உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும் பயனர் கையேடு

 

1.மேலோட்டப்பார்வை

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்துள்ள அனைத்துப் பயனர்களுக்கும் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா என்ற சேவை கிடைக்கிறது. இந்தச் சேவையின் மூலம், மின்னணு-தாக்கல் OTP / ஆதார் OTP / வங்கிக் கணக்கு EVC / டிமேட் கணக்கு EVC / டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) / இணையவங்கிச் சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்களுடைய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கடவுச்சொல்லை நீங்கள் மீட்டமைக்கலாம்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
 

  • மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID கொண்ட பதிவுசெய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்.

கூடுதலாக, ஒவ்வொரு விருப்பத்திற்கான முன்நிபந்தனைகளைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்:

விருப்பங்கள் முன்நிபந்தனைகள்
ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • PAN எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (தனிநபர் வரிசெலுத்துபவர்)
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட முதன்மைத் தொடர்பாளரின் PAN எண் (தனிநபர் வரி செலுத்துவோர் (நிறுவனம் தவிர) மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் (HUF))
பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு அனுப்பப்படும் மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • மின்னணு-தாக்கல் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முதன்மை மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றிற்கான அணுகல்
வங்கிக் கணக்கு EVC-ஐப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கான அணுகல்
  • சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு
உங்கள் டிமேட் கணக்கின் EVC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • உங்கள் டிமேட் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கான அணுகல்
  • சரிபார்க்கப்பட்ட டிமேட் கணக்கு
டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழை (DSC) பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் உள்ள டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC)
  • எம்சைனர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவியிருக்க வேண்டும் (DSC-ஐப் பதிவுசெய்யும்போதும், இந்தப் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவலாம்)
  • DSC USB அடையாள வில்லையைக் கணினியுடன் இணைத்திருக்க வேண்டும்
  • DSC USB அடையாள வில்லை, சான்றளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
  • DSC USB அடையாள வில்லை, வகுப்பு 2 அல்லது வகுப்பு 3 சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்
இணையவங்கிச்சேவையைப் பயன்படுத்தி உங்களுடைய கடவுச்சொல்லை மீட்டமைக்க
  • வங்கிக் கணக்குடன் PAN இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
  • செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் உள்ள இணைய வங்கிச்சேவை கணக்கு
  • மின்னணு-தாக்கல் பாதுகாப்புப் பெட்டி உயர் பாதுகாப்புச் சேவையின் மூலம் இணைய வங்கிச்சேவை விருப்பம் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்


3. படிப்படியான வழிகாட்டி
 

படிநிலை 1:மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்றுஉள்நுழையவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:உள்நுழையவும்பக்கத்தில், உங்கள்பயனர் ID-ஐஉள்ளிட்டுதொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 3:உள்நுழையவும்பக்கத்தில்,பாதுகாப்பான அணுகல் செய்திமற்றும்கடவுச்சொல்விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து,கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 4:கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்பக்கத்தில்,பயனர் ID-ஐஉரைப்பெட்டியில் உள்ளிட்டு,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

 

வரிசெலுத்துபவர் வகை பயனர் ID
தனிநபர் வரி செலுத்துவோருக்கு
  • PAN
  • ஆதார் (PAN எண்ணும் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே)
ITDREIN பயனர்களுக்கு
  • ITDREIN மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபரின் PAN
இதர வகை வரி செலுத்துவோருக்கு
  • PAN


படிநிலை 5:கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுபக்கத்தில், கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்களுக்குப் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
 

ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க 5.1 என்ற பிரிவைப் பார்க்கவும்
மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க 5.2 என்ற பிரிவைப் பார்க்கவும்
வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு EVC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க 5.3 என்ற பிரிவைப் பார்க்கவும்
DSC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க 5.4 என்ற பிரிவைப் பார்க்கவும்
இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்க 5.5 என்ற பிரிவைப் பார்க்கவும்

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய விருப்பங்கள், உங்கள் கணக்கிற்காகச் செயல்படுத்தி வைத்துள்ள விருப்பங்களைப் பொறுத்தே அமையும். மின்னணு-தாக்கல் பாதுகாப்புப் பெட்டி உயர் பாதுகாப்புச் சேவையைப் பயன்படுத்தி, இதனை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
 

Data responsive


குறிப்பு:மின்னணு-தாக்கல் பாதுகாப்புப் பெட்டி உயர் பாதுகாப்புச் சேவையில் நீங்கள் ஒரு விருப்பத்தை மட்டும் செயல்படுத்தியிருந்தால், கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான அந்த விருப்பம் / வழிமுறை மட்டுமே காண்பிக்கப்படும்.
 

5.1 ஆதார் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைத்தல்


படிநிலை 1:கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுபக்கத்தில்,ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTPஎன்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்கபக்கத்தில்,OTP-ஐ உருவாக்குஎன்பதைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.

மாற்றாக, உங்களிடம் ஏற்கனவே ஆதார் OTP இருந்தால்,ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP ஏற்கனவே என்னிடம் உள்ளதுஎன்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களிடம் உள்ள 6 இலக்க OTP-ஐ உள்ளிடவும்.தொடரவும்என்பதைக் கிளிக் செய்து,படிநிலை 5-க்குச் செல்லவும்.
 

Data responsive

படிநிலை 3: உங்களுடைய அடையாளத்தைச் சரிபார் பக்கத்தில், உறுதிமொழி தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, ஆதார் OTP-ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 4:உங்கள் அடையாளத்தைச் சரிபார்பக்கத்தில், ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணிற்கு வந்த 6 இலக்க OTP-ஐOTP-ஐ உள்ளிடுஎன்பதை உரைப்பெட்டியில் உள்ளிட்டு,சரிபார்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

குறிப்பு:

  • OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான OTP-ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் வழங்கப்படும்.
  • திரையில் காண்பிக்கப்படும் OTP காலாவதி நேரக் கவுண்ட்டவுன் டைமர், OTP-இன் செல்லுபடியாகும் காலம் எப்போது முடிவடைகிறது என்பதைத் தெரிவிக்கும்.
  • OTP-ஐ மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தால், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

படிநிலை 5:கடவுச்சொல்லை மீட்டமைபக்கத்தில்,புதிய கடவுச்சொல்லை அமைமற்றும்கடவுச்சொல்லை உறுதிப்படுத்துஎன்ற உரைப்பெட்டிகளில் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு,சமர்ப்பிஎன்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

குறிப்பு:

  • புதுப்பி அல்லது பின்செல் என்பதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையைக் கவனமாகப் பின்பற்றவும்:
    • குறைந்தது 8 எழுத்துகளும் அதிகபட்சம் 14 எழுத்துகளும் இருக்க வேண்டும்.
    • இதில் பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஓர் எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஒரு சிறப்புக்குறி (எ.கா., @#$%) இடம்பெற்றிருக்க வேண்டும்.

பரிவர்த்தனை ID-யுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். தயவுசெய்து எதிர்காலக் குறிப்பிற்காக, அந்தப் பரிவர்த்தனை ID-யைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
 

Data responsive

 

5.2 மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைத்தல்
 

படிநிலை 1:கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்பக்கத்தில்,மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்துஎன்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்கபக்கத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வடிவத்தின்படிபிறந்த நாள், மாதம் மற்றும் ஆண்டுவிவரங்களைத் தேர்ந்தெடுத்து,தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 3:மின்னணு-தாக்கல் OTP-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்பக்கத்தில், மின்னணு-தாக்கல் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு வந்த தனித்தனியான இரண்டு 6 இலக்க OTP-களை உள்ளிட்டு,சரிபார்க்கவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive

குறிப்பு:

  • OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான OTP-ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் மட்டுமே வழங்கப்படும்.
  • திரையில் காண்பிக்கப்படும் OTP காலாவதி நேரக் கவுண்ட்டவுன்டைமர், OTP-இன் செல்லுபடியாகும் காலம் எப்போது முடிவடைகிறது என்பதைத் தெரிவிக்கும்.
  • OTP மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தால், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

படிநிலை 4:கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்பக்கத்தில்,புதிய கடவுச்சொல்லை அமைக்கவும்மற்றும்கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்என்ற உரைப்பெட்டிகளில் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு,சமர்ப்பிஎன்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


குறிப்பு:

  • புதுப்பிக்கவும் அல்லது பின்செல் என்பதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையைக் கவனமாகப் பின்பற்றவும்:
    • இதில் குறைந்தது 8 எழுத்துகளும் அதிகபட்சம் 14 எழுத்துகளும் இருக்க வேண்டும்.
    • இதில் பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஓர் எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஒரு சிறப்புக்குறி (எ.கா., @#$%) இடம்பெற்றிருக்க வேண்டும்.

பரிவர்த்தனை ID-யுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். தயவுசெய்து எதிர்காலக் குறிப்பிற்காக, அந்தப் பரிவர்த்தனை ID-யைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
 

Data responsive

 

5.3 வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு EVC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைத்தல்
 

படிநிலை 1:கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்பக்கத்தில்,வங்கிக் கணக்கு EVC(அல்லதுடிமேட் கணக்கு EVC) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:வங்கிக் கணக்கு (அல்லது டிமேட் ) கணக்கு EVC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும் பக்கத்தில், புதிய EVC-ஐ உருவாக்க விரும்பினால், EVC-ஐ உருவாக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

மாற்றாக, உங்களிடம் ஏற்கனவே வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு EVC இருந்தால்,ஏற்கனவே என்னிடம் EVC உள்ளதுஎன்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களிடம் உள்ள வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு EVC-ஐ உள்ளிடவும்.தொடர்என்பதைக் கிளிக் செய்து,படிநிலை 4-க்குச் செல்லவும்.
 

Data responsive


படிநிலை 3:வங்கி (அல்லது டிமேட் ) கணக்கு EVC-ஐப் பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்பக்கத்தில், உங்கள் வங்கிக் (அல்லது டிமேட்) கணக்கு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID-க்கு வந்த EVC-ஐEVC-ஐ உள்ளிடுஎன்ற உரைப்பெட்டியில் உள்ளிட்டு,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 4:கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்பக்கத்தில்,புதிய கடவுச்சொல்லை அமைக்கவும்மற்றும்கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்என்ற உரைப்பெட்டிகளில் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு,சமர்ப்பிஎன்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

குறிப்பு:

  • புதுப்பிக்கவும் அல்லது பின்செல் என்பதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையைக் கவனமாகப் பின்பற்றவும்:
    • இதில் குறைந்தது 8 எழுத்துகளும் அதிகபட்சம் 14 எழுத்துகளும் இருக்க வேண்டும்.
    • இதில் பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஓர் எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஒரு சிறப்புக்குறி (எ.கா., @#$%) இடம்பெற்றிருக்க வேண்டும்.

பரிவர்த்தனை ID-யுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். தயவுசெய்து எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID-யைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும்.
 

Data responsive



5.4 டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழைப் (DSC) பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைத்தல்
 

படிநிலை 1:கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்பக்கத்தில்,டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழைப் (DSC) பதிவேற்றுஎன்பதைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்பக்கத்தில், பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


குறிப்பு:

  • DSC மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்தால், பதிவுசெய்யப்பட்ட DSC என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • DSC மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்படவில்லை என்றால், புதிய DSC என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படிநிலை 3:உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்பக்கத்தில்,எம்சைனர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 

Data responsive


படிநிலை 4:எம்சைனர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவிய பின்,உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்பக்கத்தில்நான் எம்சைனர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளேன்என்பதைத் தேர்ந்தெடுத்து,தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 5:தரவு கையொப்பம்பக்கத்தில், உங்கள்வழங்குநர்மற்றும்சான்றிதழ்தேர்ந்தெடுத்து,வழங்குநரின் கடவுச்சொல்லைஉள்ளிடவும். பின்னர்கையொப்பம்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 6:கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்பக்கத்தில்,புதிய கடவுச்சொல்லை அமைக்கவும்மற்றும்கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்என்ற உரைப்பெட்டிகளில் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு,சமர்ப்பிக்கவும்என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:

  • புதுப்பி அல்லது பின்செல் என்பதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையைக் கவனமாகப் பின்பற்றவும்:
    • இதில் குறைந்தது 8 எழுத்துகளும் அதிகபட்சம் 14 எழுத்துகளும் இருக்க வேண்டும்.
    • இதில் பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஓர் எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    • இதில் குறைந்தது ஒரு சிறப்புக்குறி (எ.கா., @#$%) இடம்பெற்றிருக்க வேண்டும்.

பரிவர்த்தனை ID-யுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். தயவுசெய்து எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID-யைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும்.
 

Data responsive


 

5.5 இணைய வங்கிச் சேவையை பயன்படுத்திக் கடவுச்சொல்லை மீட்டமைத்தல்
 

படிநிலை 1:கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்என்பதைக் கிளிக் செய்த பிறகு,இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கலில் உள்நுழைஎன்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 2:இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி உள்நுழை பக்கத்திற்குத் திருப்பிவிடப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் வங்கியைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

 

Data responsive


படிநிலை 3:பொறுப்புத் துறப்பைப் படித்துப் புரிந்துகொள். பின்னர்தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
 

Data responsive


படிநிலை 4:உங்கள் வங்கியின் இணைய வங்கிச் சேவையில் உள்நுழை பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இணைய வங்கிச் சேவை பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் இணைய வங்கிச் சேவை கணக்கில் உள்நுழையவும்.


படிநிலை 5:உங்கள் வங்கியின் இணையதளத்திலிருந்து மின்னணு-தாக்கலில் உள்நுழைவதற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.


குறிப்பு:இணைய வங்கிச் சேவையிலிருந்து நீங்கள் தானாகவே வெளியேற்றப்படுவீர்கள். பின்னர் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் தானாகவே உள்நுழைவீர்கள்.


படிநிலை 6: வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, உங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று கடவுச்சொல்லை மாற்றுச் சேவையைப் பயன்படுத்தி உங்கள் மின்னணு-தாக்கல் கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய, கடவுச்சொல்லை மாற்று பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
 

Data responsive

 

4.தொடர்புடைய தலைப்புகள்