மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யவும்: பட்டயக் கணக்கர்களுக்காக
படிப்படியான வழிகாட்டுதல்
படி 1: மின்னணு தாக்கல் முகப்பில் முதன்மை பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: மற்றவர்கள் என்பதை கிளிக் செய்து பட்டயக் கணக்காளர் என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும், மற்றும் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: PAN, பெயர், பிறந்த தேதி, உறுப்பினர் எண் மற்றும் பதிவு தேதி போன்ற அனைத்துக் கட்டாய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு, தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- உங்கள் PAN, மின்னணுத் தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றால், பிழைச் செய்தி தோன்றும். உங்கள் PAN பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் CA ஆகப் பதிவு செய்ய முடியும்.
- இந்த கட்டத்தில், குறிக்கப்பட்டுள்ள PAN உடன் DSC இணைக்கப்பட்டுள்ளதா என்று கணினி சோதிக்கும். DSC பதிவு செய்யப்படவில்லை அல்லது PAN உடன் இணைக்கப்பட்டுள்ள DSC காலாவதியாகிவிட்டது என்றால், பிழைச் செய்தி தோன்றும். தொடர்வதற்கு உங்கள் DSCஐ PAN உடன் பதிவு செய்யவும்/புதுப்பிக்கவும்.
படி 4: ICAI தரவுத்தளத்துடனான வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்பு விவரங்கள் என்னும் பக்கம் தோன்றும். முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் வீட்டு அல்லது அலுவலக முகவரி போன்ற அனைத்து கட்டாய விவரங்களையும் உள்ளிட்டு, தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு (படி 4 இல் கேட்டபடி உள்ளிடப்பட்ட தரவுகளுக்கு) இரண்டு தனித்தனி OTPகள் அனுப்பப்படுகின்றன. உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் பெறப்பட்ட 2 தனித்தனி 6-இலக்க OTPக்களை உள்ளிட்டுத் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே OTP செல்லுபடியாகும்
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி இறங்குமுக நேரக் கணிப்பு கடிகை OTP எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்
படி 6: உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியானவைதானா என்று சரிபார்க்கவும். தேவைப்பட்டால், திரையில் உள்ள விவரங்களைத் திருத்தி, உறுதிசெய்க என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: கடவுச்சொல்லை அமைக்கவும் என்ற பக்கத்தில் கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு உரைப்பெட்டிகளிலும் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளிட்டு, உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை அமைத்து பதிவு செய்என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்
உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தது 8 எழுத்துக்கள் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டதாக இருக்க வேண்டும்
- இது ஆங்கில எழுத்துக்களில் பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள் இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்
- இதில் ஒரு சிறப்பு எழுத்துருக்கள் (எ. கா. @#$%) இருக்க வேண்டும்
படி 8: உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவை தொடரவும் என்பதை கிளிக் செய்யவும். உங்கள் முதன்மை மின்னஞ்சல் ID-க்கு உங்களின் உள்நுழைவு விவரங்கள் அனுப்பப்படும்.
குறிப்பு: மின்னணு தாக்கல் முகப்பில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் அணுக உள்நுழைந்து, உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்.