படிவம் 50 பயனர் கையேடு

 

1. மேலோட்டப்பார்வை

பன்னாட்டுப் பரிவர்த்தனைகள் நடக்கும்போது, மாற்று விலை நிர்ணயம் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கலாம்; ஏனெனில், எதிர்கால குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு அந்த விலை நியாயமான வர்த்தக விலையாக இருக்க வேண்டும். முன்கூட்டியே இந்த நிச்சயத்தன்மையை வழங்குவதற்கும் மற்றும் வழக்குத் தொடர்வதைக் குறைப்பதற்கும், வருமான வரித்துறை வரி செலுத்துவோரை இத்தகைய பரிவர்த்தனைகளுக்காக 'முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தம்' ஒன்றில் ஈடுபட அனுமதிக்கிறது.

படிவம் எண். 50 என்பது தகுதியுடைய நபரால் வருமான வரி முதன்மை தலைமை ஆணையருக்கு (பன்னாட்டு வரிவிதிப்பு) முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கான ஆலோசனையைக் கோரி சமர்ப்பிக்கப்படும் ஒரு விண்ணப்பமாகும். இந்த விண்ணப்பம் பெறப்பட்டவுடன், நியமிக்கப்பட்ட குழுவானது விண்ணப்பதாரருடன் முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கான ஆலோசனையை நடத்தும்; இருதரப்பு அல்லது பலதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்புடைய வழக்குகளில், இந்தியத் தகுதிவாய்ந்த அதிகாரி அல்லது அவர்களின் பிரதிநிதியும் இதில் பங்கேற்பார்கள்.

தகுதியுடைய நபர்
APA விதிகளின்படி, ஒருவர் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால், அவர் ஒப்பந்தத்தில் ஈடுபடத் தகுதியுடையவராவார்-
(i) ஒரு சர்வதேசப் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார்; அல்லது
(ii) ஒரு சர்வதேசப் பரிவர்த்தனையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

• நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்.
• வரி செலுத்துபவரின் PAN நிலை "செயலில்" இருக்க வேண்டும்
• PAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்(பரிந்துரைக்கப்படுகிறது).
• DSC மூலம் படிவத்தை சரிபார்க்கத் தேர்வு செய்தால், உங்களிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும். மேலும் அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவும், காலாவதியாகாமல் இருக்கவும் வேண்டும்.

3. படிவம் குறித்து

3.1 நோக்கம்

முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தம் (APA) தொடர்பாக முன்தாக்கல் சந்திப்பை கோருவதற்காக படிவம் 50 சமர்ப்பிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான பொருத்தமான மாற்று விலை நிர்ணய அளவுகோல்களை மதிப்பிடுவதற்கு இது பன்னாட்டு குழுமங்களுக்கு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இந்த படிவம், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் பரந்த கட்டமைப்பைப் பற்றிய ஆரம்பக் கலந்துரையாடல்களுக்கு உதவுவதுடன், APA-வை இறுதிப்படுத்துவதற்கு முன் முக்கிய மாற்று விலை நிர்ணய பிரச்சினைகளை அடையாளம் காணவும் உதவுகிறது. விண்ணப்பம் மூன்று பிரதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; மேலும் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் விண்ணப்பதாரரின் அறிவுக்கு எட்டிய வரையில் துல்லியமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

3.2 இதனை யார் பயன்படுத்தலாம்?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களும், வருமான வரிச் சட்டம் மற்றும் விதிகளின் தொடர்புடைய விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட வகையில், முன்-தாக்கல் ஆலோசனைக்கான விண்ணப்பமான படிவம் 50-இல் தேவையான விவரங்களை வழங்கலாம்.

3.3 படிவம் ஒரு பார்வை

படிவம் 50-இல் நான்கு பலகைகள் உள்ளன:

1. Part A- நபரின் விவரங்கள்
2. Part B - இதர விவரங்கள்
3. இணைப்புகள்
4. சரிபார்ப்பு

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3 : உங்கள் முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் > வருமான வரி படிவம் > வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 4: வருமான வரிச் சட்டம் 2025-இன்படி படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுத்து, படிவம் 50-ஐத் தேடி, இப்போது தாக்கல் செய்க பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: PAN, சமர்பிக்கும் முறை, தாக்கல் வகை ஆகியவற்றை சரிபார்த்து, தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 6: 'தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7: தொடங்குவோம் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, பயனர் பலகை திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதில் 1-வது பலகையான பகுதி A: நபரின் விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 8: தேவையான விவரங்களை உள்ளிட்டு, விவரங்களை உறுதிப்படுத்தி, சேமி என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: எனது சுயவிவரம் பிரிவில் முகவரி உள்ளிட்ட கட்டாய விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். எனது சுயவிவரம் என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

Data responsive

படிநிலை 9: 1-வது பலகையைச் சேமித்த பிறகு, அதன் நிலை நிறைவடைந்தது எனக் காட்டப்படும். 2-வது பலகையான பகுதி B: பிற விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 10: 2-வது பலகையான பகுதி B: பிற விவரங்கள் என்பதில் விவரங்களை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும். புலம் எண் 11-க்கு, பயனருக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன — விவரங்களைச் சேர்க்கவும் அல்லது CSV பதிவேற்றம். புலம் எண் 11-ஐப் பூர்த்தி செய்ய, பயனர் இந்த இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

Data responsive

குறிப்புகள்:

  1. புலம் எண் 10, புலம் எண் 9-இல் (முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தத்தின் (APA) வகை) இருதரப்பு அல்லது பலதரப்பு APA தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே பொருந்தும்.
  2. நீங்கள் ஒருதரப்பு APA-க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், இவ்விண்ணப்பம் பின்வருபவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது ". என்ற புலத்தில் Pr. CCIT (IT) " என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பலதரப்பு அல்லது இருதரப்பு APA ஆனது கரிபியன் தீவுகள் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளுடன் தொடர்புடையது என்றால், இந்தியாவின் தகுதிவாய்ந்த அதிகாரி (இணைச் செயலாளர், FT&TR-I) " என்பதைத் தேர்ந்தெடுக்கவும். " வேறு ஏதேனும் நாட்டுடன் தொடர்புடையது என்றால் " இவ்விண்ணப்பம் பின்வருபவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது " என்ற புலத்தின் கீழ் " இந்தியாவின் தகுதி வாய்ந்த அதிகாரி (இணைச்செயலாளர் FT&TR-I) " என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. புலம் எண் 11-இன் கீழ் உள்ள குறிப்பு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள, முன்மொழியப்பட்ட சர்வதேசப் பரிவர்த்தனைகளின் விவரங்கள் தொடர்பான வழிமுறைகளை தயவுசெய்து படிக்கவும்.
Data responsive

1. வரிசை எண் 11-இன் கீழ் சேர்க்க வேண்டிய தொடர்புடைய நிறுவனத்தின் AE விவரப் பதிவுகள் 50-ஐ விட அதிகமாக இருந்தால், எக்செல் டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கவும் பட்டனைப் பயன்படுத்தவும். எக்செல் கோப்பைப் பதிவிறக்கிய பிறகு, அதில் வழங்கப்பட்டுள்ள நெடுவரிசைகளின்படி விவரங்களை நிரப்ப வேண்டும். எக்செல் டெம்ப்ளேட்டில் உள்ள நெடுவரிசைகளின் விளக்கம் கீழே வழங்கப்பட்டுள்ளது:

மேலே கொடுக்கப்பட்டுள்ள எக்செல் டெம்ப்ளேட்டை நிரப்புவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் கடைப்பிடிக்கவும்:

புலத்தின் பெயர்

வழிமுறை

கட்டாயம் நிரப்ப வேண்டிய புலம் (ஆம் / இல்லை)

எழுத்துகளின் அளவு

வ.எண்

வரிசை எண்களை 1 முதல் தொடங்கி உள்ளிடவும்.

ஆம்

 

AE-இன் வகை

கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மதிப்பைத் தேர்வு செய்யவும்
a) வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 163(1)-இன் கீழ் தொடர்புடைய நிறுவனத்துடன் (AE) மேற்கொள்ளப்பட்ட சர்வதேசப் பரிவர்த்தனைகள்
b) வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 163(2)-இன் கீழ் தொடர்புடைய நிறுவனம் அல்லாதவருடன் (Non-AE) மேற்கொள்ளப்பட்ட சர்வதேசப் பரிவர்த்தனைகள்

ஆம்

 

வகை

கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மதிப்பைத் தேர்வு செய்யவும்.
பிரிவு 163(1)(a)
பிரிவு 163(1)(b)
பிரிவு 163(1)(c)
பிரிவு 163(1)(d)
பிரிவு 163(1)(e)
பிரிவு 163(1)(f)
பிரிவு 163(1)(g)

ஆம்

 

பரிவர்த்தனையின் விவரம்

விளக்கத்தை வழங்கவும்

ஆம்

அதிகபட்சம் 4000 எழுத்துகள்

பெயர்

AE பெயரை உள்ளிடவும்

ஆம்

அதிகபட்சம் 277 எழுத்துகள்

AE அமைந்துள்ள இடம் (நாடு/மண்டலம்)

கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்

ஆம்

 

AE-இன் வரி செலுத்துபவர் அடையாள எண் அல்லது அதற்கு இணையான எண்

TIN அல்லது அதற்கு இணையான எண் உள்ளிடவும்

ஆம்

அதிகபட்சம் 75 எழுத்துகள்

PAN (இருந்தால்)

முதல் 5 எழுத்துகள், 4 எண்கள், 1 எழுத்து.

இல்லை

 

முன்மொழியப்பட்ட பரிமாற்ற விலை நிர்ணய முறை

கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
(a) ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற விலை முறை;
(b) மறுவிற்பனை விலை முறை;
(c) செலவு கூட்டல் முறை;
(d) இலாபப் பகிர்வு முறை;
(e) பரிவர்த்தனை நிகர வரம்பு முறை;
(f) வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் பிற முறைகள்.

 

 

தயவுசெய்து குறிப்பிடவும்

மேலே உள்ள புலத்தில் (f) " வாரியம் பரிந்துரைக்கக்கூடிய பிற முறை " என்ற விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்.

ஆம்

அதிகபட்சம் 400 எழுத்துகள்

முந்தைய 3 வரி ஆண்டுகளுக்கான மதிப்பிடப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு

FY 2025-26

இல்லை

14-இலக்க எண் தசமப் புள்ளி இல்லாமல்

 

FY 2024-25

இல்லை

14-இலக்க எண் தசமப் புள்ளி இல்லாமல்

 

FY 2023-24

இல்லை

14-இலக்க எண் தசமப் புள்ளி இல்லாமல்

படிநிலை 11: 2-வது பலகையைச் சேமித்த பிறகு, அதன் நிலை நிறைவடைந்தது எனக் காட்டப்படும். 3-வது பலகையான இணைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பலகையில் 8 இணைப்புகள் உள்ளன. அவற்றில் 3 இணைப்புகள் மற்றும் 1 விவரங்களைச் சேர்க்கவும் புலம் கட்டாயமானவை.

Data responsive

படிநிலை 12: 3-வது பலகையான இணைப்புகள் என்பதில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsiveData responsive

படிநிலை 13: 3-வது பலகையைச் சேமித்த பிறகு, அதன் நிலை நிறைவடைந்தது எனக் காட்டப்படும். 4-வது பலகையான சரிபார்ப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive

படிநிலை 14: 4வது பலகையில் தேவையான விவரங்களை நிரப்பி சேமிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.  

Data responsive

படிநிலை 15: 4-வது பலகையைச் சேமித்த பிறகு, பலகையின் நிலை நிறைவடைந்தது என்று காண்பிக்கப்படும், அதன் பின் முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்

Data responsive

படிநிலை 16: முன்னோட்டப் பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும். பயனர் முன்னோட்ட PDF-ஐப் பதிவிறக்கலாம்.

Data responsiveData responsive

படிநிலை 17: மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடர்க பட்டனைக் கிளிக் செய்த பிறகு, மின்னணு-சரிபார்ப்பைத் தொடர விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தும் பாப்-அப் திரை தோன்றும். ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 18: ஆம் என்பதைக் கிளிக் செய்ததும், நீங்கள் மின்னணு -சரிபார்ப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு EVC அல்லது DSC ஆகியவற்றில் பொருத்தமான ஒன்றைப் பயன்படுத்தி, படிவம் 50-ஐச் சரிபார்க்கலாம் (பொருந்துமாயின்)

குறிப்பு: மேலும் அறிய  மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி  என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

வெற்றிகரமாக மின்னணு-சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு, பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காகப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்(கள்) ஆகியவற்றிலும் இதற்கான உறுதிப்படுத்தல் செய்தியை நீங்கள் பெறுவீர்கள்.

Data responsive

படிவம் 50 வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பயனர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பின்வரும் வழியில் காணலாம்: உங்கள் முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்க > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க > வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: மேலும் அறிய, தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்பது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

5. தொடர்புடைய தலைப்புகள்

6. சொற்களஞ்சியம்

சுருக்கக் குறியீடு/சுருக்கம் விளக்கம்/முழு வடிவம்
DSC டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்
EVC மின்னணு சரிபார்ப்பு சான்றிதழ்
ARN ஒப்புகை ரசீது எண்
TY வரி ஆண்டு