கண்ணோட்டம்
varumana வரிப் படிவங்கள்(ITR) மற்றும் சட்டரீதியான படிவங்களை மிகவும் சுலபமாக மற்றும் பயனருக்கு ஏற்புடைய வகையில் இருக்கும் படியாக, வருமான வரித் துறையானது புதிய மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பல அம்சங்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சரியான வருமான வரிப் படிவங்களைத் (ITR) தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக இணைய முகப்பு வழிகாட்டியைக் கொண்டுள்ளது, முன்கூட்டியே நிரப்பப்பட்ட வருமான வரிப் படிவங்கள் (ITR) மற்றும் புதிய பயனருக்கு ஏற்புடையதாக இருக்கும் ஆஃப்லைன் பயன்பாடு முதலியவை வரி செலுத்துவோரின் இணக்க சுமையை எளிதாக்க உதவும். இதில், சேட்பாட் மற்றும் பயனர் கையேடுகள் மற்றும் காணொளிகளுடன் படிப்படியான வழிகாட்டுதல் சேர்க்கப்பட்டுள்ளது.
கூடுதலாக உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், வருமான வரிப் படிவம் (ITR) தாக்கல் செய்ய அல்லது வேறு எந்த தொடர்புடைய சேவைகளுடனும் உங்களுக்கு உதவ ஒரு பட்டயக் கணக்கர் (CA), மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியையும் நீங்கள் சேர்க்கலாம்.
வரி படிவம் தாக்கல் செய்வதில் உதவி
உங்களுக்கு யார் உதவ முடியும்?
1. பட்டயக் கணக்கர் (CA)-
ஒரு பட்டயக் கணக்கர் (CA) என்பவர் யார்?
ஒரு 'பட்டய கணக்கர்' (CA) என்பவர் பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தின், 1949 (1949 இன் 38) கீழ் அமைக்கப்பட்ட இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் (ICAI) உறுப்பினராக இருக்கும் ஒரு நபர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு பட்டயக் கணக்கர் (CA) உங்களுக்கு உதவ அனுமதிப்பதற்கு, நீங்கள் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம் ஒரு பட்டயக் கணக்கரைச் (CA) சேர்த்து, அவரை நியமிக்க வேண்டும் (எனது பட்டயக் கணக்கரின் (CA) சேவையைப் பயன்படுத்தி). கூடுதலாக, உங்களால் சேர்க்கப்பட்ட பட்டயக் கணக்கரை(CA) நீங்கள் அகற்றலாம் அல்லது ஏற்கனவே நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்கரை(CA) மின்னணுத் தாக்கல் இணைய முகப்பிலிருந்து திரும்பப் பெறலாம்.
இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள எனது பட்டயக் கணக்கர் (CA) பயனர் வழிகாட்டியை நீங்கள் பார்க்கலாம்.
2. ERIகள்-
ஒரு மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர்(ERI) என்பவர் யார்?
மின்னணுத் தாக்கல் வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்கள் ஆவர், அவர்கள் வருமான வருமான வரிப் படிவத்தைத் (ITR) தாக்கல் செய்யலாம் மற்றும் வரி செலுத்துவோர் சார்பாக பிற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
மூன்று வகையான மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்யும் இடைத்தரகர்கள் உள்ளனர்:
வகை 1 ERIகள்: வருமான வரித் துறை பயன்பாடு / மின்னணு தாக்கல் இணைய முகப்பு மூலம் வருமான வரித் துறை ஒப்புதல் பெற்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி வருமான வரி அறிக்கைகள் / படிவங்களைத் தாக்கல் செய்பவர்.
வகை 2 ERIகள்: வருமான வரித் துறை வழங்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் மூலம் வருமான வரி அறிக்கைகள் / படிவங்களை மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம் தாக்கல் செய்ய தங்கள் சொந்த மென்பொருள் பயன்பாட்டை/இணைய முகப்பை உருவாக்குபவர்கள்
வகை-3 ERIகள்: பயனர்கள் வருமானவரி அறிக்கைகள்/படிவங்களைத் தாக்கல் செய்ய மின்னணுத் தாக்கல் முகப்பில் கிடைக்கும் வருமான வரித் துறைப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் சொந்த ஆஃப்லைன் மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்குபவர்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு உதவ ERI ஐ அனுமதிப்பதற்கு, நீங்கள் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம் ஒரு ERI ஐ சேர்க்க வேண்டும் (எனது ERI சேவையைப் பயன்படுத்தி). கூடுதலாக, நீங்கள் மின்னணுத் தாக்கல் தகவினால் சேர்க்கப்பட்ட மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவரை(ERI) செயல்படுத்தலாம், செயலிழக்கச் செய்யலாம் அல்லது அகற்றலாம். இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள எனது மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) பயனர் வழிகாட்டியை நீங்கள் பார்க்கலாம்.
மாற்றாக, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் ஒரு மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) உங்களை ஒரு வாடிக்கையாளராகச் சேர்க்கலாம் (அவ்வாறு செய்வதற்கான ஒப்புதலை உங்களிடம் பெற்ற பிறகு). மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால், ஒரு மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) ஒரு வாடிக்கையாளராக உங்களை சேர்ப்பதற்கு முன் உங்களைப் பதிவு செய்யலாம். இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள, சேவை கோரிக்கையைச் சரிபார் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளைச் சேர் என்பதைப் பார்க்கவும்.
3. அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் -
ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்பவர் யார்?
அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்பவர் உங்கள் வருமான வரி தொடர்பான விவகாரங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியாவிட்டால், குறிப்பிட்ட அங்கீகாரத்துடன் உங்கள் சார்பாக செயல்படத் தகுதியுள்ள ஒரு நபர் ஆவார்.
கீழே குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக ஒரு வரி விதிப்புக்குரியவர் தாமாக செயல்பட முடியாவிட்டால், அத்தகைய வரி விதிப்புக்குரியவர்கள் வேறு ஒருவரை தங்கள் சார்பாக செயல்பட அனுமதிக்கலாம்:
| வரி விதிப்புக்குரியவரின் வகை | காரணம் | அங்கீகரிக்கப்படும் நபர்கள் என்பார் |
| தனிநபர் | இந்தியாவில் வசிக்காதவர்கள் | அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்/குடிமகள் |
| தனிநபர் | குடியுரிமை அல்லாதவர் | இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகன்/குடிமகள் முகவர் |
| தனிநபர் | வேறு ஏதேனும் காரணம் | அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்/குடிமகள் |
| நிறுவனம் (வெளிநாட்டு நிறுவனம்) | வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியக் குடிமகன்/ குடிமகளான, நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் செல்லுபடியாகும் மின்னணு கையெழுத்துச் சான்றிதழ் (DSC) இல்லாத இயக்குநர் | அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்/குடிமகள் |
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு உதவ ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை அனுமதிக்க, நீங்கள் அந்த அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம் சேர்க்க வேண்டும் (பிரதிநிதி சேவையாக அங்கீகரி / பதிவு செய் என்பதை பயன்படுத்தி).
கூடுதலாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில், ஒரு பயனர், மற்றொரு நபரின் சார்பாக அவரது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யலாம்.
| வரி விதிப்புக்குரியவர்களின் வகைகள் | யார் பதிவு செய்ய வேண்டும் |
| இறந்தவரின் சொத்து | இறந்தவரின் சொத்து மூலம் தொடங்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுபவர் / இறந்த நபரின் சொத்தை நிர்வகிப்பவர் |
| கலைக்கப்பட இருக்கின்ற நிறுவனம் | ஒரு வியாபார நிறுவனத்தைக் கலைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் நியமிக்கப்பட்ட கலைப்பவர் (liquidator)/கலைக்கப்பட இருக்கும் நிறுவனத்தின் பிரச்சினைகளைத் தீர்மானிப்பதில் வல்லுநர்/ கலைக்கப்பட இருக்கும் நிறுவனத்தினைப் பெறுபவர் |
| நிறுத்தப்பட்ட அல்லது மூடப்பட்ட வணிகம் |
|
| வணிகம் அல்லது தொழிலை இணைத்தல் அல்லது ஒருங்கிணைத்தல் அல்லது கையகப்படுத்துதல் | அத்தகைய இணைப்பு அல்லது ஒருங்கிணைப்பு அல்லது கையகப்படுத்துதல் காரணமாக உருவாகிய நிறுவனம் |
| திவாலானவரின் சொத்து | அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர் |
இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள பிரதிநிதியாக அங்கீகரி / பதிவு செய் என்ற பயனர் வழிகாட்டியை பார்க்கவும்.
கூட்டாளிகள் உங்களுக்கு எந்த சேவைகளில் உதவ முடியும்?
1. பட்டயக் கணக்கர் (CA): மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம் ஒரு பட்டயக் கணக்கர்(CA) தங்களுக்கு உதவக்கூடிய சில சேவைகள்:
- சட்டரீதியான படிவங்கள் தாக்கல் செய்தல் (அந்த நபர் வரி செலுத்துபவரால் ஒரு பட்டயக் கணக்கர் (CA) என்று சேர்க்கப்-பட்டவுடன் மற்றும் அவர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன்)
- வரி செலுத்துபவர் ஒப்படைத்த படிவங்களை மின்னணு முறையில் சரிபார்த்தல்
- மொத்த படிவங்களையும் பதிவேற்றவும் (படிவம் 15CB)
- தாக்கல் செய்யப்பட்ட சட்டரீதியான படிவங்களைப் பார்க்க
- குறைகளைப் பார்க்க மற்றும் சமர்ப்பிக்க
- சுயவிவரங்கள் மூலம் உயர் பாதுகாப்பு உள்நுழைவு விருப்பங்களை அமைக்கவும்
- DSC-ஐ பதிவு செய்யவும்
2. ERI: வகை 1 மற்றும் வகை 2 ERIகள் தங்கள் வாடிக்கையாளர் சார்பாக பின்வரும் சேவைகளைச் செயல்படுத்த முடியும்:
- வருமான வரி மற்றும் சட்டரீதியான படிவங்களைத் தாக்கல் செய்யவும்
- வாடிக்கையாளரை சேர்த்தல் (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பயனர்கள்)
- வாடிக்கையாளரை செயல்படுத்துதல்
- வாடிக்கையாளர் செயல்பாட்டுக் காலத்தை நீட்டித்தல்
- சேவை செயல்பாட்டுக் காலத்தை நீட்டித்தல்
- சேவையைச் சேர்த்தல்
- வருமான வரிப் படிவம்-V (ITR-V) சமர்ப்பிப்பதில் தாமதத்திற்கான குற்றத்தை மன்னிக்க கோரிக்கை
- அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியைச் சேர்த்தல்
- சுய சார்பாக செயல்பட மற்றொரு நபருக்கு அங்கீகாரம் வழங்குதல்
- வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதி எனப் பதிவு செய்யவும்
- மற்ற நபரின் சார்பாகச் செயல்பட பதிவு செய்யவும்
- வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும்
- உபரி வரிப்பணத்தைத் திரும்பப் பெறும் கோரிக்கை
- திருத்தல் கோரிக்கை
- தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பின்னர் வருமான வரிப் படிவத்தைத் (ITR) தாமதமாகத் தாக்கல் செய்ததற்கான குற்ற மன்னிப்பு கோரிக்கை
- வங்கிக் கணக்கின் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களின் படி முதன்மைத் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்
- (டீ மாட்) பங்கு வர்த்தக மின்னணு கணக்குடன் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களுக்கு ஏற்ப முதன்மை தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்
3. அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / பிரதிநிதி வரி செலுத்துபவர் / மற்றொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்யவும்:
| வரி விதிப்புக்குரியவரின் நிலை | சூழ்நிலை | ITR படிவத்தில் யார் கையெழுத்திட முடியும்? | கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர் / வரி செலுத்துபவரின் பிரதிநிதிக்கு வழங்கப்பட வேண்டிய அணுகல் வகைகள் |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | இந்தியாவில் வசிக்காதவர்கள் | நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(PAN) இந்தியக் குடியுரிமை உள்ள இந்தியாவில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர் |
அங்கீகாரம் ஒரு கால வரம்பிற்குள் இருந்தால், இவற்றைத் தவிர முழு அணுகல்
அங்கீகாரம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் இருந்தால், 'சுயவிவர' தகவலுக்கான பார்வையிடும் அணுகலோடு, அந்த செயல்பாட்டிற்கு மட்டுமே முழு அணுகலை பெறலாம்.
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | குடியுரிமை அல்லாதவர் | நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(PAN) இந்தியக் குடியுரிமை உள்ள இந்தியாவில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாகச் செயல்பட இன்னொருவருக்கு அங்கீகாரம் அல்லது மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய அல்லது வரி விதிப்புக்குரிய-வரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகச் செயல்படப் பதிவு செய்யவும் மற்றும் இந்த அங்கீகார காலத்திற்குள் மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அங்கீகாரம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் இருந்தால், 'சுயவிவர' தகவலுக்கான பார்வையிடும் அணுகலோடு, அந்த செயல்பாட்டிற்கு மட்டுமே முழு அணுகலை பெறலாம்.
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | வேறு ஏதேனும் காரணம் | நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(PAN) இந்தியக் குடியுரிமை உள்ள இந்தியாவில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாகச் செயல்பட இன்னொருவருக்கு அங்கீகாரம் அல்லது மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய அல்லது வரி விதிப்புக்குரிய-வரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகச் செயல்படப் பதிவு செய்யவும் மற்றும் இந்த அங்கீகார காலத்திற்குள் மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அங்கீகாரம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் இருந்தால், 'சுயவிவர' தகவலுக்கான பார்வையிடும் அணுகலோடு, அந்த செயல்பாட்டிற்கு மட்டுமே முழு அணுகலை பெறலாம்.
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள நபராக அனைத்துப் படிவங்கள் / வருமான வரிப்படிவங்கள் / சேவை கோரிக்கையினைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பம் மட்டுமே |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | இந்தியக் குடியுரிமை அல்லாத நிறுவனம் (வெளிநாட்டு நிறுவனம்) | நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(PAN) இந்தியக் குடியுரிமை உள்ள இந்தியாவில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாக செயல்பட இன்னொருவரை அங்கீகரிக்க, மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, மற்றும் அங்கீகாரம் பெற்ற காலத்திற்கு மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள் செய்ய. இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அங்கீகாரம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் இருந்தால், 'சுயவிவர' தகவலுக்கான பார்வையிடும் அணுகலோடு, அந்த செயல்பாட்டிற்கு மட்டுமே முழு அணுகலை பெறலாம்.
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வியாபார நிறுவனம் | குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 160-பிரிவின்கீழ் நடத்தப்படுவார் அல்லது நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (PAN) குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 163-பிரிவின் கீழ் நடத்தப்படுவார் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாக செயல்பட இன்னொருவரை அங்கீகரிக்க, மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, மற்றும் அங்கீகாரம் பெற்ற காலத்திற்கு மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள் செய்ய. மேலும் பிரிவு 160-இன் கீழ் அல்லது பிரிவு 163-இன் கீழ், வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக அங்கீகாரம் பெற்ற காலத்திற்கான செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக, பதிவேற்றப்பட்ட அனைத்துப் படிவங்கள் / வருமானவரி அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பம் மட்டுமே |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கூட்டுப் பங்குதாரர் வியாபார நிறுவனக் கிளை | குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 160-பிரிவின்கீழ் நடத்தப்படுவார் அல்லது நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (PAN) குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 163-பிரிவின் கீழ் நடத்தப்படுவார் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாக செயல்பட இன்னொருவரை அங்கீகரிக்க, மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, மற்றும் அங்கீகாரம் பெற்ற காலத்திற்கு மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள் செய்ய. மேலும் பிரிவு 160-இன் கீழ் அல்லது பிரிவு 163-இன் கீழ், வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக அங்கீகாரம் பெற்ற காலத்திற்கான செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக, பதிவேற்றப்பட்ட அனைத்துப் படிவங்கள் / வருமானவரி அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பம் மட்டுமே |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுப் பங்குதாரர் வியாபார நிறுவனக் கிளை | குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 160-பிரிவின் கீழ் நடத்தப்படுவார் அல்லது குடியுரிமை உள்ள முகவர் நிரந்தரக் கணக்கு எண்(PAN) உடன் 163-பிரிவின்கீழ் நடத்தப்படுவார் |
முழு அணுகல் 'சுயவிவர அமை,ப்புகள்' தவிர, உங்கள் சார்பாக மற்றொரு நபர் செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக பதிவு செய்யவும், மற்றும் பிரிவு 160 இன் கீழ் அல்லது பிரிவு 163-இன் கீழ், அங்கீகாரம் பெற்ற காலத்திற்கு வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக நடக்க செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக, பதிவேற்றப்பட்ட அனைத்துப் படிவங்கள் / வருமானவரி அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பம் மட்டுமே |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன்களாலான தனி நபர்களின் சங்கம் (AOP) | குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 160-பிரிவின்கீழ் நடத்தப்படுவார் அல்லது நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (PAN) குடியுரிமை உள்ள முகவர் வரி செலுத்துபவரின் பிரதிநிதியாக 163-பிரிவின் கீழ் நடத்தப்படுவார் |
முழு அணுகல் 'சுயவிவர அமை,ப்புகள்' தவிர, உங்கள் சார்பாக மற்றொரு நபர் செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக பதிவு செய்யவும், மற்றும் பிரிவு 160 இன் கீழ் அல்லது பிரிவு 163-இன் கீழ், அங்கீகாரம் பெற்ற காலத்திற்கு வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக நடக்க செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக, பதிவேற்றப்பட்ட அனைத்துப் படிவங்கள் / வருமானவரி அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பம் மட்டுமே |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி | வேறு ஏதாவது காரணம் | நிரந்தரக் கணக்கு எண்(PAN) கொண்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், உங்கள் சார்பாகச் செயல்பட இன்னொருவருக்கு அங்கீகாரம் அல்லது மற்றொரு நபர் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய அல்லது வரி விதிப்புக்குரிய-வரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகச் செயல்படப் பதிவு செய்யவும் மற்றும் இந்த அங்கீகார காலத்திற்குள் மின்னணு-நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அங்கீகாரம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் இருந்தால், 'சுயவிவர' தகவலுக்கான பார்வையிடும் அணுகலோடு, அந்த செயல்பாட்டிற்கு மட்டுமே முழு அணுகலை பெறலாம்.
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வேறொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்யவும் | இறந்தவரின் சொத்து | மேலாளர் / சொத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுபவர் / அறங்காவலர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், மற்றொரு நபரை உங்கள் சார்பாகச் செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய மற்றும் வரி விதிப்புக்குரியவரின் பிரதிநியாகப் பதிவு செய்யும்,செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
இறந்தவரின் அனைத்து சொத்துக்களும் விநியோகிக்கப்பட்டவுடன், இறந்தவரின் அத்தகைய சொத்து பின்னரும் இருக்காது. இருப்பினும், சரிபார்க்க தகுதியுள்ள நபராக பதிவு செய்த நிர்வாகி/ மேலாளர்/அறங்காவலர் ஆகியோரால் அந்தத் திறனில் தாக்கல் செய்யப்பட்ட அல்லது வருமான வரிச் சட்டத்துக்கு இணங்கி அளித்த அனைத்துப் பதிவுகளையும் தொடர்ந்து அணுக முடியும்.
ஏதேனும் சூழ்நிலையில், வருமான வரித் துறை (ITD) நிர்வாகம் நிறைவேற்றுபவரின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றால், மற்றொரு மேலாளர் / நிறைவேற்றுபவர் / அறங்காவலர் தன்னை இறந்தவரின் சார்பாக செயல்படத் தகுதியான நபராக பதிவு செய்யும் வரை, இறந்தவரின் நிரந்தரக் கணக்கு எண்ணின் மின்னனுத் தாக்கல் கணக்கு முடக்கப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட மேலாளர் / நிறைவேற்றுபவர் / அறங்காவலர், முந்தைய மேலாளர் /நிறைவேற்றுபவர் / அறங்காவலரால் பாதுகாக்கப்பட்ட முந்தைய பதிவுகள் மற்றும் இணக்கத்திற்கான முழு அணுகலைக் கொண்டிருப்பார். |
| வேறொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்யவும் | திவாலானவரின் சொத்து | அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர் |
'சுயவிவர அமைப்புகள்' தவிர முழு அணுகல், மற்றொரு நபரை உங்கள் சார்பாகச் செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய மற்றும் வரி விதிப்புக்குரியவரின் பிரதிநியாகப் பதிவு செய்யும்,செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
திவாலானவரின் சொத்து முழுமையாக விநியோகிக்கப்பட்டவுடன், அத்தகைய விநியோகம் நடைபெற்ற அடுத்த ஆண்டில் படிவங்கள் / அறிக்கைகளை பதிவேற்றுவதற்கான விருப்பம் தடுக்கப்படுகிறது. உங்கள் அதிகாரபூர்வ பிரதிநிதியாக உரிமை பெற்றவர், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடும் பிரதிநிதியாக இருப்பதால், தாக்கல் செய்யப்பட்ட அல்லது இணங்கப்பட்ட அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து அணுகலாம்
ஏதேனும் சூழ்நிலையில், வருமான வரித் துறை(ITD) நிர்வாகம் ஒரு திவாலானவரின் (சொத்தின்) நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) செயல் நீக்கம் செய்தால், மற்றொரு அதிகாரப்பூர்வ உரிமை பெற்றவர் அந்த சொத்தின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) சார்பாக செயல்பட தன்னைப் பதிவு செய்யும் வரை அது தொடர்புடைய மின்னணு-தாக்கல் செய்யப்பட்ட கணக்கின் அணுகல் நிறுத்தி வைக்கப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ உரிமை பெற்றவர் முந்தைய அதிகாரப்பூர்வ உரிமை பெற்றவர் பெற்றிருந்த முந்தைய பதிவுகளுக்கான முழு அணுகல் மற்றும் இணக்கத்தை கொண்டிருப்பார். |
| வேறொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்யவும் | தேசிய வியாபார நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின்(NCTL) கீழ் அல்லது திவாலாகுதல் மற்றும் திவால்நிலை குறியீடு, 2016-க்கு முன் முடக்கப்பட்டது (நிறுவனத்தின் எந்தவொரு சொத்தின் பெறுபவராக நீதிமன்றத்ததால் / நபரால் நியமிக்கப்பட்ட உத்தரவு) | வியாபாரத்தைக் கலைப்பவர் |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபரை உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வேறொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்யவும் | எந்தவொரு சட்டத்தின் கீழும் மத்திய / மாநில அரசு கையகப்படுத்துதல் அல்லது நிறுத்தப்பட்ட வணிகம் |
மத்திய/மாநில அரசால் நியமிக்கப்பட்ட முதன்மை அதிகாரி |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபரை உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | மனரீதியாக இயலாதவர் | பாதுகாவலர் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட நபர் |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபரை உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | இறந்தவர் | சட்டப்படியான வாரிசு | முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபர் உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக பதிவு செய்ய செயல்பாடுகள். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | சித்தங்கலங்கியவர் / மனவளர்ச்சி இல்லாதவர் | பாதுகாவலர் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட நபர் |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபரை உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | சிறார்க்கான நீதிமன்றம் போன்றவை நியமிக்கப்படும் நபர்கள் | சிறார்க்கான நீதிமன்றம் / பெறுபவர் / மேலாளர் / பொது நிர்வாகி / அதிகாரப்பூர்வ அறங்காவலர் |
முழு அணுகல் 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபர் உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதி ஆக பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை(ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | எழுத்துப்பூர்வ நம்பிக்கைக்குரியவர் | அறங்காவலர் |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபரை உங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |
| வரி செலுத்துபவரின் பிரதிநிதி | அறிவிக்கப்படாத நம்பிக்கைக்குரியவர் | அறங்காவலர் |
முழு அணுகல், 'சுயவிவர அமைப்புகள்' தவிர, மற்றொரு நபர் உங்கள் சார்பாக செயல்பட அல்லது மற்றொரு நபரின் சார்பாக நீங்கள் செயல்படப் பதிவு செய்ய, வரி விதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக பதிவு செய்ய, செயல்பாடுகள் வருமான வரித் துறை (ITD) அதனைத் திரும்பப் பெறும் தேதி வரை இருக்கும். இருப்பினும், 'சுயவிவரம்' தகவல்களைப் பார்வையிட அனுமதிக்கப்படும்
அதன்பிறகு, சரிபார்க்கத் தகுதியுள்ள/அங்கீகரிக்கப்பட்ட நபரால் பதிவேற்றப்பட்ட அனைத்து படிவங்கள்/அறிக்கைகளைப் பார்வையிடும் மற்றும் பதிவிறக்கும் விருப்பத்தை மட்டுமே பார்க்க முடியும் |