00,000

₹ 5,00,000க்கு மேல் 10,000 + 20%

ஏதுமில்லை

₹ 7,00,001 - ₹ 10,00,000

₹ 7,00,000க்கு மேல் 20,000 + 10%

ஏதுமில்லை

₹ 10,00,001- ₹ 50,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,10,000 + 30%

ஏதுமில்லை

₹ 10,00,001 - ₹ 12,00,000

₹ 10,00,000க்கு மேல் 50,000 + 15%

ஏதுமில்லை

₹ 50,00,001- ₹ 100,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,10,000 + 30%

10%

₹ 12,00,001 - ₹ 15,00,000

₹ 12,00,000க்கு மேல் 80,000 + 20%

ஏதுமில்லை

₹ 100,00,001- ₹ 200,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,10,000 + 30%

15%

₹ 15,00,001- ₹ 50,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

ஏதுமில்லை

₹ 200,00,001- ₹ 500,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,10,000 + 30%

25%

₹ 50,00,001- ₹ 100,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

10%

₹ 500,00,000க்கு மேல்

₹ 10,00,000க்கு மேல் 1,10,000 + 30%

37%

₹ 100,00,001- ₹ 200,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

15%

 

 

 

₹ ₹ 200,00,001க்கு மேல்

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

25%

  1. முந்தைய ஆண்டின் எந்த நேரத்திலும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட (குடியுரிமை உள்ளவர் அல்லது குடியுரிமை இல்லாதவர்) வயதுடைய தனிநபருக்கான வரி விகிதங்கள் பின்வருமாறு:

பழைய வரிவிதிப்பு முறை

பிரிவு 115BAC இன் கீழ் புதிய வரி முறை

வருமான வரி அடுக்கு

வருமான வரி விகிதம்

உபரி வரி

வருமான வரி அடுக்கு

வருமான வரி விகிதம்

உபரி வரி

₹ 5,00,000 வரை

ஏதுமில்லை

ஏதுமில்லை

₹ 3,00,000 வரை

ஏதுமில்லை

ஏதுமில்லை

₹ 5,00,001 - ₹ 10,00,000

₹ 5,00,000க்கு மேல் 20%

ஏதுமில்லை

₹ 3,00,001 - ₹ 7,00,000**

₹ 3,00,000க்கு மேல் 5%

ஏதுமில்லை

₹ 10,00,001- ₹ 50,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,00,000 + 30%

ஏதுமில்லை

₹ 7,00,001 - ₹ 10,00,000

₹ 7,00,000க்கு மேல் 20,000 + 10%

ஏதுமில்லை

₹ 50,00,001- ₹ 100,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,00,000 + 30%

10%

₹ 10,00,001 - ₹ 12,00,000

₹ 10,00,000க்கு மேல் 50,000 + 15%

ஏதுமில்லை

₹ 100,00,001- ₹ 200,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,00,000 + 30%

15%

₹ 12,00,001 - ₹ 15,00,000

₹ 12,00,000க்கு மேல் 80,000 + 20%

ஏதுமில்லை

₹ 200,00,001- ₹ 500,00,000

₹ 10,00,000க்கு மேல் 1,00,000 + 30%

25%

₹ 15,00,001- ₹ 50,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

ஏதுமில்லை

₹ 500,00,000க்கு மேல்

₹ 10,00,000க்கு மேல் 1,00,000 + 30%

37%

₹ 50,00,001- ₹ 100,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

10%

 

 

 

₹ 100,00,001- ₹ 200,00,000

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

15%

 

 

 

₹ ₹ 200,00,001க்கு மேல்

₹ 15,00,000க்கு மேல் 1,40,000 + 30%

25%

 

*குறிப்பு: பிரிவு 111A, 112, 112A இன் கீழ் மற்றும் ஈவுத்தொகை வருமானம் ஆகியவற்றின் கீழ் வரி விதிக்கத்தக்க வருமானத்திலிருந்து 25% மற்றும் 37% உயர்த்தப்பட்ட உபரி வரி விதிக்கப்படாது. எனவே, பிரிவு 115A, 115AB, 115AC, 115ACA மற்றும் 115E ஆகியவற்றின் கீழ் வரி விதிக்கப்படும் வருமானம் தவிர, பிற வருமானங்கள் மீது செலுத்த வேண்டிய வரியின் மீதான அதிகபட்ச உபரி வரி விகிதம் 15% ஆக இருக்கும்.


** பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி: குடியுரிமை பெற்ற தனிநபர்கள் வருமானவரி அறிக்கையில் 100% வரை தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள், இது கீழ்கண்ட வரி விதிப்பு முறைகளைப் பொறுத்து அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டது:

மொத்த வருமானம்

பழைய வரிவிதிப்பு முறை

புதிய வரி விதிப்பு முறை

பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி பொருந்தும்

ரூ. 5 லட்சம் வரை

மொத்த வருமானம் ரூ. .12,500க்கு மிகாமல் இருந்தால் இந்தியாவில் வசிக்கும் தனிநபர்களுக்கு ரூ. 5,00,000 வரை வரிச் சலுகை பொருந்தும் (NRI களுக்குப் பொருந்தாது)

மொத்த வருமானம் ரூ. .20,000க்கு மிகாமல் இருந்தால் இந்தியாவில் வசிக்கும் தனிநபர்களுக்கு ரூ. 7,00,000 வரை வரிச் சலுகை பொருந்தும் (NRI களுக்குப் பொருந்தாது)

5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை

ஏதுமில்லை

 

***குறிப்பு : இரண்டு வரிவிதிப்பு முறைகளிலும் வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணம் (ஏதேனும் இருந்தால்) தொகைக்கு 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் செலுத்த வேண்டும்.

 

பழைய வரி விதிப்பின் கீழ் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி, ₹ 2 கோடி அல்லது ₹ 5 கோடிக்கு மேல் ஈட்டிய வருமானத் தொகை மற்றும் புதிய வரி விதிப்பின் கீழ் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி, ₹ 2 கோடிக்கு மேல் ஈட்டிய வருமானத் தொகை ஆகியவற்றுக்கு உபரி வரியிலிருந்து விளிம்பு நிவாரணம் கோரலாம்:

நிகர வருமான வரம்பு

விளிம்புநிலை நிவாரணம்

(ரூ.) க்கு மேல்

(ரூ.) க்கு மேல் இருக்கக்கூடாது

 

 

50 இலட்சம்

1 கோடி

வருமானவரி மற்றும் உபரி வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 50 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்தின் தொகையை விட ரூ. 50 லட்சத்திற்கு வருமான வரியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.

1 கோடி

2 கோடி

வருமானவரி மற்றும் உபரி வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 1 கோடிக்கும் மேற்பட்ட வருமானத்தின் தொகையை விட ரூ. 1 கோடி வருமானவரியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது

2 கோடி

5 கோடி

வருமானவரி மற்றும் உபரி வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட வருமானத்தின் தொகையை விட ரூ. 2 கோடி வருமானவரியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது

5 கோடி

வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை, பழைய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ. 5 கோடிக்கு மேல் உள்ள வருமானத்தை விட ரூ. 5 கோடி மொத்த வருமானத்திற்கு வருமான வரியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.

 

நான் வரிச்சலுகை பெறக்கூடிய முதலீடுகள் / கொடுப்பனவுகள் / வருமானங்கள்

A. புதிய வரிவிதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோருக்கு பிரிவு 115BAC (1A) இன் கீழ் பின்வரும் பிடித்தங்கள் கிடைக்கும்:

1. பிரிவு 24(b) – வீட்டு கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து கழித்தல்:

சொத்தின் தன்மை

கடன் பெறும் நோக்கம்

அனுமதிக்கக்கூடியது (அதிகபட்ச அளவு)

ITR ஐ நிரப்புவதற்கு தேவையான விவரங்கள்

வாடகைக்கு விடுதல்

வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்

வரம்பேதும் இல்லாத உண்மையான மதிப்பு (ஆனால் "வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்" என்ற தலைப்பின் கீழ் இழப்பு ஏதேனும் இருந்தால், பட்டியல் CYLA இல் உள்ள வேறு எந்த இனங்களுக்கும் எதிராக அதை ஈடுசெய்ய முடியாது மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது)

• வங்கி / வங்கி அல்லாத நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடன்
• கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனம் / நபரின் பெயர்
• கடன் கணக்கு எண்.
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• பிரிவு 24(b) இன் கீழ் கடன் வாங்கிய மூலதனத்தின் மீதான வட்டி

2. வருமானவரி சட்டத்தின் அத்தியாயம் VIA-வி ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரி பிடித்தங்கள்

பிரிவு 80CCD(2)

மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்திற்காகப் பணி வழங்குபவர் அளித்த பங்களிப்புக்கான பிடித்தம்

அனைத்து வகை வேலை வழங்குபவர்களுக்கும்

ஊதியத்தில் 14% பிடித்த வரம்பு

B. பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துபவருக்கு பின்வரும் பிடித்தங்கள் கிடைக்கும்:

 

  1. பிரிவு 24(b) – வீட்டுக் கடன் மற்றும் வீட்டு மேம்பாட்டு கடனுக்காக செலுத்தப்படும் வட்டியை, வீட்டுச் சொத்து மூலம் வரும் வருமானத்திலிருந்து பிடித்தம். சொந்த குடியிருப்பான சொத்து என்றால், வீட்டுக் கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் அதிகப்பட்ச பிடித்தம் ₹ 2 லட்சம் ஆகும். பிரிவு 24[b] இன் கீழ் கடன் மீதான அனுமதிக்கபடக்கூடிய வட்டி கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:

சொத்தின் தன்மை

கடன் வாங்கியது

கடன் பெறும் நோக்கம்

அனுமதிக்கக்கூடியது (அதிகபட்ச அளவு)

தேவையான விவரங்கள்

சுய உபயோகத்திற்காக

1/04/1999 அன்று அல்லது அதற்குப் பிறகு

வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்

₹ 2,00,000

• வங்கி / வங்கி அல்லாத நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடன்
• கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனம் / நபரின் பெயர்
• கடன் கணக்கு எண்.
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• பிரிவு 24(b) இன் கீழ் கடன் வாங்கிய மூலதனத்தின் மீதான வட்டி

1/04/1999 அன்று அல்லது அதற்குப் பிறகு

வீட்டுச் சொத்தை பழுதுபார்ப்பதற்காக

₹ 30,000

1/04/1999க்கு முன்

வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்

₹ 30,000

1/04/1999க்கு முன்

வீட்டுச் சொத்தை பழுதுபார்ப்பதற்காக

₹ 30,000

வாடகைக்கு விடுதல்

எந்த நேரத்திலும்

வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்

வரம்பேதும் இல்லாத உண்மையான மதிப்பு
மதிப்பீட்டு ஆண்டில் இதர வருமானம் வரும் இனங்களுக்கு எதிராக ஈடுசெய்ய அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இழப்பு ரூ. 200000 ஆகும், மேலும் எஞ்சிய தொகையை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு 8 மதிப்பீட்டு ஆண்டுகள் வரை முன்னெடுத்துச் செல்லலாம்.

2. வருமானவரி சட்டத்தின் அத்தியாயம் VIA-வி ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரி பிடித்தங்கள்

 

பிரிவு 80C, 80CCC, 80CCD (1)

கொடுப்பனவுகளுக்கான பிடித்தம்

80C

  • ஆயுள் காப்பீட்டுக்கான தவணை
  • வருங்கால வைப்பு நிதி
  • குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு
  • கல்விக் கட்டணம்
  • தேசிய சேமிப்பு சான்றிதழ்
  • வீட்டுக் கடன் அசல் தொகை
  • மற்ற பல்வேறு கொடுப்பனவுகள்

 

ஒருங்கிணைந்த பிடித்தத்திற்கான வரம்பு ₹ 1,50,000

தகுதி வாய்ந்த ஒவ்வொரு செலுத்தலுக்கும் ITR இல் நிரப்ப வேண்டிய விவரங்கள்

  • பாலிசி எண் அல்லது ஆவண அடையாள எண்
  • பிரிவு 80C இன் கீழ் பிடித்தத்திற்கு தகுதியான தொகை

80CCC

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) ஓய்வூதியத் திட்டத்திற்கான அல்லது பிற காப்பீட்டாளரின் வருடாந்திரத் திட்டம்

80CCD(1)

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம்

 

 

பிரிவு 80CCD(1B)

 

80CCD (1) இன் கீழ் கோரப்படும் பிடித்தம் தவிர்த்து, மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தப்படும் கட்டணங்களுக்கான பிடித்தம்

பிடித்த வரம்பு ₹ 50,000

 
 

குறிப்பு:
பிரிவு 80 CCD (1),80 CCD (1B) இன் கீழ் பிடித்தம் கோரும் வரி செலுத்துபவர் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
• பங்களிப்பு தொகை
• வரி செலுத்துபவரின் PRAN

பிரிவு 80CCD(2)

மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்திற்காகப் பணி வழங்குபவர் அளித்த பங்களிப்புக்கான பிடித்தம்

தொழில் வழங்குபவர் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவோ (PSU) அல்லது பிறராகவோ இருந்தால்

ஊதியத்தில் 10% பிடித்த வரம்பு

தொழில் வழங்குபவர் மத்திய அல்லது மாநில அரசாக இருந்தால்

ஊதியத்தில் 14% பிடித்த வரம்பு

 

பிரிவு 80D

மருத்துவ காப்பீட்டு தவணை மற்றும் தடுப்பு உடல்நல பரிசோதனைக்கு கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கான பிடித்தம்

தனக்கு / வாழ்க்கைத்துணை அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு

 

₹ 25,000 (யாரேனும் மூத்த குடிமகனாக இருந்தால் ₹ 50,000)

நோய் தடுப்பு சுகாதார பரிசோதனைக்கு ₹ 5,000 மேலே உள்ள வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளது

பெற்றோருக்கு

₹ 25,000 (யாரேனும் மூத்த குடிமகனாக இருந்தால் ₹50,000)

நோய் தடுப்பு சுகாதார பரிசோதனைக்கு ₹ 5,000 மேலே உள்ள வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

 

 

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்களுக்கான பிடித்தம்

 

தனக்கு / வாழ்க்கைத் துணைக்கு அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு

பிடித்த வரம்பு ₹ 50,000

பெற்றோருக்கு

பிடித்த வரம்பு ₹ 50,000

தயவுசெய்து கவனிக்கவும்:

பிரிவு 80 D இன் கீழ் நீங்கள் பிடித்தத்தை கோர வேண்டினால், அப்பொழுது கீழே உள்ள விவரங்களை கட்டாயமாக நீங்கள் உள்ளிட வேண்டும்:
• காப்பீட்டாளரின் பெயர் (காப்பீட்டு நிறுவனம்)
• பாலிசி எண்
• சுகாதார காப்பீட்டுத் தொகை

பிரிவு 80DD

 

 

 

சார்ந்துள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் பராமரிப்பு அல்லது மருத்துவச் சிகிச்சைக்காக செலுத்திய / கொடுப்பனவுகளுக்கு அல்லது உரிய அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட / வைப்புத் தொகைக்கான பிடித்தம்

சீரான பிடித்தம்
₹ 75,000
செலவைப் பொருட்படுத்தாமல், இயலாமை கொண்ட ஒரு நபருக்கு கிடைக்கிறது.

பிடித்தத் தொகையானது
₹ 1,25,000
அந்த நபருக்கு இயலாமையின் கடுமைத்தன்மை (80% அல்லது அதற்கு மேல்)இருக்குமானால்=

 
 

குறிப்பு:

பிரிவு 80 DD இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, ITR இல் கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்:
• இயலாமையின் தன்மை
• இயலாமை வகை
• பிடித்தத்திற்கான தொகை
• சார்ந்திருப்பவரின் வகை
• சார்ந்திருப்பவரின் PAN
• சார்ந்திருப்பவரின் ஆதார்
• ஒரு வேளை ஆட்டிசம், பெருமூளை முடக்குவாதம் அல்லது பல்வகை இயலாமைகள் இருந்தால் தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10 IA இன் ஒப்புகை எண்
• UDID எண் (இருந்தால்)

பிரிவு 80DDB

 

குறிப்பிட்ட நோய்களுக்கு சுயமாகவோ அல்லது சார்ந்திருப்போரின் மருத்துவ சிகிச்சைக்காகச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கான பிடித்தம்

பிடித்த வரம்பு ₹ 40,000

(மூத்த குடிமகனாக இருந்தால் ₹ 1,00,000)

 
 

 

பிரிவு 80E

தனக்கு அல்லது உறவினரின் உயர் கல்விக்கான கடனின்பால் செலுத்தும் வட்டிக்கான பிடித்தம்

வாங்கிய கடனுக்கான வட்டிக்காகச் செலுத்தப்பட்ட மொத்த தொகை

குறிப்பு:

பிரிவு 80E இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, ITR இல் கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்:
• வங்கி / நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
• கடன் பெறப்பட்ட நிறுவனம் / வங்கியின் பெயர்
• வங்கி / நிறுவனத்தின் கடன் கணக்கு எண்.
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• பிரிவு 80E இன் கீழ் வட்டி

பிரிவு 24(b) இல் உள்ள வரம்பு தீர்ந்துவிட்டால் மட்டுமே 80E இன் கீழ் விலக்கு கோர முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பிரிவு 80EE

1, ஏப்ரல் 2016 முதல் 31, மார்ச் 2017 வரை கடன் அனுமதிக்கப்பட்ட வீட்டு மனை சொத்தை கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டி செலுத்துதலுக்கான பிடித்தம்

பிடித்தத்திற்கான வரம்பு
₹ 50,000
பெறப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியிக்கான

குறிப்பு:

பிரிவு 80EE இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, ITR இல் கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்
• கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்
• வங்கி / நிறுவனத்தின் கடன் கணக்கு எண்.
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• பிரிவு 80EE இன் கீழ் வட்டி

 

பிரிவு 80EEA

முதல் முறையாக சொத்தைக் (வீடு) கையகப்-படுத்துவதற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டி செலுத்துதலில் பிடித்தம் - 1 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2022 வரை உள்ள காலத்தில் கடன் கொடுக்கப்பட்டிருந்தால்-(இது தனிநபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிடித்தம்) மற்றும் பிரிவு 80EE-ன் கீழ் இந்த பிடித்தம் கோரப்பட்டிருக்கக் கூடாது.

 

பிடித்தத்திற்கான வரம்பு
₹ 1,50,000
பெறப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியிக்கான

குறிப்பு:

பிரிவு 80EEA இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, ITR இல் கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்
• குடியிருப்பு வீட்டு சொத்திற்கான முத்திரை கட்டணம்
• வங்கி / நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
• கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்
• வங்கி / நிறுவனத்தின் கடன் கணக்கு எண்
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• பிரிவு 80EEA இன் கீழ் வட்டி

பிரிவு 24(b) இல் உள்ள வரம்பைத் தாண்டி விட்டால் மட்டுமே 80EEA இன் கீழ் பிடித்தம் கோர முடியும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். மேலும், 80EE அல்லது 80EEA ஐ கடன் ஒப்புதல் தேதி மற்றும் பிற தகுதியான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வரி செலுத்துபவர் கோர முடியும்.

பிரிவு 80EEB

1 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2023 வரை கடன் அனுமதிக்கப்பட்ட மின்சார வாகனம் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி செலுத்தலுக்கு பிடித்தம்

பிடித்தத்திற்கான வரம்பு
₹ 1,50,000
பெறப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியிக்கான

குறிப்பு:

பிரிவு 80EEB இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, ITR இல் கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்
• வங்கி / நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
• கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்
• வங்கி / நிறுவனத்தின் கடன் கணக்கு எண்.
• கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
• மொத்த கடன் தொகை
• நிதியாண்டின் கடைசி தேதியின்படி நிலுவையில் உள்ள கடன்
• வட்டித் தொகை 80EEB
• வாகன பதிவு எண்.

பிரிவு 80G

பரிந்துரைக்கப்பட்ட நிதி, தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கான விலக்கு.

வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது

எந்த வரம்பும் இல்லாமல்

100% பிடித்தம்

50% பிடித்தம்

தகுதி வரம்புக்கு உட்பட்டது

100% பிடித்தம்

50% பிடித்தம்

 



 

 

 

 

 

 

குறிப்பு: இந்தப் பிரிவின் கீழ் ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்பட்ட நன்கொடைக்கு எந்த பிடித்தமும் அனுமதிக்கப்பட மாட்டாது.

 

பிரிவு 80GG

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அல்லது வீட்டு வாடகைப் படி (HRA) ஊதியத்தின் பாகமாக இல்லாதவர்களுக்கு மட்டுமே, வீட்டிற்குச் செலுத்தப்படும் வாடகைக்கான பிடித்தம்

கீழுள்ளவற்றில் எது மிகவும் குறைவானதோ அது பிடித்தமாக அனுமதிக்கப்படும்

இந்த பிடித்தத்திற்கு முன்னர் செலுத்தப்பட்ட வாடகை மொத்த வருமானத்தில் 10% குறைக்கப்பட்டது

மாதம் ₹ 5,000

மொத்த வருமானத்தில் 25% (நீண்ட கால மூலதன ஆதாயங்களைத் தவிர, பிரிவு 111A-ன்கீழ் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் அல்லது பிரிவு 115A அல்லது 115D-ன்கீழ் வருமானம்)


குறிப்பு: பிரிவு 80GG இன் கீழ் பிடித்தம் கோருவதற்கு, படிவம் 10 BA ஐ தாக்கல் செய்வது கட்டாயமாகும், மேலும் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது பட்டியல் 80 GG இல் படிவம் 10 BA (ஒப்புகை எண்ணை) உள்ளிட வேண்டும்.

 

பிரிவு 80GGA

அறிவியல் ஆராய்ச்சி அல்லது ஊரக வளர்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கான கழிவு


வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:

பின்வரும் நோக்கத்துக்கான ஆராய்ச்சிக் கூட்டமைப்பு அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது கூட்டமைப்பு

  • அறிவியல் ஆராய்ச்சி
  • சமூக அறிவியல் அல்லது புள்ளிவிவர ஆராய்ச்சி

பின்வரும் நோக்கத்திற்காக செயல்படும் கூட்டமைப்பு அல்லது அமைப்பு

  • கிராமப்புற வளர்ச்சி
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் அல்லது காடு வளர்ப்பு

பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது உள்ளூர் நிர்வாகம் அல்லது தகுதிவாய்ந்த கருத்திட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக தேசிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் அல்லது நிறுவனம்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிதிகள்

  • காடு வளர்ப்பு
  • கிராமப்புற வளர்ச்சி

மத்திய அரசால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தேசிய நகர்ப்புற வறுமை ஒழிப்பு நிதி

 

 

குறிப்பு: இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும், ₹ 2000/ - க்கு மேல் நன்கொடை ரொக்கமாக வழங்கப்பட்டாலோ அல்லது மொத்த வருமானத்தில் லாபம் / வணிகம் / தொழில் ஆகியவற்றின் வருமானங்களும் அடங்கும் என்றாலோ, அனுமதிக்கப்பட மாட்டாது

 

 

பிரிவு 80GGC

 

 

அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கான கழிவு

 

அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கான கழிவு

ஒருவேளை நன்கொடைகள் ரொக்கமாக அளிக்கப்பட்டிருக்குமானால் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது

 
 

 

பிரிவு 80TTB

 

 

குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களால் வைப்பு நிதி மூலம் பெறப்பட்ட வட்டி மீதான பிடித்தம்

பிடித்தத்திற்கான வரம்பு
₹ 50,000/-

 
 

 

பிரிவு 80U

 

 

இயலாமையுடன் உள்ள ஒரு குடியுரிமை தனிநபர் வரி செலுத்துவோருக்கான பிடித்தங்கள்

 

இயலாமை கொண்ட ஒரு நபருக்கு ஏற்படும் செலவைப் பொருட்படுத்தாமல் நிலையான தொகை ₹ 75,000 பிடித்தம்

கடுமையான இயலாமை கொண்ட ஒரு நபருக்கு (80% அல்லது அதற்கு மேற்பட்ட) நிலையான தொகை ₹ 1,25,000 பிடித்தம், ஏற்படும் செலவைப் பொருட்படுத்தாமல்

 
 

தயவுசெய்து கவனிக்கவும்:

பிரிவு 80U இன் கீழ் பிடித்தத்தை கோருவதற்கு, கீழ் கண்ட விவரங்களை வழங்க வேண்டியிருக்கும்.
• இயலாமையின் தன்மை
• இயலாமை வகை
• பிடித்தத்திற்கான தொகை
• ஆட்டிசம், பெருமூளை முடக்குவாதம் அல்லது பல்வகை இயலாமைகள் இருந்தால் தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10 IA இன் ஒப்புகை எண்.
• UDID எண் (இருந்தால்)

 

வரி செலுத்துவோரின் வயதை கருதாமல் வழங்கப்படும் வரி சலுகைகளுக்கும் மேலாக, மூத்த / மிக மூத்த குடிமகனுக்கென்று சில மேம்பட்ட/ கூடுதல் சலுகைகள் உள்ளன. கூடுதல் சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 

வருமானவரி படிவத்தை காகித வடிவதில் தாக்கல் செய்யலாம்

மிக மூத்த குடிமக்கள் (80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) படிவம் 1 அல்லது 4 ஐப் பயன்படுத்தி ஆஃப்லைன் / காகித பயன்முறையில் தங்கள் ITR ஐ சமர்ப்பிக்க விருப்பம் உள்ளது. மின்னணு தாக்கல் விருப்பமும் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கிறது.

 

முன்கூட்டிய வரி செலுத்துவதில் இருந்து விலக்கு

பிரிவு 208 இன் படி, ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பு ₹ 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் ஒவ்வொரு நபரும் முன்கூட்டிய வரி வடிவில் தனது வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஆனால், பிரிவு 207 ஒரு உள்நாடுவாழ் மூத்த குடிமகனுக்கு முன்கூட்டிய வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. எனவே, வணிகம் அல்லது தொழிலில் இருந்து எந்தவொரு வருமானமும் இல்லாத, ஒரு உள்நாடுவாழ் மூத்த குடிமகன், முன்கூட்டிய வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, ITR 1 மற்றும் ITR 2 ஐ தாக்கல் செய்யும் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு 234B மற்றும் 234C ஆகியவை பொருந்தாது.

 

வங்கி வைப்புத்தொகை மீதான வட்டிக்கான வருமானவரி பிடித்தம்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTB வங்கிகள், அஞ்சலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிச் சலுகைகளை அனுமதிக்கிறது. மூத்த குடிமகனின் வட்டி வருமானத்திற்கு அதிகபட்சமாக ₹ 50,000 வரை பிடித்தம் அனுமதிக்கப்படுகிறது. சேமிப்பு வைப்புத்தொகை மற்றும் நிலையான வைப்புத்தொகையில் ஈட்டப்பட்ட வட்டி இரண்டும் இந்த விதியின் கீழ் பிடித்தத்திற்கு தகுதியுடையவை.

மேலும், வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 194A இன் கீழ், ஒரு மூத்த குடிமகனுக்கு வங்கி, அஞ்சலகம் அல்லது கூட்டுறவு வங்கி ₹ 50,000 வரை வட்டி செலுத்தினால் மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படாது (TDS). இந்த வரம்பானது ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக கணக்கிடப்பட வேண்டும்.

 

மருத்துவ காப்பீடு மற்றும் செலவு தொடர்பான வரி பயன்கள்

வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80D இன் படி, மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் செலுத்துவதற்கு ₹ 50,000 வரை அதிக பிடித்தம் பெறலாம். மூத்த குடிமக்கள் அல்லாத பட்சத்தில் வரம்பு ₹ 25,000 ஆகும்.

மேலும் வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80DDB சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக ஒரு தனிநபர் தனக்காகவோ அல்லது சார்ந்திருப்பவருக்காகவோ செய்யும் செலவுகளுக்கு வரி பிடித்தம் அளிக்க அனுமதிக்கிறது. அதிகபட்ச பிடித்தத் தொகை மூத்த குடிமகன் என்றால் ₹ 1 லட்சம் (மூத்த குடிமகன் அல்லாத வரி செலுத்துவோருக்கு ₹ 40,000).

 

கடைசியாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பக்கம் அல்லது புதுப்பிக்கப்பட்டது: