Do not have an account?
Already have an account?

 

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான உள்ளாட்சி அமைப்பிற்கு ஏற்புடையதான அறிக்கைகள் மற்றும் படிவங்கள்

 

பொறுப்புத்துறப்பு: இந்தப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் ஒரு மேலோட்டமான விளக்கத்தை / பொதுவான வழிகாட்டுதலை அளிப்பதற்கு மட்டுமே மேலும் இது முழுமையானதல்ல. முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, வருமான வரிச் சட்டம், விதிகள் மற்றும் அறிவிப்புகளைப் பார்க்கவும்.

 

பிரிவு 2(31) இன் படி, வருமானவரிச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்பும் ஒரு வரி செலுத்துபவராகவும் வரி செலுத்துபவர்களின் அங்கமாகவும் உள்ளது.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்பின் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யும் பிரிவு 10(20) இன் நோக்கத்திற்காக, உள்ளாட்சி அமைப்பு என்ற சொற்றொடரின் பொருள்:
(i) அரசியலமைப்புச் சட்டத்தின் 243 வது பிரிவின் சரத்து (d) இல் குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சாயத்து; அல்லது
(ii) அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 243P இன் உட்கூறு (e) இல் குறிப்பிடப்பட்டுள்ள நகராட்சி; அல்லது
(iii) ஒரு நகராட்சி அல்லது உள்ளூர் நிதி கட்டுப்பாடு அல்லது மேலாண்மைக்காக அரசாங்கத்தால் சட்டப்பூர்வமான உரிமை அல்லது பொறுப்பு வழங்கப்பட்ட நகராட்சி அமைப்பு மற்றும் மாவட்ட வாரியம்; அல்லது (iv) கண்டோன்மெண்ட் சட்டம், 1924(1924 இன் 2)' பிரிவு 3 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி கண்டோன்மெண்ட் வாரியம்;

 

1. ITR-5

இந்த படிவத்தை பயன்படுத்தகூடிய நபர்:

  1. நிறுவனம்
  2. பங்குதாரர் கூட்டு வியாபார நிறுவனம் (LLP)
  3. தனி நபர்கள் சங்கம் (AOP)
  4. தனிநபர்கள் அமைப்பு (BOI)
  5. பிரிவு 2(31) இன் உட்பிரிவு (vii) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நபர் (AJP)
  6. பிரிவு 2(31) இன் உட்பிரிவு (vi) இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு
  7. பிரிவு 160(1)(iii) அல்லது (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிநிதி மதிப்பீட்டாளர்/வரிவிதிப்புக்குரியவர்
  8. கூட்டுறவு சங்கம்
  9. சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் கீழ் அல்லது எந்தவொரு மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம்,
  10. படிவம் ITR-7 ஐ தாக்கல் செய்ய தகுதியுள்ள அறக்கட்டளைகள் தவிர்ந்த பிற அறக்கட்டளைகள்
  11. இறந்த நபரின் சொத்துகள்
  12. திவாலானவரின் சொத்து
  13. பிரிவு 139(4E) இல் குறிப்பிடப்பட்டுள்ள வணிக அறக்கட்டளை
  14. பிரிவு 139(4F) இல் குறிப்பிடப்பட்ட முதலீட்டு நிதியம்

 

குறிப்பு: இருப்பினும், பிரிவு 139(4A) அல்லது 139(4B) அல்லது 139(4D) இன் கீழ் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய ஒருவர் இந்த படிவத்தைப் பயன்படுத்தக்கூடாது.

 

2. ITR-7

பிரிவு 139 (4A) அல்லது பிரிவு 139 (4B) அல்லது பிரிவு 139 (4C) அல்லது பிரிவு 139 (4D) இன் கீழ் வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பொருந்தும்.

139(4A) –
அறக்கட்டளையின் கீழ் முழுமையாக / பகுதியாக தொண்டு அல்லது மத நோக்கங்களுக்காக வைத்திருக்கும் சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட வருமானம்

139(4B) –
ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி

139(4C) –
பிரிவு 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கூட்டமைப்பு, செய்தி நிறுவனம் முதலிய பல்வேறு நிறுவனங்கள்

139(4D) – பிரிவு 35 இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனங்கள்

 

 

குறிப்பு: பிரிவு 10 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிபந்தனையின்றி வருமான விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் வகை, மற்றும் பிரிவு 139 இன் விதிகளின் கீழ் கட்டாயமாக வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள், வருமானவரி தாக்கல் செய்ய இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம் (எடுத்துக்காட்டாக - உள்ளாட்சி அமைப்பு)

 

பொருந்தக்கூடிய படிவங்கள்

1.

படிவம் 26 AS

AIS (ஆண்டு தகவல் அறிக்கை)

வழங்குபவர்:

வருமான வரித் துறை (இது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது:

உள்நுழையவும் > மின்னணு தாக்கல் > வருமானவரி அறிக்கை > படிவம் 26AS ஐ காண்க)

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி.

வழங்குபவர்:

வருமான வரித் துறை (வருமான வரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு இதை அணுகலாம்)

மின்னணு-தாக்கல் இணைய முகப்பு > உள்நுழைவு > AISக்கு செல்லவும்

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

  • மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி
  • SFT தகவல்
  • வரி செலுத்துதல்
  • வருமானவரி நிலுவைத் தொகை / திருப்பிச் செலுத்திய தொகை

பிற தகவல்கள் (நிலுவையிலுள்ள/முடிவுற்ற நடவடிக்கைகள், GST பற்றிய தகவல், வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவை)

 

குறிப்பு: 26AS இல் கிடைத்த (முன்கூட்டிய வரி/SAT, பகூடுதலாக செலுத்திய வரியினை திரும்பப்பெறுவதற்கான விவரங்கள், SFT பரிவர்த்தனை, பிரிவு 194 IA,194 IB,194M இன் கீழ் TDS, TDS செலுத்த தவறியவைகள்) தொடர்பான தகவல்கள் இப்போது AIS இல் கிடைக்கின்றன.

 

2. படிவம் 3CA-3CD

சமர்ப்பிக்க வேண்டியவர்:

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி செலுத்துபவர் பிரிவு 44AB இன் கீழ் ஒரு பட்டயக் கணக்காளரால் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 44 AB இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளின் தணிக்கை அறிக்கை மற்றும் விவரங்களின் அறிக்கை

 

3. படிவம் 3CB-3CD

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

பிரிவு 44AB இன் கீழ் ஒரு பட்டயக் கணக்காளரால் தங்களது கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர். பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 44 AB இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளின் தணிக்கை அறிக்கை மற்றும் விவரங்களின் அறிக்கை

 

4. படிவம் 16A – வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 203 இன் கீழ் ஊதியம் அல்லாத பிற வருமானத்தின் மீதான TDS சான்றிதழ்

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி பிடித்தம் செய்தவர் வரி செலுத்தியவருக்கு வழங்குவது

படிவம் 16A என்பது, மூலத்தில் பிடித்தம் செய்த வரியை (TDS) பற்றி காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் சான்றிதழாகும், இது செலுத்திய TDS தொகையின் தன்மை மற்றும் வருமானவரித் துறைக்கு செலுத்தப்பட்ட TDS ஆகியவற்றை அளிக்கிறது.

 

மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான உள்ளாட்சி அமைப்புக்கான வரி அடுக்குகள்

2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கு உள்ளாட்சி அமைப்பு ஒன்றுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.

 

 

உபரி வரி, விளிம்புநிலை நிவாரணம் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ்

 

உபரி வரி என்றால் என்ன?

மொத்த வருமானம் குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டினால் பின்வரும் விகிதங்களில் வருமான வரியின் தொகைக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது:

  • வரி விதிக்கக்கூடிய வருமானம் ₹ 1 கோடிக்கு மேல் இருந்தால் 12%

விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?

கீழ்க்கண்ட முறையில் உபரி வரியிலிருந்து விளிம்புநிலை நிவாரணம் கிடைக்கிறது:

  • நிகர வருமானம் ₹ 1 கோடியைத் தாண்டினால், செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணம் ₹ 1 கோடிக்கு மேல் வருமானத்தை விட அதிகமாக ₹ 1 கோடிக்கு மேல் செலுத்த வேண்டிய மொத்த வருமான வரியை விட அதிகமாக இருக்காது.

சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் என்றால் என்ன?

சுகாதாரம் மற்றும் கல்வி வரியின் மீதான வரி - வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணம் (ஏதேனும் இருந்தால்) தொகையில் @ 4% செலுத்தப்படும்.

 

விலக்கு / 10(20) பிரிவின் கீழ் மொத்த வருமானத்தில் சேர்க்கப்படாத வருமானம் :
ஒரு உள்ளாட்சி அமைப்பின் வரி விதிப்பிற்குரிய வீட்டு சொத்திலிருந்தான வருமானம், மூலதன ஆதாயங்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் அல்லது அதன் சொந்த அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் வணிக அல்லது வியாபார நோக்கில் ஒரு பொருள் அல்லது சேவையை (தண்ணீர் அல்லது மின்சாரம் அல்லாத) வழங்குவதிலிருந்து அல்லது அதன் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியிலோ அல்லது அதற்கு வெளியிலோ நீர் அல்லது மின்சாரம் வழங்குவதிலிருந்து சேரும் அல்லது எழும் வருமானம்.

 

நான் வரிச்சலுகை பெறக்கூடிய முதலீடுகள் / கொடுப்பனவுகள் (செலுத்துதல்கள்) / வருமானங்கள்

 

வருமானவரிச் சட்டத்தின் அத்தியாயம் VI-A இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரி பிடித்தங்கள்

பிரிவு 80G

சில நிதிகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கான பிடித்தம்.

வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:

தகுதி வரம்புக்கு உட்பட்டது

 

நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில்100%

நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில்50%

எந்த வரம்பும் இல்லாமல்

 

நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில்100%

நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில்50%

 

குறிப்பு: ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்பட்ட நன்கொடைக்கு இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும் அனுமதிக்கப்படாது.

 

 

பிரிவு 8GGA

அறிவியல் ஆராய்ச்சி அல்லது ஊரக வளர்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கான பிடித்தம்.

வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:

பின்வரும் நோக்கத்துக்கான ஆராய்ச்சிக் கூட்டமைப்பு அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது கூட்டமைப்பு

  • அறிவியல் ஆராய்ச்சி
  • சமூக அறிவியல் அல்லது புள்ளிவிவர ஆராய்ச்சி

பின்வரும் நோக்கத்திற்காக செயல்படும் கூட்டமைப்பு அல்லது அமைப்பு

  • கிராமப்புற வளர்ச்சி
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் அல்லது காடு வளர்ப்பு

பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது உள்ளாட்சி அமைப்பு அல்லது தகுதிவாய்ந்த கருத்திட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக தேசிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் அல்லது நிறுவனம்

பின்வருவபவற்றுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிதி:

  • காடு வளர்ப்பு
  • கிராமப்புற வளர்ச்சி

மத்திய அரசால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தேசிய நகர்ப்புற வறுமை ஒழிப்பு நிதி

 

குறிப்பு: ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடை அல்லது நிகர மொத்த வருமானத்தில் லாபம் / வணிகம் / தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் அடங்கும் பட்சத்தில் இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும் அனுமதிக்கப்படாது.

 

 

பிரிவு 80JJA

மக்கும் கழிவுகளைச் சேகரித்துப் பதப்படுத்தும் வியாபாரத்தின் இலாபங்கள் மற்றும் இலாபங்கள் தொடர்பில் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) பிடித்தம் செய்தல்.

ஒரு மதிப்பீட்டாளரின் நிகர மொத்த வருமானத்தில் மக்கும் கழிவுகளை சேகரித்தல் மற்றும் பதப்படுத்துதல் அல்லது சுத்திகரிப்பு செய்யும் வணிகத்திலிருந்து பெறப்பட்ட இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள் உள்ளடங்கும் 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான இலாபத்தில் 100%

 

பிரிவு 80JJAA

பிரிவு 44AB ன் கீழ் வரும் வரிசெலுத்துபவருக்கு புதிய தொழிலாளர்கள் / ஊழியர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான பிடித்தங்கள். (சில நிபந்தனைக்கு உட்பட்டு)

 

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான கூடுதல் ஊழியர் செலவில் 30%

 

 

கடைசியாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பக்கம் அல்லது புதுப்பிக்கப்பட்டது: