மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யவும்: வரிப்பிடித்தம் மற்றும் வசூல் செய்பவருக்கு
படிப்படியான வழிகாட்டுதல்
படி 1: மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் முதன்மைப் பக்கத்திற்குச் சென்று பதிவுசெய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: மற்றவை என்பதை கிளிக் செய்யவும் மற்றும் வரிப்பிடித்தம் செய்பவர் மற்றும் வசூலிப்பவர் என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: நிறுவனத்தின் வரி பிடித்தம் மற்றும் TAN ஐ உள்ளிட்டு உறுதி செய் என்பதை கிளிக் செய்யவும் .
படி 4a: TRACES உடன் பதிவு செய்யப்பட்ட, தரவுத்தளத்தில் TAN இருந்து பதிவு கோரிக்கை முன்னரே எழுப்பப்படவில்லை மற்றும் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தால்:
- அடிப்படை விவரங்கள் பக்கத்தைக் காணத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடிப்படை விவரங்கள் முன்-நிரப்பல் செய்யப்பட்டுள்ளன. தொடரவும் என்பதை கிளிக் செய்க.
படி 4b: தரவுத்தளத்தில் TAN இருந்து, ஆனால் TRACES இல் பதிவு செய்யப்படவில்லை மேலும் பதிவு வேண்டுகோள் முன்னரே எழுப்பப்படவில்லை மற்றும் ஒப்புதலுக்காக நிலுவையிலும் இல்லை:
- TRACES பக்கத்தைக் காண தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
- அடிப்படை விவரங்கள் பக்கத்தைக் காண TRACES இல் மின்னணு தாக்கல் மூலம் பதிவு செய்யவும்.
- தேவையான அடிப்படை விவரங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு: முதலில் நீங்கள் TRACES இல் பதிவு செய்ய வேண்டும். அங்கிருந்து, மின்னணு-தாக்கல் மூலம் பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்வதனால் மின்னணு-தாக்கல் பதிவு செய்யும் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
படி 4c: தரவுதளத்தில் TAN இருந்து, பதிவு வேண்டுகோள் முன்னரே எழுப்பப்பட்டு ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தால்:
- பிழைச் செய்தி ஒன்று தோன்றும், பதிவு செயல்முறையைத் திரும்பப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம்.
படி 5: வரி செலுத்தும் அல்லது வரி வசூலிக்கும் நபரின் விவரங்களை உள்ளிட்டுத் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 6: முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் அஞ்சல் முகவரி உள்ளிட்ட தொடர்பு விவரங்களை வழங்கவும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: படி 6 இல் உள்ளிட்ட உங்கள் முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு இரண்டு தனித்தனி OTPகள் அனுப்பப்படுகின்றன. தனி 6-இலக்க OTP ஐ உள்ளிட்டுத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே OTP செல்லுபடியாகும்
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன
- OTP காலாவதியாகும் கவுண்ட்-டவுன் டைமர் உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்தால், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்
படி 8: சரிபார்ப்பு விவரங்கள் பக்கத்தில் வழங்கப்பட்ட விவரங்களை மீண்டும் சரிபார்த்து, தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தவும், பின்னர் உறுதிப்படுத்துஎன்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: கடவுச்சொல்லை அமைக்கவும் என்ற பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான, கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும், ஆகிய இரண்டு உரைப் பெட்டிகளிலும் உள்ளிட்டு, உங்கள் தனிப்பயனாக்கபட்ட செய்தியை அமைத்து பதிவு செய்என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தது 8 எழுத்துக்களாகவும் அதிகபட்சம் 14 எழுத்துக்களாகவும் இருக்க வேண்டும்
- இதில் பெரிய எழுத்துகள் மற்றும் சிறிய எழுத்துகள் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்
- இதில் ஒரு சிறப்பு எழுத்துருக்கள் (எ. கா. @#$%) இருக்க வேண்டும்
பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்கான இந்தப் பரிவர்த்தனை அடையாளத்தை குறித்துக் கொள்ளவும். தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு பதிவு செயல்முறையானது நிறைவடைகிறது.