அணுகல்நிலை அறிக்கை
பயன்படுத்தும் சாதனத்தின் வகை, தொழில்நுட்பம் அல்லது திறன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து பயனர்களுக்கும் இணைய முகப்பு அணுகக்கூடியது என்பதை உறுதி செய்ய துறை கடமைப்பட்டுள்ளது. அதன் பயனர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டை வழங்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேசை / மடிக் கணினிகள், இணையம் இயக்கப்பட்ட அலைபேசி சாதனங்கள் போன்ற பல்வேறு சாதனங்களிலிருந்து இந்த இணைய முகப்பைக் காணலாம். இந்த இணைய முகப்பின் பயனாளர்களுக்கு உதவுவதற்காக, உலகளாவிய வடிவமைப்பின் தரநிலைகளுக்கு இணங்குவதையும், பயன்பாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதையும் துறை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணைய முகப்பு இந்திய அரசாங்க வலைத்தளங்களுக்கான வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் உலகளாவிய வலை கூட்டமைப்பு (W3C) வகுத்துள்ள வலை உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்கள் (WCAG) 2.0 இன் நிலை-Aஐப் பின்பற்றுகிறது. இருப்பினும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், இந்த இணைய முகப்பின் செயல்பாட்டைச் சரிசெய்ய, நிறுத்த அல்லது புதுப்பிக்க மற்றும்/ அல்லது எந்தவொரு பயனாளரின் பாதுகாப்பு மற்றும் தரத்தின் நலனுக்காக அணுகல் அல்லது உள்நுழைவு செயல்பாட்டை முடக்குவதற்கான உரிமை துறைக்கு உள்ளது என்று பயனாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.